Kai Po Che
தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர் சில கதைகளை படிக்கும் போது இது சினிமாவாக வந்தால் நன்றாக இருக்குமென்று ஒர் எண்ணம் தோன்றும் அப்படி பல சுஜாதாவின் நாவல்களை படிக்க அவ்விதமான ஆசை வந்ததுண்டு. சில கதைகளை என் ஆசைக்கு திரைகதையமைத்து வைத்திருக்கிறேன். அதே போலத்தான் சேத்தன் பகத்தின் நாவல்களைப் படிக்கும் போது தோன்றும். அவருடய எல்லா நாவல்களை படிக்கும் போது அஹா.. திரைப்படத்துக்கான எல்லா அம்சங்களும் இருக்கிறதே என்ற யோசனை வரும். ஏற்கனவே அவர் எழுதிய One Night @ Call centre, 5 Points to Someone 3இடியட்ஸாகவும். இதோ 3 Mistakes of My Life, காய் போ சே ஆகியிருக்கிறது. முதல் படம் சுமார். இரண்டாவது படம் சூப்பர் ஹிட். மூன்றாவது சூப்பர் ஹிட். நான்காவதாய் அவர் எழுதிய 2State எனும் நாவல் தான் ஷாருக் நடிக்க மெட்ராஸ் மெயில் ஆக தயாராகி வருகிறது. இப்படி ஹிந்தி பட உலகின் மிகவும் முக்கிய கதாசிரியராக வலம் வரும் சேத்தன் பகதின் கதையை அமீர் 3 இடியட்சாய் செய்யும் போது அவரது பெயரை ஒர் ஓர...