சாப்பாட்டுக்கடை- Renneth Kitchen
”ழ” பதிப்பக கே.ஆர்.பியும், விந்தைமனிதன் ராஜராமும் டிஸ்கவரி புக் பேலஸுக்கு வந்து அழைத்தார்கள். கடை மூடும் வரை பேசிக் கொண்டிருந்துவிட்டு, சாப்பிடக் கிளம்பலாமென்று யோசித்துக் கொண்டிருந்தார்கள். சாப்பாடு என்றவுடன் என்னை கேட்க, இந்த நேரத்தில் இங்கே பக்கத்தில் பாண்டியன் ஹோட்டல் தான் இருக்கும் என்று சொல்ல.. சரி என்று முடிவு செய்து அங்கே போன போது பக்கத்தில் புதிதாய் Renneth Kitchen என்று ஒரு புதிய கடை ஆரம்பித்திருந்தார்கள்.