Posts

Showing posts with the label மலையாளம்

Passenger – Malayalam Film Review

Image
மீண்டும் ஒரு காமன் மேன் படம். ஆனால் இது வேறு விதம். மூன்று நாட்களில் சம்பந்தமேயில்லாத மூன்று பேர்களுடய வாழ்வில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு. சத்யன்ந்தன் ஒரு பார்மா கம்பெனியில் வேலை பார்ப்பவன். தினமும் நிலையிலிருந்து எர்னாக்குளத்துக்கு இரயில் பயணிப்பவன். தினமும் பயணத்திற்கிடையில் சரியாய் ஒரு இடத்திலிருந்து இறங்கும் வரை தூங்கும் பழக்கம் உள்ளவன். அட்வகேட் நந்தன் மேனோன். வக்கீல், ஷோசியல் ஆக்டிவிஸ்ட், மல்ட்டி நேஷனல் கம்பெனி ஒன்றின் மணல் கொள்ளைக்கு எதிராய் மரநாட்டுக்கரா என்கிற இடத்தை ஆக்கிரமிக்க, அரசியல்வாதிகளுடன் போராடுபவன். அவனுக்கு உதவியாய் அவனுடய மனைவி அனுராதா, ஒரு டிவி ஜர்னலிஸ்ட். அமைச்சர் தாமஸ் சாக்கோவுக்கும், மல்டி நேஷனல் கம்பெனிக்ளுக்கு இடையே உள்ள உறவை வெளிபடுத்த மீடியா மூலம் முயற்சிப்பவள். ஒரு நாள் அமைச்சர் சாக்கோவின் அறையில் ஸ்பை கேம்வைத்து அவர்களுக்கும், கம்பெனிகளூம் மாநாட்டுகாரா வில ஒரு விமானத்தை விட்டு வெடிக்க வைத்து அந்த இடத்தை காலி செய்ய வைக்கும் ஒரு விஷயத்தை படம்பிடித்துவிட, அதை கண்டுபிடித்த அமைச்சர், அவளை துரத்துகிறார். அதே நாளில் ஆபீசிலிருந்து லேட்டாய் ...