OTTகளின் மவுசு குறைகிறதா?
ஓ . டி . டி மவுசு குறைகிறதா ? ஆனானப் பட்ட நெட்ப்ளிக்ஸே சப்ஸ்கிரைபர் போய்ட்டானு பப்ளிக்கா சொல்லியிருக்கான் . இனிமே அவ்வளவுதான் . எத்தினி ஓ . டி . டிக்கு பணம் கட்டுறது ?. ஒருத்தன் ஆயிரம்ங்கிறான் . இன்னொருத்தான் முன்னூறுங்கிறான் கூட்டிக் கழிச்சுப் பார்த்தா வருஷத்துக்கு பத்தாயிரம் வந்திரும் போல . இதுல பே பர் வியூனு பார்க்குற படத்துக்கு மட்டுமே கட்டுனு நாலு பேரு இருக்கான் . எல்லாம் வந்த புதுசுல ஜோராத்தான் போவும் . குப்பை படத்தைத்தான் ஓ . டி . டில கொடுப்பாங்கன்னா எவன் அதுக்கு பணம் கட்டுவான் ? என்று ஆளாளுக்கு ஓடிடியின் வியாபாரம் குறித்தும் , அதன் எதிர்காலம் குறித்தும் ஸ்டேடஸும் , கருத்துக்களை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தார்கள் . காரணம் நெட்ப்ளிக்ஸின் சந்தாதாரர்கள் குறைந்தார்கள் என்கிற அறிவிப்புத்தான் . இப்படி கருத்து சொல்கிறவர்களில் பெரும்பாலானவர்கள் எல்லா ஓ . டி . டிக்கும் பணம் கட்டியவர்கள் இல்லை . நண்பர்களின் ஐடியையோ அல்லது பைரஸி டவுன்லோட்டிலோ தான் படம் பார்க்கிறார்கள் . உண்மையிலேயே ஓ . டி . டியின் மவுசு போய் விட்ட...