subiah ravi sarvagar@gmail.com Dear sir, I am M.Subbiah, working as an Associate Director. I read your recent book "Cinema viyabaram". so nice and remarkable one. very useful for me. i want to talk to u sir. can i get your mobile number, please. My hearty wishes to all your further future products, sir. Thank you, regards, subbiah.m. என்னடா இவனும் ஆரம்பிச்சிட்டானா என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், உள்ளுக்குள் நமுட்டு சிரிப்பு சிரிப்பவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு மனிதன் தன் வாழ்கையில், உணவு, உடை, இருப்பிடத்திற்கு பிறகு அங்கீகாரத்துக்காகத்தான் அலைகிறான். காதல், குடும்பம், உள்பட என்பது என் கருத்து. ஏதோ விளையாட்டுப் போல ஒரு வருடத்தில் மூன்று புத்தகங்கள் எழுதியாகிவிட்டது. பதிவர்கள் நண்பர்கள் எல்லாம் பழகின தோஷத்திற்காகவோ.. அல்லது நிஜமாகவே பிடித்தோ… வாங்கி படித்திருக்கலாம் அல்லது பாராட்டியிருக்கலாம். ஆனால் பொது வெளி எனும் போது அங்கு என் புத்தகத்தை வாங்குபவர். புதியவர் அவர்களிடமிருந்து புத்தகத்துக்கான விமர்சனங்...