Posts

Showing posts with the label inflation

விலைவாசி...

Image
ஒரு லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கிய பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி.. நன்றி.. நன்றி.. நாட்டின் பொருளாதாரம் சூப்பராய் இருந்த காலத்தில் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட், காய்கறிகள், மளிகை சாமான்கள் என்று எல்லாமுமே ஏறுமுகமாய் இருந்தது. அப்போது இதற்கெல்லாம் காரணம் இந்த சாப்ட்வேர் ஆசாமிகள் என்று மற்ற துறையினர்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள். அது ஒரு விதத்தில் உண்மையும் கூட. அவர்களால் வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் போன்றவைகள் விண்ணை தொடும் அளவுக்கு ஏறியது. பின்பு நாட்டில் பணவீக்கம் அதிகமாகி பொருளாதாரம் சிக்கலான போது, அதை காரணம் காட்டி விலைவாசி கிடுகிடுவென ஏறியது. ஸ்டார் ஹோட்டலிலிருந்து, கையேந்திபவன் வரை அசுர வேகத்தில் ஏறியது. ஒரு ரூபாய் பரோட்டா 2.50 ஆனது, வாட்டர் பாக்கெட் கெட்ட கேட்டுக்கு 1.50 ஆனது. காய்கறி மற்றும் உணவு பொருட்கள் எல்லாமே ராக்கெட் விலை உயர்வு உயர்ந்தது. அதற்கு காரணம் காட்டியது பெட்ரோல் விலையையும் தான். ஹோட்டல்களில் பொதுமக்கள் சாப்பாட்டுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருந்த நிலைமையில், அரசே தலையிட்டு மலிவு விலையில் சாப்பாடு கொடுக்க சொல்லி உத்தரவிட்டது தெரிந்ததே.. அது வெறும் ...