கொத்து பரோட்டா - 29/10/12
புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு முன் அந்த கட்டிடங்களுக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை பார்க்கிங் செய்ய என்ன வசதிகள் செய்திருக்கிறார்கள் என்பதை பற்றி நமது மாநகராட்சி கவலைப் படுகிறதா இல்லையா? என்றே தெரியவில்லை. முக்கியமாய் திநகர் போன்ற ஏரியாக்களில் இருக்கும் டிராபிக், மற்றும் பார்க்கிங் ப்ரச்சனைகளை சொல்லி மாளாது. சரி ஒரு காலத்தில் கட்டிங் வாங்கிக் கொண்டு ஏழு மாடி எட்டு மாடியெல்லாம் கட்ட இடம் கொடுத்துவிட்டார்கள். ஆனால் பார்க்கிங் பிரச்சனைகள் தலைவிரித்தாடும் காலத்தில் சென்னையில் அதுவும் ஜி.என்.செட்டி சாலையில் வாணிமஹாலுக்கு அருகில் புதியதாய் திறக்கப்பட்டிருக்கும் போத்தீஸின் பன்னிரெண்டு மாடி பொத்தீக்குக்கு பார்க்கிங் பிரிட்ஜுக்கு கீழேயும், இடது பக்க ராமகிருஷ்ணா ஸ்கூல் க்ரவுண்டை சுற்றியுள்ள இடங்களில் மட்டுமே.. ஏதோ ஒரு சின்ன பார்க்கிங் இடத்தை மட்டும் பேருக்கு வைத்துவிட்டு, ரோட்டில்தான் பார்க் செய்ய விடுகிறார்கள். அடித்தளத்தைக் கூட இவர்களின் கடை வியாபாரத்துக்குத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள். அரசு இதை உடனடியாய் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். இல்லையேம் தி.நகர் என்றில்லாமல் இனி ...