Posts

Showing posts with the label buffet

சாப்பாட்டுக்கடை -Door No.27 Bada Kana Buffet

Image
நன்றாக சாப்பிடவேண்டும் அதுலேயும் விதவிதமாய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமிருக்கிறவர்களுக்கு சிறந்தது ப்ஃபேதான். கல்யாணங்களில் கூட இப்போதெல்லாம் 500 பேருக்கு மேல் என்றால் பஃபே சிஸ்டம்தான் வசதியாயிருக்கிறது வைத்து விடுகிறார்கள். டோர் நெ. 27 பற்றி சில மாதங்களுக்கு முன் தான் எழுதியிருந்தேன் . முக்கியமாய் அவர்களுடய பிரியாணியையும் எண்ணெய் கத்திரிக்காயையும் சாப்பிட்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போதே சொன்னார்கள் விரைவில் பஃபே சர்வீஸ் ஆரம்பிக்கப் போவதாய். அதுவும் வார இறுதி நாட்களில் மட்டும். அவர்கள் ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு பிறகு சென்றிருந்தேன். 450 ரூபாய் என்றதும் கொஞ்சம் யோசனையாய்த்தான் இருந்தது. 50 அயிட்டங்களின் லிஸ்டைப் பார்த்ததும் சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஆட்டத்தில் இறங்க ஆரம்பித்தேன். நான் போயிருந்தது மதிய லஞ்சுக்கு.