Thottal Thodarum

Jun 4, 2013

சாப்பாட்டுக்கடை -Door No.27 Bada Kana Buffet

நன்றாக சாப்பிடவேண்டும் அதுலேயும் விதவிதமாய் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமிருக்கிறவர்களுக்கு சிறந்தது ப்ஃபேதான். கல்யாணங்களில் கூட இப்போதெல்லாம் 500 பேருக்கு மேல் என்றால் பஃபே சிஸ்டம்தான் வசதியாயிருக்கிறது வைத்து விடுகிறார்கள். டோர் நெ. 27 பற்றி சில மாதங்களுக்கு முன் தான் எழுதியிருந்தேன். முக்கியமாய் அவர்களுடய பிரியாணியையும் எண்ணெய் கத்திரிக்காயையும் சாப்பிட்டவர்கள் மீண்டும் மீண்டும் சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்போதே சொன்னார்கள் விரைவில் பஃபே சர்வீஸ் ஆரம்பிக்கப் போவதாய். அதுவும் வார இறுதி நாட்களில் மட்டும். அவர்கள் ஆரம்பித்து இரண்டு வாரங்களுக்கு பிறகு சென்றிருந்தேன். 450 ரூபாய் என்றதும் கொஞ்சம் யோசனையாய்த்தான் இருந்தது. 50 அயிட்டங்களின் லிஸ்டைப் பார்த்ததும் சரி சாப்பிட்டுத்தான் பார்ப்போமே என்று ஆட்டத்தில் இறங்க ஆரம்பித்தேன். நான் போயிருந்தது மதிய லஞ்சுக்கு.


 கொஞ்சம் காண்டினெண்டெல் டைப்பில் சாலட்டுகள் இருந்தது. கொஞ்சமே கொஞ்சூண்டு லேசாய் கண்ணில் காட்டிவிட்டு, முதலில் வெஜ் லைனுக்கு போனேன். வெஜ் ஸ்டாடர்ஸாய் வெஜ் ஷீக் கபாப், தந்தூரி ஆலு, பன்னீர் டிக்கா இருந்தது. வெஜ் ஷீக் கபாபும், பன்னீர் டிக்காவும் க்ளாஸ். தந்தூரி ஆலுவில் கொஞ்சம் லேசாக காரம் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். அதுவும் பன்னீர் செம ப்ரெஷ். மெயின் கோர்ஸாய் வெஜ் ப்ரைட் ரைஸ், வெஜ் ஹைதரபாதி பிரியாணி,  ப்ளெயின் சாதம், கார்லிக் ப்ரெட், சென்னா தால், வெஜ் கடாய், வெஜ் மஞ்சூரியன் போட்ட சைனீஸ் சைட்டிஷ், காண்டினெண்டலுக்கு வெஜ் ஹெர்ப் சாஸ். மற்றும் தயிர் சாதம், ஊறுகாய், மோர் மிளகாய் என்று வரிசைக் கட்டியிருந்தார்கள். அடுத்த வரிசையில் நான் வெஜ் வேறு இருந்ததால் எல்லாவற்றிலும் கொஞ்சம் டேஸ்டுக்காக சாப்பிட ஆரம்பித்தேன். ஸ்டாடர்ஸே அசத்தலாய் இருந்ததால் எதிர்பார்ப்பு அதிகமாகி விட, ரெண்டு புல்கா சுடச் சுட எடுத்து வரச் சொன்னேன். கொஞ்சம் கடாய் வெஜ், சென்னாதால், மஞ்சூரியன் மூன்றையும் போட்டுக் கொண்டேன். கடாய் வெஜ் நன்றாக இருந்தது. இன்னும் கொஞ்சம் ஸ்பைஸியாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. மஞ்சூரியன் அட்டகாசம். குறிப்பாய் அந்த வெஜ் பால்ஸுகளை ஸ்டஃப் செய்து பொரித்திருந்த விதமும், அதன் சுவையும் இன்னொரு மஞ்சூரியனை சாப்பிடத் தோன்றியது. இவற்றையெல்லாம் அடித்து தூக்கியது சென்னா தால். நல்ல பெரிய பெரிய சென்னா. நன்றாக வேக வைகக்ப்பட்டு, மசாலாவோடு நன்றாக ஊறி வாயில் வைத்தவுடன் அளவான காரமும், சுவையும் உச்சிக்கு ஏறுகிறது. நல்ல சூடான புல்காவோடு, ம்ம்ம்.. டிவைன்.

அப்படியே நான் வெஜ் கவுண்டருக்கு ஒர் எட்டு எட்டிப் பார்த்தேன். நாவில் நீர் சுரந்துவிட்டது. ஸ்டாடர்ஸ் அங்கேயும் அசத்தலானது. சிக்கன் ஹரியாலி கபாப், ப்ரான் மலாய்,  சிக்கன் டிக்கா. ஹரியாலி சிக்கன் கபாப்புடன் அவர்கள் கொடுத்திருந்த புதினா சட்னி நாவின் டேஸ்ட் பட்ஸை தூண்டிவிட்டது. சிக்கன் டிக்காவில் கொஞ்சம் உப்பு அதிகம். ப்ரான் மலாய் நல்ல பெரிய பெரிய சைஸ் முந்திரி கணக்காய் இருந்தாலும் கொஞ்சம் சுவை குறைவுதான். அடுத்து மெயின் கோர்ஸாய் சிக்கன் ப்ரைட் ரைஸ், சிக்கன் ஷேவாகன்,  தேங்காய் போட்ட மீன் கறி, காண்டினெண்டலுக்கு ப்ரான் ஃபைன் ஹெர்ப், பெப்பர் சிக்கன், எக்புர்ஜி, சிக்கன் பிரியாணி, எரா பிரியாணி, மற்றும் அவர்களுடய பேவரேட் எண்ணெய் கத்திரிக்காய், மற்றும் தயிர் வெங்காயம்.
சிக்கன் ப்ரைட் ரைஸும், ஷேவாகனைப் பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை ஏனென்றால் பக்கத்திலிருந்த பெப்பர் சிக்கன் மற்ற அயிட்டங்கள் எல்லாவற்றையும் தூக்கி சாப்பிட்டுவிட்டது. குறிப்பாய் பெப்பர் சிக்கன் என்கிற பெயரில் கிரேவியாய் பெப்பர் அதிகமாய் ஒருவிதமான அதிக காரத்துடன் சர்வ் செய்வார்கள். ஆனால் நன்கு வெந்த சிக்கனில் பெப்பர் கிரேவியோடு, அதில் தாளிக்கும் காய்ந்த மிளகாயின் காரம் சிக்கனில் உள் வரை இறங்கி, பெப்பர் மற்றும் மசாலா, மிளகாயின் சுவை எல்லாம் சேர்த்து ஒரு பீஸை வாயில் வைத்து பாருங்க அப்ப தெரியும். வாவ்.. வாவ்.. அதிலும் சூடான புல்கோவில் ஒரு பீஸை வைத்து சாப்பிடும் போது சிக்கனில் இருக்கும் மசாலாவும் அதன் ஜூஸும் சேர்ந்து புல்காவிற்கு தனி சுவையை கூட்டுகிறது. வெஜ் லைனிலிருக்கும் ப்ளையின் ரைஸை எடுத்துக் கொண்டு, அங்கேயிருந்த தேங்காய் அரைத்துவிடப்பட்ட மீன் கிரேவியை ஊற்றிக் கொண்டேன். தேங்காயின் சுவையும், கூடவே மஞ்சள் மற்றும் மசாலாவும் இணைய கொஞ்சம் கூட வாடையேயில்லாத மிக சுவையான மீன் குழம்பு கிரேவிக்கு புர்ஜி செம காம்பினேஷன். சிக்கன் பிரியாணியைப் பற்றி தனியாய் சொல்ல வேண்டியது இல்லை. டிவைனோ டிவைன். எரா பிரியாணி சுவை நன்றாக இருந்தாலும் கொஞ்சம் நீர்த்து போயிருந்தது மைனஸாய் இருந்தது.  லேசாய் கொஞ்சம் தயிர் சாதத்தை போட்டுக் கொண்டு, பெப்பர் சிக்கனின் கிரேவியை அதன் மேல் ஊற்றி சாப்பிட்டவிட்டு, டெஸர்டுக்கு வந்தால் லைனாய் பெங்காலி சுவீட்டுகளாய் அடுக்கி வைத்திருந்தார்கள். 

ரசகுல்லா போன்றது, குலாப்ஜாமூன், ட்ரை குலாப்ஜாமுன் மற்றும் சட்டென பெயர் ஞாபகமில்லாத அயிட்டங்கள் வரிசைக் கட்டியிருந்தது. ஸ்வீட் பிரியார்களுக்கு கொண்டாட்டமான விஷயம். மேலாக பார்ப்பதற்கு ஜாமூன் அயிட்டகளை தவிர மற்றதெல்லாம் ட்ரையாக இருந்தது. என்னடா இது என்று ஒரு வில்லல் எடுத்து போட்டதும் உள்ளிருந்து ஜூஸாய் இறங்கியது. வாவ்... வாவ்... வாவ்.. ஷுகர் இருப்பவர்கள் நிச்சயம் இந்தப் பக்கம் திரும்பாதீர்கள். உங்களால் கண்ட்ரோல் செய்ய முடியாது. இதெல்லாம் முடித்து ஐஸ்க்ரீம் வேறு தருகிறார்கள். மூன்று ஆப்ஷன்களிலோடு ம்ஹும்.. என்னால முடியலைப்பா..

தனிப்பட்ட முறையில் இவ்வளவு அயிட்டங்களையும் சாப்பிட முடியுமா? என்று யோசித்துப் பார்த்தால் நிச்சயம் முடியாது. பஃபேயின் ஸ்பெஷாலிட்டியே யார் யாருக்கு என்ன விருப்பமோ அதை அளவில்லாமல் சாப்பிடுவதற்குத்தான். நான் எல்லா அயிட்டங்களையும்  சுவை பார்க்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றிலும் கொஞ்சம் டேஸ்ட் பார்த்தேன். விரும்பிய அயிட்டங்களை நன்றாக சாப்பிட்டேன். என்னைப் பொறுத்தவரை இதை விட மொக்கையான பஃபேக்களுக்கு ஆறு நூறும் ஏழு நூறும் தண்டம் அழுது இருக்கிறேன். அந்த வகையில் இவர்களின் பஃபே நல்ல தரமான, சரியான் விலையில் வைக்கப்பட்டிருக்கும் வரிசைதான். இருந்தாலும் வெஜ், மற்றும் இரண்டும் கலந்த பஃபே என்று போட்டால் இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்றும், மேலும் சில காண்டினெண்டல் அயிட்டங்கள் சுவையில் குறையில்லாவிட்டாலும் அதை விரும்பும் ஆட்கள் மிகக் குறைவாகவே இருப்பார்கள் என்பதாரல் அதற்கு பதிலாய் புதிய அயிட்டங்களை அறிமுகப்படுத்தலாமே என்று சொல்லிவிட்டு வந்தேன். விரைவில் வெஜ் மட்டும் தனி பஃபேவாக ஆரம்பிக்கப்படலாம். நம் சாப்பாட்டுக்கடை மெம்பர்களுக்கு என சிறப்பு சலுகை கூட அறிவிக்க இருக்கிறார்கள். அது பற்றி மேலும் அறிய இங்கே க்ளிக்கவும்.
Door No.27
27, Vasu st, Kilpauk
chennai-10
Opp to Ega theatre Entrance
Ph:64612727/64622727
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

arul said...

thanks for sharing

Siva said...

"Continental type" means what sir? Then do they provide buffet system on both saturday and sunday? do they provide only lunch as buffet system?

kindly also provide how to reach door no.27 for non-chennai people. since ur blog was read by whole world. many of them will come to chennai as purchases for their home function to T.Nagar.At that time if we search ur posts means it will b much easy to find the way from T.Nagar know?

I just said my view. if there any mistake pls forgive me.....

Ramya Mani said...

wow, epdi shankar sir evlo saapteenga. enakku padikkum pothe yabaaa nu aayidithu. But nalla jaaliya irunthuthu :)

Mohan said...

The Buffet is costly for Poor Eaters like me, also they don't have a Children package in Buffet,. Also during Buffet timings they Hesitate a little to serve as order.