Thottal Thodarum

Jun 24, 2013

கொத்து பரோட்டா-24/06/13

விலையில்லா பொருட்களில் ஆரம்பித்து, மலிவு விலையில் உணவகம் தந்த வெற்றி, மேலும் அம்மாவை அம்மா வாட்டர், அம்மா காய்கறிக்கடை என்று ஆரம்பிக்க வைத்திருக்கிறது. வெளியே விற்கும் பொருட்களின் விலையேற்றத்தினால் அவதிப்படும் மக்களை காப்பாற்றவே இந்த முயற்சி என்று உட்டாலக்கடி அடித்தாலும், அரசின் இயலாமையைத்தான் காட்டுகிறது. ஒரு மாநிலத்தில் விலைவாசி உயர்கிறது என்றால் அதை கட்டுக்குள் கொண்டு வர அந்த மாநில ஆட்சியாளர்கள் தான் செய்ய முடியும். ஆனால் அதை விடுத்து, அரசே அதற்கு மானியம் கொடுத்து மானிய விலையில் கடை விரிக்கிறேன் என்று ஆரம்பிப்பது சரியான வழியாய் தெரியவில்லை. பத்து ரூபாய்க்கு  தண்ணீர் பாட்டில் என்று இன்றைக்கு அறிவித்தாலும், பிற்காலத்தில் அதே தண்ணீரை பிரிட்ஜில் வைத்து மேலு ஐந்து ரூபாய் வாங்கத்தான் போகிறார்கள் அதை நாமும் கேட்காமல் வாங்கிக் கொண்டுதான் வருவோம். நிச்சயம் மற்ற வாட்டர் கம்பெனிக்காரர்களின் லாபியிங்கை அரசு தடுக்க முடியாது. அல்லது முயற்சிக்காது. ஒரு வேளை பஸ் ஸ்டாண்டுகளில் அரசு அம்மா தண்ணீரைத் தவிர வேறு தண்ணீர் விற்ககூடாது என்கிற மோனோபாலி விஷயத்தை அமல்படுத்தினால் ஓகே ஆகலாம். இது வரை அம்மா உணவகம் நல்ல படியாய் நடந்து கொண்டிருந்தாலும் அதனால் சுற்றியுள்ள கடைகளில் விலை குறைந்த பாடில்லை. அதே நிலைதான் காய்கறி கடைகளுக்கும் நடக்குமென்று தோன்றுகிறது. அரசு நினைத்தால் இம்மாதிரியான விஷயங்களில் விலையேற்றத்திற்கு முக்கிய காரணமான இடைதரகர்களை ஒழித்து, எம்.ஆர்.பியில் விற்கும் முறையை தயவு தாட்சண்யம் பாராமல் அமல் படுத்தினால் நிச்சயம் நடக்கும். ம்ம்ம்.. எங்கே.. டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ஐந்து ரூபாய் வாங்குவதையே தடுக்க முடியவில்லை. போகிற போக்கில் பார்த்தால் தமிழ்படத்தில் வருவது போல, அம்மா.. ஹாஸ்பிட்டல், ஓட்டல், பார், தண்ணீர், ஏர்போர்ட் என்று லைனாக ஆரம்பித்துவிடுவார்கள் போல..
@@@@@@@@@@@@@@@@@@@@@@உத்ரகண்டில் நடந்திருக்கும் பேரழிவு உள்ளுக்குள் ஒரு உதறலைத்தான் கொடுத்திருக்கிறது. பூமா தேவி ஒரு நா சிரிக்கப் போறா நாம எல்லாரும் உள்ளே போகப் போறோம்னு ஒரு வசனம் வரும் அது ஞாபகத்துக்கு வருது. இயற்கை நினைத்தால் நாமெல்லாம் ஒண்ணுமேயில்லை என்பதை திரும்பத் திரும்ப நிருபித்துக் கொண்டேயிருக்கிறது. இதையெல்லாம் மீறி மீண்டும் நாம் இயற்கையை சீண்டிக் கொண்டேயிருக்கிறோம். அதை நினைத்தால் தான் பயமாய் இருக்கிறது. கலியுகத்துல உலகம் அழியும்னு சொன்னாங்களே அது வந்திருச்சோ.. உயிர் தப்பித்து வந்தவர்கள் சொல்லும் விஷயங்கள் நடு முதுகில் லேசாய் ஒர் ஷாக்கை கொடுக்கிறது. இந்த மோசமான நேரத்தை பயன்படுத்தி ஒரு பரோட்டா 250 ரூபாய்க்கெல்லாம் விற்பதும், கத்தியைக் காட்டி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பலும் இருக்கத்தான் செய்கிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@
உலகம் முழுவதும் எதிர்பாராத பேரழிவுகள் நடந்து கொண்டேதானிருக்கிறது. ஆதில் ஒண்ணும் தெரியாத அப்பாவி பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் இறந்து கொண்டுதானிருக்கிறார்கள். ஆனால் அவ்வளவு பேரழிவுகளிலும் கவனித்துப் பார்த்தால் ஒரு லோக்கல் அரசியல்வாதியோ, ஆன்மிகவாதியோ, யாரும் அகபட்டு இறந்ததாய் தெரியவில்லை. ஊரை அடித்து வாயில் போடும் இவர்கள் மட்டும் ஏன் இம்மாதிரியான பேரழிவுகளில் சிக்குவதில்லை?.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சனிக்கிழமை இரவு இவ்வளவு சுவாரஸ்யமாய் போகுமென்று எதிர்பார்க்கவேயில்லை. கருணா, பவா செல்லதுரை, சீனிவாசன், மிஷ்கின், பாலாஜி என நண்பர்கள் குழும, சினிமா, இசை, லேசாய் இலக்கியமென்று வாவ்..
@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
எவ்வளவோ பாடல்கள் புதியதாய் வந்து கொண்டேயிருந்தாலும், ஒரு சில பாடல்கள் கேட்ட மாத்திரத்தில் பிடித்துப் போய், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் எல்லாம் கேட்கவோ, முணுமுணுக்கவோ வைத்துவிடும். அப்படி கொஞ்ச நாட்கள் முன்பு பித்து பிடிக்க வைத்த பாடல் ரஹ்மானின் ஆரோமலே, பின்பு கடல் படத்தில் வரும் அடியே. இப்போது இந்த பாடல். மலையாளத்தில் கேட்ட போதே ஹாண்டிங்காக இருந்தது. இப்போது தமிழில் கேட்டதும் இன்னும் இன்னும் பிடிக்க ஆரம்பித்து, லூப்பில் ஓடும் படி ஆகிவிட்டது. என்னா ஒரு குரல். ஒரு மலையாள பாடலுக்கு பழனிபாரதியின் வரிகள் சரியாய் சிங்கில் வந்திருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
படித்ததில் பிடித்தது
அவ்வளவு எளிதாக
அவ்வளவு அதிகமாக
அவ்வளவு தந்திரங்களுடன்
ஒரு நன்றியை
ஒரு பிரியத்தை
ஒரு கருணையை
ஒரு கண்ணீரை
பகிர்ந்து கொள்ள்த் தெரியவில்லை
மெளனமாக்வும் இருக்க முடியவில்லை
மஹா கவிதை எழுதியிருக்கிறேன்
என்பதில் எந்தக் குறைச்சலுமில்லை

கீதாஞ்சலி பிரியதர்சினியின்  நிலைக்கண்ணாடி நிமிடங்கள் கவிதை தொகுப்பிலிருந்து.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
மேட்டர் பண்ணவங்களெல்லாம் புருஷன் பொண்டாட்டின்னு சொன்னா குடும்பத்துல மட்டுமில்லை நாட்டுலேயே குழப்பம் உண்டாயிரும்.

நான் அடிச்சா தாங்க மாட்ட, தாலியில்லீன்னா தூங்க மாட்டே :)

  • விமர்சனம் குறித்து சம்பந்தப்பட்டவர் பேசியிருந்தாலும் தகும். சொம்படிப்பவர்கள் கூவுவதை பார்க்கும் போதுதான் பாவமாய் இருக்கிறது.
   • உன்னை புறக்கணித்துவிட்டார்களே என்று வருத்தப்படாதே. விலை மதிப்புள்ளதை வாங்க முடியாதவர்கள் சீப்பான விஷயத்துக்குத்தான் போவார்கள். nikilmurugan
    • pre marital செக்ஸ் வச்சிக்கிட்டாளே புருஷன் பொண்டாட்டிதானாமே? கிழிஞ்சுது போ..
     • நடு ராத்திரி ஒரு மணிக்கு ரெண்டு வாட்டி கார் லைட் அணைச்சு சிக்னல் கொடுத்து இன்வைட் செய்ததில் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. :)
      • டாய்.. டாய்ய்ய்ய்ய்.. டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் #சங்கூ
       பல்லு இருக்கிறவன் பக்கோடா தின்னுறான்#சங்கூ
       கை தட்டினேன்.பரிசு பெற்று கொண்டேன். இலக்கிய விழா#சங்கூ
       வானத்தில ப்ளைட் ப்ளைட்டுல லைட்டு போட்டது யாரு#சங்கூ
       @@@@@@@@@@@@@@@
       அடல்ட் கார்னர்
       “சார் நீங்க இங்க சிகரெட் குடிக்க கூடாது” என்றார் கடைக்காரர். “உன் கிட்டத்தானே சிகரெட் வாங்கினேன் நான் இங்க குடிக்ககூடாதுன்னா என்ன அர்த்தம்?” என்றார் வாங்கியவர். “நான் காண்டம் கூடத்தான் விக்குறேன். அதுக்காக இங்கே பிரிச்சு மாட்டிப்பீங்களா என்ன?”
       கேபிள் சங்கர்


Post a Comment

6 comments:

குரங்குபெடல் said...

நடு ராத்திரி ஒரு மணிக்கு ரெண்டு வாட்டி கார் லைட் அணைச்சு சிக்னல் கொடுத்து இன்வைட் செய்ததில் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. :)

டாய்.. டாய்ய்ய்ய்ய்..டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்#சங்கூ
பல்லு இருக்கிறவன் பக்கோடா தின்னுறான்#சங்கூ
கை தட்டினேன்.பரிசு பெற்று கொண்டேன். இலக்கிய விழா#சங்கூ
வானத்தில ப்ளைட் ப்ளைட்டுல லைட்டு போட்டது யாரு#சங்கூநடு ராத்திரி ஒரு மணிக்கு ரெண்டு வாட்டி கார் லைட் அணைச்சு சிக்னல் கொடுத்து இன்வைட் செய்ததில் சுவாரஸ்யம் இருக்கத்தான் செய்கிறது. :)
டாய்.. டாய்ய்ய்ய்ய்.. டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் #சங்கூ
பல்லு இருக்கிறவன் பக்கோடா தின்னுறான்#சங்கூ
கை தட்டினேன்.பரிசு பெற்று கொண்டேன். இலக்கிய விழா#சங்கூ

வானத்தில ப்ளைட் ப்ளைட்டுல லைட்டு போட்டது யாரு#சங்கூ

Successful 2 nd Week . . .


விஸ்வநாத் said...

// அவ்வளவு பேரழிவுகளிலும் கவனித்துப் பார்த்தால் ஒரு லோக்கல் அரசியல்வாதியோ, ஆன்மிகவாதியோ, யாரும் அகபட்டு இறந்ததாய் தெரியவில்லை.//

It should be போலியான ஆன்மிகவாதி.
Gaurikand விட்டு நகர மாட்டோம் என்றும் சில சாதுக்கள் சொன்னதாய் படித்தேன்.

ராஜி said...

அம்மா மினரல் வாட்டர் பற்றிய கருத்து மிகச்சரியே! அப்புறம் அந்த படித்ததில பிடித்தது கவிதை அருமை.., பகிர்ந்தமைக்கு நன்றி!

kailash said...

Have you tried reading the MRP recently ? In many of the products its very difficult to read the same . in the place of MRP they will say see side panel or top panel . if you try to view top or side panel it wont be clear . Many companies are doing like this now in their products to cheat the customer . Since many customers will have a second thought after seeing MRP they dont want customer to read it easily. Manufacturers are using dirty tricks wrt MRP

அப்துல் கலாம்-அமீரகம் said...

காற்றே காற்றே என்று துவங்கும் பாடலின் மளயாலப்பதிப்பின் படம் பெயர் Celluloid. தன் மானிலத்தில், தன் மொழியில் முதல் படம் எடுக்க, எப்படி எல்லாம் பாடுபடுகிறார் என்பதே கதை. படத்தில் பிரித்விராஜ் வாழ்ந்துள்ளார்.

Muraleedharan U said...

singer Rajalakshmi is blind with voice of nostalgic feels.