மின்னம்பலம் - பேஸ்புக் ஹிட்
பேஸ்புக் ஹிட் சென்ற வாரம் மலையாளப்படத்தைப் பற்றி எழுதியவுடன் அது என்ன படம் என்று பல பேர் கேட்டிருந்தார்கள். அது நண்டுகளூடே நாட்டில் ஒர் இடைவேளா. நிவின் பாலி நடித்தது மட்டுமில்லாமல் தயாரித்தும் அளித்த படம். இந்தக்கதையை எப்படி இவ்வளவு சுவாரஸ்யமாய், அழுகாச்சியாய் இல்லாமல் எடுத்தார்கள் என்பதே ஆச்சர்யமாய் இருக்கிறது. வழக்கமாய் இம்மாதிரியான கதைகளில் பார்ப்பவர்களின் தொண்டையை அடைக்கும் சோகமே வெற்றிக்கான அளவுகோல். ஆனால் இவர்கள் இப்படத்தில் கொண்டாடுகிறார்கள்.கண்களில் திரையிடும் கண்ணீருக்கிடையே சிரிக்கிறார்கள். நிவின் பாலி லண்டனில் வேலை செய்து கொண்டிருக்கிறார். அவரது அம்மா சாந்திகிருஷ்ணா.அப்பா லால். வீட்டில் தங்கை, அவளுடய கணவன், வயதான தாத்தா, என ஜாயிண்ட் பேமிலி. ஒர் சுபயோக சுபதினத்தில் சாந்திகிருஷ்ணா தனக்கு மார்பக புற்று நோயாக இருக்குமோ என்று சந்தேகப்படுகிறார். அவரே தைரியமாய் டெஸ்டுக்கும் போய் நிற்கிறார். ஆம் ஸ்டேஜ் 2 என்று முடிவான போதும் தளரவில்லை. இதை தெரிவிக்காமல் மகனை உடனடியாய் இந்தியாவுக்கு வரும் படி அழைக்கிறார். இம்மாதிரியான திடீர் அழைப்புகள் எல்லாம் கல்யாணத்துக்காகத்தான் என்று நண்ப...