Posts

Showing posts with the label police

சட்டம் உன் கையில்

Image
பொது இடத்தில் புகை பிடிக்க தடை போன்ற சட்டங்களை பொது புகை பிடிப்பவர்கள் கூட முணுமுணுத்துக் கொண்டே ஆதரித்தாலும், எல்லோரும் பயப்படுவது அதை நடைமுறை படுத்தும் போது நடக்க போகும் அராஜகத்தை நினைத்துதான். ஏன் என்றால் நம் நாட்டில் குற்றம் நடப்பதை தடுப்பதற்காக காவல் துறை இல்லாமல், அது நடக்க விட்டுவிட்டு அப்புறமாய் வந்து தண்டிப்பது அவர்க்ளது வாடிக்கை.. உதாரணமாய் ஓருவன் ஃபிரி லெப்ட் இல்லாத இடத்தில் திரும்ப முயற்சிக்கும் போதே அந்த டிராபிக் கான்ஸ்டபிள் அந்த தெருவின் முனையிலேயே நின்று அவனை தடுத்து அறிவுறுத்த வேண்டியதுதான் அவர் கடமை. ஆனால் அவர் என்ன செய்கிறார்.. ரோட்டின் உள்பக்கத்தில் ஓளிந்து நின்று கொண்டு அவனை மடக்கி “டேக் த 25” வாங்கி அவனை திரும்ப அனுப்பாமல் தவறான பாதையிலேயே அனுப்பி வைக்கிறார். அதே போல் அவர்கள் போடும் சட்டங்களூம் அவ்வளவு ஈஸியாக மக்களுக்கு புரியும் படி இருக்காது. உதாரணமாய் புகை பிடிக்கும் சட்டத்தை எடுத்து கொள்ளுங்கள், அதில் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது.. என்று சொல்லி பல இடங்களை சுட்டி காட்டி இருக்கிறார்கள். ஆனால் தெரு, மற்றும் பார்க் எல்லாம் பொது இடம் தானே..அங்கே புகைக்கலாம் என...

இதுதாண்டா போலீஸ்..The other side of the police man..

Image
ஓரு மத்யான நேரம்.. பர்கிட் ரோடு காலியாய் இருந்தது.. மேட்லி ரோடிலிருந்து நேர் சிக்னல் கிடைத்தவுடன் நேராக சென்றேன், திடீரென்று டிராவல்ஸ் எல்லாம் தாண்டிய பிறகு ஓரு மரமிருக்கும் அதனிடயிலிருந்து ஓரு டிராபிக் கான்ஸ்டபில் வெளியே வந்து என்னை மறித்தார். எனக்கும் முன்னால் ஓருவர் போய் கொண்டிருந்தார் அவரையும் சேர்த்துதான் மறித்தார். ஆனால் அவர் போடாங்க்க்க்...ன்னு சொல்லியபடி அவரை கட் செய்துவிட்டு எம்மாச்சுன்னு போயிட்டார்.. நான் மட்டும் ஓரு நல்ல பிரஜையாய் நின்றேன். “என்ன சார்..?” “ஹெல்மெட் போடல..?” “அந்த ரூல்ஸ் இன்னும் இருக்கா என்ன.?” “என்ன கிண்டலா?” “ எனக்கு முன்னால போனவர் கூட போடல அவரை ஏன் பிடிக்கல.. தானா வந்து நின்னவங்களைதான் பிடிப்பீங்களா..?” “ தேவையில்லாம பேசற.. இல்லாட்டி ஐயாகிட்ட போய் பேசிக்க..” ஐயா அதே மர இடுக்கில் பக்கத்தில் தன்னுடய பைக்கின் மீது ரசீதை வைத்துக் கொண்டு ரொம்ப சீரியஸாய் எனக்கென்ன என்று எங்கோ பார்த்து கொண்டிருந்தார். “ என் கிட்ட காசில்ல..” “ எங்க பர்சை காட்டு..” “ அது உங்களூக்கு தேவையில்லாதது சார். என்கிட்ட காசில்ல.. காசு விஷயமாத்தான் போறேன்.. இல்லாட்டி வண்டிய வச்சிக்கங்க.. ஓரு...

இதுதாண்டா போலீஸ்

Image
மாலை ஏழு மணி இருக்கும் சாலிக்கிராமம் பிரசாத் லேப் ரோடும், அருணாசலம் ரோடும், மற்றொரு ரோடும் சந்திக்கும் மும்முணை..ஓரே டிராபிக் ஜாம்.. எல்லா பக்கத்திலும் பெட்போர்டும், சுமோக்களும், குவாலிஸூகளும். டிவிஎஸ் 50களூம், பைக்குகளும் எல்லா பக்கத்திலும் வண்டிகள்.. ஆரன்கள்..யாருக்கும் பொறுமையில்லை. பொறுமையில்லாமல் எதிர்பக்கம் முன்னேற முயன்று எதிர் பக்கம் வரும் டிராபிக்கையும், நிறுத்தி, மேலும் இடத்தை போர்களமாய் மாற்றி கொண்டிருந்தார்கள். எனக்கு எரிச்சலாய் இருந்த்து.. தெரியாமல் வந்து மாட்டிக் கொண்டோமோ? வேறு ஏதாவது சந்தில் எஸ்கேப் ஆகலாம் என்றால், என்னை சுற்றி வண்டிக் கடல். பக்கத்தில் ஓரு டீக்கடையில் ஓரு டிராபிக் போலீஸ் கடையினுள் உட்கார்ந்து ரகசிய தம் அடித்தபடி ”நமக்கென்ன” என்ற ரேஞ்சில் உட்கார்திருக்க.. அப்போது ஓரு அம்பாசிடர் கார் ஓன்று சிறிது, சிறிதாக முந்திக் கொண்டு, என் பக்கத்தில் வந்து நின்றது..உள்ளே ஓரு போலீஸ் ஆபிஸர், அநேகமாய் இன்ஸ்பெக்டர் ரேங்க.. உள்ளேயிருந்தபடி அங்கும், இங்கும் பார்த்தபடி இருந்தார்..என்ன நினைத்தாரோ சட்டென்று மெதுவாய் நகர்ந்து கொண்டிருந்த காரிலிருந்து இறங்கி, “டிரைவர் நாம ப்ரசாத் ...