எங்கும் நிறைந்தவன் பாலகுமாரன்.
பாலகுமாரனை படித்திருக்கிறேன் என்று சொல்லும் போதே பெருமைப்படுகிறவர்கள் மத்தியில் என்னை பாலகுமாரனுக்கு தெரியும் என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலம் . முதன் முதலில் ஒரு சிறுகதை தொகுப்பை படிக்க ஆரம்பித்து மிரண்டு போயிருந்தேன் . சிறுகதையின் பெயர் நியாபகமில்லை . மனைவி கர்ப்பம் . காரணம் அவளுடய கள்ளக்காதலன் . அவள் கலைக்க சொல்கிறாள் . ஏன் என்று கேட்டதற்கு “ அந்த பையன் கருப்பு ” என்கிறாள் . கருக்கலைப்பில் இறக்கிறாள் . அவளது இறுதி ஊர்வலத்தில் ரோட்டோரம் நின்று அழும் அந்த கள்ளக்காதலனையும் பாடை சுமக்க அழைத்துகிறான் கணவன் . ப்பா .. என்ன ஒரு கதை என்று மிரண்டு போய் பாலகுமாரனின் அத்தனை நாவல்களையும் படிக்க ஆரம்பித்தேன் . எனது தலைவன் சுஜாதா தான் என்றாலும் இன்னொரு தலைவனாய் பாலகுமாரனை ஏற்றுக் கொண்டேன் . அத்தனை புத்தகங்களை படித்தேன் . இன்னும் வீட்டின் லைப்ரரியில் வைத்திருக்கிறேன் . ’ உனக்கென்ன சாமி பூதம் கோயில் குளம் ஆயிரமாயிரம் ஜாலியாய் பொழுது போகும் ... வலப்பக்க கடல் மணலை இடப்பக்கம் இறைத்திற...