Thottal Thodarum

Feb 25, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா – திரை விமர்சனம்

vinnai-thaandi-varuvaaya-01காதலர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று அவர்களுக்குள் வருவது. இன்னொன்று, காதலர்களுக்கு மற்றவர்களால் வருவது. இதில் ரெண்டுமே இருந்தால் எப்படியிருக்கும்? எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும் போது நான் ஏன் சார் ஜெஸ்ஸிய காதலிச்சேன்? என்று சிம்பு படம் முழுவதும் கேட்கும் கேள்வி எல்லா இளைஞர்களும், இளைஞிகளும் அவர்களுக்குள்ளாகவோ, அலலது நெருங்கிய நண்பர்களிடமோ கேட்டிருப்பார்கள். காதலின் சுகத்தையும், குழப்பத்தையும், அதனால் ஏற்படும் வலியையும் மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள்.

இஞினியரிங் படித்துவிட்டு சினிமா துறையில் அசிஸ்டெண்ட் டைரக்டராக சேர்ந்து ஒரு படைப்பாளியாக ஆசைப்படும் கார்த்திக். அவன் குடியேறும் வீட்டின் ஓனரின் மகள் ஜெஸ்ஸி. மலையாளி. polaris வேலை பார்ப்பவள். பார்த்தவுடன் கார்திக்கின் மனதில் ப்ப்பச்சக் என்று ஒட்டிவிட, வழக்கமாய் எல்லா இளைஞர்களும் செய்வதையே கார்த்திக்கும் செய்ய, ஒரு சமயம் இது எல்லாம் ஒத்து வராது. என்று சொல்லிவிட்டு, ப்ரெண்டாக மட்டுமாவது இருப்போம் என்று ஒப்பந்தம் போட்டு, ஒப்பந்தம் போடுவதே உடைப்பதற்காகத்தான் என்று காதல் வயப்பட்டு, வீட்டை நினைத்து பயந்து,குழம்பி, தானும் குழம்பி, கார்திகையும் குழப்பும் ஜெஸ்ஸி. ஒரு கட்டத்தில் வீட்டிற்கு தெரிந்து பிரச்சனையாகி வேறு ஒருவனுடன் திருமணம் நிச்சயமாகி விட, கார்த்திக்கும் ஜெஸ்ஸியும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதை வெள்ளித்திரையில் பார்க்க..
vinnai-thaandi-varuvaaya-02 கார்த்திக்காக சிம்பு. விரல் வித்தை காட்டும் பையனில்லை இவர். இவருக்குள் இவ்வளவு மெச்சூர்டான நடிப்பு இருக்கிறதா..? ஜெஸ்ஸியை பார்த்தவுடனேயே காதல் வயப்படுவதாகட்டும், காதல் கைகூடுவதற்காக அலைவதாகட்டும், கே.எப்.சியில் அவர் ஜெஸ்ஸியை பாலோ செய்ய, கிட்டே வந்த ஜெஸ்ஸி ”நீ என்னை பாலோ செய்றியா.?” என்று கேட்க, இவர் இல்லையே நீங்க தான் என்று சொல்ல, என் ஆபீஸ் இங்க் இருக்கு என்று ஜெஸ்ஸி சொல்ல. கே.எப்.சியும் இங்கதான் இருக்கு என்று சொல்லிவிட்டு ஜெஸ்ஸி போவதையே பார்த்துக் கொண்டிருக்க, சேல்ஸ்மேன் ஆர்டர் கேட்க, இருய்யா.. அவ போற வரைக்குமாவது பாத்துக்கறேன் என்று சொல்வது இளைஞர்களின் மன வெளிப்பாடு. அதே நேரம் கோபப்படும் இடத்தில் கோபப்படுவதாகட்டும், பல இடங்களில் வாய்ஸ் மாடுலேஷனிலேயே காதலையும், கோபத்தையும், இயலாமையையும் வெளிபடுத்தியிருக்கும் விதமாகட்டும், முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சியில் எனக்குள் ஒரு பெண் இருக்கிறாள் என்று ஜெஸ்ஸியிடமே ஜெஸ்ஸியை பற்றி சொல்லும் காட்சியில் சிம்பு நடிப்பில் மனதை அள்ளுகிறார். சிம்பு உங்களிடம் நிறைய எதிர்பார்கிறேன். விரல் வித்தைகளைவிட..
vinnai-thaandi-varuvaaya-14-02-09 எனக்கு அவ்வளவாக திரிஷாவை பிடிக்காது. ஆனால் இந்த படத்தில் என் மனதை கொள்ளை கொண்டுவிட்டார். அவ்வளவு க்யூட். நம்பக்கத்துவீட்டு பெண்ணை போல நம் கண் முன்னே வளைய வருகிறார் ஜெஸ்ஸி சாரி திரிஷா. அவ்வளவு ஆப்ட் காஸ்டிங்க். சிம்புவை பார்வையாலேயே அளப்பதாகட்டும், கண்களின் குறுகுறுப்ப்பிலேயே பல விஷயஙக்ளை வெளிப்படுத்தும் முக பாவங்களாகட்டும், காதல வேண்டாமென மனதில் நினைத்தாலும், வேண்டுமென நினைக்கும் இன்னொரு பக்கம் அலைகழிந்து தானும் குழம்பி, அவளையே நம்பி சுத்திக் கொண்டிருக்கும் கார்த்திக்கையும் குழப்புவதாகட்டும், பெரும்பாலான காதலிகள், செய்யும் வேலையை கன கச்சிதமாய் வெளிப்படுத்தியிருக்கிறார். த்ரிஷா. க்ளைமாக்ஸிக்கு முன் சிம்புவும், இவரும் பேசும் காட்சியில் சிம்புவுடன் போட்டி போட்டு முயன்று தோற்றிருக்கிறார்.
vinnai-thaandi-varuvaya-poster இசை ஏ.ஆர்.ரஹ்மான். சொல்ல வேண்டியதில்லை ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட். படம் ஆரம்பத்தில் வரும் கிடார் படம் முழுவதும் விரவி நம்மை படத்தின் காட்சிகளோடு மிக இயல்பாய் ஒன்ற வைத்துவிடுகிறார். ஓமனப் பெண்ணே, பாடல், ஹோசன்னா பாடலும் படத்தில் பார்கையில் அட்டகாசம். ஆரோமலே பாடலையும், விண்ணைத்தாண்டி வருவாயா பாடலும் ஒரு ஆர்.ஆர். டிராக்காகவே உபயோகித்து மனதை அறுக்கிறார். இரண்டொரு இடத்தில் மிக நுணுக்கமான காட்சிகளில் வரும் ராக் இசை பிண்ணனி மட்டும் உறுத்துகிறது. மற்றபடி மீண்டும் ரஹமான் ஒரு இசை ராஜாங்கத்தை நடத்தியிருகிறார். நீங்கள் படம் பார்த்து விட்டு வெளி வரும் போது பாடல்களை முணுமுணுக்காமல் வந்தால் தான் அதிசயம். ஹாண்டிங் மியூசிக்.
Vinnaithandi-Varuvaaya-_5_ மனோஜின் ஓளிப்பதிவை பற்றி சொல்லவே வேண்டியதில்லை ஏற்கனவே ஈரத்தில் கண்களுக்கு ஜில்லிப்பூட்டியவர்தான். மீண்டும் தன் திறமையான ஒளிப்பதிவால் மனதில் நிற்கிறார். முக்கியமாய் அந்த கேரளா வீடும், வெளிநாட்டு லொக்கேஷன் பாடல் காட்சிகளிலும், அமெரிக்க காட்சிகளிலும் அவ்வளவு துல்லியம். பல இடங்களில் வரும் அருமையான ஸ்டெடிகேம் க்ளோசப் காட்சிகளில் இவரும், எடிட்ட்ர் ஆண்டனியும் பின்னியெடுத்திருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருப்பது கெளதம் வாசுதேவ் மேனன். சாதாரணமாகவே மனுஷனுக்கு லவ் ட்ராக் என்றாலே இவர் படங்களில் உருகி வழியும், இது காதலை பற்றிய படம் கேட்க வேண்டுமா? புதுசாய் காட்சிகள் ஏதுமில்லாவிட்டாலும், மிக சுவாரஸ்யமான காட்சியமைப்பினாலும், நடிகர்களின் ஒத்துழைப்பினாலும், ஒளிப்பதிவாளரினாலும், எடிட்டரினாலும், ஷார்ட் அண்ட் ஸ்வீட்டான வசனங்களினாலும், இயல்பான கேரக்டர்களினாலும் மனதை கவருகிறார். க்ளைமாக்ஸ் காட்சி தமிழ் சினிமாவுக்கு புதுசுதான். காதலர்களின் பாடி லேங்குவேஜ் ஆகட்டும், டயலாக் டெலிவரியாகட்டும் அவ்வளவு இயல்பு. கண் முன்னே இரண்டு பேரை உலவ விட்டிருப்பது போன்ற உணர்வை கொண்டுவந்திருப்பதில் இயக்குனருக்கு வெற்றியே. சிம்பு கூடவே வரும் கேமராமேன் நண்பரின் கேரக்டரின் மூலம் பல இடங்களில் வாய்ஸ் ஓவரிலும், சில இடங்களில் நச்சென்ற வசனங்களில் மனதில் நிற்க வைத்திருக்கிறார். (படத்தயாரிப்பாளர்களில் ஒருவரான கணேஷ்)
vinnai-thandi-varuvaya6
சில இடங்களில் வசனங்களை கொண்டே அந்த காட்சிக்கான காரணங்களையோ, அல்லது முந்திய காட்சியில் எப்படி, எவ்வாறு என்கிற கேள்விகளுக்குகான பதில்களை சின்ன சின்ன வசனங்களில் வெளிப்படுத்தியிருப்பது நைஸ். அதே போல் தனிமையான ஒரு பங்களாவில் ஒருவரை ஒருவர் அணைத்து கொண்டு நின்று கொண்டிருக்கும் போது பேசும் வசனங்கள் அத்துனையிலும் காதல். க்ளைமாக்ஸ் காட்சியில் ஜெஸ்ஸியை பற்றி சிம்பு பேசும் வசனங்களும் சரி, அவரின் நடிப்பும் சரி.. கவுதம் சிம்புவுக்கான சரியான தீனி கொடுத்திருக்கிறார். பல காட்சிகள் இதற்கு முன் எவ்வளவோ படங்களில் பார்த்த மாதிரி இருந்தாலும் நாயகன், நாயகி இடையே உள்ள இயல்புத்தன்மையினால் ப்ரெஷ்ஷாக இருக்கிறது.
vinnai-thandi-varuvaya53 இவருக்கு மட்டும் எப்படி பாடல்கள் இவ்வளவு அருமையாய் அமைகிறது?. பாடலகளையும், அதை படமாக்கியிருக்கும் விதமும், முக்கியமாய் சில பாடல்களை பின்ன்ணி இசையாய் உபயோகபடுத்தி, க்ளைமாக்ஸ் காட்சியில் மனதை அறுக்கும் அளவிற்கு ரஹ்மான் இசையை பயன்படுத்தியிருகிறார். படத்தில் மைனஸே இல்லையா என்றால் நிச்சயம் இருக்கிறது. திடீரென சிம்பு தனக்கு பாக்ஸிங் தெரியும் என்று சொல்லி சண்டை போடும் காட்சி, ஜெஸ்ஸியின் சில காட்சிகளின் குழப்பத்துக்கான காரணங்கள், அலப்புழாவில் ஜெஸ்ஸியை எந்தவிதமான பெரிய முயற்சியில்லாமல் போய் நிற்கும் முதல் சர்சிலேயே ஜெஸ்ஸி வருவது, சில இடங்களில் இன்னும் கொஞ்சம் எமோஷன் இருந்திருக்கலாமோ என்ற எண்ணம் மேலோங்குவது, போன்ற சிற்சில குறைகளை தவிர. .. அவர்கள் விளம்பரங்களில் சொல்லியிருப்பது போல, க்ளைமாக்ஸினால் ஒரு வித்யாசமான காதல் கதை மீண்டும். க்யூட் & ஸ்வீட் மியூசிக்கல் லவ் ஸ்டோரி.

விண்ணைத்தாண்டி வருவாயா – A Sure Shot Feel Good, Lovable Movie



கேபிள் சங்கர்

Feb 22, 2010

கொத்து பரோட்டா –22/02/10

அரசியல்
அஜித் நடிகர்கள் மிரட்டப்படுவதாய் பேசியதற்கும், ரஜினி எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்ததையும் பார்த்து அப்படியாரும் மிரட்டக்கூடாது என்று சொல்லி மேடையில் கைதட்டு வாங்கிய நம் தலைவர், அடுத்த நாள் மதியமே ரஜினியும், அஜித்தும் தலைவர் வீட்டில் நேரில் போய் விளக்கம் கொடுத்துவிட்டு, ஆல்மோஸ்ட் காலில் விழாத குறையாய் பேசிவிட்டு வந்திருந்தாலும், பின்னாடியே ஜாக்குவார் தங்கத்தை விட்டு கல் வீசி கொல்ல பார்த்தார்கள் என்று மாலை ஆறு மணீக்கு அஜித்தின் மேல் புகார் கொடுக்கிறார் ஜாக்குவார்.  (இவர் எத்தனை பிரச்சனைகளை செய்திருக்கிறவர் என்று தெரியுமா.?) அடுத்த நாள் அதுக்கு ஏதும் ரியாக்‌ஷன் இல்லை என்றதும், பெண்டாட்டி பிள்ளைகளை அழவிட்டு போட்டோ கொடுத்து இன்னொரு புகார் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் பெப்ஸியை விட்டு ரஜினிக்கு கண்டனமும், அஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஒரு பக்கம் சங்கத்தின் மூலமாய் பிரஷர். அப்படி என்னய்யா சொல்லிட்டாரு அஜித். இஷ்டப்பட்டவங்களை கூப்பிட்டு வச்சி எந்த எழவை வேணுமின்னாலும் செஞ்சிக்கங்க, வேண்டாதவங்களை விட்டுருங்கன்னு தானே கேட்டாரு. அதைத்தானே வழிமொழிஞ்சாரு ரஜினி இதுல என்ன தப்பு.?.  அந்த இம்சை எவ்வள்வு கஷ்டம்னு ரஜினிக்கும், கமலுக்கும் தெரியும். அவங்களே வேற வழியில்லாம, திமுக பிரதிநிதி போல தலைவர் எங்க போனாலும் பின்னாடி நிக்க வேண்டியதா போச்சுன்னு புலம்பிட்டிருகாங்களாம். இவ்வளவு பிரஷருக்கும் பின்னாடி இருக்கிற பிள்ளையை கிள்ளிவிட்டுட்டு, தொட்டிலையும் ஆட்டுற,ஆள் யாருன்னு உங்களுக்கெல்லாம் சொல்லித்தான் தெரியணுமா என்ன?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சந்தோஷம்1
kathir1 kathir3 kathir2
சென்ற வாரம் அறிவித்திருந்த சந்தோஷ விஷயமான சிறுவன் கதிருக்கான ஹியரிங் எய்டுக்கான பணம் வசூலாகி கடந்த 19/02/10 அன்று மாலை பொறுத்தியாகிவிட்டது. டாக்டர் அவனுக்கு பொறுத்திவிட்டு அவன் கண்ணை மூடச்சொல்லிவிட்டு, இடது காதுபுறம் சற்று தொலைவில் கையினால் சொடக்கு போட, தானாகவே அவனின் கண் விழிகள் ஒலி வந்த பக்கம் உருள, சிரித்தபடி கண் திறந்து சிரித்தபடி “கேக்குது” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவனின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அடுத்த நாள் பூராவும் ஒரே சந்தோஷமாய் நாள் முழுவதும் சிரித்துக் கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தானாம். இன்று அவனை பார்க்க போகும் போது டிவியின் சத்தத்தை 25ல் வைத்து போகோ பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு முன் நான் அவனை பார்க்க போகும் போது அதே போகோவை 75ல் வைத்துக் கொண்டு டிவியின் அருகில் சேர் போட்டு உட்கார்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தவன். உதவிய அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி. நன்றி என்று கண்ணீர் மல்க கதிரின் தாயார் நன்றி கூறியது நெகிழ்ச்சியாய் இருந்தது. என் சார்பிலும் உதவிய அத்துனை பேருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சந்தோஷம் 2

போன வாரம் ஞாயிரன்று வெளியான என்னுடய “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்” புத்தகமும், பரிசலின் ”டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்” தொகுப்பு இரண்டும் ஆன் லைன் புக்கிங்கிங்கில் பெஸ்ட் செல்லர் பகுதியில் இருக்கிறதாம். இற்நூற்றியைம்பதுகும் மேற்பட்டபிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன என்று பதிப்பாளர் குகன் மகிழ்ச்சியுடன் கூறினார். ஆதரவும், விமர்ச்னங்களையும் உடனடியாய் கொடுத்த வாசக, பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.  ஆன்லைனின் புத்தகங்களை வாங்க பத்து சதவிகித கழிவுடன் வாங்கலாம். குரியர் செலவுகள் தனி.
லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும்..  வாங்க இங்கே க்ளீக்குங்கள்
டைரி குறிப்பும்.. காதல் மறுப்பும் வாங்க இங்கே க்ளிக்கவும்
சென்னையில் நேரில் வாங்க
Discovery Book palace, 6, Munusamy salai, west k.k.nagar, ch
New Book lands, North usman Road, t.nagar, ch-17
American book shop, opp to L.I.C, next to Hikkinbothoms..ch.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
சாப்பாட்டுக்கடை
வடபழனியில் க்ரீன் பார்க் ஓட்டலுக்கு எதிரே ஒரு புதிய சிக்கன் பர்கர் ஷாப் திறந்திருக்கிறார்கள். கே.எஃப்.சி போல இது பி.எஃப்.சி. கம்பேரிட்டிவாய் பார்த்தால் இருக்கும் எல்லா ஃபிரைட் சிக்கன் பர்கர் கடைகளில் இது கொஞசம் சல்லீசாக இருக்கிறது. சுவைக்கு ஏதும் குறைவில்லாமல். நிச்சயம் ஒரு நடை போய்விட்டு வரலாம் ப்ஃரைட் சிக்கன் ரசிகர்கள். (இங்கேயும் தவிச்ச வாய்க்கு தண்ணீர் தர மாட்டேன் என்கிறார்கள். நான் சண்டை போட்டு வாங்கினேன்.)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த கொத்து பரோட்டா ஸ்பெஷல் வீடியோ..

சூப்பரா இல்லை..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
எண்டர் கவிதைகள்- 8
blind man

நாளை என்பது

அதள பாதாளமாய்

தெரிந்தாலும்

அட்லீஸ்ட்..

இன்று நடக்கும்

பாதையாவது

முட்களில்லாமலும்

குண்டு குழியில்லாமலும்

நன்றாக இருக்கட்டும்.
எண்டர் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது என்று  மெயில், போன், மற்றும் நேரிலும் வந்து மிகவும் வருந்திய ரசிக கண்மணிகளுக்காக..:))) முக்கியமாய் பாஸ்டன் ஸ்ரீராமுக்காக..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்த வார தகவல்
நாசாவில் விஞ்ஞானிகள் நிலவில் ஐஸும், தண்ணீரும் இருப்பதாய் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுல சந்தோஷமான விஷயம் என்னன்னா.. நாம அங்க போகும் போது சரக்கு மட்டும் கொண்டு போனா போதும் அதான்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஏ ஜோக்
anxietyக்கும், panicக்குக்கு உள்ள வித்யாசம் என்ன?

Anxiety என்பது முதல் முறையாக முதல் ரவுண்ட் முடித்துவிட்டு அடுத்த ரவுண்டுக்கு லுல்லா ரெடியாகவில்லை என்றால் ஏற்படுவது.

Panic  என்பது இரண்டாவது முறையாய் முதல் முறையே லுல்லா எழும்ப மறுக்கும் போது ஏற்படுவது.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒரு பெண் பச்சை குத்துபவனிடம் போய் தன்னுடய வலதுதொடையில் “Merry Christmas” என்று பச்சை குத்தச் சொன்னாள். பச்சைகுத்துபவன் அழகாய் மரம் எல்லாம் போட்டு வரைந்தான். அடுத்ததாய் ஒரு ஷாம்பெயின் பாட்டிலை வரையச் சொல்லி ஹாப்பி நியூ இயர் என்று வரைய சொல்ல, அவனும் வரைந்தான். பணம் கொடுத்துவிட்டு கிளம்புகையில் பச்சை குத்துபவன் “மேடம் உங்களீடம் ஒன்று கேட்க வேண்டும். இதுவரை யாருமே குத்தாத வித்யாசமான இடத்தில் ஏன் இம்மாதிரி பச்சை குத்த சொன்னீர்கள் என்று கேட்டான் அதற்கு அவள் என் பாய் ப்ரெண்டு ரொம்ப புலம்புகிறான். கிருஸ்துமஸ்ஸுக்கும், ப்துவருடத்திற்கும் இடையே நல்லதாய் சாப்பிடுவதற்கு சரியாக ஏதும் இல்லை என்று புலம்புகிறான் அதற்க்காகத்தான் என்றாள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



டிஸ்கி: திருஷ்டி பட்டு கிடக்கும் பரிசலுக்கு எழுந்தோட வாழ்த்துக்களும், புது கல்யாண பையன் அதிஷாவுக்கு திருமண வாழ்த்துக்களும் சொல்வோம்.

தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க

Feb 20, 2010

Leader – Telugu Film Review

leader தொடர்ந்து மூன்று ஹிட் படங்கள். ராமாநாயுடுவின் பேரனும், வெங்கடேஷின் அண்ணன் மகனுமான ராணாவின் அறிமுகப்படம்.  படத்தின் தயாரிப்பாளர் ஏ.வி.எம். இவ்வளவு எதிர்பார்ப்பு போதும் இந்த படத்திற்கு.

டாலர் ட்ரீம்ஸ் படத்தின் மூலமாய் அறிமுகமாகி, ஆனந்த், கோதாவரி, ஹாப்பி டேஸ் என்று தொடர் மூன்று வெற்றிகளுக்கு பிறகு என்னை எதிர்பார்ப்புக்குள்ளாக்கிய இயக்குனர். மிக அழகாய் கதையை நம் முன்னே பரபரபில்லாமல் விரித்து வைத்து இவரின் கதை சொல்லும் பாணிக்காகவே படம் பார்க்கலாம். ஆனந்த் ஆகட்டும், கோதாவரியில் அமெரிக்க ரிட்டர்ன் ஹீரோ பாலிடிக்சில் சேர விழையும் கேரக்டர் ஆகட்டும். சேகர் கம்மூலாவுக்கு இந்திய அரசியல் அமைப்பின் பேரில் ஏதோ விதத்தில் அதை சரி செய்ய யூத்துகளால்தான் முடியும் என்ற ஆணித்தரமான முடிவில் இதுவரை ஆங்காங்ககே சொல்லிவந்த கருத்தை முழு படமாய் வெளிக் கொணர முயன்றுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆந்திர சி.எம் ஒரு விபத்தில் கோமாவில் இருக்க, அவரின் ஒரே மகன் அமெரிக்காவிலிருந்து வருகிறார். அவருக்கு அரசியலில் ஆர்வம் இல்லாவிட்டாலும், அவரின் குடும்பத்தினர்களால் ஆக்கிரமிக்கபட்டுள்ள அவரது அரசியல் சாம்ராஜ்யத்தை அவர்கள் தங்கள் கையில் எடுத்தாள ப்ளான் செய்யும் போது, சிஎம் கண்விழித்து தன் கடைசி ஆசை தன் மகன் சி.எம் ஆவதுதான் என்று சொல்லிவிட்டு சாக, மிகவும் யோசனை செய்து சி.எம் ஆக முடிவெடுக்கிறார் அவரது மகன். அதற்கு அவரின் பெரியப்பா மகனை சி.எம் ஆக்க முயற்சி செய்து கொண்டிருக்க, தன் தந்தை அநியாயமாய் ஊழல் செய்து கொள்ளையடித்த 20லட்சக் கோடியை கொண்டு வித்யாசமான முறையில் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறார். அவர் சி.எம் ஆனாரா? அவரது எதிரிக்ள் என்ன என்ன பிரச்சனைகளை அவர்களுக்கு கொடுட்தார்கள் எப்படி அதையெல்லாம் சி.எம்.வென்றார் என்பதுதான் கதை.
leader-pic_thumb5 சி.எம் மகனாய் ராணா.. கனகச்சிதமான அறிமுகம். அறிமுகபடத்திற்கு சரியான பில்டப்போடு வெளிவந்திருக்கிறார். பல இடங்களீல் மெச்சூரிட்டியும், சில இடங்களில் சப்மிஸிவாகவும் நடித்து உள்ளார். இவரின் உயரம் பல ஹீரோயின்களுக்கு கஷ்டமாக இருக்கப் போகிறது.

இதுவரை பெரிதாய் பெரிய நடிகர்களை நம்பாமல் புதுமுகங்களையும், அதிகம் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து ஹிட்டடித்துவந்த கம்மூலா, இந்த படத்தில் மூத்த நடிகரான கோட்டா சீனிவாசராவ், சுகாசினி நம்பியிருபது தவிர்க்க முடியாதது. கோட்டா தன் கோட்டாவை சரியாக பயன்படுத்தி மிளிர்கிறார். ராணாவின் பி.ஏ போல் வரும் ஹர்ஷவர்தன் ஆப்ட்.

இரண்டு கதாநாயகிகள் ரிச்சா, பிரியா ஆனந்த், ரிச்சாவுக்குகான கேரக்டர் மனதில் நிற்கும் அளவிற்கு பிரியா ஆனந்துக்கு இல்லை. தனிகலபரணி, கொல்லப்புடி சீனிவாசராவ் என்று பல மனதில் நிற்கும் கேரக்டர்கள்.

படத்தின் முக்கிய தூண் இசையமைப்பாளர் மைக்கேல் ஜே.மேயர், பிண்ணனி இசையில் ஆர்ப்பாட்டமேயில்லாமல் மிரட்டியிருக்கிறார். பாடல் பெரும்பாலும் காட்சிகளூடே இண்டர்லூட் ஆகியிருப்பதால் ஆடியோவில் கேட்க விருப்பம் மேலிடுகிறது. விஜயகுமாரின் ஒளிப்பதிவு ஒகே.
leader-songs-pic கதை, திரைக்கதை, இயக்கம் சேகர் கம்மூலா, இம்மாதிரியான அரசியல் படஙக்ள் எல்லாம் ஆந்திர சினிமாவிற்கு சாதாரணம், ஏகப்பட்டபடங்கள் வந்திருந்தாலும் அதை காட்சி படுத்தும்போது இது நாள் வரை இருந்த முறையிலிருந்து விலகி, முற்றிலும் மாறுபட்ட காட்சிகளில் கவனம் செலுத்தி யிருப்பதை பாராட்ட வேண்டும். சிகரட் பிடிக்கும் முதலமைச்சர், சாவின் விளிம்பில் காப்பாற்றப்படும் அலி, எதிர் வேலை பார்க்கும் பெரியப்பா, அவரின் மகன், மாமா, என்று நம் தமிழ் நாட்டு அரசியலை ஞாபகப்படும் காட்சிகளும் உண்டு. ஆரம்ப காட்சியிலிருந்து இடைவேளை வரை மிக அழகாய் விரியும்  கதை, அதற்குபிறகு மிகவும் அலைபாய்ந்து தொய்வடைந்து இலக்கில்லாம் உட்கார்ந்துவிடுகிறது. தன் பதவியை காப்பாற்றுவதற்காக ஆளுங்கட்சியில் உள்ள முக்கிய பிரமுகரின் இரண்டாவது மனைவியின் பெண்ணை காதலிப்பதாய் ஏமாற்றுவது பெரிய கேரக்டர் அசாசினேஷன் விஷயஙக்ள். அந்த காட்சிகளில் இருக்கும் ரொமான்ச் அருமை. படம் பார்க்கும்போது, முதல்வன், சிவாஜி போன்ற படங்களின்  ஞாபகம் வருவதை தடுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாமோ சேகர்.?

LEADER- A FIM TO WATCH FOR SEKAR KAMMULA..



தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க

Feb 17, 2010

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக விமர்சனம்.

lemon tree 28 without  image

அன்பு சங்கர்ஜி..
முதலில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாமல் போனதற்கு மன்னிக்க வேண்டும்.
நேற்று உங்கள் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. விடிய விடிய முழுமூச்சில் படித்து முடித்தேன். நிறைய வியப்பு, நிறைய மகிழ்ச்சி, நிறையவே கோபமும். சத்தியமாக என்னால் இப்படி எழுத முடியாது. எனவே இது விமரிசனமல்ல. உங்கள் எழுத்தின் ரசிகன் என்ற முறையில் ஒரு உரிமையான என் பார்வை இது.

பெண்மையின் மென்மையான உணர்வுகள், ஆணின் நேர்மையான உணர்வுகள், வாழ்க்கையின் பல வலி நிறைந்த நொடிகள், மனிதத்தின் பல்வேறு முகங்கள் எல்லாம் அழகழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சங்கர். அத்தனையும் மீறி படித்து முடித்ததும், எழுத்தை மீறி, எழுத்தாளனை மீறி மனதில் உறுத்தலாய் இருப்பது அளவுக்கதிகமான, சில நேரம் அவசியமற்ற மார்பகம் குறித்த வர்ணனைகள்.

1.முத்தம் முதல் கதை மட்டுமல்ல. முதல் தரமான கதையும் கூட. பை. வந்தனம்..எந்த விதமான எதிர்ப்புமின்றி உதவும் ஆணை இன்றுதான் பார்த்தேனிலும்..என்னைப் பொருத்த வரை செக்ஸ் இயல்பாய் இருக்க வேண்டும் என்பதிலும் செக்ஸ் தாண்டிய இரண்டு மனங்களின் ம்யூச்சுவல் ரெஸ்பெக்ட் பிரமிக்க வைக்கிறது.

2.லெமன் ட்ரீ இந்த நொடி வாழும் அழகின் புதிய பரிமாணம். இப்படி மட்டும் வாழ முடிந்துவிட்டால் என்ற ஏக்கம் தூண்டும் கதை.

3.கல்யாணம் உங்கள் மீது கோபம் வரவழைத்த கதை. நீங்கள் நினைத்திருந்தால் இதிலும் ஒரு அபாரமான உணர்வைச் சொல்லியிருக்க முடியும், பெண் சுகமறியா கல்யாணத்துக்கு உடல் மட்டுமே தேவையிருக்கவில்லை என்பதை. வரம்பு மீறிய தேவையற்ற வர்ணனை அந்த நொடியில் அவன் உணர்ச்சி தூண்டப் பட்டவனாய் இருந்தான் என்பதற்கு என்று சொவீர்களேயானால் சாரி! எப்போது இவ்வளவு வருடம் காத்திருந்து முடியாமல் அங்கு செல்ல முடிவெடுத்தானோ அங்கேயே அழகாய் நளினமாய் சொல்லிவிட்டீர்கள். இந்த வர்ணனை

4.ஆண்டாள்! மூன்று முறை படித்தேன். புரியாமலல்ல. வியந்து போய்.

5. ஒரு காதல் கதை இரண்டு க்ளைமாக்ஸ் அருமை.

6.தரிசனம் மிக அழகாக இன்றைய அழுத்தம் நிறைந்த உலகில் போக்கிடம் தெரியா மனிதத்தை எக்ஸ்ப்ளாய்ட் செய்யும் ஸ்வாமிகளை வெளிப்படுத்தியது.

7.போஸ்டரில் கேபிள் டச் (கிர்ர்ர்ர்ர்ர்ர்..மார்பு இல்லை) இல்லை. ஆனாலும் ஒரு ஃப்ளூக் டர்ன் அபாரம்.

8.துரை, நான் ரமேஷ் சார். மிக மிக மனதைப் பாதித்த கதை சங்கர்ஜி. ராஜியின் மனசை அதன் தவிப்பை அணுஅணுவாய் அனுபவித்து சொல்லி இருக்கிறீர்கள்.

9.என்னைப் பிடிக்கலையாவும் மிக மிக அழகான கதை. போலி கலாச்சாரக் காவலர்களுக்கும், கற்புக் குத்தகை தாரர்களுக்கும் கொடிபிடிக்க கருவாகலாம். ஆனால் இது தான் உண்மை. இந்தத் தவிப்புதான் காரணம் என்பதும், ஒரு வேளை நான் அவள் கணவனாய் இருந்திருந்தால்..என முடித்த யதார்த்தமும் சத்தியம். ஹேட்ஸ் ஆஃப் டு யூ சங்கர்.

10.காமம் கொல்லில் இன்னொரு சமுதாயப் போலியின் முகமூடிக் கிழிப்பு உங்களுக்கேயுரித்தான குசும்புடன். மிகவும் ரசித்தேன்.

11.ராமி, சம்பத், துப்பாக்கி..முழுமை காணோம். பாவி மனுஷா. கொத்து பரோட்டாவில் லுல்லானு எழுதி எழுதி இங்க லுல்லுல்லாயிக்குன்னு படிச்சதும் அதிர்ந்து போனேன் ஒரு நொடி.

12.மாம்பழவாசனை இடுகையில் படித்ததுதான். இன்னுமொரு முறை படிக்கையிலும் அதே உணர்வுகள்.

13.நண்டு..ங்கொய்யால...ஆரம்பத்திலிருந்து சந்து கிடைச்சா பேந்தான்னு சொல்லுவாங்க்கள்ள அப்படி, மார்பு மார்புன்னு எழுதினதுக்கு ப்ராயச்சித்தமா மடியா ஒரு கதையா? ஐ லவ்ட் இட்.
பாராட்டுகள் சங்கர். அடுத்த தொகுப்பு இன்னும் சிறப்பாக வரவேண்டும்.

இதை எழுதியவர்.. அன்புக்குரிய பதிவர். திரு வானம்பாடியார் அவர்கள். மேலும் புத்தகங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். நன்றி..



தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க

Feb 16, 2010

My Name Is Khan – Hindi Film Review

my name khan ஏகப்பட்ட எத்ரிப்புகளோடு வெளிவந்திருக்கிறது. கரன் ஜோகர், ஷாருக், ரொம நாள் கழித்து கஜோல், என்று எதிர்பார்பை ஏற்றிவிட்டிருந்தபடம். மை நேம் இஸ் கான். அதேபோல் எல்லா நல்ல நடிகர்களூக்கும், இயக்குனர்களூக்கும் Tom Hank’sன் “Forrest Gump” மாதிரி ஒரு படத்தை கொடுக்க ஆவல் இருந்து கொண்டேயிருக்கும். கரண் இப்படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.

Asperger's Syndrome மில் பாதிக்கப்பட்ட கானின் தாய் இறந்தவுடன், தம்பி ஜிர்மி சேகலிடம் அடைக்கலம் புக அமெரிக்கா வருகிறார். அவனுக்கு ஆதரவாக தம்பி மனைவி உதவுகிறாள். தம்பியின் ஹெர்பல் ப்ராடக்டுகளை விற்க சொல்லுகிறான். ஒரு பியூட்டி பார்லரை நடத்தும், 12 வய்து பையனுக்கு தாயான சிங்கள் மதர் கஜோலை சந்திக்கிறான் கான்.  அவனது நேர்மையும், அவனது நடவடிக்கைகளையினால் ஈர்க்கப்பட்ட, கஜோல் அவனை மணக்கிறார். மிக சந்தோஷமாக காலம் ஓடிக் கொண்டிருக்கும் போது, செப்டம்பர் 9/11 சம்பவம் நடக்க, இஸ்லாமியர்களை வெறி கொண்டு தாக்கும், வன்மம் அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டதால் கானின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. கஜோலின் பையன் அமெரிக்க சிறுவர்களால் அவனின் தந்தை ஒரு முஸ்லிம் என்பதால் தாக்கப்பட்டு இறந்து போக, கஜோலின் பியூட்டி பார்லரும் நொடித்து போக, ஆரம்பிக்க. கானை பிரிய முடிவெடுக்கிறாள். என்ன செய்தால் என்னை விட்டு பிரிய மாட்டாய் என்று கேட்கும் போது “என் பெயர் கான்.. நான் தீவிரவாதி இல்லை” என்று அமெரிக்க பிரஸிடெண்டிடம் போய் சொல்ல் என்று சொல்ல, அதை நோக்கி பயணப்படுகிறான் கான். அவன் ஜெயித்தானா? கஜோலுடன் இணைந்தானா என்பது கதை.

மிக அடர்த்தியான் சம்பவங்களால் கதையை பின்னியிருக்கிறார் திரைக்கதை ஆசிரியர். ஷிபானி பதிஜா. கொஞ்சம் ஆசுவாசமாய் போய்விட்டு வந்தால் நிறைய விஷயங்களை மிஸ் செய்ய வேண்டியிருக்கும். அருமையான திரைக்கதை, ஆழமான வசனங்கள் என்று முஸ்லிம் என்றாலே பொதுபுத்திதனமாய் தோன்றும் தீவிரவாதி முத்திரையினால் நல்ல மனிதனாய் இருக்கும் மற்றவர்களுக்கு ஏற்படும் காயத்தையும், மன அழுத்தத்தையும் மிக தெளிவாய் திரையில் கொணர்ந்திருக்கிறார்கள். இம்மாதிரியான கதைகளில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் சுவாரஸ்மில்லாமல் போய்விட்டால் பெரிய சொதப்பல் ஆகிவிடும். அதற்கு உதாரணம் கரன் ஜோகரின் “குர்பான்” திரைப்படம்தான்.
mykhan_482x10feb10 ரொம்ப நாளூக்கு பிறகு ஷாருக், கஜோல் திரையில் இன்னும் அந்த ஜோடி திரையில் தோன்றும் போது பழைய ப்ரெஷ்னஸ் அப்படியே இருக்கிறது. சோ.. க்யூட். ஷாருக்கின் வியாதின் தன்மை எப்படி என்று தெரியாததால் அவரின் சிண்ட்ரோம் பாடி லேங்குவேஜை பற்றி ஏதும் சொல்ல முடிய்வில்லை. ஆனால்  இந்த கேரக்டரில் இவரை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் இந்த அளவுக்கு செய்திருக்க முடியுமா என்ற கேள்வி மனதில் தோன்றுகிறது. அவ்வளவு அருமையான நடிப்பு. கஜோலின் பியூட்டி பார்லர் வாசலில் வந்து நின்று கொண்டே அவரின் மீதான் காதல் வளர்ப்பதாகட்டும். சட்டென்று காதலை ப்ரபோஸ் பண்ணாமலேயே “மேரிமீ.. மேரிமீ” என்று திரும்ப திரும்ப சொல்லுமிடமாகட்டும், அமெரிக்க பிரசிடெண்ட்டுடன் டின்னர் சாப்பிட பணம் கட்டும் இடத்தில் கம்போடியாவில் உள்ள ஏழைகளூக்கா பண வசூல் செய்ய, இவர் பணம் கட்ட போய் அவர் ஒரு முஸ்லிம் என்பதால், இது கிரிஸ்டியன்களூக்கான விழா என்று அவரை உதாசினம் செய்ய பணத்தை வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வரும் போது ஒரு அடிபட்ட பார்வையில் அவர பார்க்கும் இடம் என்று ஷாருக் கிடைத்த எல்லா இடங்களிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

இந்த கேரக்டருக்கு கஜோலை நச். கானின் சிண்ட்ரோம் பிரச்சனை தெரிந்து அவனின் இன்னொசென்ஸையும், நேர்மையினாலும் கவரப்பட்டு திருமணம் செய்து கொள்வதாகட்டும், பின்பு அவர் ஒரு முஸ்லிம் என்பதனால்  தொழில், மற்றும் தன் மகனை இழப்பையும் தாஙக் முடியாமல் வெடித்து கிளம் பும் காட்சி அருமை.

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு அருமையோ அருமை. கரன் ஜோகரின் வழக்கமான் பார்முலா படமாய் இல்லாமல் சமுதாயக் கருத்தோடு ஒரு ஆழமான கதையை கொடுத்தமைக்காக பாராட்ட வேண்டும்.
பாரஸ்ட் கம்ப் திரைப்பட பாதிப்பு நிறைய இருக்கிறது. இருந்தாலும் அருமையான நேரேஷன். க்ளைமாக்ஸ் காட்சிகளின் பரபரப்பு, ஜார்ஜியா புயலான் பாதிக்கபட்ட ஒர் ஆப்பிரிக்க பெண்ணின் மீது உள்ள பாசம், அவருக்காக புயலில் போய் காப்பாற்றுவது எல்லாம் கொஞ்சம் படத்தை ஸ்லோ வாக்கினாலும் பெரிதாய் பாதிப்பில்லை. என்றே சொல்ல வேண்டும்

MY NAME IS KHAN – A WELL PACKED NEAT FILM

Technorati Tags:



தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க

Feb 15, 2010

புத்தக வெளீயீட்டு படங்கள்.

வந்திருந்து விழாவை சிறப்பித்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றி..நன்றி..நன்றி

DSC00570 DSC00572 
பரிசல் இரண்டு மகள்களூம்,அவரின் மனைவியும், ரோமியோ, உண்மைதமிழன், பெஸ்கி, ஜெயம்கொண்டான்
DSC00573 DSC00574
ரோமியோ, என் நண்பர் (கைகட்டியிருப்பவர் வெள்ளை சட்டை) ராமராஜ், பக்கத்தில் இருப்பவர் என்னுடய நண்பர் “கண்ணுக்குள்ளே’ திரைப்பட இயக்குனர் திரு லேனா மூவேந்தர். என்னை காமெடி பீசாக்கிய என்னுடய இளைய மகன் சுகேஷ், சர்வேஷ்.
DSC00575  DSC00576
நர்சிம், சங்கர், ஆதிமுலகிருஷ்ணன், பரிசல்,சஞ்செய் காந்தி, லக்கி, ஆதிஷா, மோகன்குமார், என் நண்பர் திரு. பிரபு, டி.வி.ராதாகிருஷ்ணன்.
DSC00578 DSC00580
உ.த. வெள்ளிநிலா சர்புதீன், பின்பக்கம் வெள்ளை சட்டை அண்ணன் தராசு, அண்ணாச்சி வடகரை வேலன் பேசிய போது.
DSC00581 DSC00583
நானும், அகநாழிகை வாசு, பதிப்பாளர் குகன், பிரமிட் நடராஜன்.
DSC00584 DSC00586
மிக இனிமையாக விழாவை தொகுத்து வழங்கிய பதிவர் சுரேகா, வாசு, குகன், பிரமிட் நடராஜன், அஜயன் பாலா, தமிழ்ப்படம் சந்துரு, அப்துல்லா,முரளிகுமார் பத்மநாபன் மற்றும் பலர்..
DSC00588 DSC00591
லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், நூலை பிரமிட் நடராஜன் வெளியிட அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்.
DSC00594 DSC00596
விழாவில் நான் பேசியபோது, அண்ணன் அப்துல்லா பிரமிட் நடராஜனுக்கு பொன்னாடை போர்த்திய போது.
DSC00598  DSC00604
பிரமிட் நடராஜன் மற்றும் தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் பேசிய போது.
DSC00607 DSC00610
தண்டோரா அஜயன் பாலாவுக்கு பொன்னாடை போர்த்தியபோது,  என் குடும்பம்
DSC00611 DSC00612
நர்சிம், வெங்கி, திரு.அஜயன் பாலா பேசியபோது.
DSC00621 DSC00622
தீவிரமாய் எனக்காக வீடியோ எடுக்கும் மோகன்குமார், பதிப்பாளர் குகனுக்கும் சால்வை போர்த்தி பாராட்டு காவேரி கணேஷ்
DSC00623 DSC00626
காவேரிகணேஷ், வண்ணத்துபூச்சி சூர்யா, சுகுமார் சுவாமிநாதன்,
DSC00629 DSC00631
தமிழ்ப்படம் சந்துரு, அண்ணன் அப்துல்லா, சுரேகாவை பாராட்டி பேசியபோது.
DSC00632 DSC00633
அண்ணன் தராசு இந்த விழாவுக்காக மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருந்து வாழ்த்தினார், கார்க்கி பேசியபோது.
DSC00634 DSC00635
உண்மைதமிழன் பாராட்டி பேசியபோது…

புகைப்படங்களை க்ளோசில் எடுக்காததால் நிறைய பேருடய பெயர்களை சொல்ல முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும். கடலூரிலிருந்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த வாசகர் பொன்.பாஸ்கர், மற்றும் சக பதிவர்களால் விழா மிக சிறப்பாக நடந்தேறியது. வந்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும்  மனம் நெகிழ்ந்த நன்றி.
*****************************************************************************

Feb 14, 2010

எல்லாரும் வந்திருங்க நண்பர்களே...

நிகழ்ச்சி நிரல்
தேதி : 14.02.10

நேரம் : மாலை 5.30

விருந்தினர்கள் : பிரமிட் நடராஜன், நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா, எழுத்தாளர்
பொன்.வாசுதேவன், பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.

இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78
அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

கேபிள் சங்கர் : 9840332666
பரிசல் காரன் : 9894747014
குகன் : 9940448599

Feb 13, 2010

தீராத விளையாட்டுப் பிள்ளை – திரைவிமர்சனம்

theeradha-vilaiyattu-pillai-wallpapers-01-379x500 சத்யம், தோரணையின் தோல்விகளுக்கு பிறகு வெளிவந்திருக்கும் படம் தீராத விளையாட்டு பிள்ளை. முன் வெளியான மசாலா படஙக்ளிலிருந்து விலகி தன்னை ஒரு லவ்வர் பாயாக, காஸனோவாவாக, வெளிப்படுத்த விஷால் முயற்சி செய்திருக்கும் படம்.

விஷால் பேங்க் மேனேஜர் குடும்பத்தின் ஒற்றை மகன். ஒரு பக்கம் அவரை திட்டிக் கொண்டே இருக்கும் அம்மா, இன்னொரு பக்கம் அதை சரிகட்டிக் கொண்டேயிருக்கும் அப்பா என்கிற குடும்பத்திலிருந்து எதிலேயும் பெஸ்டை மட்டுமே அடைவேன் என்ற லட்சியத்துடன் வாழும் விஷால். அதே லட்சியத்தை தன் காதல் விஷயத்திலும் செயல்படுத்த பார்க்கிறார். மூன்று பெண்களை காதலித்து, அதில் ஒருத்தியை செலக்ட் செய்வது என்று  முடிவெடுத்து தன் மனசுக்கு பிடித்த மூன்று கேரக்டர்களை தொடர்ந்து, காதல் வலையில் விழ வைத்து, காதலிக்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் ஒருத்திக்கு தெரிந்துவிடுகிறது. அவள் நீ எப்படி மற்ற இரண்டு பேர்களில் ஒருத்தியை, கல்யாணம் செய்கிறாய் என்று பார்க்கிறேன் என்ற் சவால் விடுகிறாள். சவாலில் அவள் ஜெயித்தாளா? அல்லது விஷால் ஜெயித்தாரா என்பதை.. வெள்ளித்திரையில்
Theeratha-Vilayattu-Pillai-official-poster-wallpapers-stills-pictures-images-01 முதல் பாதியில் இருக்கிற கேரக்டர்களை எல்லாம் அறிமுகப்படுத்துவதிலேயே கால் மணி நேரம் போய்விடுகிறது. ஒவ்வொரு ஹீரோயின் அறிமுகக் காட்சியையும், சநதானம் கேரக்டரை வைத்தே கிண்டலடிப்பது நல்ல நகைச்சுவை. அதன் பிறகு வரும் காட்சிகள் எல்லாம் சவ சவ என்று இழுக்கிறது. இண்டர்வெல் ப்ளாக்கை தவிர.
theeratha-vilayattu-pillai-movie-stills-images-photos-gallery-20 படம் நெடுக சந்தானம், சத்யன், மயில் சாமியின் காமெடி பல இடங்களில் தொய்ந்து விழும் படத்தை காப்பாற்றுகிறது என்றே சொல்ல வேண்டும். சந்தானம் தான் முதல் பகுதியை காப்பாற்றுபவர்.

காஸனோவா காதலனாய் விஷால் என்னதான் மீசையெல்லாம் எடுத்துவிட்டு, கருப்பு பையன்களை பொண்ணுங்க லவ் பண்ணாதுன்னு யார் சொன்னது ? என்று பாஸிட்டிவாய் கேள்வி கேட்டு மக்களை ரெடி செய்தாலும், அவரது ஹைபர் ஆக்டிவ் பாடிலேங்குவேஜ் எரிச்சலூட்டுகிறது. லொட,லொடவென நிறைய பேசுகிறார். நிறைய இடங்களில் விஜய்யை பாலோ செய்கிறார். நிச்சயமாய் இந்த கேரக்டருக்கு இவர் ஒரு ராங் காஸ்டிங் என்றே சொல்ல வேண்டும்.
Sarah-Jane-Dias-Theeradha-Vilaiyattu-Pillai-stills-pics-images-03 இரண்டாவது பாதியில் திடீரென ஆணாதிக்கத்தில் உச்சமாய் ஆ..ஊ என்றால் பொண்ணுங்க காதலித்து ஏமாற்றுவதை சொல்லி தான் செய்தது சரி என்று பொம்பளைன்னா இப்படி இருக்கணும், அப்படி இருக்கணும் என்று பக்க, பக்கமாய் டயலாக் பேசிவிட்டு, கடைசி காட்சியில் இப்பத்தான் உங்க காதலின் வலியை உணர்கிறேன் என்று ஜல்லியடிப்பது எல்லாமே ஒவர்.

பிரகாஷ் ராஜ் வந்ததும் எதோ செய்யப்போகிறார் என்று நினைத்தால். பெரிய புஸ்..  இருக்கும் மூன்று கதாயகிகளில் நீது சந்திரா மட்டும் மனதில் நிற்கிறார். ம்ற்றவர்கள் பெரியதாய் இம்ப்ரஸ் செய்யவில்லை.
Sarah-Jane-Dias-Theeradha-Vilaiyattu-Pillai-stills-pics-images-04  அரவிந்த் கிருஷணாவின் ஒளிப்பதிவு தெள்ளத்தெளிவு.  யுவனின் பாடல்கள் பெரிய லெட்டவுன் இந்தபடத்தில். இவர் இளையராஜாவின் பையன் என்பதால் அவரின் எல்லா படத்தின் பெஸ்ட் ரீரிக்கார்டிங்கையெல்லாம் யூஸ் செய்யலாம் என்று ஏதாவது ரைட்ஸ் கொடுத்திருகிறாரா ராஜா? அநியாயமாய் ஒரு சூப்பர் ஹிட் படத்தின் பிண்ணனி இசையை அப்படியே எடுத்து படம் முழுக்க உபயோகப்படுத்தியிருக்கிறார். கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

புதிய இயக்குனர் திரு. முதல் பாதியில் சந்தானம் குருப்பை வைத்தும், ஒண்றிரண்டு காதல் முயற்சி காட்சிகளை வைத்து சமாளித்திருக்கும் இயக்குனர், செகண்ட் ஹாப்பில் என்ன செய்வது என்று தெரியாமல், விஷாலை மாஸ் ஹீரோவாக காட்டுவதா? வேண்டாமா என்ற குழப்பம் தெரிந்து கொண்டேயிருக்கிறது. மூன்று பேரில் இரண்டு பேர் கழண்டுவிட்ட பின், இருக்கும் ஒருத்திக்கு விஷயம் தெரிந்து அவள் நம்பாமல் இருக்கும் போதே படம் முடிந்துவிட்டது. அதற்கு பிற்கு ஒரு அரைமணிநேரம் நம்மை போட்டு கொல்வது அநியாயம். அப்படியாவது அவளை ஏமாற்றாத முடிவை எடுத்திருந்தால் பரவாயில்லை. எந்த விதத்தில் விஷால் செய்தது ஞாயம்?. அப்படி ஞாயப்படுத்துவதர்காக, ஆணாதிக்க வசனங்களை பஞ்ச் டயலாக்குள் பேசுவதும் நீ பொம்பளை, நான் என்ன இருந்தாலும் ஆம்பளை  என்றெல்லாம் உதார் விடுவது அரத பழசு. நிச்சயமாய் ஹீரோ மேல் தவறு இல்லை, பெண்ணிடம் தான் தவறு இருக்கிறது என்றிருந்தால் நிச்சயம் இம்மாதிரியான டயலாக்குகளுக்கு விசில் பறந்திருக்கும். முக்கியமாய் இவர்களுக்குள் ஏற்படும் காதல் கெமிஸ்ட்ரி படு மொக்கையாய் இருப்பதால் முடிவு முன்பே தெரிந்து விடுகிறது.

தீராத விளையாட்டுப் பிள்ளை – சவலை பிள்ளை

டிஸ்கி: இதே கதை தெலுங்கில் சக்கில்லோ சந்திரடு என்று சித்தார்தும் மூன்று பெண்களை காதலித்து ஒரு பெண்ணை செலக்ட் செய்வார். கிட்டத்தட்ட இதே ட்ரீட் மெண்ட்.. அதில் க்ளைமாக்ஸ் வரை இருக்கும் ஒரு பெப்பும், சித்தார்த்தை ஒரு லவ்வர் பாயாக பார்க்கும் போது, நம்மால் அவரை ஒரு காஸனோவாவாக ஏற்றுக் கொள்ள முடியும்.அவரின் நடிப்பும் மிக இயல்பாய் இருக்கும். அதிலும் தான் காதலிக்கும் பெண் இவள் தான் என்று முடிவானதும் நடக்கும் ஒரு போராட்டம் நன்றாக இருக்கும். என்ன க்ளைமாக்ஸ் தான் ஹம் ஹாப் கே ஹே கோன் போல இருக்கும் ஆனால் இந்த படத்துக்கு அது எவ்வளவோ மேல். இதில் காமெடி என்னவென்றால் இந்த படமும் தெலுங்கில் ரிலிசாகப் போகிறது வருகிற 18 என்று நினைக்கிறேன். தேவுடா..



தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க