Thottal Thodarum

Feb 17, 2010

லெமன் ட்ரீயும்.. இரண்டு ஷாட் டக்கீலாவும்.. புத்தக விமர்சனம்.

lemon tree 28 without  image

அன்பு சங்கர்ஜி..
முதலில் புத்தக வெளியீட்டு விழாவிற்கு வரமுடியாமல் போனதற்கு மன்னிக்க வேண்டும்.
நேற்று உங்கள் புத்தகங்கள் வந்து சேர்ந்தன. விடிய விடிய முழுமூச்சில் படித்து முடித்தேன். நிறைய வியப்பு, நிறைய மகிழ்ச்சி, நிறையவே கோபமும். சத்தியமாக என்னால் இப்படி எழுத முடியாது. எனவே இது விமரிசனமல்ல. உங்கள் எழுத்தின் ரசிகன் என்ற முறையில் ஒரு உரிமையான என் பார்வை இது.

பெண்மையின் மென்மையான உணர்வுகள், ஆணின் நேர்மையான உணர்வுகள், வாழ்க்கையின் பல வலி நிறைந்த நொடிகள், மனிதத்தின் பல்வேறு முகங்கள் எல்லாம் அழகழகாய் சொல்லியிருக்கிறீர்கள் சங்கர். அத்தனையும் மீறி படித்து முடித்ததும், எழுத்தை மீறி, எழுத்தாளனை மீறி மனதில் உறுத்தலாய் இருப்பது அளவுக்கதிகமான, சில நேரம் அவசியமற்ற மார்பகம் குறித்த வர்ணனைகள்.

1.முத்தம் முதல் கதை மட்டுமல்ல. முதல் தரமான கதையும் கூட. பை. வந்தனம்..எந்த விதமான எதிர்ப்புமின்றி உதவும் ஆணை இன்றுதான் பார்த்தேனிலும்..என்னைப் பொருத்த வரை செக்ஸ் இயல்பாய் இருக்க வேண்டும் என்பதிலும் செக்ஸ் தாண்டிய இரண்டு மனங்களின் ம்யூச்சுவல் ரெஸ்பெக்ட் பிரமிக்க வைக்கிறது.

2.லெமன் ட்ரீ இந்த நொடி வாழும் அழகின் புதிய பரிமாணம். இப்படி மட்டும் வாழ முடிந்துவிட்டால் என்ற ஏக்கம் தூண்டும் கதை.

3.கல்யாணம் உங்கள் மீது கோபம் வரவழைத்த கதை. நீங்கள் நினைத்திருந்தால் இதிலும் ஒரு அபாரமான உணர்வைச் சொல்லியிருக்க முடியும், பெண் சுகமறியா கல்யாணத்துக்கு உடல் மட்டுமே தேவையிருக்கவில்லை என்பதை. வரம்பு மீறிய தேவையற்ற வர்ணனை அந்த நொடியில் அவன் உணர்ச்சி தூண்டப் பட்டவனாய் இருந்தான் என்பதற்கு என்று சொவீர்களேயானால் சாரி! எப்போது இவ்வளவு வருடம் காத்திருந்து முடியாமல் அங்கு செல்ல முடிவெடுத்தானோ அங்கேயே அழகாய் நளினமாய் சொல்லிவிட்டீர்கள். இந்த வர்ணனை

4.ஆண்டாள்! மூன்று முறை படித்தேன். புரியாமலல்ல. வியந்து போய்.

5. ஒரு காதல் கதை இரண்டு க்ளைமாக்ஸ் அருமை.

6.தரிசனம் மிக அழகாக இன்றைய அழுத்தம் நிறைந்த உலகில் போக்கிடம் தெரியா மனிதத்தை எக்ஸ்ப்ளாய்ட் செய்யும் ஸ்வாமிகளை வெளிப்படுத்தியது.

7.போஸ்டரில் கேபிள் டச் (கிர்ர்ர்ர்ர்ர்ர்..மார்பு இல்லை) இல்லை. ஆனாலும் ஒரு ஃப்ளூக் டர்ன் அபாரம்.

8.துரை, நான் ரமேஷ் சார். மிக மிக மனதைப் பாதித்த கதை சங்கர்ஜி. ராஜியின் மனசை அதன் தவிப்பை அணுஅணுவாய் அனுபவித்து சொல்லி இருக்கிறீர்கள்.

9.என்னைப் பிடிக்கலையாவும் மிக மிக அழகான கதை. போலி கலாச்சாரக் காவலர்களுக்கும், கற்புக் குத்தகை தாரர்களுக்கும் கொடிபிடிக்க கருவாகலாம். ஆனால் இது தான் உண்மை. இந்தத் தவிப்புதான் காரணம் என்பதும், ஒரு வேளை நான் அவள் கணவனாய் இருந்திருந்தால்..என முடித்த யதார்த்தமும் சத்தியம். ஹேட்ஸ் ஆஃப் டு யூ சங்கர்.

10.காமம் கொல்லில் இன்னொரு சமுதாயப் போலியின் முகமூடிக் கிழிப்பு உங்களுக்கேயுரித்தான குசும்புடன். மிகவும் ரசித்தேன்.

11.ராமி, சம்பத், துப்பாக்கி..முழுமை காணோம். பாவி மனுஷா. கொத்து பரோட்டாவில் லுல்லானு எழுதி எழுதி இங்க லுல்லுல்லாயிக்குன்னு படிச்சதும் அதிர்ந்து போனேன் ஒரு நொடி.

12.மாம்பழவாசனை இடுகையில் படித்ததுதான். இன்னுமொரு முறை படிக்கையிலும் அதே உணர்வுகள்.

13.நண்டு..ங்கொய்யால...ஆரம்பத்திலிருந்து சந்து கிடைச்சா பேந்தான்னு சொல்லுவாங்க்கள்ள அப்படி, மார்பு மார்புன்னு எழுதினதுக்கு ப்ராயச்சித்தமா மடியா ஒரு கதையா? ஐ லவ்ட் இட்.
பாராட்டுகள் சங்கர். அடுத்த தொகுப்பு இன்னும் சிறப்பாக வரவேண்டும்.

இதை எழுதியவர்.. அன்புக்குரிய பதிவர். திரு வானம்பாடியார் அவர்கள். மேலும் புத்தகங்களை பற்றிய உங்கள் கருத்துக்களை வரவேற்க்கிறேன். நன்றி..தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க
Post a Comment

35 comments:

Ganesan said...

வாழ்த்துக்கள் வானம்பாடியார்.

கேபிள் 100 புத்தக விமர்சனம் வரும் போல இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

இன்னமும் சில கதைகள் படிக்க வேண்டியதுள்ளது.முடித்துவிட்டு பதிவிடுகிறேன் கேபிள்.பரிசல் புத்தகம் பற்றி

http://tvrk.blogspot.com/2010/02/blog-post_16.html

கார்க்கிபவா said...

பாஸ், சாருவின் இணைய முகவரி தெரியுமா? :))))ச்சும்மா

புலவன் புலிகேசி said...

விரைவில் என்னுடைய விமர்சனம்...

சங்கர் said...

//கார்க்கி said...
பாஸ், சாருவின் இணைய முகவரி தெரியுமா? :)))) //அவரு முகவரி மட்டும் தானா :))

இதுவும் சும்மா தான்

டவுசர் பாண்டி... said...

சாரு, நிவேதிதாவா! ரெண்டு பேரா?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!

ஹா..ஹா...வாழ்த்துகள்.

Anonymous said...

CAble looks great in his new photo.

karthik said...

cable sir, im a silent reader of ur blog.

happy to see that your book got released. my wishes.

here is the news about your book rls:

http://www.behindindia.com/india-news-stories/feb-10-03/cable-shankar-16-02-10.html


karthik.usa.

kalil said...

வாழ்த்துக்கள் தல . புத்தகம் வாங்க இப்போ தான் ஆர்டர் பண்ணி இருக்கேன் .என்னோட விமர்சனம் படிச்ச பிறகு அனுப்பறேன்

பிரபாகர் said...

அண்ணா,

மிகச்சரியாய் என் ஆசான் விமர்சித்திருக்கிறார். அவர் மிகச்சரியாய் எதையும் விமர்சிப்பார் என அறிவேன். ஆனாலும் இவ்வளவு அற்புதமாய் நிறைகுறைகளை சொல்லி உங்கள் படைப்பை அலசி ஆராய்ந்ததை பார்க்கும் போது என் மதிப்பில் எங்கேயோ இருக்கும் இருக்கும் அவர் இன்னும் இன்னும் உயரத்தில்...

ஹேட்ஸ் ஆஃப் டு மை டியர் அண்ணா அண்ட் மை பிலவ்ட் ஆசான்...

பிரபாகர்.

பிரபாகர் said...

//கார்க்கி said...
பாஸ், சாருவின் இணைய முகவரி தெரியுமா? :)))) //

சகா, இணையத்தில் அதிக ஹிட் இருப்பதாய் சொல்லப்படும் சாருவோடதை கேட்க (சும்மான்னாலும்) என்னா தைரியம்?

நானும் சும்மாதான்!

பிரபாகர்.

ஜாபர் ஈரோடு said...

தலைவா படிச்சுட்டு சொல்ரேன்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

pl.also visit
http://tvrk.blogspot.com/2010/02/blog-post_1819.html

குசும்பன் said...

சரியான பாதையில் தான் போகிறீர்கள்!

ஹி ஹி

குசும்பன் said...

நெக்ஸ்ட் வாசகர் கடிதம்தானே?

பூபேஷ் பாலன் said...

ஹாய் கேபிள் சங்கர்,

நேற்று, நீங்கள் எழுதிய புத்தகம் என் கைக்கு கிடைத்தது. ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். ஒரு சில கதைகள் ஏற்கனவே உங்கள் ப்ளாக்-ல் படித்தவை என்றாலும் மீண்டும் படிக்க சுவாரஸ்யமாகவே இருந்தது.

நான் உங்களுடைய திரை விமர்சனத்திற்கு நெடுநாள் வாசகன். பெரும்பாலான உங்களுடைய விமர்சனங்கள் படங்களின் வெற்றி/தோல்வியில் மிகச்சரியாய் பொருந்தி உள்ளன.

விரைவில் தங்களிடமிருந்து ஒரு நல்ல திரைப்படத்தை எதிர்பார்க்கிறேன்.

- பூபேஷ்

Ashok D said...

hello.. கதை எழுதிகொடுத்ததற்க்கு Payment இன்னும் வரல...

தராசு said...

கலக்குங்கண்ணே,

சரி, அந்த ஹாட் ஸ்பாட்டை மாத்தறது??????

creativemani said...
This comment has been removed by the author.
creativemani said...

கேபிள் அண்ணா... புத்தகம் பற்றிய எனது விமர்சனம் எழுதியிருக்கேன்.. வந்து பாருங்க..
http://anbudan-mani.blogspot.com/2010/02/blog-post_17.html

Radhakrishnan said...

மிகவும் அழகிய விமர்சனம். மனம் திறந்து உள்ளதை சொல்லும் நண்பர்கள் இருப்பது நல்லதொரு பலம்.

Thenammai Lakshmanan said...

மிக அருமையாய் எழுதி இருகீங்க பாலா சார்

Thamira said...

அதற்குள்ளாக புத்தக விமர்சனமா? புத்தகம் இருக்குற சைஸுக்கு எனக்கு இன்னும் எவ்ளோ நாளாகுதோ.?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏன் இந்த விளம்பரம். நாம வாங்குற அஞ்சு பத்துக்கு இது தேவையா?

சும்மா சொன்னேன். வாழ்த்துக்கள் அண்ணா

சுரேகா.. said...

நானும் முடிச்சுட்டேன் ... கேபிள் ஜி!

விமர்சனம் போட்ருவோமா?

நட்சத்திர வாரம் வேற ஓடிக்கிட்டிருக்கு! :)))

சுரேகா.. said...

மூலைக்கடைல ரெண்டு இட்லியும் கெட்டியாகாத சட்னியும் சொல்லிருங்களேன்! :))

Raju said...

//ஒரு காதல் கதை இரண்டு க்ளைமாக்ஸ்// super story like vaathiyaar sujatha.

தாராபுரத்தான் said...

உடனே புத்தகம் வாங்க வேண்டும் போல இருக்கிறது. யாராவது வழி சொல்லுங்க.

Thenammai Lakshmanan said...

சங்கர் ஜி என்னுடைய விமர்சனமும் போட்டு இருக்கேன் படித்துப்பாருங்க

Thenammai Lakshmanan said...

சங்கர் ஜி என்னுடைய விமர்சனமும் போட்டு இருக்கேன் படித்துப்பாருங்க

Thenammai Lakshmanan said...

சங்கர் ஜி என்னுடைய விமர்சனமும் போட்டு இருக்கேன் படித்துப்பாருங்க

Cable சங்கர் said...

@kaaveri ganesh

எல்லா மாதிரியான விமர்சனங்களையும் வரவேற்கிறேன். ஒரு கலைஞனுக்கு விமர்சனமொரு உந்துகொல்.

@கார்க்கி
சில சமயங்களில் சாருவை பாலோ செய்வது தவரில்லை என்று தோன்றுகிறது..:)

@புலவன் புலிகேசி
எதிர்பார்கிறேன்

@சங்கர்
அவரு அட்ரஸ் எனக்கே தெரியும்..

:)

@டவுசர் பாண்டி
நன்றி

@ஸ்ரீடி சாய்தாசன்
நன்றி

@கார்த்திக்
நன்றி நிச்சயம் பார்க்கிறேன்

@கலீல்
படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க

@பிரபாகர்
நன்றி

@ஜாபர் ஈரோடு
நிச்சயம்

@ராதாகிருஷ்ணன்
நன்றிசார்

@குசும்பன்
இதுவே அதுதான்..:)

@பூபேஷ்பாலன்
நன்றி பூபேஷ்.. உங்கள் கருத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்..

@தராசு

மாத்திபுடலாம்ணே

@அன்புடன் மணிகண்டன்
பார்த்திடறேன்

@தென்னம்மயில் லஷ்மணன்
ஆமாம்..

@ஆதிமூலகிருஷ்ணன்
அலோ..ஒழுங்கு மரியாதை எழுதிருங்க இல்ல இன்னும் பத்து காப்பி அனுப்பிச்சிருவேன்

@சுரேகா
நிச்சயம் உஙக்ளீடமிருந்து எதிர்பார்க்கிறேன்.


!@சுரேகா

போதுமா..?

@ராஜு
நன்றி

@தாராபுரத்தான்.
என்னுட்ய நம்பருக்கு கால் செய்யுங்க தலைவரே. உடனடியா அனுப்பி வைக்க ஏற்பாடு செய்கிறேன்.

@தென்னம்மயில்லஷ்மணன்
படிச்சிட்டேன் மேடம்

@

Rajes said...

i am one of your silent reader, keep it up cable..... best wishes..... keep rocking...

Anonymous said...

cable anna

is it possible to get ur books by courier???

shortfilmindia.com said...

@sachanaa
நிச்சயம்.. நீங்கள் கொரியர் சென்னைக்குள் இருந்தால் அல்லது இந்தியாவுக்குள் இருந்தா கூட 20 ரூபாயோ. அல்லது 30 ரூபாயோ அனுப்பி வைக்கவும் நிசச்யம் அனுப்பி வைக்கப்படும்