99 – Hindi Film Review
அழகான ஸ்லீக், எண்டர்டெய்னிங்.. காமெடி, திரில்லர் பார்கக வேண்டுமா..? இதோ.. 99 செல்போன் சிம்கார்டிலிருக்கும் நம்பரை வைத்து டூப்ளீகேட் சிம்கார்ட் தயாரித்து விற்பவர்கள் குணாலும், எம்டிவி புகழ் சைரஸும். இப்படி ஒரு சிம்கார்டை மும்பை தாதா மகேஷ் மஞ்ரேகரிடம் விற்க, அதில் அவர்கள் மாட்டுகிறார்கள். அவரிடமிருந்து தப்பிக்க உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று குணால், சைரஸும் சொல்ல, அவர்களை தாங்கள் கடன் கொடுத்தவ்ர்களிடமிருந்து பணம் வசூல் செய்யும் வேலையை தர, வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டு டெல்லி செல்கிறார்கள் இருவரும். டெல்லியில் ஒரு ஸ்டார் ஓட்டலில் தங்க, அங்கே வேலை செய்யும் சோஹலிடம் பழக்கம் ஏற்படுகிறது. டெல்லியில் பணம் கொடுக்காமல் ஏமாற்றி கொண்டிருக்கும் போமன் ஈரானியிடம் பணம் வசூலித்து சொல்ல, அவர்களுடய பணம் டாக்ஸியில் திருடு போகிறது. சூதாட்ட பழக்கத்தின் காரணமாய் நிறைய இடத்தில் கடன் பட்டிருக்கும் போமனின் மனைவி அவனை விட்டு பிரிந்திருக்கிறாள். காணாமல் போன பணத்தை சம்பாதிக்க, போமனின் உதவியை நாடுகிறார்கள் குணாலும், சைரஸும். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் செய்யும் ஒரு புக்க...