MASKA - Telugu Film Review
ஒரு பக்கா மசாலாவான காதல் கதை. சிம்மாச்சலமும, ஷாயாஜி சிண்டேவுக்கும் மத்திய மந்திரி பதவி கிடைப்பதில் போட்டி. சிம்மாச்சலத்தை ஜெயிக்க முடியாத ஷிண்டே அவரின் முதல் மனைவிக்கு பிறந்த மகள் ஹனிஷ்காவை கடத்தி சிம்மாச்சலத்தின் பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தி, அவனது மந்திரி சான்ஸை கெடுத்துவிட துடிக்கிறான். சிம்மாச்சலமோ.. தன் சொந்த மகளையே கொலை செய்ய துடிக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க.. கிருஷ் என்கிற ராம் மஞ்சுவை காதலிக்க தன் நண்பனின் மூலம் அவளுடய விருப்பு வெறுப்புகளை தெரிந்து கொண்டு, அவளை மடக்க முயற்சிக்கிறான். அப்படியே தமிழ் வாலியில் அஜித் சொல்லும் எபிசோடை எடுத்து கொள்ளுங்கள்.. அப்படியே போகிறது. ஒரு கட்டத்தில் மஞ்சு கிருஷிடம் தன் காதலை சொல்ல முடிவெடுக்கும் போது.. ராமின் கற்பனை காதலி நேரில் வர.. அப்புறம் ஆரம்பிக்கிறது கூத்து. ராம் சூப்பராக ஆடுகிறார், பவன் கல்யாணை போல துள்ளலாய் நடிக்கிறார். இயல்பாய் காமெடி வருகிறது. நன்றாக சண்டை போடுகிறார். குறித்து வைத்து கொள்ளுங்கள் இவரை. மஞ்சுவாய் ஷீலா.. அழகாய் இருக்கிறார். ஹனிஷ்கா வரும் வரை.. ஹனிஷ்கா ஒரு குட்டி பூமிகா போல இருக்கிறார். அழகாய்,மிக அழகாய் இருக்கிறார் ...