பிரபாகரன் குடும்பமே அழிந்ததா..?
பிரபாகரனின் மனைவி மதிவதனி, மகள் டாக்டர் துவாரகா.. இளைய மகனின் உடல்களை பிரபாகரனின் உடல் கிடைத்த இடத்தின் அருகிலேயே சிங்கள ராணுவம் அடையாளம் கண்டெடுத்தாக டைம்ஸ் நவ் ப்ளாஷ் நியூஸ் கொடுத்தது. ஆனால் அதை பற்றிய செய்தி எதுவும் கொடுக்கவில்லை. பின்பு சற்று முன் ஹெட்லைன்ஸ் டுடேவில் செய்தியாகவே காட்டினார்கள். கருணா அந்த செய்தியை உறுதிபடுத்தினார். அவர்களை பிரபாகரன் வெளிநாடுகளுக்கு எங்காவது அனுப்பியிருக்கலாம் என்றும், அவர்கள் மறைவுக்கு தான் மிகவும் வருந்துவதாகவும், கடைசி காலங்களில் பிரபாகரன் நிறைய முடிவுகளை தவறாகவே முடிவெடுத்தார் என்றும் பேட்டியளித்தார். ஏற்கனவே பிரபாகரன் மரணம் குறித்த சர்ச்சையே முடிவடையாத போது. அடுத்த அதிர்ச்சி??? உண்மை நிலையை புலிகள் சீக்கிரமே விளக்குவார்களா..? :(:(:(