Posts

Showing posts with the label தனுஷ்

நய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்

நேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழைந்தேன். 7.15க்குத்தான் படமென்றார்கள். 50 ரூபாய் வாங்கவேண்டிய சிங்கிள் ஸ்கீரின் தியேட்டரில் டிக்கெட் விலை 90 என்றார்கள். மூன்று வகை டிக்கெட் விலைகள் இருக்க வேண்டும். தனுஷின் புதிய படம் முதல் நாள் மாலைக் காட்சி கூட்டமேயில்லை என்னையும் சேர்த்து சுமார் இருபது பேர் மட்டுமே இருந்ததை பார்த்த போது படத்தைப் பற்றி ஒப்பினியன் வேண்டாமென்று காத்திருந்து டிக்கெட் எடுத்தேன். இப்போது சுமார் எழுபது பேர் வரை இருந்தார்கள். 

மரியான்

Image
ஒரு கடலோர கிராமத்திலிருந்து தன் காதலியின் கடனை அடைப்பதற்காக சூடான் செல்லும் இளைஞன் ஒருவன். அவன் வேலை காண்ட்ராக்ட் முடிந்து தன் காதலியை சந்திக்க வரும் நேரத்தில் சூடான் நாட்டின் தீவிரவாதிகளால் கடத்தப்படுகிறான். அவன் அங்கிருந்து தப்பித்தானா? காதலியை அடைந்தானா? இல்லையா? எனும் தக்குணூண்டு கதைதான் மரியான்.

சீடன்.

Image
தெய்வம் மனுஷ ரூபேனா..என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட படம். மலையாளத்தில் நந்தனம் என்கிற பெயரில் வெளிவந்து இன்றளவில் க்ளாசிக் வரிசையில்  ஹிட்டான படம். வழக்கமான காதல் கதையில் கொஞ்சம் பக்தி மூலாம் பூசப்பட்ட கதையை அங்கே படத்தின் பாடல்களின் ஹிட்டாலும் இயக்குனர் ரஞ்சித்தின் பிரபல்யத்தாலும் ஓடியது. அதை தமிழில் செய்யப் போகிறார்கள் என்று நினைக்கும் போதே.. எப்படி இருக்குமோ என்று யோசித்தேன். யோசித்தது சரிதான் என்று தெரிகிறது.