2018 ஆம் ஆண்டின் வெப் சீரீஸ்கள் -2
Sacred Games இந்திய அளவில் பெரும் விளம்பரத்தோடு வெளியான நெட்ப்ளிக்ஸ் சீரீஸ். அனுராக் காஷ்யப், விக்ரமாதித்ய மோத்வானி, நவாசுதீன் சித்திக், சாயிப் அலிகான், ராதிகா ஆப்தே என பிரபலங்களை களமிறக்கியிருந்தார்கள். வழக்கமான சாதாரணன் தாதாவான கதை தான் என்றாலும் அதை ப்ரசெண்ட் செய்த விதத்தில் “வாவ்” போட வைத்துவிட்டார்கள். மிரட்டும் நடிப்பு. அதிரடி வசனங்கள். காட்சிகள். பார்வையாளர்களை ஒரே வீச்சில் பார்க்க வைக்கும் திரைக்கதை என மட்டுமில்லாம டெக்னிக்கலாய் அசத்தியிருந்தார்கள். இந்திய அளவில் வந்த நல்ல வெப் சீரிஸ் இது. அமேசானின் வழியில் நெட்ப்ளிக்ஸும் தமிழ் மற்றும் இந்திய மொழிகளில் டப்பிங் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். விரைவில் இரண்டாம் சீசன் களைக் கட்ட போகிறதாம். ஐயம் வெயிட்டிங். Mirzapur நீ வயலண்டாய் சாக்ரட் கேம்ஸை இறக்குகிறாயா? இதோ என் பங்கிற்கு என அதே போல வயலண்ட் ஆக்ஷன் சீரிஸை அமேசான் இறக்கிவிட்டிருக்கிறது. சென்ற வருடம் தரமான சம்பவம் செய்த, அதே இன்சைட் எட்ஜ் தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து வெளியாகியிருக்கிறது. மிர்சாப்பூர் என்ற் அஒரு நகரத்தை ஆண்டு கொண்டிருக்கிற அகானந்த் திர...