Posts

Showing posts with the label sapattukkadai

சாப்பாட்டுக்கடை -SKM Foods- Vadapalani

 50 ரூபாய்க்கு அன்லிமிடெட் வெஜ் அண்ட் நான் வெஜ் சாப்பாடு என. நண்பருடன் அந்த ஏரியாவுக்கு போன போது  ரொம்பவே சின்னக் கடை தான். ஒரே ஒரு இளைஞர் ஒரு சின்ன இடத்தில் சுற்றிலும், முட்டை தொக்கு, சிக்கன் 65, பெப்பர் சிக்கன், சாதம், சிப்ஸ், சிக்கன், மீன் குழம்பு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, நெய் சோறு, வெஜ் பிரியாணி, சோறு என சுற்றிலும் ஜலதரங்க வித்வான் போல சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்.  முதலில் சாப்பாடு ஆர்டர் செய்தோம். தட்டு நிறைய நல்ல சாப்பாடு, கீரை, சிக்கன் குழம்பு ஊற்றிக் கொடுத்தார்கள். கூடவே தொட்டுக் கொள்ள சிக்கன் 65யும் பெப்பர் சிக்கனும் ஆர்டர் செய்திருந்தோம்.அதிக காரமில்லாத அருமையான குழம்பு. அடுத்த ரவுண்டுக்கு மீன் குழம்பு இருக்கிறது என்றார். சரி அதையும் ஒரு டிரை செய்து விடுவோம் என்று குழம்பு ஊற்றச் சொல்ல, சார் சாப்பாடு குறைவா இருக்குனு சொல்லிட்டே இன்னும் கொஞ்சம் சோறு வைத்து குழம்பை ஊற்றினார். அதிக காரம் இல்லாத மீன் குழம்பு. வீட்டு முறைப்படி டேஸ்டில் உடன் தொட்டுக்  கொள்ள வைத்த பெப்பர் சிக்கனின் கிரேவியும் சரி, சிக்கனும் சரியாய் வெந்து பெப்பர் மசாலாவுடன் கலந்தி...

சாப்பாட்டுக்கடை - தமிழ் முஸ்லிம் கிட்சன்

Image
உணவகமாய் திறந்து அதற்கான மெனக்கெடல்களை விட கொஞ்சம் சுலபமானது க்ளவுட் கிச்சன் தான். அப்படியான க்ளவுட் கிச்சன் எத்தனையோ ஆரம்பித்தாலும் நிலைத்து நிற்பது கிடையாது. காரணம் பல க்ளவுட் கிச்சன்கள் மாஸ்டர்களை நம்பி ஆரம்பிப்பதே. அப்படியே ஒழுங்காய் நடந்தாலும் ஸ்விக்கி ஜொமேட்டோவுக்கு கொடுக்குற காசை மீறி லாபம் எடுக்க முடியாமல்.. சரி அதைப்பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது.  அப்படியான ஒரு கிச்சன் தமிழ் முஸ்லிம் ஸ்டைல் உணவு என்று பார்த்ததும் நம்பரை எடுத்து போன் அடித்தேன். தம்பி எர்ஷத்தான் போன் எடுத்தார். நான் கிச்சன்லேயே வந்து சாப்பிடுகிறேன் என்று அங்கேயே கிளம்பிப் போய் சாப்பிடப் போனேன். என்ன சாப்புடுறீங்க? என்றவரிடம் மெனு கேட்டேன். சீரக சம்பா சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, வஞ்சிரம் ப்ரை, என்றார்.  சரி எல்லாத்துலேயும் கொஞ்சம் சாப்பிடுவோம் என்றேன். சீரக சம்பா பிரியாணி டேக்ஸாவை திறக்கும் போதே மணம் நாசியை தாக்கியது. நன்கு வெந்த சிக்கன் பீஸ்களோடு மணக்கும் பிரியாணி வந்தது. வழக்கமாய் சீரக சம்பா பிரியாணி சாப்பிடும் போது அந்த அரிசியின் நல்குணங்களோடு, அளவாக சேர்க்கப்பட்ட மசால...