சாப்பாட்டுக்கடை -SKM Foods- Vadapalani
50 ரூபாய்க்கு அன்லிமிடெட் வெஜ் அண்ட் நான் வெஜ் சாப்பாடு என. நண்பருடன் அந்த ஏரியாவுக்கு போன போது ரொம்பவே சின்னக் கடை தான். ஒரே ஒரு இளைஞர் ஒரு சின்ன இடத்தில் சுற்றிலும், முட்டை தொக்கு, சிக்கன் 65, பெப்பர் சிக்கன், சாதம், சிப்ஸ், சிக்கன், மீன் குழம்பு, சாம்பார், ரசம், காரக்குழம்பு, நெய் சோறு, வெஜ் பிரியாணி, சோறு என சுற்றிலும் ஜலதரங்க வித்வான் போல சுற்றி சுற்றி விளையாடிக் கொண்டிருந்தார்.
முதலில் சாப்பாடு ஆர்டர் செய்தோம். தட்டு நிறைய நல்ல சாப்பாடு, கீரை, சிக்கன் குழம்பு ஊற்றிக் கொடுத்தார்கள். கூடவே தொட்டுக் கொள்ள சிக்கன் 65யும் பெப்பர் சிக்கனும் ஆர்டர் செய்திருந்தோம்.அதிக காரமில்லாத அருமையான குழம்பு. அடுத்த ரவுண்டுக்கு மீன் குழம்பு இருக்கிறது என்றார். சரி அதையும் ஒரு டிரை செய்து விடுவோம் என்று குழம்பு ஊற்றச் சொல்ல, சார் சாப்பாடு குறைவா இருக்குனு சொல்லிட்டே இன்னும் கொஞ்சம் சோறு வைத்து குழம்பை ஊற்றினார். அதிக காரம் இல்லாத மீன் குழம்பு. வீட்டு முறைப்படி டேஸ்டில் உடன் தொட்டுக் கொள்ள வைத்த பெப்பர் சிக்கனின் கிரேவியும் சரி, சிக்கனும் சரியாய் வெந்து பெப்பர் மசாலாவுடன் கலந்திருந்தது மிகவும் ஆச்சர்யமாய் இருந்தது. பெரும்பாலான பெப்பர் சிக்கன்கள் அதன் மசாலாவோடு வெந்த சிக்கனை கடாயில் பிரட்டிக் கொடுப்பார்கள். அது சிக்கனில் மசாலா ஒட்டாமல் தனித்தனியாய் இருக்கும். ஆனால் இங்கு எக்ஸெலெண்ட் டேஸ்ட். முட்டை தொக்கைப் பார்த்ததும் ஆசை ஏற ஒரு முட்டை தொக்கு ஆர்ட்ர் செய்தோம். அதன் கிரேவியோடு சாப்பிட செம்ம சுவை.
அடுத்து பாராட்டப் பட வேண்டிய அயிட்டம் சிகக்ன் 65. சமீபத்தில் இப்படியான சிக்கன் 65ஐ சாப்பிட்டதில்லை. சின்னச்சின்ன பீஸ்கள் தான் தருகிறார்கள். நல்ல ஜூஸியான போன்லெஸ் பீஸ்கள். சில கடைகளில் மாலை வேளைகளில் சிக்கன் பக்கோடா என்று போட்டுத் தருவார்கள். அது போலத்தான் பார்ப்பதற்கு இருந்தாலும் அதிக மசாலா மாவு இல்லாமல் அளவான காரத்தோடு, பீஸ்கள் மீது லேசாய் படர விட்ட மசாலாவோடு, நல்ல கிரிஸ்பான, ஜூஸியான போன்லெஸ் சிக்கன்65. டிவைன். விலை அதிகமில்லை ஜெண்டில்மென் வெறும் ரூ.40 தான்.
பொரித்த மீன்களும் இருக்க, அதையும் ஒரு முறை டிரை செய்தோம். மீன்கள் நன்கு மசாலாவில் ஊறவைக்கப்பட்டு, கிரிஸ்பியான வறுத்த மீன். செம்ம டேஸ்ட். சில சமயம் ப்ரான் தொக்கு எல்லாம் கூட போடுகிறார்கள். வெஜ்ஜில் இவர்கள் கொடுக்கும் சாம்பார், ரசமும் குறை சொல்ல ஏதுமில்லாத ஒன்று தான்.
சாப்பாடு -65
சிக்கன் 65-40
பெப்பர் சிக்கன் -50
முட்டை மசாலா -30
மீன் -25-30 வரை மாறும்
இவ்வளவு தான் விலை. நல்ல தரமான சுவையான வீட்டு முறை சமையலோடு மதிய சாப்பாடு மூன்று பேர் சாப்பிட்டே 350 ரூபாய் தான். என்ன உட்கார்ந்து சாப்பிட ஏதுவான இடமில்லை. கொஞ்சமே கொஞ்சம் பேர் உட்கார்ந்து சாப்பிடலாம். பட் ஒர்த். இதே க்டைக்கு பக்கத்தில் 50 ரூபாய் சாப்பாடு என்று ஒரு கடை இருக்கும் தெரியாமல் போய் சாப்பிட்டு விடாதீர்கள் வாயில் வைக்க வழங்காது.
கேபிள் சங்கர்
சென்னை
வீடியோ லிங்க் : https://youtube.com/shorts/7PWFTuZdjJ4?feature=share
Comments