Posts

Showing posts with the label அமரகாவியம்

கொத்து பரோட்டா - 08/09/14 -தொட்டால் தொடரும் - அமரகாவியம் - அடல்ட் கார்னர் - பட்டைய கிளப்பணும் பாண்டியா- Mary Kom

Image
கல்யாண மாலை நிகழ்ச்சியை என் அம்மா வாரா வாரம் விடாமல் பார்ப்பார்கள். ஞாயிறு காலை என்பதால் பல சமயங்களில் பட்டிமன்றங்களுக்கு நடுவே கல்யாணத்திற்காக காட்டப்படும் வரன்களின் போட்டோக்களைப் பற்றிய கமெண்டுகளை உதிர்த்துக் கொண்டும் பேப்பர் படித்துக் கொண்டும் அசுவாரஸ்யமாய் பார்ப்பேன். இந்நிகழ்ச்சியை பார்த்தன் விளைவாய் எனக்கு புரிந்த ஒன்று நல்ல வேலையில், உயர்ந்த பதவியில் இருக்கும் பெரும்பாலான பெண்களுக்கு கிட்டத்தட்ட முதிர் கன்னி வயது வந்தும் திருமணத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட சொச்ச முடிகளை முன் பக்கம் வழித்தெடுத்த முதிர்கண்ணன்கள் நிலையில்தான் ஆண்களும் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் பெரிய வேலைகளில் இருப்பவர்கள் அல்ல. சாதாரன பி.பி.ஓ, அக்கவுண்ட்ஸ், மார்கெட்டிங் என இருப்பவர்கள் தான் அதிகம். இன்னமும் திருமணமாகாமல் இருக்கும் என்னுடய நண்பர்கள் சிலரிடம் கேட்ட போது, இப்பல்லாம் ஒண்ணு பொண்ணு நம்மளை விட அதிகமா சம்பாதிக்குது. இல்லை நிறைய சம்பாதிக்கிறவனா இருக்கிறவன் புருஷனா வரணும்னு ஆசை படுறாங்க. அதான் ப்ரச்சனை என்கிறார்கள். நீயேன் உன் மனசுக்கு புடிச்ச பொண்ணா பார்த்து லவ் பண...