Kaminey – Hindi Film Review
இரட்டை பிற்வி, உருவ ஒற்றுமை, ஒருவன் நல்லவன், இன்னொருவன் கெட்டவன், உருவ ஒற்றுமை காரணமாய் ஆள் மாறாட்டம். என்று பார்த்து, பார்த்து சலித்து போன ஒரு விஷயத்தை சுவாரஸ்யமாய் சொல்ல முடியுமா..? அதுவும் 135 நிமிட படத்தில் ஒரு பத்து நிமிஷம் மிஸ் செய்தால் கூட புரியாமல் போய்விடக்கூடிய திரைக்கதையில். சும்மா அனல் போல பறக்க வைத்திருக்கிறார் இயக்குனர் விஷால் பரத்வாஜ், ஓம்கார், மக்பூலின் இயக்குனர். சார்லி, குட்டூ இருவரும் இரட்டை பிறவி சகோதரர்கள், மும்பய் தாராவியில் வாழ்க்கை நடத்த, ஒரு கட்டத்தில் இருவரின் ஆசாபாசங்களும் வேறு வேறு விதமாய் இருக்க, சார்லி குறுக்கு வழியில் சம்பாதிக்க ஒரு வழியில் போக, குட்டு ஒரு என்.ஜி.ஓவில் ட்ரைனியாய் வேலைக்கு சேர்ந்து ஒரு கார்பரேட் தலையாக, முதல் படியை வைக்க, மூன்று வருடங்களாய் சந்திக்காமல் இருக்கிறார்கள் சகோதரர்கள். ஒரு நாள் வருகிறது. அந்த ஒரு நாள் அவர்களின் வாழ்கையில் அவர்களுக்கு ஒரு மாறுபட்ட ஒரு நாளாய் அமைகிறது. அந்த நாள் அவர்களின் வாழ்கையை பணயம் வைக்கும் நாளாய் அமைகிறது. சார்லிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து தப்பிக்கும் போது மும்பை போலீஸின் வண்...