Thottal Thodarum

May 30, 2011

கொத்து பரோட்டா- 30/05/11

நேற்று முன் தினம் கல்யாண மாலை மோகனுக்கு அறுபதாம் கல்யாணம்.  ஊருக்கே கல்யாணம் செய்து வைப்பவருக்கு கல்யாணம் எனும் போது உற்சாகம் கரை புரண்டது ஒன்றும் அதிசயமில்லை. பல பட்டிமன்ற பேச்சாளர்கள், படத்தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள்  வந்திருந்து சிறப்பித்தார்கள். நிகழ்ச்சியில் அவரைப் பற்றி அவரது குடும்பத்தினரின் பகிர்தல் வீடியோ க்யூட் அண்ட் ஸ்வீட். நல்ல கம்பைளிங் மீரா நாகராஜன். எனக்கும் மிக நெகிழ்வாக இருந்தது. என் அப்பாவின் அறுபதாம் கல்யாணம் ஞாபகம் வந்தது. நெடுநாளைக்கு பிறகு நான் கிட்டத்தட்ட  அரை நாளுக்கு மேல் நிகழ்வில் கலந்து கொண்டு மோகன் தம்பதியரின்  ஆசியை பெற்று வந்தேன். கல்யாண மாலை மோகன் என் சித்தப்பா.
#############################

May 29, 2011

குறும்படம் – மிட்டாய் வீடு

இப்படமும் ஏற்கனவே கொத்து பரோட்டாவில் அறிமுகப்படுத்தியதுதான். நாளைய இயக்குனர் முதல் பகுதியில் பைனலில் கலந்து கொண்ட படம். பாலாஜியிடம் ஒரு ப்ள்ஸ் என்னவென்றால்  அவரின் திரைக்கதைகள் பெரும்பாலும் கொஞ்சம் க்ளாஸாக, நகைச்சுவை ஊடுருவியபடி இருக்கும் அதில் இப்படமும் தவறவில்லை. அதற்கு அந்த ஓப்பனிங் சீனே சாட்சி. அருமையான கான்செப்ட். க்யூட் எண்ட். நிச்சயம் எல்லோரும் பார்த்து என்ஜாய் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

May 28, 2011

எத்தன்

Eththan-movie-Stills copy நிதிகளின் ஆக்கிரமிப்பிலிருந்ததாய் சொல்லப்பட்ட காலத்தில் தனியொரு படமாய் வெளிவந்து வெற்றி பெற்ற களவாணி தயாரிப்பாளரிடமிருந்து மற்றொரு படம். போன வாரமே ரிலீஸாக இருந்தது சுமார் 80 லட்சத்திற்கும் மேலாய் டிபிசிட் காரணமாய் ரிலிஸாகாமல் இந்த வாரம் ரிலீஸ் ஆகியிருக்கிற படம். டிபிசிட் என்றால் என்ன என்பவர்களுக்கு சினிமா வியாபாரம் நூலை படிக்குமாறு சொல்லிக் கொள்கிறேன். (விளம்பரம்)

May 27, 2011

ஃபாதர் கேரக்டர்

”ஹலோ.. சங்கர்நாராயணன் சாருங்களா?”

“ஆமாம்”

“.. ப்ரொடக்‌ஷன் மேனேஜர் பேசுறேன். டைரக்டர் சார் தான் நம்பர் கொடுத்தாரு”

“சொல்லுங்க”

May 26, 2011

404- அமானுஷ்யங்களின் தேடல்

404இந்தி திரையுலகம் பீடு நடைப் போட்டு போய்க் கொண்டிருக்கிறது என்பதை உறுதி செய்ய வந்துள்ள படம்.பிரவல் ராமன் இயக்கியுள்ள படம். இவரின் முந்தைய படங்களான தர்னா மனா ஹே, காயப், போன்ற படங்கள் கொடுக்காத ஒரு தாக்கத்தை இப்படம் கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

May 25, 2011

Veera

ravi-teja-veera-telugu-movie-stills-4-todayandhra-com தெலுங்கு திரையுலகில் இந்த சம்மருக்கு வந்த பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் அமையவில்லை. ஜுனியர் என்.டி.ஆரின் சக்தி,  ராணாவின் நீ நா ராக்‌ஷஷி, என்று ஊத்தி மூடிக் கொள்ள, நாக சைதன்யாவின் 100% லவ் மட்டுமே சூப்பர்ஹிட். அப்படி வெளிவரும் பெரிய பட்ஜெட் பட வரிசையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் வீரா. மிரபாகாயின் வெற்றியும், புதிதாய் மாஸ் மஹாராஜா என்ற பட்டத்துடன் அவதரித்திருக்கும் ரவிதேஜாவின் படம் என்பது மேலும் ஆர்வத்தை தூண்டியிருந்தது.

May 24, 2011

சாப்பாட்டுக்கடை- அக்பர் மெஸ்

அக்பர் மெஸ் என்றதும் ஏதோ தலைவாழை இலைப் போட்டு மதிய உணவு  போடும் உணவகம் என்று நினைத்து விடாதீர்கள். அக்பர் மெஸ் என்பது ஒரு பிரியாணிக் கடை. சென்னை செண்ட்ரலிலிருந்து வந்தால் மாநகராட்சி கட்டிடத்திற்கு வலது பக்கமாய் திரும்பினால் பெரியமேட்டிக்கு போகும். அங்கே நேரு ஸ்டேடியத்திற்கு எதிரே இருக்கும் மசூதிக்கு அருகில் ஒரு சிக்னலிருக்கும். அங்கே இடது பக்கமாய் திரும்பினால் இரண்டாவது இடது தெருவின் உள்ளே நுழைந்தாலே சும்மா வாசனைப் மூக்கைத் துளைக்கும்

May 23, 2011

கொத்து பரோட்டா-23/05/11

புதிய தலைமை செயலகத்தை ஏன் பயன்படுத்தவில்லை என்று ஒரு விளக்கத்தை ஜெ அளித்துள்ளார். தூரத்திலிருந்து பார்க்கும் போது ஏதோ அவங்களுக்கு சரிபடலைப் போலருக்குன்னு நினைக்கிறாப்புல இருந்தாலும். உள்குத்தாய் நிறைய விஷயங்களைச் சொல்லியிருக்கிறார். அதில் முக்கியமான ஒன்று ட்ராபிக் ப்ரச்சனை.  எதிர்காலத்தில் அங்கு பல பாலங்கள் வரவிருப்பதால் அங்கு போக்குவரத்து நெரிசல் நிச்சயம் ஏற்படும் என்றும், அது மட்டுமில்லாமல் எதிரே இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் வியாபார ஸ்தலமான ரிச்சிதெரு வியாபாரிகளுக்கு ப்ரச்சனையாக இருக்கிறது என்றும், இன்னும் பல இடங்களில் லிப்ட் கூட சரி வர பிக்ஸ் செய்யாமல் இருப்பதாகவும். இரண்டாம் கட்ட கட்டுமானம் முடிந்தால்தான் அதை முழுமையாகப் பயன்படுத்த முடியும் என்றும், இங்கு தலைமைசெயலகத்தை மாற்றியதால் சுமார் 30 கோடி பணம் வேஸ்ட்டாகியிருக்கிறது என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் எங்குமே இரண்டாவது கட்டகட்டுமானம் முடிந்தவுடன் தான் அங்கு மாறிக் கொள்வதாய் சொல்லவேயில்லை. இரண்டு கிலோமீட்டர் தூரம் கோப்புகளை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் வருவதால் மக்கள் பணி கெட்டுப் போகும் என்று சொல்லியிருப்பது சரியே.. ஆனால் கட்டிடத்தை உடனடியாய் கட்ட முடிந்த அரசாங்கத்தினால் இதை உடனே செய்ய முடியாதா?
####################################

May 22, 2011

குறும்படம்- போஸ்டர்

கலைஞர் டிவியில் நடக்கும் நாளைய இயக்குனர் நிகழ்ச்சிக்காக நண்பர் ரவிக்குமார் இயக்கத்தில் என்னுடய கதை, திரைக்கதை, வசனத்தில் எடுக்கப்பட்ட இப்படம். அவ்வாரத்திய சிறந்த படமாய் அமைந்தது. அது மட்டுமில்லாமல் நான் பின்னணி குரல் கொடுத்த இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு சிறந்த நடிகர் விருதும் கொடுத்தார்கள். உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும்.


சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

May 21, 2011

கண்டேன்

kandeen பிரபுதேவாவின் உதவியாளர் ஏ.சி.முகில் இயக்கியுள்ள முதல் படம். போஸ்டரில் சாந்தனு, ஹீரோயின் படத்துடன் எல்லாவற்றிலும் சந்தானத்தின் படத்தை போட்டிருந்தார்கள். முழுக்க, முழுக்க சந்தானத்தை நம்பியே வெளி வந்திருக்கும் படம் என்று தெரிந்தது.

தாத்தா கிராமத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்து கல்யாணம் செய்து கொள்ளச் சொல்லி மிரட்ட, அவரிடம் தான் வேறு ஒரு பெண்ணை காதலிப்பதாய் சொல்லிவிடுகிறார் சாந்தனு.  முப்பது நாளுக்குள் காதலியை கூட்டி வரவில்லையென்றால் தான் பார்த்த பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் காதலியை தேடி அலைகிறார் சாந்தனு. ஒரு பெண்ணைப் பார்த்து மயங்கிய சாந்தனு அவளை இம்ப்ரஸ் செய்ய, குருடன் என்று பொய் சொல்லி காதலிக்க, ஒரு கட்டத்தில் அவளுக்கு தெரிந்து விடுகிறது. பின்பு காலில் விழுந்து எல்லாம் இழந்த காதலை பெற, கல்யாணம் எல்லாம் நிச்சயமாகிவிடுகிற நேரத்தில் ஒரு சண்டையில் நிஜமாகவே கண் போய்விடுகிறது. அப்புறம் என்ன ஆனது என்று தியேட்டரில் போய் கண்டு கொள்ளுங்கள்.
kandeen1
படம் ஆரம்பித்த முதல் காட்சியிலிருந்து ஏற்கனவே மூன்னூறு முறைக்கு மேல் தமிழ் சினிமாவில் பார்த்த காட்சிகளாய் வந்து கொண்டிருக்க, நாலு சீனுக்கு  ஒரு சீன் சந்தானம் வந்து லேசாய் கிச்சு, கிச்சு மூட்டிவிட்டு போனார். இடைவேளை வந்ததும் இன்னும் வேற படம் பாக்கணுமா? என்று எனக்குள் கேட்டுக் கொண்டிருந்தேன்.  முதல் பாதியில் நோகடித்ததற்கு பிராயச்சித்தமாய் இரண்டாம் பாகம் லாஜிக், அது இது என்று எதையும் பார்க்க மாட்டீர்கள் என்றால் சிரிக்கலாம்.

May 20, 2011

எத்தன், கண்டேன், மைதானம்

Eththan-movie-Stills copy
எத்தன் கண்டேன், மைதானம், சுட்டும் விழிச் சுடரே ஆகிய படங்கள் இன்று வெளியாகியிருக்கின்றன. எத்தனைத் தவிர மற்ற படங்கள் எல்லாம் வெளியாகிவிட்டது. எத்தன் மட்டும் டெபிஸிட்டில் இருப்பதால் வெளியாக்வில்லையாம். பெரும்பாலான படங்களுக்கு மல்ட்டிப்ளெக்ஸ், மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களில் கூட டேட் கிடைக்கவில்லையாம். ஒரு ஷோவும், அரை ஷோவுமாய் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான தியேட்டர்களில் ஏற்கனவே வெற்றிகரமாய் ஓடிக் கொண்டிருக்கும், கோ, வானம், ஆகிய படங்களுடன், எங்கேயும் காதல், போன்ற படஙக்ள் ஓடுவதாலும், தெலுங்கு படங்கள் சுமார் நான்கு பெரிய தியேட்டர்களில் வெளியாகிறது. சமீபகாலமாய் தமிழ் தவிர, தெலுங்கு படங்கள் தமிழ் படங்களுக்கு ஈடாக பத்து செண்டர்களுக்கு மேல் ஓடுகிறது. கூட்டமும் வருகிறது என்பதால் பல சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்காரர்கள் அமோகமாய் வரவேற்கிறார்கள். ஆட்சி மாறியும், தமிழ் படங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்று இப்போது புலம்புவார்கள் இருக்கிறார்களா?
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

அல்கா, ப்ரியங்கா.. பின்ன ஞானும்.

நேற்று சூப்பர் சிங்கர் அல்காவின் முதல் சினிமா பாடலைப் பற்றி எழுதினாலும் எழுதினேன். ஒரே மாநிலப் ப்ரச்சனையாகிவிட்டது. அதிலும் ப்ரியங்காவிற்கு ஏகப்பட்ட சப்போர்ட். ப்ரியங்காவைப்   எனக்கு சுமார் ஐந்து வருடங்களாய் தெரியும். ஆறு ஏழு வயதாக இருக்கும் போதே அவளுடய தந்தையின் இசையில் ஒரு பக்தி பாடல் ஆல்பத்தை கொடுத்தவள். இனிய குரலுக்கு சொந்தக்காரி. அவரது தந்தை ப்ரின்ஸ் நல்லதம்பி ஒரு இசையமைப்பாளர். என்னுடய எல்லாக் குறும்படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர். தம்பீஸ் எனும் இசைக்குழு ஒன்றை வைத்திருக்கிறார். அருமையான கம்போசர். இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவருக்கான ப்ரேக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் திறமையை பற்றி அவருடன் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன். அவரின் வெற்றி வெகு தொலைவில் இல்லை. அது போலத்தான் ப்ரியங்காவின் வெற்றியும். ப்ரியங்காவிற்காக தற்போது நடைப்பெற்று வரும் சூப்பர் சிங்கர் ஜுனியருக்காக ஓட்டுப் போடும் படி வேண்டுகோளைக்கூட சென்ற சில வாரங்களுக்கு முன் எழுதிய கொத்து பரோட்டாவில் கேட்டிருந்தேன். 

May 19, 2011

என்னா வாய்ஸ்டா?

சென்ற வருடம் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்2 வில் அல்கா அஜித் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியைப் பற்றி நிறைய பேர் மலையாளி, ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா? என்றெல்லாம் பேசினார்கள். பைனலின் போதான அவரின் சிங்காரவேலனை கேட்டும் கூட. இதோ இப்போது அவரின் முதல் திரைப்படப் பாடல். ஸ்ரீனிவாசின் இசையில் பாடியிருக்கிறார். அருமையான கம்போசிஷன். குரலை மட்டுமே வைத்து அதிக வாத்தியங்கள் இல்லாமல் போடப்பட்ட சூப்பர் மெலடி. ஒரு இடத்தில் ஒரு ஹைபிட்சில் போகும் இடத்தை  கேளுங்கள். கண்களில் கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். நெகிழ்வில். ஷி டிசர்வ் த டைட்டில். வாழ்த்துக்கள் அல்கா.
.

May 18, 2011

நண்டு


“உங்க கூட யாராவது முக்கியமானவங்க இருக்காளா..? இருந்தா வரச்சொல்லுங்கோ.. கொஞச்ம் பேசணும்” என்ற டாக்டர் வரதராஜனுக்கு சுமார் அறுபது வயதிருக்கும், குழந்தை போலிருந்தது அவரின் பேச்சும், முகமும், அதற்கு சற்றும் பொருந்தாத மீசை வைத்திருந்தார்.

“அவருக்கு அண்ணா ஒருத்தர் இருக்கார். ஹைதாராபாத்ல.. ஏன் அவருக்கு என்ன..? ஏதாவது சீரியஸா..? ப்ளட் ஏத்தினா ஹீமோக்ளோபின் ஏறிடும்னு சொன்னேளே..? பெருமாளே.. அவருக்கு ஏதுமில்லைதானே..? என்று அடுக்கடுக்காய் பதட்டத்தோடு, கேள்வி கேட்ட கமலாவின் நெற்றி முழுவதும் ஊரில் உள்ள அத்தனை கோயில் குங்குமம், வீபூதி அப்பியிருக்க, அந்த ஏசி ரூமில் வேர்த்திருந்தாள்.

“அப்ப சரி.. அவர் வரவரைக்கும் எல்லாம் வெயிட் பண்ணவேணாம்.. கொஞ்சம் நிதானமா நான் சொல்றத கேளும்மா.. மிஸ்டர்.. ரகுவுக்கு, வந்திருக்கிறது ‘அக்யூட் லூக்கேமியா’ அதாவது ப்ளட் கேன்சர்” என்றதும், கமலாவின் அடிவயிற்றிலிருந்து “அய்யோ.. பெருமாளே...” என்று அலறி அழ ஆரம்பிக்க, வரதராஜன் காத்திருந்தார். ஒரு அழகான பேரிளம் பெண், எதிரே ஒருவர் உட்கார்ந்திருப்பது கூட உணரமுடியாமல், விக்கி, விக்கி அழுவதை பார்த்து எந்தவிதமான உணர்வுமில்லாமல் டாக்டர் வரதராஜன் காத்திருந்தார். இந்தமாதிரி பல பேர்களின் அழுகையை, கதறலை, தன்னுடய இந்த சென்டரில் பார்த்திருக்கிறார். பழகி போய்விட்டது.

கமலா கொஞ்சம், கொஞ்சமாய் அழுவதை நிறுத்த ஆரம்பிக்க, காத்திருந்த வரதராஜன் மெல்ல, ”இதபாரும்மா.. கஷ்டமாத்தான் இருக்கும், வேற வழியில்ல. இப்படி அழறத விட்டுட்டு, அவர ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணுங்கோ.. உடனடியா ஐ.சி.யூல வச்சு டிரீட்மெண்ட் ஆரம்பிக்கலைன்னா.. நாலு நாளோ, அஞ்சு நாளோதான், அப்புறம் ரொம்பவே கஷ்டம். இப்பவே 20% தான் சான்ஸ் இருக்கு.”

கமலா மூக்கை உறிஞ்சியபடி, “ அப்படின்னா .. அவர் பொழைக்க மாட்டாறா..? நீஙக் சரியா பாத்தேளா..? சினிமாவுல வர்றாப்புல ரிப்போர்ட் எதாவது மாறியிருக்க போறது..? எப்படி அவருக்கு போய்.. இது..  வெத்தல பாக்குகூட போடமாட்டாறே..டாக்டர்..? என்று மீண்டும் குலுங்க, ஆரம்பிக்க,

“சிலருக்கெல்லாம் காரணமே சொல்ல முடியாது.. வந்துடுத்து.. ஆக வேண்டியதை பார்க்கணும்” என்றார்.

கமலா சட்டென்று சுதாரித்து, “கேன்சர்தானே டாக்டர்.. பெருமாள் மேல பாரத்தை போட்டுட்டு, அட்மிட் பண்ணா.. ஒரு வாரமோ, பத்து நாள்லேயோ.. அப்படியே சிரிச்சிண்டே எழுந்து வர்ராப்புல பெருமாள் பண்ணிடுவார்.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..?”

வரதராஜனுக்கு என்ன சொவதென்றே தெரியவில்லை. இவ்வளவு இன்னொசென்ஸா..? ”நீஙக் நினைக்கிறதைபோல அவ்வளவு ஈஸியில்லை.. ஹி ஹேஸ் காட் சம் வாட் அரவுண்ட் த்ரீ லேக்ஸ் கேன்சர் செல்ஸ். நிறைய செலவாகும், உங்க குழந்தைகள் வரலையா..? இருந்தா வரச்சொல்லுங்கோ..”

கமலாவுக்கு மீண்டும் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. “எங்களுக்கு குழந்தைகள் ஏதுமில்ல, பொறக்கல டாக்டர்.. அதவிடுங்கோ.. சொல்லுங்கோ.. எங்க அட்மிட் பண்ணனும்..? எவ்வளவு செலவாகும்..? தம்பிக்கு ஒண்ணுன்னா அண்ணங்கார செய்ய மாட்டாறா என்ன..? நீங்க சொல்லுங்கோ டாக்டர். எவ்வளவு ஆகும்?”

“உடனடியா அப்பல்லோவோ.. அல்லது அடையார் கேன்சர் இன்ஸ்டிடூயூட்லயோ அட்மிட் பண்ணனும். ஒரு நாலஞ்சு நாள் டீரீட்மெண்ட்டுக்கு அப்புறம், ஹீமோக்ளோபின், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஒரளவுக்கு ஏறினதுக்கு அப்புறம்தான் தெரபி ஸ்டார்ட் பண்ணுவா.. இதுக்கே குறைஞ்சது ரெண்டு மாசம் ஆயிடும். சுமார நாலுலேர்ந்து அஞ்சு லட்சமாகிடும்.. அதுக்கு அப்புறம் அவர் தெரபிக்கு ரெஸ்பாண்ட் செஞ்சார்ன்னா திரும்பவும் அவருக்கு கேன்சர் செல் உருவாகாம இருக்கணும். அதுல சொஸ்தமாகி ’போன் மேரோ டிரான்ஸ்பிளேஷன்’ செய்து வெளிய வரதுக்கு கிட்டத்தட்ட பதினைஞ்சு லட்சம் ஆகிடும். இதெல்லாம் இதுக்கு இருக்கிற டிரீட்மெண்ட். ஆனா முதல் தெரபிய அவர் பாடி ஏத்துக்கிட்டு ரியாக்ட் ஆகாம இருக்கணும். அதுக்கு அப்புறம் கடவுள் விட்ட வழி..” என்று சொல்லிவிட்டு போக,

கமலாவுக்கு உலகமே இருண்டது என்று சொன்னால் அது சாதாரண வார்தை. ’அவர் இல்லாமல் எப்படி வாழப்போகிறேன். நிஜமாகவே போயிடுவாரோ?.. இப்பவே இந்த நிமிஷமே பெருமாள் என்னை எடுத்துக்க மாட்டானா.. ? பெருமாளே..உனக்கு எத்தன விரதம், எத்தன ஆராதனை..? எத்தனை அர்சனைகள்? பத்து பதினைஞ்சு லட்சத்துக்கு எங்கே போவேன். தட்டி முட்டி இன்சூரன்ஸ், அது இதுன்னு மொத்தமா ஒரு லட்சம் வரைக்கும் தேறும்.. பேங்க்ல பெரிசா எதுவுமில்ல.. நகையா பாத்தாக்கூட பெரிசா தேறாதே..? வேற எங்க எவ்வளவு பணம் இருக்குன்னு தெரியல.. இருபத்தி அஞ்சு வருஷமா அடிமாடு கணக்கா சேல்ஸ் ரெப்லேர்ந்து ஊர் ஊரா சுத்தி அலைஞ்சு இப்பத்தான் ஒரு கம்பெனியின் மேனேஜராய் இருப்பவரிடம் என்ன இருந்து விட போகிறது. பெரிசா சாமர்த்தியம் இல்லாட்டாலும், சமத்து.. என்று நினைக்கும் போது ரகுவின் முகம் ஞாபகம் வந்து கண்ணீர் முட்டியது.

அவரோட நிழல்லேயே சுகமா இத்தனை நாள் இருந்துட்டு.. இதுவரைக்கு எதுக்காகவும் என்னை அலையவிட்டதேயில்லை. எல்லாத்தையும் அவரே பார்த்துப்பார். ஆனா அடிக்கடி சொல்லுவார்..” எல்லாத்தையும் தெரிஞ்சிக்கோடின்னு” அப்ப கேட்கல.. யாரை கேட்பது, யார் எனக்கு தருவார்கள்..? அப்படியே கிடைச்சாலும் பொழைக்கற சான்ஸ் 20%ன்னு சொல்றாளே..? கமலாவுக்கு துக்கம் புரட்டி, புரட்டிக் கொண்டு வந்தது. எங்கயாவது ஓவென உட்கார்ந்து அழவேண்டும் போலிருந்தது. தனக்குன்னு அழுவதற்கு கூட ஒருத்தரும் இல்லையே என்பது இப்போது குறையாய் தோன்றியது.

ஹாஸ்பிடலுக்கு வெளியே உள்ள ஒரு எஸ்.டி.டி.பூத்துக்கு வந்து தன் கைப்பையிலிருந்து ஒரு பழைய டைரியை எடுத்து அதிலிருந்த ரகுவின் அண்ணனின் நம்பருக்கு போன் செய்தாள். எதிர் முனையில் ரொம்ப நேரம் ரிங் போய் கடைசி நேரத்தில் எடுக்கப்பட

“அண்ணா.. நான் தான் கமலா பேசறேன்..” என்று பேச ஆரம்பித்ததும், ஓவென அழ ஆரம்பித்தாள். சுற்றி உள்ளவர்கள் எல்லாம் பூத்தினுள் அழும் கமலாவையே பார்த்து கொண்டிருக்க, எதிர் முனையில் ”கமலா.. என்னம்ம்மா ஆச்சு..? என்ன ஆச்சு சொல்லும்மா.?” என்று மறுபடி, மறுபடி கேட்டுக் கொண்டிருந்தார். கொஞ்சம் பதட்டம் அடங்கி, மற்றவர்கள் தன்னை பார்பதை உணர்ந்த கமலா, நிதானமாகி, மூக்கை உறிஞ்சி தன் புடவை தலைப்பால் துடைத்துக் கொண்டே டாக்டர் சொன்னதை சொன்னாள். எதிர் முனையில் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தது.

”ஹலோ.. அண்ணா.. ஹலோ.. அண்ணா.. இருக்கேளா..லைன்ல..?”

”ம்.. ம்.. இருக்கேன். என்னம்மா கடவுள் இப்படி உன் தலையில் எழுதிட்டான். இப்ப என்ன பண்றதுன்னே தெரியல.. நெஞ்செல்லாம் படபடன்னு வருது.. சித்த நேரம் கழிச்சு உன் செல்லுல பேசறேன்” என்று போனை வைத்துவிட்டார்.

கமலாவுக்கு அவர் மீண்டும் பேசினால் என்ன சொல்வார் என்று இப்பவே ஊகிக்க முடிந்தது. யாராய் இருந்தால் என்ன.. செலவு செய்தால் பிழைப்பார் என்றால் அங்கே இங்கே புரட்டுவார்கள். இப்படி நம்பிக்கையே இல்லாத வியாதிக்கு அஞ்சு லட்சம், ஆறு லட்சம் என்று யார்தான் என்ன செய்வார்கள்.. போன பணம் திரும்பி வருமா..? சிறிது நேரம் ஒரு வெறுமை பார்வை போனை பார்த்தபடி இருக்க, வெளியே கடைகாரன் கதவை தட்ட, வெளியே வந்து எவ்வளவு என்று கேட்டு, பணம் கொடுத்து விட்டு அண்ணாவின் போனுக்காக காத்திருந்தாள். மணி அடித்தது. எடுத்து கொஞ்சம் சத்தமில்லாமல் இருந்த ரோட்டின் முனைக்கு நடந்தபடியே பேச ஆரம்பித்தாள். “சொல்லுங்கோண்ணா..”

“கமலா. சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத.. எனக்கும் அறுவதிரண்டு வயசாச்சு.. இருந்த காசுல ஒரு பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி மூழ்கியாச்சு.. இரண்டாமவ ஏதோ இப்பத்தான் சம்பாதிக்க ஆரம்பிச்சிருக்கா.. என் பென்ஷன்ல எங்க ரெண்டு பேரோட கதை ஓடிண்டுருக்கு. நினைக்க, நினைக்க அவனுக்கு இப்படி ஒரு வியாதியான்னு துக்கம் நெஞ்ச அடைக்கிறது. ஒரு பத்தாயிரம், இருபதாயிரம்னா அப்படி இப்படி புரட்டிடுவேன். நாலு அஞ்சு லட்சத்துக்கு என்ன பண்ணுவேன், எங்கே போவேன். அப்படியே பண்ணினாலும்..? ” குரல் கம்மியது. ”கடவுள் மேலே பாரத்தை போட்டுட்டு எதாவது ஒரு கவர்மெண்ட் ஆஸ்பிடலுக்கு அழைச்சுண்டு போ.. இப்போ அங்கேயே.. எல்லா விதமான டிரீட்மெண்டும் வந்துடுத்து. கையில இருக்கிறதையெல்லாம் அப்பல்லோவுக்கு கொடுத்திட்டயான உனக்குன்னு பின்னாடி எதாவது வேண்டாமா..? என்னடா அண்ணா இப்படி சொல்றாளேன்னு நினைக்காத.. நான் சொல்றத கேட்கிறதுக்கு கஷ்டமாத்தான் இருக்கும். வேற வழியில்லை, பகவான் இருக்கான் , பாரத்தை அவன் மேல போட்டுட்டு போ, அவன் பாத்துப்பான்.. நானும் இங்க வேண்டிக்கிறேன். எதாவது ஒரு பண்ண மாட்டானா அந்த பெருமாள்.. பாத்துக்கோ.. தைரியமா இரு...” என்று போனை வைத்துவிட்டார்.

கமலாவுக்கு எந்த விதமான அதிர்ச்சியும் இல்லை. இது எதிர்பார்த்ததுதான். எனக்குன்னு என்ன இருக்கிறது இவருக்கு அப்புறம்?. கல்யாணமான காலத்திலிருந்து யாரையும் எதிர்பார்காமல் வாழ்ந்தாகிவிட்டது இதுவரை. யாரிடம் கேட்பது பக்கத்து வீட்டு பாங்க் மேனேஜரை கேட்போமா..? எதை வைத்து கொடுப்பார்..? இருக்கிற வீடும் வாடகைதான். அவள் பக்கம் கூடப்பிறந்தவர்கள் யாருமில்லை. வயதான அம்மா, அப்பா.. இப்போது இதை சொன்னால் தாங்குவார்களா..? என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் டாக்டரிடம் போய் நின்றாள்.

“டாக்டர்.. உடனடியா அட்மிட் பண்றதுக்கு பணம் புரட்டறதுக்கு கொஞ்சம் லேட்டாகும். அது வரைக்கும் இங்கயே ஏதாவது பண்ண முடியுமா..? இப்போதைக்கு ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லையே..?” டாக்டர் வரதராஜன் கொஞ்சம் ஆச்சர்யத்தோடு கமலாவை நிமிர்ந்து பார்த்து,

“அம்மா இது என்ன குளிர் ஜூரம் மாதிரியா.. அவர் ரொம்ப அட்வான்ஸ்டு லெவல்ல இருக்கார். இங்க என்னால பேசிக் டிரீட்மெண்ட் மட்டும்தான் பண்ண முடியும். ப்ளட் ஏத்தலாம், ப்ளேட்லெட்ஸ் ஏத்தலாம். ஆனா பாக்கிறதுக்கு நல்லாத்தான் இருப்பார். எந்த நேரத்திலேயும் எது வேணும்னாலும் நடக்கலாம். ப்ளேட்லெட்ஸ் கொறைஞ்சா அப்புறம் ப்ளட்கூட ஏத்த முடியாது. ப்ளட் ஹூஸ் ஆக ஆரம்பிச்சிடும். ஹார்ட், கிட்னி, ப்ரெயின், எது வேணும்னாலும், எப்ப வேணுமின்னாலும் அட்டாக் ஆகலாம். ஏன் திடீர்னு கோமாவுல கூட போகலாம். அவர் உடம்புல எதிர்பு சக்தியே கிடையாது. ஹி இஸ் பவுண்ட் டு பி இன்பெக்டெட்.. தீடீர்னு தொண்டை கட்டிக்கும், ஜலதோஷம் பிடிக்கும், அப்படியே நிமோனியால கூட கொண்டு விடும். அப்படி ஏதாவது ஆயிடுத்துன்னா மேட்டர் ஆப் ஹவர்ஸ். ரொம்ப சீக்கிரமா பரவிடும். உடம்புல ஏதாவது பார்ட்லனா ஆபரேட் பண்ணி அறுத்தெரிஞ்சிடலாம். ஆனா ப்ள்ட் கேன்சர்ல.. இப்போதைக்கு மருந்து, ப்ளட் எல்லாம் ஏத்தியிருக்கேன். சீக்கிரமா அட்மிட் பண்ணியான்னா.. அந்த 20% சான்ஸை யூஸ் பண்ணலாம்” என்று ஒரு கதவை திறக்க, அமைதியாய் வெளியேறினாள்.

வேறு வழியில்லை.. கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கெல்லாம் வரமாட்டார். சின்ன தலைவலிக்கே ஊரை ரெண்டு படுத்தறவர்.. இது தெரிஞ்சா அவ்வளவுதான் இப்பவே உசிர விட்ருவார். வீட்டிற்கு போய் மெதுவாய் பேசி, தயார் படுத்த வேண்டும். ஒண்ணுமில்ல.. ஒண்ணுமில்லைன்னு சொல்லி, சொல்லி அழைத்து போக வேண்டும் என்று யோசித்தபடி, வார்ட் ரூமுக்குள் நுழைந்தவளை பார்த்ததும், ஆர்வமாய் சந்தோஷத்துடன், கையில் மாட்டியிருந்த சலைன் டியூப்புடன் எழுந்து உட்கார்ந்த ரகு, கமலாவை பார்த்து..

“என்ன சொன்னார்.. டாக்டர்.. எல்லாம் நார்மல்னு சொல்லியிருப்பாரே.. பயப்படாதேடி லூசு.. இப்பத்தான் ப்ளட், ப்ளேட்லெட்ஸ் எல்லாம் ஏத்துன உடனே.. ரொம்ப ப்ரெஷா ஃபீல் பண்றேன். அநேகமா ஹிமோக்ளோபின் 4.5லேர்ந்து 9க்கு ஏறியிருக்கும்.. பாரு எனக்கு இப்ப மூச்சே வாங்கலை, உடம்புல தான் அங்க, அங்க ப்ள்ட் களாட் குறையல.. மத்தபடி ஒண்ணும் பிரச்சனையில்லை எல்லாம் சரியா போச்சு.. இன்னும் ஒரு நாளோ, ரெண்டு நாளோ.. ப்ள்ட் ஏத்துனதும் சரியாயிடும். சரியானவுடனே குலதெய்வம் கோயிலுக்கு ஒரு நடை போயிட்டு வந்திடுவோம். ஏதோ ஒரு குறை வச்சிட்டம் போலருக்கு. அதான் இப்படி படுத்தறது” என்றவனின் குரல் கரகரவென்று தொண்டை கட்டியது போலிருக்க,. கமலா அழாமல் அவனை பார்த்தபடியிருந்தாள்.
******************************************************************************
லெமன் ட்ரீயும் .. ரெண்டு ஷாட் டக்கீலாவும் தொகுப்பிலிருந்து.. 

சாப்பாட்டுக்கடை - வெல்கம் ஓட்டல்கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோயிலுக்கு செல்லும் வழியில் நாயுடுபுரம் என்று ஒரு இடம் இருக்கிறது.  அந்த பஸ் ஸ்டாப்பில் இறங்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் ஏரியிலிருந்து ஒரு இரண்டு கிலோ மீட்டர் மேல் நோக்கி நடந்தால் இன்னும் சிறப்பு. நல்ல பசியோடு நடை நடந்தால் நன்றாக பசியெடுக்கும். அந்த ஏரியாவில் நல்ல நான்வெஜ், வெஜ் ஓட்டல் எதுவென யாரை கேட்டாலும் கைக்காட்டிய இடம் வெல்கம் தான். ஓட்டலின் பெயர் வெல்கம். ஏதோ பெயரை பார்த்து பெரிய ரெஸ்டாரண்ட் என்று நினைத்தால் அது உங்கள் கற்பனை ஆனால் கொடுக்கும் உணவுகளின் தரமோ அடிதூள்.

May 17, 2011

Stanley Ka Dabba

kadabba3_12may11_330x243 தாரே ஜமீன் பர் படத்தின் எழுத்தாளர், கிரியேட்டிவ் டைரக்டர் அமோல் குப்தா, எழுதி, இயக்கி, தயாரித்துள்ள படம். அமீரைப் பற்றி ஒரு குற்றச்சாட்டு உண்டு. தாரே ஜமீன் பர் படத்தைஅமோல் குப்தா பாதி இயக்கிக் கொண்டிருக்கும் போது, நடுவில் புகுந்து தானே இயக்குவதாய் சொல்லி இயக்குனர் ஆகிவிட்டார் என்று. ஏன் என்று கேட்டதற்கு அவருக்கு இயக்கம் சரிவர கைவரவில்லை என்றார் அமீர். ஆனால் இந்த படத்தை பார்த்த போது நிச்சயம் அமீர் பொய் சொல்லியிருக்கிறார் என்று தெரிகிறது.

May 16, 2011

கொத்து பரோட்டா –16/05/11

ஒரு வழியாய் தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகி மம்மி ரிட்டர்ன்ஸ். கிட்டத்தட்ட ஒரு சுனாமி போல எல்லாருடய பிரெடிக்‌ஷன்களையும் அடித்து தூள் தூளாக்கியிருக்கிறார். அவர்களே இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கவில்லை என்பது கட்சிக்காரர்களின் கரை புரளும் சந்தோஷ மிகுதியிலேயே தெரிகிறது. இதெல்லாம் இருக்க, சனிக்கிழமை காலையிலேயே எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை போட வருகிறார், பெரியார் சிலைக்கு மாலை போட வருகிறார் என்று பட்டப்பகலில் அதற்கான படி மற்றும் அலங்கார ஏற்பாடுகளை செங்கோட்டையனே ஆணியடிக்காதகுறையாய் முன்னின்று செய்து கொண்டிருந்தார்.ட்ராபிக் ஜாம். மம்மி வரும் போது அந்த குளறுபடியில்லை என்று பத்திரிக்கையில் போட்டிருந்தார்கள். ஆனால் அரை மணி நேரத்திற்கு மேல் ட்ராபிக் ஜாம். தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு மம்மி கொடுத்த பேட்டி செம மெச்சூர்டு. இதே மெச்சூரிட்டியுடன் ஆட்சியிருந்தால் சந்தோஷம்.
#############################

May 15, 2011

அழகர்சாமியின் குதிரை

VM_164514000000
தமிழ் சினிமாவில் எப்போதும் எழுத்தாளர்களுக்கு பெரிய மரியாதை இருந்ததில்லை. ஒரு காலத்தில் ஏ.எல்.நாராயணன், ஆரூர்தாஸ் போன்றோர் தவிர பெரிய அளவில் எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதில்லை. அதுவும் பாக்யராஜின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாவற்றையும் ஒருவரே செய்வதுதான் சாங்கியமாகிப் போய்விட்டது. ஒரு இயக்குனர், தயாரிப்பாளரிடம் இது இந்த எழுத்தாளர் எழுதிய கதை என்று சொல்லி கதை சொல்ல ஆரம்பித்தால், அப்ப நீங்க என்ன டைரக்டர் என்று கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனாலும் இனறளவில் பாரதிராஜா, கே.எஸ்.ரவிக்குமார் போன்றோர் கதையை வேறொருவர் எழுத, திரைக்கதை இயக்கத்தை மட்டுமே அவர்கள் செய்ய வெற்றிப் பெற்றுக் கொண்டுதானிருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் சமிப காலமாய் தான் அதுவும் சுஜாதாவை தமிழ் திரையுலகத்தினர் கொண்டாட ஆரம்பித்தப் பிறகு தான் மற்ற எழுத்தாளர்களை வசனமெழுத பயன் படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கும் ஆரோக்கியமான நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் தன் வசனங்களுக்காக மிகவும் கவனிக்கப்பட்ட எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதையான அழகர்சாமியின் குதிரையை படமாக்கியுள்ள இயக்குனர் சுசீந்திரனை பாராட்ட வேண்டும்.

May 14, 2011

குறும்படம்- கானல் நீர்

ஏற்கனவே நான் கொத்து பரோட்டாவில் போட்டதுதான். சமீபத்தில் பார்த்த சிறந்த குறும்படம். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டப் படம்.  ரொம்ப சிம்பிளான நேரேஷன். பிரிட்டோவின் மனதை வருடும் பின்னணியிசை. சாய்குமாரின் மிகையில்லாத நச் ஒளிப்பதிவு. ரெஜினா, அதித்யாவின் நல்ல நடிப்பு. இயல்பான வசனங்கள் என்று மனதை கொள்ளை கொள்ளும் இந்த சிம்பிள் லவ் ஸ்டோரியை ரம்யா இயக்கியிருக்கிறார்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

May 12, 2011

May 11, 2011

Sex And Zen- 3D அட்டகாசமான கில்மா படம். நிசமாவே வயது வந்தவர்களுக்கு மட்டும் தான்.

poster சில வாரங்களுக்கு முன் கொத்து பரோட்டாவில் எழுதிய படம் தான். படத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடனேயே இதை எந்த காலத்திலும் நம் திரையரங்குகளில் பார்க்க முடியப் போவதில்லை என்று தெரிந்துவிட்டது. அப்படியே கஷ்டப்பட்டு சென்சார் செய்தால் டைட்டில் காட்சியும் எண்ட் காட்சியும் தான் வரும் என்று முடிவிருந்ததால் உடனடியாய் டவுன்லோடிட்டேன். அட அட அட..  என்னா படம்யா..? ம்ஹும்..

May 10, 2011

100% Love

100%love-naga-chaitanya-tamannah-movie-first-look
சுகுமார், நாக சைதன்யா, ரொம்ப நாளைக்கு பிறகு தமன்னா தெலுங்கில், தேவி ஸ்ரீ பிரசாத, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் என்று ஒரு பெரிய வெற்றிக் கூட்டணியே ஒன்றினைந்திருக்கும் படம். அதனால் ஏற்பட்டிருந்த எதிர்பார்ப்புக்கு அளவேயில்லை.  வழக்கமாய் சுகுமாரின் அத்துனை படங்களிலும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கும். அதாவது ஹீரோவின் கேரக்டரைஷேஷன். அது அவரது முதல் படமான ஆர்யாவிலாகட்டும், இரண்டாவதுபடமான ஜகடத்திலாகட்டும், மூன்றாவதான கொஞ்சம் எக்ஸ்ட்ராவாகப் போன ஆர்யா-2விலாகட்டும் ஒரு டீடெயில்டு கேரிக்கேச்சர் இருக்கும். அதற்காக அவர் நிறைய உழைத்திருப்பார். ஆனால் அம்மாதிரியான உழைப்பு கொஞ்சம் ஓவராகி ஆர்யா –2 போல தோல்வியடைவதும் உண்டு. தமிழ் நாட்டில் அப்படத்தை பார்த்தவர்கள் ஆஹா ஓஹோ என்று பாராட்டுவார்கள். ஏன் எனக்கும் மிகவும் பிடித்தப் படம். ஆனால் அந்திரத்தில் படம் வெகு சுமார் ரிசல்ட்டே.

May 9, 2011

கொத்து பரோட்டா- 9/05/11

என்ன தான் மேம்பாலம் கட்டினாலும், நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கிக் கொடுத்தாலும், ரங்கநாதன் தெருவிலும், உஸ்மான் ரோடிலும், நடைபாதை என்ற ஒன்று இருக்கவே இருக்காது போலிருக்கிறது. நடைபாதை வியாபாரிகளுக்கென்று தனியே இடம் ஒதுக்கி கொடுத்தால் அந்த இடத்தை வேறு ஒருவனுக்கு மேல் வாடகைக்கு விட்டுவிட்டு, திரும்பவும் அதே இடத்தில் கடை போடுபவர்களை, போலீஸார் கண்டு கொள்வதேயில்லை. இன்னொரு மாமூல் அதிகமாகிற போது அவர்களுக்கென்ன?. இவர்களை விடுங்கள். ரத்னா ஸ்டோர்ஸ் காரர்கள் நடைபாதையில் பாதி கடையை பரப்பியிருக்கிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அதை பார்த்துக் கொள்ள நான்கு ஆட்கள் அதைச் சுற்றி. அவர்களே அங்கு பாதி ட்ராபிக் ஜாமை ஏற்படுத்துகிறார்கள். முக்கியமாய் உஸ்மான் ரோடிலிருக்கும் சரவணா ஸ்டோர்ஸிலிருந்து நடந்து ஒரு பத்தடி நடப்பதற்கு பத்து நிமிஷம் ஆகும் போலிருக்கிறது. அரசும் போலீஸும் நினைத்தால் நிச்சயம் இதை சரி செய்ய முடியும். எப்போ தோணப் போவுதோ?
#######################################

May 8, 2011

குறும்படம்- அப்துல்லா, சிவா, டேனியல்

அப்துல்லா சிவா டேனியல். நான் சிறுகதையாய் எழுதி கல்கியில் வெளிவந்தது. பின்பு மீண்டும் ஒரு காதல் கதை தொகுப்பிலும் வெளியானது. அதை குறும்படமாய் தன்னுடய கால் இறுதி போட்டிக்கு எடுக்க கேட்டார் ரவிக்குமார். சிறுகதையை திரைக்கதையாய் மாற்றி எழுதிக் கொடுத்தேன். மிக அருமையாய் படமாக்கி கால் இறுதியில் வெற்றி பெற்றிருக்கிறார் ரவி. உங்கள் பார்வைக்காக.

May 7, 2011

எங்கேயும் காதல்

Engeyum-Kadhal-Movie-Wallpaper1 சன் பிக்சர்ஸ் அவசர அவசரமாய் பெரும் தோல்வியான மாப்பிள்ளை ஓடும் தியேட்டர்களில் எல்லாம் ரிலீஸ் செய்திருக்கிற படம். நேற்று நள்ளிரவிலிருந்தே உலகமெங்கு சூப்பர்ஹிட்டான  என்று விளம்பரம் போட ஆரம்பித்திருக்கும் படம். சென்னையில் மட்டும் சுமார் பதினெட்டு தியேட்டர்களுக்கு மேல் வெளியாகியிருக்கும் ஜெயம் ரவியின் படம். ஹாரிஸின் ஹிட் பாடல்கள் கொண்ட படம் என்று பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த படம். எதிர்பார்ப்பை திருப்திபடுத்தியதா? என்ற கேள்விக்கு பதில் பின் வரும் வரிகளில்.

May 6, 2011

I AM

i-am-6 இந்தி திரையுலகம் வேகமாய் வளர்ந்து கொண்டிருக்கிறது. புதிதான கதை களன்களில், கதை சொல்ல முறையில் என்று போய்க் கொண்டேயிருக்கிறது. இம்மாதிரியான விஷயங்கள் எல்லாம் நம்மைச் சுற்றி நடக்கவேயிலலை என்று நம்பும் ஆட்களுக்கு ஒரு அதிர்ச்சியை கொடுக்ககூடிய கதையை இப்படத்தின் மூலம் கொடுக்க நினைத்து அதை நிறைவேற்றியிருக்கிறார்.

May 5, 2011

Shor In The City

shor-in-the-city-wallpapers-07 ப்ளாக் காமெடி என்பது ஒரு வகையான காமெடி. Guyritche படங்களில், டொரண்டோனோ படங்களில் அதிகம் பார்க்க முடியும்.  அதை தொடர்ந்து பல பேர் ஹிந்தியில் முயற்சித்து வருகிறார்கள். அதில் மிகச் சிலபேரே கொஞ்சம் ரசிக்கும் படியான படங்களை எடுக்கிறார்கள். தமிழில் அதெல்லாம் சான்ஸேயில்லை. இன்றளவில் செவிலில் அறையும் காமெடியே உச்சப்பட்ச காமெடியாய் இருக்கும் போது ப்ளாக் காமெடியெல்லாம்.. நம் எல்லைக்கு உட்பட்டதல்ல என்றாலும் எனக்கு தெரிந்த ஒரு முயற்சி அதுவும் படு தோல்வியில் முடிந்தது. வேண்டுமானால் இன்னும் ஒரு பத்து வருடங்களுக்கு பிறகு அதே படம் வேறு பெயரில் எடுக்கப்பட்டு ஓடலாம். அது மும்பை எக்ஸ்ப்ரஸ்.

ரஜினிகாந்த ஆஸ்பிட்டலில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மீண்டும் உடல் நிலை சரியில்லாமல், ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார். மூச்சுத்திணறல் காரணமாய் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இப்போது அவரது உடல்நிலை சரியாக இருப்பதாகவும்,மேலும்  இரண்டு நாட்களுக்கு ஐ.சி.யூவில் வைத்து கண்காணிக்கப் போவதாகவும் ஹாஸ்பிட்டல் தரப்பு சொல்கிறது. அவரது உடல் நிலை தேறி ராணா வெற்றி வாகை சூட பிரார்த்தனை செய்வோம்.

May 4, 2011

தமிழ் சினிமா-2011- காலாண்டு ரிப்போர்ட்..

ஜனவரி-2011
சென்ற வருட முடிவில் வெளியான “தென்மேற்கு பருவக்காற்று” வியாபாரரீதியாய் பெரிய வருமானம் இல்லாவிட்டாலும், விமர்சகர்களால் கவனிக்கப்பட்டு, உலக திரைப்படவிழாக்களில் பங்கேற்றது. பொங்கலுக்கு ஆடுகளம், சிறுத்தை, காவலன், சொல்லித்தரவா மற்றும் இளைஞன் வெளியானது. ஆடுகளம் விமர்சகர்களிடமிருந்தும், பார்வையாளர்களிடமிருந்தும் நல்ல பெயரைத் தட்டிச் சென்றது என்றாலும் வசூல் ரீதியாய் சென்னை போன்ற பெரிய நகரங்களைத் தவிர பெரியதாய் கல்லா கட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.

May 3, 2011

Nenu Na Rakshashi -நானும்.. என் ராட்ஷஸியும்..

nnrmoviereview காசு கொடுத்தால் யார் எவரென்று கூடக் கேட்காமல் கொலை செய்யும் ஒருவனுக்கும், யாராவது தற்கொலை செய்து கொள்ள ஆசைப்படுகிறவர்களூடய சாவை நேரடியாய் சென்று வீடியோ எடுத்து யூ டுயூபில் போடும் பெண்ணுக்கும் காதல் வருகிறது. அதன் பின்னால் பிரச்சனைகளும் வருகிறது. என்னா ஒரு லைன்.. சும்மா பின்னி பெடலெடுத்திருக்க வேணாம். ம்ஹும்..

May 2, 2011

கொத்து பரோட்டா-02/05/11

சந்தோஷம்
போன வாரம் குமுதத்தில் கொத்துபரோட்டாவை குறிப்பிட்டு அரசு பதில்களில் எழுதியிருந்தது பெரிய அளவிலான அங்கீகாரத்தை கொடுத்தது. புத்தகம் வந்து ஒரு வாரமாகியும் நிறைய வாசகர்கள் மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள் சொன்ன வண்ணம் இருக்கிறார்கள். சினிமா துறை நண்பர்கள் பலர் குமுதம் அரசு பதில்களில் இடம் பெற்றது சாதாரண விஷயமல்ல என்று பாராட்டியது அளவில்லா மகிழ்ச்சியை  வழங்கியது என்றே சொல்ல வேண்டும். தமிழ் கூறும் நல்லுகத்தில்  தவிர்க்க முடியாத பத்திரிக்கை ஆளுமைகளுள் குமுதமும் உண்டு. அப்படிப்பட்ட பத்திரிக்கையில் எனக்குமொரு சிறிய இடத்தை அளித்து அங்கீகரித்த குமுதம் அரசுவுக்கு நன்றிகள் பல..
############################

May 1, 2011

குறும்படம்- தேய் மச்சி தேய்.

என் ராஜேஷ் குமாரின் ஒளிப்பதிவு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ரொம்ப சிம்பிளான கதை. க்ரெடிட் கார்டை தேவையில்லாமல் உபயோகிக்கக் கூடாது என்பதை ஒரு சின்ன ட்விஸ்டின் மூலம் இண்ட்ரஸ்டாக சொல்லியிருக்கிறார். பெரிதாய் ஏதுமில்லாவிட்டாலும்.. ஓகே.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்