Posts

Showing posts with the label alka ajith

அல்கா, ப்ரியங்கா.. பின்ன ஞானும்.

Image
நேற்று சூப்பர் சிங்கர் அல்காவின் முதல் சினிமா பாடலைப் பற்றி எழுதினாலும் எழுதினேன். ஒரே மாநிலப் ப்ரச்சனையாகிவிட்டது. அதிலும் ப்ரியங்காவிற்கு ஏகப்பட்ட சப்போர்ட். ப்ரியங்காவைப்   எனக்கு சுமார் ஐந்து வருடங்களாய் தெரியும். ஆறு ஏழு வயதாக இருக்கும் போதே அவளுடய தந்தையின் இசையில் ஒரு பக்தி பாடல் ஆல்பத்தை கொடுத்தவள். இனிய குரலுக்கு சொந்தக்காரி. அவரது தந்தை ப்ரின்ஸ் நல்லதம்பி ஒரு இசையமைப்பாளர். என்னுடய எல்லாக் குறும்படங்களுக்கும் அவர்தான் இசையமைப்பாளர். தம்பீஸ் எனும் இசைக்குழு ஒன்றை வைத்திருக்கிறார். அருமையான கம்போசர். இரண்டு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். அவருக்கான ப்ரேக்கை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரின் திறமையை பற்றி அவருடன் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தில் சொல்கிறேன். அவரின் வெற்றி வெகு தொலைவில் இல்லை. அது போலத்தான் ப்ரியங்காவின் வெற்றியும். ப்ரியங்காவிற்காக தற்போது நடைப்பெற்று வரும் சூப்பர் சிங்கர் ஜுனியருக்காக ஓட்டுப் போடும் படி வேண்டுகோளைக்கூட சென்ற சில வாரங்களுக்கு முன் எழுதிய கொத்து பரோட்டாவில் கேட்டிருந்தேன். 

என்னா வாய்ஸ்டா?

Image
சென்ற வருடம் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்2 வில் அல்கா அஜித் வெற்றி பெற்றார். அவரின் வெற்றியைப் பற்றி நிறைய பேர் மலையாளி, ஒரு தமிழர் கூட கிடைக்கவில்லையா? என்றெல்லாம் பேசினார்கள். பைனலின் போதான அவரின் சிங்காரவேலனை கேட்டும் கூட. இதோ இப்போது அவரின் முதல் திரைப்படப் பாடல். ஸ்ரீனிவாசின் இசையில் பாடியிருக்கிறார். அருமையான கம்போசிஷன். குரலை மட்டுமே வைத்து அதிக வாத்தியங்கள் இல்லாமல் போடப்பட்ட சூப்பர் மெலடி. ஒரு இடத்தில் ஒரு ஹைபிட்சில் போகும் இடத்தை  கேளுங்கள். கண்களில் கண்ணீர் வழிய கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். நெகிழ்வில். ஷி டிசர்வ் த டைட்டில். வாழ்த்துக்கள் அல்கா. .