வேட்டை
ஒரு படம் நல்லாருக்கா இல்லையாங்கிறதை தியேட்டர் கேண்டீன்ல ஆகிற வியாபாரத்தை வச்சி சொல்லிரலாம்னு என் நண்பர் சிவகுமார் சொல்லுவாரு. படம் சூப்பரா இருந்தா கையில் இருக்கும் காசை சந்தோஷமா செலவு பண்ணுவாங்களாம். மொக்கையா இருந்தா நிச்சயம் வியாபாரம் குறைவாகவும், நிச்சயம் ஒரு சண்டை அன்னைக்கு நடந்தே தீரும் என்றும் சொல்வார். அவர் ஒரு தியேட்டர் கேண்டீன் ஓனர். சைக்காலஜி.தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் மல்டி ஸ்டார் காஸ்டிங். யாராவது ரெண்டு பேர் காம்பினேஷனை உக்காந்து யோசிச்சிட்டா போதும், அதுக்கப்புறம் கொஞ்சம் கூட யோசிக்கிறதேயில்லைங்கிற முடிவோட படமெடுக்க ஆரம்பிச்சிருவாங்க. நாமளும் படம் பாக்க, மொத நாளே டிக்கெட் ரிசர்வ் செய்திட்டு போயிருவோம்.