Posts

Showing posts with the label நிமிர்ந்து நில்

கொத்து பரோட்டா -10/03/14 - Queen -நிமிர்ந்து நில், 300, Highway, கேட்டால் கிடைக்கும்,

Image
Queen கங்கனா ராவத். பேஷன் படத்தில் இவரது நடிப்பை பார்த்து மிரண்டிருக்கிறேன். இப்போது குயினில். டெல்லியில் மிட்டாய் கடை வைத்திருக்கும் குடும்பத்திலிருந்து வந்த பெண் ராணி. அவளின் திருமண மெகந்தி விழாவில் எல்லா பெண்களுக்கும் ஏற்படும் கலந்து கட்டிய சந்தோஷத்தோடு படம் ஆரம்பிக்கிறது. அடுத்த நாள் கல்யாணம் என்கிற நிலையில் வருங்காலக் கணவன் காபி டேவுக்கு அழைத்து இந்த திருமணம் நடக்காது என்று சொல்கிறான். என்ன ஏதுவென புரியாமல் அதிர்ச்சியில் இருக்கிறாள் ராணி. கல்யாணம் நிற்கிறது. கல்யாணம் முடிந்து ஹனிமூன் போவதற்காக ப்ளான் செய்யப்பட்ட, பாரீஸ், ஆம்ஸ்டர்டாம் பயணத்தை தனியே கிளம்புகிறாள். பொத்தி பொத்தி வளர்கக்ப்பட்ட, ஆணாதிக்கம் கொண்ட சமூகத்தில் வளர்ந்த, எல்லாவற்றுக்கும் ஜெய் மாதா ஜி என கடவுளை துணைக்கழைக்கும் பயந்த சுபாவமுள்ள, அவ்வளவாக வெளியுலக எக்ஸ்போஸர் இல்லாத கல்யாணத்திற்காகவே வளர்க்கப்பட்ட பெண்ணின் இந்த பயணம் மூலம் கிடைத்த அனுபவம் தான் படம்.  கொஞ்சம் அசந்தாலும் சோம்பிப் போக வாய்ப்புள்ள திரைக்கதை. ஆங்காங்கே சோம்பி நின்றாலும், கங்கனாவின் இன்னொசென்ஸ் படத்தை காப்பாற்றுகிறது.   படம் முழுக்...