Posts

Showing posts with the label பரோட்டா..

சாப்பாட்டுக்கடை – வைரமாளிகை

Image
ரெண்டு வருடங்களுக்கு முன் மணிஜி, ரமேஷ்வைத்யாவுடன் குற்றாலத்திற்கு போயிருந்த வேளையில் நல்ல சாப்பாட்டுக்கடையை தேடிய போது எல்லோரும் சொன்னது, வைரமாளிகை கடையைப் பற்றித்தான். பரோட்டாவுக்கும், சிக்கனுக்கும் செங்கோட்டை பார்டர் கடைதான் பெஸ்ட் என்று பெயர் இருந்தாலும், திருநெல்வேலியிலேயே அந்த தரத்துக்கு ஒரு பரோட்டா கடை இருக்கிறது என்ற போது டேஸ்ட் செய்யாமல் வருவது சரியில்லை என்று தோன்றியதால் ஒரு விஸிட் அடித்தோம். அவர்கள் அங்கு கொடுத்த பரோட்டாவும், தேங்காய் எண்ணையில் பொறித்த நாட்டுக் கோழியையும் இன்று நினைத்தாலும், எச்சிலூறும் அப்படி ஒரு சுவை. அதன் பிறகு யார் திருநெல்வேலிக்கு போனாலும் திருநெல்வேலிக்காரனுகே அல்வா கடையை சொல்லியது போல, அந்தக்கடையை பற்றிச் சொல்லாமல் விட்டத்தில்லை.