கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15
கந்துவட்டி தான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா? -15 தமிழ் சினிமா தியேட்டர் ஸ்ட்ரைக், நீ என்ன பண்றது ஸ்ட்ரைக் நான் பண்ணுறேன் ஸ்ட்ரைக், என்று தயாரிப்பாளர்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பு என பரபரப்பாய் போய்க் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா உலகம். தயாரிப்பாளர் சொல்லும் வி.பி.எப் கட்டணம் மட்டுமே இதற்கு காரணமல்ல. நீ தியேட்டரில் ப்ரொஜெக்டர் வைப்பதற்கு நான் எதற்கு காசு தரணும் என்பது நியாயமான விஷயம் தான். ஆனால் அதே நேரத்தில் டிக்கெட் விலையை ஏற்ற இவர்கள் யார்? என்று தயாரிப்பாளர் தரப்பில் கேட்டிருப்பது. தயாரிப்பாளர்தான் டிக்கெட் விலையை நிர்ணையிக்க வேண்டும் என்று போராட இறங்கியிருப்பதும் செம்ம காமெடி. ஏழெட்டு மாதங்களுக்கு முன்னால் எங்கள் டிக்கெட் விலை ஏற்றி பத்து வருடங்கள் ஆகிவிட்டது. எனவே ஏற்றிக் கொடுக்க வேண்டும். மும்பையைப் போல ப்ளெக்ஸி ரேட்டிங் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்றெல்லாம் கோரிக்கை வைத்தவர்கள். இன்றைக்கு அரசு நிர்ணையித்த விலையான 150+ஜி.எஸ்.டி. + கே.வரி சேர்த்து வாங்கினால் இருநூறு ரூபாய் வந்துவிடுமென்று, பழைய விலையான 120க்கே வரி போட்டு வாங்கியும் தியேட்டரில் ஆள் நடமாட்டம் ...