Thottal Thodarum

Jan 31, 2012

மரியா கேண்ட்டீன்

மரியா கேண்ட்டீன் பத்திரிக்கையாளர் சி.முருகேஷ்பாபு எழுதி வெளிவரும் முதல் சிறுகதை தொகுப்பு. முன்னாள் விகடன் க்ரூப். ஒரு வருடத்திற்கு முன்னால் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் வேலைப் பார்க்கும் இணைய இதழுக்காக தொடர் கட்டுரை எழுதக் கேட்டிருந்தார். அந்நேர வேலை பளு காரணமாய் எழுத முடியவில்லை. அதன் பிறகு பல முறை தொலைபேசியிலேயே பேசிக் கொண்டிருந்தோம். கிருஷ்ணவேணி பஞ்சாலை திரைப்பட மார்கெட்டிங் நிகழ்வில்தான் அவரை நேரில் சந்தித்தேன். படு சுவாரஸ்யமான மனிதர். நான் எழுதும் எல்லா பதிவுகளையும் படித்துவிட்டு பின்னூட்டமிட்டிருப்பவர் என்று அறியும் போது சந்தோஷமாயிருந்தது. அவரின் இந்தத் தொகுப்பு பாடலாசிரியர் நா.முத்துகுமாரின் புத்தகங்களை மட்டுமே வெளியிடும் பட்டாம்பூச்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வெளியான அன்றே வாங்கி விட்டேன்.

Jan 30, 2012

கொத்து பரோட்டா -30/01/11

நாயகர்களுக்கு இணையாய் இயக்குனரின் சம்பளமும் வர வேண்டும் என்று ஆசைப்படுவது சரிதான்.ஆனால் அதை எந்த நேரத்தில் எப்போது சொல்ல வேண்டுமென்று கூடவா தெரியாது?. வர வர அமீரின் காமெடி தாங்கவில்லை. இயக்குனருக்கு பத்து லட்சமாம், இணை இயக்குனருக்கு நாலு லட்சமாம், துணை இயக்குனருக்கு இரண்டு லட்சமாம், உதவி இயக்குனருக்கு ஒரு லட்சமாம். அது தவிர இயக்குனருக்கு பேட்டா ஒரு நாளைக்கு ஆயிரமாம்.  இவருக்கு கிடைத்த தயாரிப்பாளர் போல எல்லாருமே ஜே.அன்பழகன் ஆகிவிட முடியுமா? அவரே கண்ணு முழி பிதுங்கிட்டு இருக்காரு.. ஜெயம் ரவியோ எப்படா படத்த முடிப்பாருன்னு ஒரு பக்கம் புலம்பிட்டிருக்காரு. இன்னொரு பக்கம் தயாரிப்பாளர் புலம்புறது தனி. மொத்தமாய் ஒரு கோடிக்குள் படமெடுக்கும் பல சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஆட்டத்தை விட்டே துரத்தியடிக்க செய்த சதியாய்த்தான் தெரிகிறது. 350 ரூபாய் பேட்டாவிலிருந்து 450 கேட்டதற்கே உன்னைப் பிடி என்னைப் பிடி என்று ஆளாளுக்கு உண்ணாவிரதமும், போராட்டமுமாய் இருக்கிற நேரத்தில், இவரின் காமெடி உச்சபட்சம். தினசரி பேட்டா 100 ரூபா ஒழுங்கா கிடைக்குமா? இல்லையான்னு இருக்கிற காலத்தில.. இவரு சொல்றது எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதை இயக்குனர் சங்கத்திலிருக்கும் இயக்குனர்களுக்கே தெரியும். தயாரிப்பு செலவு எகிறி விட்டது. படங்கள் ஓட மாட்டேன் என்கிறது என்று புலம்புகிற நேரத்தில் தயாரிப்பாளர்களே உருவாக யோசிக்கிற நேரத்தில் இம்மாதிரியான அறிக்கைகள் எவ்வளவு தூரம் தமிழ் சினிமாவின் நிலையை குழப்பும் என்று புரியாமல்தான் பேசுகிறாரா?. சரி.. இவ்வளவு தூரம் பேசுகிறவர்கள் ஏன் நடிகர்களின் சம்பளத்தைப் பற்றி வாயைத் திறக்க மாட்டேனென்கிறார்கள்?. யாராவது கால்ஷீட் கொடுக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்ற பயமா? முதலில் இரண்டு மணி நேரப் படத்துக்கு 500 நாட்கள் ஷூட் செய்து அநியாயமாய் பட்ஜெட்டை இழுக்காமல் படமெடுக்க கற்றுக் கொண்டாலே பாதி விஷயங்கள் சரியாக இருக்கும். தெலுங்கு படங்களைப் போல சம்பளத்தை படங்களின் வெற்றிக்கு பிறகு வாங்கிக் கொள்ளச் சொல்லலாமே? அல்லது சதவிகித அடிப்படையில் சம்பளத்தை பெற்றுக் கொள்ளச் சொல்லலாமே? எனக்கு தெரிந்து சமீபகாலமாய் தொடர்ந்து தோல்விகளையே கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்த நடிகரின் சம்பளம் ஆறு கோடியாம். என்ன கொடுமைடா சாமி. அதற்காக பெப்ஸி தொழிலாளர்கள் சம்பள உயர்வை நான் முழுவதுமாய் ஆதரிக்கிறேன் என்று நினைத்து விடாதீர்கள். அது பற்றி தனிப் பதிவே போட வேண்டியிருக்கிறது. தமிழ் சினிமாவில் பட்ஜெட்டில் சினிமாவே எடுக்க முடியாத அளவிற்கு இவர்கள் செய்யும் ப்ரச்சனைகளை சொல்லிக் கொண்டே போகலாம் போலிருக்கிறது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

Jan 28, 2012

சாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்


கோவிந்த பவனா? என்று யோசிப்பவர்களுக்கு, திருவல்லிக்கேணியில் இது போல பல வித்யாசமான பெயர்கள் கொண்ட பல மெஸ்கள் உண்டு. அதில் ஒன்று இது. திருவல்லிக்கேணி ரோடில் உள்ள ரத்னா கேப்பில் திரும்பி, அதை தாண்டி வரும் முதல் இடது பக்க ரோட்டில் நுழைந்தால் இருக்கிறது இந்த கோவிந்தா பவன்.

Jan 27, 2012

தேனி மாவட்டம்

நல்ல கருத்துள்ள, மக்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லக் கூடிய படங்கள் தமிழில் வருவதில்லை என்று வருத்தப்படுகிறவர்களுக்காகவே வந்திருக்கும் படம். விளை நிலங்களை கட்டிடங்கள் ஆக்காதீர்கள் என்பதை வலியுறுத்தியிருக்கும் படம். சமயங்களில் வருத்தம் நல்லது போலிருக்கிறது.

Jan 25, 2012

சாமியாட்டம்


samiyattam
மூத்த பதிவரும், பத்திரிக்கையாளருமான யெஸ்.பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு இந்த சாமியாட்டம். இதற்கு முன்னால் இவர் அரவாணிகளைப் பற்றிய நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளை அடங்கிய இந்த தொகுப்பு 2003 –2011 வரை இவர் எழுதிய சிறுகதைகளின் மொத்தமாம்.  உட்காந்து எழுதியிருக்காரு போல. பாலபாரதியுடன் பேசி பழகியவர்களுக்கு, கதை வாசிக்கையில் அவரின் குரலில் கேட்பதை தவிர்க்க முடியாது. அவ்வளவு கம்பீரமான குரல் மனுஷனுக்கு. சிரித்தால் ப்ரம்ம ராட்ஷசன் போலச் சிரிப்பாரு. சரி.. நாம கதைகளுக்கு வருவோம்.
1. கோட்டி முத்து.மனநிலை பிழன்றவனோ என்று யோசிக்க வைக்கும் கேரக்டர். இம்மாதிரியான ஆட்கள் ஊருக்கு ஒருத்தர் நிச்சயம் இருப்பார்கள். தனக்கென்று யாருமில்லாமல் ஊருக்காக நேர்ந்து விட்ட ஆளாக சுற்றியலையும் இவனைப் போன்றவர்களின் முடிவு என்னவாக இருக்குமோ அது போலவே தான் இவன் முடிவும் இருக்கிறது.

Jan 24, 2012

Good Night Good Morning

 gngm இரண்டு பேர் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டிருப்பதை மட்டுமே 73 நிமிடங்கள் காட்டினால் உங்களால் பொருந்தி உட்கார்ந்து பார்க்க முடியுமா? வெட்டியாய் அறிமுகமில்லாத ஆணும், பெண்ணும், பேசிக் கொள்வதில் என்ன பெரிய சுவாரஸ்யமிருந்து விடப் போகிறது?. இம்மாதிரியான பேச்சில் அவ்விரண்டு பேருக்குத்தான் சுவாரஸ்யமான ஸ்வீட் நத்திங்காக இருக்குமேயன்றி, மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாய் இருக்குமா? ஒரு நாள் இரவு போன் பேச்சில் கடலைப் போட்டு, காதல் சொல்லி, பிரிவு உண்டாகி, அந்த சிறிய பிரிவு மேலும் அவர்கள் உறவை நெருக்கமாக்க முடியுமா? சினிமா எடுப்பதற்கு பெரிய நடிகர்கள், டெக்னீஷியன்கள் தேவை என்று நம்புகிறவரா? இப்படியெல்லாம் தொடர்ந்து பல கேள்விகளை உள்ளடக்கியவரா நீங்கள் உங்களுக்கு இந்தப் படம் பதில் சொல்லும். பிரபல பத்திரிக்கையாளரும், விமர்சகருமான சுதீஷ்காமத்தின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இண்டியன் ஆங்கிலப் படம். அமெரிக்காவில் இதை இண்டிபெண்டட் மூவி என்று சொல்வார்கள்.

Jan 23, 2012

கொத்து பரோட்டா 23/01/12

லதா ரஜினிகாந்த் தலைமையில் நடக்கும் ஆஷ்ரம் ஆர்ட்ஸ் அகாடமியின் சார்பாக கலைஞர்களுக்கு ரஜினிகாந்த் பெயரில், சிவாஜியின் பெயரில், பீஷ்மர் பெயரில் எல்லாம் வாழ்நாள் விருதுகள் கொடுக்கிறார்கள். அதில் இந்த வருடம் ஷம்மிக்கபூர், ஆஷாபரேக், கே.பாலசந்தர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதான ரஜினிகாந்த் விருதை அளித்து கெளரவித்தனர்.  இவ்விழாவில் ரஜினி பேசிய போது தன்னை கடைசியில் வந்தால் போதுமென்று சொல்லிவிட்டதால் கடைசியில் பேசுகிறேன் என்றும், தான் ஏதுவும் சாதிக்கவில்லை, என் குருநாதருக்கு என் பெயரில் விருது வழங்குவது வருத்தமாக இருப்பதாகவும், இனி பாலசந்தரின் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று மனைவியிடம் “கேட்டுக்” கொண்டிருப்பதாகவும் பேசினார். இவர் நினைத்திருந்தால் இந்த விழாவிலேயே பரிசுகள் அளிப்பதற்கு முன்னால் ரஜினியின் இந்தக் கருத்துக்கு மதிப்பளித்து, பாலசந்தரை வைத்தே விருதை மற்றவர்களுக்கு கொடுத்து கெளரவித்திருக்கலாம். ஆனால் கொடுக்கும் விருதை கொடுத்துவிட்டு இம்மாதிரி பேசுவதை பார்த்தால் வடிவேலுவின் ”ரொம்ப நல்லவன்” வசனம் தான் ஞாபகம் வருகிறது. ஒரு விதத்தில் ரஜினியின் நிலையைப் பார்த்தால் பாவமாய்தானிருக்கிறது. ஒரு பக்கம் மனைவி, இன்னொரு பக்கம் மகள்கள் இப்படி எல்லோரும் அவரின் புகழை, வைத்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள ஆளுக்கொரு பக்கமாய் இழுக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது என்ன தான் சூப்பர் ஸ்டாராய் இருந்தாலும் வீட்டிற்கு புருஷன், அப்பன் தானே என தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@

Jan 21, 2012

நான் – ஷர்மி - வைரம் -13

13365_173461604131_43403254131_2915911_5527099_n
13 நான்
அஞ்சனாவுடன் வந்த ஆள் நிர்வாணமாய் நிற்பதைப் பார்த்த்தும் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. இம்மாதிரியான நிகழ்வு எனக்கு புதுசு. அதுவும் மூன்றாம் ஆள் முன்னால் இவ்வளவும் நடந்திருக்கிறது என்று என்னும் போது ஒரு மாதிரி இருந்தது. அவன் முகமெல்லாம் சிரிப்பாய் என்னைப் பார்க்காமல், அஞ்சனாவை மோகத்துடன் பார்த்து, அப்படியே போய் அணைத்துக் கொண்டான். அவளது உறுப்பின் மேல் கைவைத்து “டூ ஹாட்” என்று அசிங்கமாய் சிரித்தான். அஞ்சனா அவன் கை வைத்த்தில் மீண்டும் கிளர்ச்சியடைந்திருக்க வேண்டும். அவன் உதட்டை அப்படியே உள்ளே இழுத்து முத்தமிட ஆரம்பிக்க, அந்த ஆள் அவளை முத்தமிட்டபடியே, என்னையும் அழைத்தான். நான் புரியாமல் பார்க்க, அஞ்சனா முத்தமிடுவதை நிறுத்திவிட்டு, “கமான் விவில் ஹேவ் த்ரீசம். ரொம்ப நாளைக்கு பிறகு குஜ்ஜூ டார்லிங்குக்கு மூட் வந்திருக்கிறது” என்று என்னையும் இழுத்து அணைத்துக் கொள்ள, ஒளிந்திருந்து பார்த்து சூடேற்றிக் கொள்பவன் என்று புரிந்தது. அதன் பிறகு நடந்த்தை எல்லாம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பது இல்லை.

Jan 19, 2012

சிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..

கொள்ளைக்காரன்

Kollaikkaran_Stills15 பொங்கலுக்கு வந்த நான்கு படங்களில் நண்பன், வேட்டை பட்ஜெட் பெரிசு. கொள்ளைக்காரனும், மேதையும் சின்ன பட்ஜெட் படங்கள். ஆனால் பல சமயங்களில் பெரிய படங்களை விட சின்னப் படங்கள் திடீரென ஓடிவிடும். உதாரணத்துக்கு மைனா.. என்னதான் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டதினால்தான் என்று பலர் சொன்னாலும் பட்ஜெட் வரையில் அது சின்னப்படம்தான். அப்படி மீண்டும் ஒரு வெற்றிப்படத்தை விதார்த் அளிப்பாரா என்று எதிர்பார்க்க வைத்தப்படம்.

Jan 16, 2012

கொத்து பரோட்டா – 16/01/12

புத்தகக் கண்காட்சியில் கிழக்கில் நண்பர் ஒருவருக்காக யூதர்கள் பற்றிய புத்தகம் ஒன்றைத் தேடிக் கொண்டிருந்தேன் கிடைக்கவில்லை. அப்போது அருகில் இருந்த ஒருவரிடம் கேட்க, அவர் புத்தகம் இருந்த இடத்தைக் காட்டினார். எடுத்துக் கொண்டு நன்றி சொல்லும் போது, “உங்களுக்கு யூதர்களைக் காட்டிக் கொடுத்து துரோகியாகிவிட்டேன் என்றார். என்னா ஒரு டைமிங்க்டா..
##############################

Jan 15, 2012

வேட்டை

v7 ஒரு படம் நல்லாருக்கா இல்லையாங்கிறதை தியேட்டர் கேண்டீன்ல ஆகிற வியாபாரத்தை வச்சி சொல்லிரலாம்னு என் நண்பர் சிவகுமார் சொல்லுவாரு. படம் சூப்பரா இருந்தா கையில் இருக்கும் காசை சந்தோஷமா செலவு பண்ணுவாங்களாம். மொக்கையா இருந்தா நிச்சயம் வியாபாரம் குறைவாகவும், நிச்சயம் ஒரு சண்டை அன்னைக்கு நடந்தே தீரும் என்றும் சொல்வார். அவர் ஒரு தியேட்டர் கேண்டீன் ஓனர். சைக்காலஜி.தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் மல்டி ஸ்டார் காஸ்டிங். யாராவது ரெண்டு பேர் காம்பினேஷனை உக்காந்து யோசிச்சிட்டா போதும், அதுக்கப்புறம் கொஞ்சம் கூட யோசிக்கிறதேயில்லைங்கிற முடிவோட படமெடுக்க ஆரம்பிச்சிருவாங்க. நாமளும் படம் பாக்க, மொத நாளே டிக்கெட் ரிசர்வ் செய்திட்டு போயிருவோம்.

Jan 14, 2012

Businessman

busi போக்கிரிக்கு பிறகு மகேஷ்பாபுவும், பூரி ஜகன்னாந்த்தும் இணைந்து கொடுக்கும் படம் எனும் போதே எதிர்பார்ப்பு எகிறித்தான் போயிற்று. வர வர பெரிய ஹீரோக்களுக்கு படம் செய்வது என்பது சாதாரணமான விஷயமாய் இருப்பதில்லை. சாமானியனாய் இருந்தாலும் லார்ஜர் தென் லைப் சாமானியனாய்த்தான் பில்டப் செய்ய வேண்டியிருக்கிறது.

Jan 11, 2012

புத்தகக் கண்காட்சி –7 ஆம் நாள்

மாலையில் கிளம்பலாம் என்றால் சரி மழை பெய்தது. விடாமல் சுமார் அரை மணி நேரத்திற்கு மேல் அடித்த மழை சட்டென ஓய, உடன் கிளம்பினேன். மழையினால் வழியெங்கும் ட்ராபிக் ஜாம். ஒரு வழியாய் ஆறு மணிக்கு கிளம்பியவன் ஏழு மணிக்கு போய்ச் சேர்ந்தேன். பத்திரிக்கையாளர் பாலா போன் செய்தார். அவரை நான் 334 டிஸ்கவரியில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு, நேற்று ரவுண்ட் அடித்த எதிர்பக்கத்திலிருந்து ஆரம்பித்தேன். மழையின் காரணமாய் கூட்டம் மிகக் குறைவாகவேயிருந்தது. ஒவ்வொரு கடையாய் பார்த்து வரும் போது இந்திராபார்த்தசாரதியின் மூன்று குறுநாவலை வாங்கலாம் என்று யோசித்து பர்சை எடுத்தால் பணமேயில்லை. வெறும் நூறு ரூபாய் மட்டுமே இருந்தது. க்ரெடிட் கார்டும் அக்செப்டட் இல்லை என்பதால் திரும்பக் கொடுத்துவிட்டு, மெல்ல நடந்தேன். வழியில் இன்னொரு நண்பர் கந்தாவை சந்தித்தேன். உதவி கேமராமேன். நான் இணை இயக்குனராய் பணி செய்த படத்தில் அவரும் வேலை செய்தார். இனிமையானவர். சூட்டிங் ஏதுமில்லாததால் இங்கு நண்பருக்கு உதவி செய்வதற்காக வந்திருப்பதாய் சொன்னார். சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம். அந்த ஸ்டால் முழுக்க, கம்யூனிசமாகவோ, அல்லது அணு உலை வேண்டாம் என்று சொல்லும் புத்தகங்களாகவே இருக்க, அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். நான் படித்ததெல்லாம் வேண்டாம் என்று சொல்லும் கருத்துக்களேயன்றி, வேண்டும் என்று சொல்லும் பக்கத்தை இன்னும் அறியவில்லை.  அறிந்ததும் நான் என் கருத்தை சொல்கிறேன் என்றதும் நட்பாய் சிரித்தார்கள். கவிஞர் முத்துகுமாரின் புத்தகங்களை வெளியிடும் பட்டாம்பூச்சி பதிப்பகத்தில் நுழைந்ததும், புதியதாய் சி.முருகேஷ்பாபுவின் மரியா கேண்டீன் என்கிற சிறுகதை தொகுப்பு கண்ணில் பட்டது. முருகேஷ்பாபு என் இனிய நண்பர். உடன் வாங்கினேன். மெல்ல அடுத்தடுத்த கடையாய் பார்த்துக் கொண்டு வந்து வாங்க வேண்டிய புத்தகங்களை லிஸ்ட் போட்டு வந்தேன். குறைந்தது 5000 ஆகிவிடும் போலிருந்தது. கையில் காசு இருப்பதை வைத்துத்தான் முடிவுசெய்ய வேண்டும் வெறும் விண்டோ ஷாப்பிங்கா.. அல்லது நிஜ ஷாப்பிங்கா என்று. காலச்சுவட்டில் மணிஜி, பலாப்பட்டறை சங்கரைப் பார்த்தேன். பின்பு வேடியப்பன் கடைக்கும் ஒரு விசிட் அடித்துவிட்டு, டீ சாப்பிடக் கிளம்பினோம்.  டீ சாப்பிட்டுவிட்டு நான் முருகேஷ்பாபுவின் ஸ்டாலுக்கு சென்று அவரிடம் ஆட்டோகிராப் வாங்கி வந்தேன். மகிழ்ச்சியாய் இருந்தது. மீண்டும் வேடியப்பன் கடை. காமிக்ஸ் விஷ்வா வந்திருந்தார். அப்துல்லா, குட்டி டின், நாமக்கல் சிபி  ஆகியோர் வந்திருந்தார்கள். நண்பர் நேசமித்ரனும் வந்திருந்தார். பை நிறைய தடித்தடி புத்தகங்களோடு. வழக்கப்படி எங்களது புத்தகங்கள் இன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் விற்றிருந்தது. சந்தோஷம்.
இன்றைய பர்சேஸ்

மரியா கேண்டீன் – சி.முருகேஷ்பாபு – பட்டாம்பூச்சி பதிப்பகம் -40
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

புத்தகக் கண்காட்சி –நாள் 6- தெர்மக்கோல் தேவதைகள் விமர்சனமும்.

Jan 10, 2012

சென்னை பஸ், புகார், புத்தகக் கண்காட்சி

சென்னை அரசு பஸ்சுகளில் பயணம்  செய்து வெளிவருவது ஒருவிதமான தவம் என்று என் நண்பர் அடிக்கடி சொல்லிக் கொண்டேயிருப்பார். அதற்கு அவர் சொல்லும் காரணங்கள் பல. முக்கியமாய் கண்டக்டர்களின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள். அவர்களின் நடவடிக்கைகளுக்கு கோபப்படாமல் அமைதி காத்து வந்தால்தான் ப்ரெஷர் இல்லாமல் வாழ முடியும் என்பார். 

Jan 9, 2012

கொத்து பரோட்டா - 09/01/12

புத்தகக் கண்காட்சிக்காக சுடச்சுட புத்தகங்கள் வெளியாகிக் கொண்டிருக்க, ஈழவாணி அவரது ஈழத்து நாட்டார் கவிதை தொகுப்பு, மற்றும் பூவரசி இதழ் அறிமுக விழாவிலும் கலந்து கொள்ள அழைத்திருந்தார். கவிதைக்கும் எனக்குமான தூரம் பற்றி திரும்பத் திரும்ப சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன். நண்பர் பாடலாசிரியர் முத்துகுமாரும், மீரா கதிரவனும் வந்திருந்தார்கள். இந்த கவிதை கும்மியில் என்னைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார் முத்துகுமார். விதி வலியது என்பதை விளக்கினேன். கவிதை புத்தகத்தை வாங்கவில்லை. பூவரசி படிப்பதற்கு கொஞ்சம் நாக்கு சுளுக்கிக் கொள்ளும் இதழாக இருக்குமோ என்ற சந்தேகம் மாலன் புத்தகத்தைப் பற்றி பேசிய போது ஏற்பட்டது.நேரம் ஆகிவிட்டது என்ற நினைப்பில்லாமல் சொல்ல வந்ததை சொல்லாமல் விடவில்லை அவர். ஆனால் படித்தபோது அப்படியில்லை. நல்ல வடிவமைப்பு, மிகுந்த உழைப்பு, ஆகியவை தெரிந்தது. படித்த வரையில் பாலுமகேந்திராவின் பேட்டி சுவாரஸ்யம். அவர் ஏன் இலங்கை தமிழர்களுக்காக தமிழில் படமெடுக்கவில்லை என்ற கேள்விக்கு அவர் அளித்த பதிலில் இருந்த நேர்மை மிகவும் பிடித்தது. வாழ்த்துகள் ஈழவாணி.
################################

Jan 8, 2012

புத்தகக் கண்காட்சி - நாள் 3

காலையிலேயே வேடியப்பன் அழைத்தார். வேறொரு இயக்குனருடனான கதை விவாதம் இருந்ததாலும், அலுவலக வேலைக் காரணமாகவும், எங்கேயும் போக முடியவில்லை. கே.ஆர்.பியும் நானும், மாலை நான்கு மணிக்காய் கிளம்பினோம். நேற்று நான் சொன்ன கவிதை புத்தக வெளியீடு வேறு இருந்ததால் கட்டாயம் போக வேண்டியதாகிவிட்டது. ராஜகுமாரியில் புத்தக விற்பனை எப்படி போகிறது என்று பார்க்க ‘ழ” கே.ஆர்.பியுடன் நுழைந்தோம். நன்றாக போயிருப்பதாகவும், என் புத்தகங்கள் விற்றிருப்பதாய் சொன்னார்.  மணிஜி வேறு போன் செய்திருந்தார். அவருக்காக காத்திருந்த வேலையில் வாசகர் சுதர்சன் வந்தார். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, புத்தகங்களையும், என் கையெழுத்தையும் வாங்கிக் கொண்டு போனார். என் முந்தைய புத்தகங்களான லெமன் ட்ரீயும், ரெண்டு ஷாட் டக்கீலாவையும், சினிமா வியாபாரத்தையும் பாராட்டினார்.

Jan 7, 2012

விநாயகா

vinayakudu-landing

புத்தகக் கண்காட்சி – நாள் 2

சீக்கிரமே போக வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் கிளம்புகையில் லேட்டாகிவிட்டது. ஐந்தரை மணிக்கு சைதையிலிருந்து கிளம்பியவன், கண்காட்சிக்கு போக ஏழானது. படு பயங்கர ட்ராபிக். நேற்று வந்த ரூட் ட்ராபிக் என்று இன்று வேறு வழியில் வந்தால் அது அதைவிட கொடுமை. டிஸ்கவரி புக் வேடியப்பன்  என்னை பார்ப்பதற்காக சில பேர் கடைக்கு வந்திருப்பதாகவும், உடன் வரவேண்டுமென்றும் சொல்லி போனை வைத்தார். என்னுடய நண்பர் வாசகர் தாமு வந்திருந்தார். நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு ஸ்டெல்லாப்ரூஸின் பல நாவல்களை அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு இவருக்கு உண்டு. ஒலக சினிமா, ஒலக சினிமா என்று ஆளாளுக்கு அதைப் பார்த்தேன், இதைப் பார்த்தேன் என்று சொல்கிறவர்கள், இவரும் இவரது நண்பரும் பார்த்த படங்களைப் பற்றி பேசினால் ஆச்சர்யத்தின் எல்லைக்கு போய்விடுவீர்கள். நாற்பதுகளில் வெளிவந்த ஹாலிவுட், ஒலக படமெல்லாம் பார்த்திருக்கிறார்கள்.

Jan 6, 2012

புத்தக வெளியீடும்… புத்தக கண்காட்சி முதல் நாளும்..

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் என்னுடய புதிய புத்தகமான “தெர்மக்கோல் தேவதைகள்”  அதே நாலாம் தேதியன்று, புத்தக கண்காட்சிக்கு முதல் நாள் வெளியாகியது. பெங்களூர்காரர் ஹரி ஊரிலிருந்து மெனக்கெட்டு பத்து பதினைந்து  டீ ஷர்டுகளில் “தெர்மக்கோல் தேவதைகள்’ புத்தக அட்டை டிசைனை ப்ரிண்ட் செய்து எடுத்து வந்திருந்தார். படு சுவாரஸ்மான மனிதர். மூச்சுப் பயிற்சியிலிருந்து, இ- காமர்ஸ் வரைக்கும் பேசினார். என்னுடய தீவிர வாசகர் என்றார். அவர் நடத்தும் simplelife.in என்கிற இணையதளத்தை பற்றி நிறைய பேசினார்.  போகிற் போக்கில் ஒரு குட்டி நாவலுக்கான தீமை சொல்லிவிட்டு போனார். விழாவிற்கு வருவதாய் இருந்த இயக்குனர்கள் “கிருஷ்ணவேணி பஞ்சாலை”  தனபால், “அம்புலி’ இயக்குனர் ஹரீஷ் ஆகியோர் வேலை நிமித்தமாய் வர முடியாமல் போய்விட்டதற்கு வருந்தினார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்த சில நிமிடங்களில் மின்சாரம் போனது எனக்கு சந்தோஷமாய் இருந்தது. வழக்கமாய் என் விழாவில் இம்மாதிரியான தடங்கல்கள் ஆரம்பிக்கும் போது ஏற்படுவது செண்டிமெண்டாய் நல்ல விஷயம். என்னா ஒரு மூட நம்பிக்கைடா.. சங்கரா.. என்று திட்டுவது கேட்கிறது. பட் இட் ஹாபென்ஸ் வெரி ஆஃபன்.

Jan 3, 2012

விளையும் பயிரை…

Crashed____by_LoneDonTimes சம்மந்தமேயில்லாமல் திடீரென அந்த ஒன்வே  ரோட்டின் திருப்பத்திலிருந்து வந்த டிவிஎஸ் ஸ்கூட்டி என் வண்டியின் மீது இடித்து கீழே விழுந்தது. வண்டியை ஓட்டியது ஒரு பத்து வயதுக்குள்ளான சிறுவன். பையன் கீழே விழுந்ததில் உடலெங்கும் சிராய்ப்பு. என் பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து குடிக்கச் சொல்லி அசுவாசப்படுத்திவிட்டு, இரண்டு வண்டியையும் ஓரம் கட்டி நிறுத்தினேன். அழுது கொண்டேயிருந்தான். இதற்குள் கூட்டம் கூடிவிட, சம்மந்தமேயில்லாமல் கும்பலில் ஒருவன் ”பார்த்து வரக்கூடாது சார்.. ராஷ் டிரைவிங்” என்று என்னை குறை கூற, சட்டென நிமிர்ந்து முறைத்தேன்.

Jan 2, 2012

கொத்து பரோட்டா – 02/01/12


வருகிற 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு. என் புதிய சிறுகதை தொகுப்பான “தெர்மக்கோல் தேவதைகள்” புத்தகத்தையும், என்.உலகநாதனின் “நான் கெட்டவன்’ என்கிற இரண்டு குறுநாவல்கள் அடங்கிய புத்தகத்தையும், ‘உ’பதிப்பகம் வெளியிட இருக்கிறது. இடம் டிஸ்கவரி புக் பேலஸ். வழக்கம் போல் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். புத்தக வெளியீடன்று நண்பர் வாசகர் ஹரி தெர்மக்கோல் தேவதைகள் புத்தகத்தின் அட்டைப்பட டிசைனோடு டி ஷர்ட்டுகளை கொண்டு வருவதாய் சொல்லியிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்.
####################################

Jan 1, 2012

தமிழ் சினிமா இந்த வருடம் 2011

தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி, சூப்பர்ஹிட், வரலாறு காணாத கலெக்‌ஷன் என்றெல்லாம் தினம் தினம் நாம் பார்க்கும் விளம்பரங்களையும், எங்க தலைவர் படம் இவ்வளவு வசூல், அவ்வளவு வசூல்ன்னு ஆளாளுக்கு டிஸ்ட்டிபியூட்டர்க்கு கூட கிடைக்காத டி.சி.ஆர் ரிப்போர்ட் கொடுத்துக் கொண்டிருக்க, என்ன தான் மாதா மாதம் பார்த்தாலும், மொத்தமாய் பார்க்கும் போது என்ன ரிசல்ட் என்று பார்ப்போம். மாத ரிசல்ட்டிலிருந்து சில முடிவுகளில் சிறு மாற்றங்கள் இருக்கத்தான் செய்யும். என்பதை கூறிக் கொள்கிறேன்.