சென்னையில் கலந்த சாதங்கள் பெரும்பாலான இடங்களில் கிடைக்காது. சாம்பார் சாதம், லெமன் சாதம், தயிர்சாதத்தைத் தவிர வேறு கலந்த சாதங்கள் கிடைப்பது அரிது. அப்படியே கிடைத்தாலும் சரவணபவன் போன்ற ஸ்டார் ஓட்டல்களில் மட்டுமே கிடைக்கக்கூடிய நிலையிருப்பதால் அங்கேயும் போய் சாப்பிட முடியாது. ஆனால் சென்னையில் பல வருடகாலமாய் சித்ராண்ணங்கள் எனப்படும் கலந்த சாதங்களை மட்டுமே வழங்கி வரும் இந்த காமெஸ்வரி மெஸ் மேற்கு மாம்பலத்தில் படு பேமஸ். தக்காளி, வத்தக்குழம்பு, புளி, எலுமிச்சை, சாம்பார், புதினா, என்று வகை வகையாய் சாதங்கள். அவற்றுடன் ஒரு சின்னப் பாக்கெட் சிப்ஸும் கொடுப்பார்கள். ஒரு சாதம் 24 ரூபாய். மாலையில் சப்பாத்தி, பூரி ஆகியவை கிடைக்கும். அதுவும் சப்பாத்திக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சைட்டிஷ்ஷுடன். என்ன அதுக்கு கொஞ்சம் காத்திருந்துதான் சாப்பிட வேண்டும். பாஸ்ட் புட் மாதிரியில் தான் இந்த உணவகம் இருக்கும் அதனால் வந்தோமா சாப்பிட்டோமா? என்று எல்லோரும் கிளம்பிவிடுவார்கள். நின்று கொண்டு சாப்பிட முடியாதவர்களுக்கு சைடுவாக்கில் சின்னச் சின்ன சேர்களை போட்டிருப்பார்கள். இவர்களிடம் இன்னொரு வசதி உண்டு. 24 ரூபாய்க்கு இரண்டு, அல்லது மூன்று சாதங்களைக் கூட கலந்து தருவார்கள். ஒவ்வொரு சாதமும் அளவில் குறைந்திருந்தாலும், வகை வகையாய் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.
மாம்பலம் ஸ்டேஷனில் இறங்கி, ரங்கநாதன் தெருவின் பக்கம் இறங்காமல் மேற்கு மாம்பலம் பக்கம் இறங்கினால், யாரைக் கேட்டாலும் சொல்வார்கள் காமேஸ்வரி மெஸ் எங்கிருக்கிறது என்று. பல வருடங்களாய் நான் அங்கு சாப்பிட்டிருக்கிறேன். என் நினைவு தெரிந்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 14 ரூபாய் இருந்த சாதங்கள் அதே அளவில் இப்போது 24 ஆகியிருக்கிறது. பட் குவாலிட்டி அதே.. அதே.. நிஜமான பசியில் இவர்களிடம் கிடைக்கும் ஊறுகாய்கள், பருப்புப் பொடி, ரசப்பொடி, புளியோதரைப் பொடி போன்ற அயிட்டங்களுக்கு இன்றும் வெளிநாடுகளில் வசிக்கும் நம் ஆட்கள் ரசிகர்கள். இவர்கள் கொடுக்கும் ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கும் வத்தக் குழம்பு சாதத்தை சாப்பிட்டு பாருங்கள். சுள்ளென நாவில் உறைக்கும் லேசான காரமும், புளியின் புளிப்பும்.. ம்ம்ம்ம்ம். .. அப்புறம் என்ன சொல்வேன்னு எழுத்தித்தான் தெரியுமா உங்களுக்கு. என்ஜாய்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அண்ணாச்சி மனசு இறங்க மாட்டேங்குது
பதிவை படி….பரிசை பிடி……(இலவச இன்டர்நெட் )
நானும் அங்க சாப்பிட்டுருக்கேன் ...
அருமை...
அதுவும்..தினமும் ஒரு..NUTS..
போட்டு ...
சூப்பர்...தேடி போய் சாப்பிடுவேன்...
பொடிவகைகள்...அருமை...
எத்துனை முறை வீட்டுக்கு
வாங்கிட்டு போய் இருக்கேன்....
NICE...கடை....
Thank you!
Thank you!
ranjjan
வாழ்த்துகள்.
சென்னையில் கலந்த சாதம் சென்னையில்தானே சார் கிடைக்கும், வேற இடத்தில எப்படிக் கிடைக்கும்?!!
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com
One brother was taking charge of coffee preparation and the another person will be at cash counter or some times he will give the food items.
The chappathi at night was very good.
Most of the people stayed at Mansions at west mambalam area are used to go there daily.
Most of the my friends are in overseas now and we used to talk about Kameshwari whenever we communicate.
Thanks.
Srinivasan.V