
போக்கிரிக்கு பிறகு மகேஷ்பாபுவும், பூரி ஜகன்னாந்த்தும் இணைந்து கொடுக்கும் படம் எனும் போதே எதிர்பார்ப்பு எகிறித்தான் போயிற்று. வர வர பெரிய ஹீரோக்களுக்கு படம் செய்வது என்பது சாதாரணமான விஷயமாய் இருப்பதில்லை. சாமானியனாய் இருந்தாலும் லார்ஜர் தென் லைப் சாமானியனாய்த்தான் பில்டப் செய்ய வேண்டியிருக்கிறது.
மும்பையின் தாதாக்கள் எல்லோரையும் ஒழித்துவிட்டதாகவும், இனி மும்பை
தாதாக்களின் ஆக்கிரமிப்பு இல்லாத ஊர் என்றும், இனி ஒரு தாதா மும்பையில் காலெடுத்து வைக்க முடியாது என்று சூளுரைக்கிறார் சிட்டி கமிஷனர் நாசர். அடுத்த நிமிடம் மகேஷ் ரயிலிருந்து மும்பை மண்ணில் காலடியெடுத்து வைக்கிறார். மகேஷின் மும்பைக்கு வந்த காரணமே ஒரு பெரிய டானாக உருவாவதற்காகத்தான் என்கிறார். ஏன்? எதற்கு? எப்படி ஆகிறான் என்பதை வெள்ளித்திரையில் பார்த்துக் கொள்ளுங்கள்.

மும்பையின் தாதா ஆவதுதான் தன் குறிக்கோள் என்றதுமே அட என்று ஒரு பரபரப்பான திரைக்கதைக்கு தயாராகிறோம். அடுத்தடுத்து அவர் செய்யும் சில காரியங்களில் லாஜிக் இடித்தாலும் சுவாரஸ்ய பின்னலாய் காட்சிகள் தொடர, சட்டென போலீஸ் கமிஷனரின் மகளைத்தான் தான் காதலிக்கப் போவதாய் சொல்லி, அதற்கான முஸ்தீப்புகளில் இறங்கும் காட்சி மேலும் நம்மை சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கு கொண்டு போக, தாராவியின் மொத்த பேங்க் கடனையும் பத்து நாட்களில் ஒழிப்பதாய் சபதமிட்டுவிட்டு, தன்னை ஒரு பெரிய தாதாவாய் ஷாயாஜி ஷிண்டேயிடம் சொல்லிக் கொண்டு தன் கேங் மூலமாய் அவர் எதிர்காலத்தை நிர்மூலமாக்க இருந்த ஆளை ஜெயிலில் போட்டு தள்ளி டானாக உருவெடுக்கும் வரை தீப்பொறி பறக்கிறது. ஆனால் அதற்கு பிறகு வரும் காதல் எபிசோட், 35,000 கோடி ரூபாய் செலவு செய்து தனியொரு மனிதனாய் எலக்ஷனை நடத்துவது என்று பில்டப், பில்டப் என்று ஏத்திவிட்டு மிகைப்படுத்துதலின் உச்சமாய் போய் வெடித்து சிதறுகிறது.

மகேஷ்பாபுவின் ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் தான் படத்தை முழுக்க, முழுக்க, காப்பாற்றுகிறது. மனுஷன் சும்மா அதகளப்படுத்துகிறார். ஓப்பனிங் காட்சியில் அடிப்பார்வை பார்த்தபடி பேசுவதும், காதலிக்க வேண்டிய பெண்ணிடம் ரிவர்ஸில் ரியாக்ட் செய்யுமிடமாகட்டும், ஷாயாஜி ஷிண்டேயிடம் வேலையை முடித்துவிட்டு என்னை வச்சிக்கோ என்று சொல்லி ஐ லவ்யூ என்று சொல்லுமிடமாகட்டும், ஆங்காங்கே சீரியஸாய் பேசிக் கொண்டிருக்கும் போது சட்டென ஒன்லைனராய் அடிக்கும் நக்கலாகட்டும், ஒரே அடியில் ஆட்களை புரட்டிப் போடுமிடங்களாகட்டும். வாவ்.. மகேஷை பார்க்க பார்க்க விஷுவல் ட்ரீட்தான் ரசிகர்களுக்கு.
காஜல் அகர்வால்தான் ஹீரோயின். குழப்பமான கேரக்டர். இவ்வளவு சீரியஸான கதையில் டெப்த்தான காதல் தான் ரிலாக்ஸ் பாயிண்ட் என்று இயக்குனர் நினைத்திருந்தாலும், மகேஷ் கேரக்டர் ப்ளான் செய்து போலீஸ் கமிஷனர் பெண்ணைத்தான் லவ் செய்து கல்யாணம் செய்து கொள்ள போகிறேன் என்று முடிவெடுத்து காதலிக்க ஆரம்பித்ததால் எடுபடவில்லை. அப்படியல்ல நிஜமாகவே காதல் என்று நிருபிக்க, தன்னை கைது செய்ய அனுமதிக்கும் காட்சியில் முயற்சித்தாலும், அடுத்த காட்சியில் அவரைக் கடத்தியே தன்னை மகேஷ் விடுவித்துக் கொள்வதால் அங்கேயும் பொதேல் என்று வீழ்கிறது எமோஷன். பாடல் காட்சியில் மட்டும் அழகு.
ஷாயாஜி ஷிண்டே, ப்ரகாஷ்ராஜ், சுப்புராஜு என்று ஏகப்பட்ட நடிகர்கள். எல்லோருக்கும் அவரவர் பாத்திரத்திற்கு பொருத்தமாய் நடித்திருக்கிறார்கள். ஆனால் மகேஷின் பாத்திரத்தை உயர்த்திப் பிடிப்பதற்காக இவர்களை அடி முட்டாள் ரேஞ்சுக்கு யோசிக்க வைக்கும் போதுதான் பாவமாயிருக்கிறது. தமனின் இசையில் மூன்றே பாடல்கள் தான். அதில் இரண்டு நிச்சய ஹிட் ரகம். அந்த சார் ஒஸ்தாரா.. பாட்டு செம.. பின்னணியிசையில் தன்னை மீண்டும் நிருபித்திருக்கிறார் தமன். சாம்.கே.நாயுடுவின் ஒளிப்பதிவு தரம். எஸ்.ஆர்.சேகரின் எடிட்டிங் படு ஸ்லீக். டெக்னிக்கலாய் படம் அசத்தல் என்றுதான் சொல்ல வேண்டும்.

எழுதி இயக்கியவர் பூரி ஜகன்னாத். எழுத்தாளராய் வசனங்களில் மனுஷன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். பல இடங்களில் ஒன்லைனர் பஞ்ச் டயலாக்குகளில் கலக்குகிறார். அதேபோல சீரியசாய் பேசும் காட்சிகளில் சொல்லும் சின்னச் சின்ன தத்துவங்களோடு இணைந்த வசனங்கள் கைதட்ட வைக்கிறது. படம் ஆரம்பிக்கும் போது இருக்கும் ஆர்வமும், ஆர்பரிப்பும், இடைவேளைக்குள் வீழ்ந்து க்ளைமாக்ஸின் போது சரி அவ்வளவுதானே என்று தோன்ற வைக்கிறது மிகைப்படுத்தப்பட்ட, லாஜிக் இல்லை என்பது போன்ற விஷயங்களை ஒரு லெவலுக்கு மேல் யூஸ் ஓவர் எக்ஸ்போஸ் செய்ததாலோ என்னவோ அலுப்பூட்டுகிறது. அதே போல காதல் எபிசோட். பெரிய லெட் டவுன். அட்லீஸ்ட் படத்தில் கொஞ்சமே கொஞ்சம் எமோஷனலான விஷயம் என்றால் அது தான். அதிலும் தடாலடியாய் காட்சிகளை வைக்கிறேன் என்று சறுக்கியிருக்கிறார். நடக்கவே சாத்தியமில்லாத கதை என்பதால் அதை பேண்டசியாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. சீரியஸாகவும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. அது மட்டுமில்லாமல் முழுக்க, முழுக்க, மகேஷை வைத்தே திரைக்கதை அமைந்திருப்பதால் அவருக்கு எதிராக யாருமே இருக்க முடியாது என்கிற பிம்பத்தை நிலைநிறுத்த, சின்ன வில்லன்களிலிருந்து, பெரிய வில்லன் வரை மொக்கையாய் இருப்பதால் ஒரு மோதல் கூட இல்லாமல் சப்பென ஆகிவிடுகிறது. மகேஷை சுட சுப்பராஜு துப்பாக்கியை எடுக்க, அதைப் பிடுங்கி, எதிரிகளை சுட்டுவிட்டு, மீண்டும் சுப்புராஜிடமே துப்பாக்கியை லோட் செய்யுமிடம், க்ளைமாக்ஸ் ட்விஸ்ட். ரவுடிகளுக்கு மாத சம்பளம் கொடுத்து அப்பாயிண்ட்மெண்ட் செய்யுமிடம் என்று மகேஷுக்கான பில்டப் காட்சிகளில் வரும் சின்னச் சின்ன விஷயங்கள் சுவாரஸ்ய அதகளம். ஏன் மகேஷ் இந்த முடிவுக்கு வருகிறார் என்பதற்கான காரணத்தை சட்டுபுட்டென சொல்லி நம்மை படு சீரியஸ் ப்ளாஷ்பேக்கிலிருந்து தப்பிக்க வைக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோவாக பூரியின் வசனங்கள் மிளிர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது ஒரு ஸ்டாராங்கான, அல்லது ஒன்லைனர் ஹீயூமர் பஞ்ச் லைன்கள் இல்லாமல் இருக்காது. அதை மகேஷ் வெளிப்படுத்து ஸ்டைல் இருக்கிறதே அது.. தான் படத்தை காப்பாற்றுகிறது. லாஜிக் ஓட்டை, பெரிதாய் கதையில்லை என்ற குற்றச்சாட்டுகளை மீறி படம் சுவாரஸ்யமாய் இருப்பதற்கு காரணம் மகேஷ்.. மகேஷ்.. மகேஷ்பாபு மட்டுமே.
Businessman – Strictly For Mahesh babu fans.
Comments
I am a big fan of MaheshBabu... very Dissapointed ...
இப்படி விமர்சனம் வாசிச்சு படம் பார்த்த மாதிரி ஃபீல் பண்ணிக்க வேண்டியது தான். டைம் மிச்சமாகுது பாருங்க.