Thottal Thodarum

Jan 2, 2012

கொத்து பரோட்டா – 02/01/12


வருகிற 4 ஆம் தேதி மாலை 6 மணிக்கு. என் புதிய சிறுகதை தொகுப்பான “தெர்மக்கோல் தேவதைகள்” புத்தகத்தையும், என்.உலகநாதனின் “நான் கெட்டவன்’ என்கிற இரண்டு குறுநாவல்கள் அடங்கிய புத்தகத்தையும், ‘உ’பதிப்பகம் வெளியிட இருக்கிறது. இடம் டிஸ்கவரி புக் பேலஸ். வழக்கம் போல் அனைவரும் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். புத்தக வெளியீடன்று நண்பர் வாசகர் ஹரி தெர்மக்கோல் தேவதைகள் புத்தகத்தின் அட்டைப்பட டிசைனோடு டி ஷர்ட்டுகளை கொண்டு வருவதாய் சொல்லியிருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்.
####################################


சென்ற ஆண்டில் நம்ம சென்னை டாப் டென்னில் வந்திருக்கிறது. இந்தியா முன்னணியில் இருக்கிறது. எதில் என்று கேட்கிறீர்களா? ஆன்லைனில் செக்ஸ் பற்றிய தேடலில். கூகுள் வெளியிட்டுள்ள இந்த டேட்டாவில் இரண்டாவது, மூன்றாவது, இடங்களில் லக்னோ, கொல்கத்தாவும் இருக்க, எட்டாவது இடத்தில் சென்னை வந்திருக்கிறது. முதலிடத்தில் கொழும்பு வந்திருக்கிறது. எதிலே எல்லாம் டாப்புல வர்றோம் பாருங்க.
############################
CHENNAI NETISENS-2012சென்னை பதிவர்கள், பேஸ்புக், மற்றும் ட்விட்டர்கள் அனைவரும் இணைந்து நடத்தப் போகும் விழாவிற்கு “Chennai Netisens" இணைய கரங்கள் 2012. என்ற பெயரை தெரிந்தெடுத்திருக்கிறார்கள். விரைவில் அவ்விழாவினைப் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும். நிகழ்சிக்கான ஸ்பான்ஸர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள். வருகிற நான்காம் தேதி என் புத்தக வெளியீட்டிற்கு பிறகு விழா பற்றிய கலந்தாலோசனை செய்ய புதிய பதிவர்கள், இளம் பதிவர்கள், மூத்த பதிவர்கள் அனைவரையும் அழைக்கிறோம். வருக.. வருக..
###############################
2010 தை விட 2011ல் இன்னொரு விஷயத்திலும் முன்னணியில் வந்திருக்கிறோம். 10-20 வயதுக்குள்ளாக காணாமல் போகும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை இம்முறை இரட்டிப்பாகியிருக்கிறதாம். பெரும்பாலும் இளம் வயதிலேயே காதல் என்று அலைந்து, பின்பு சதைச் சந்தையில் மாட்டிக் கொண்டு அல்லாடுபவர்கள் தான் இதில் அதிகம் என்கிறார்கள். அப்படியே இம்மாதிரியான பெண் குழந்தைகளை காப்பாற்றிக் கூட்டி வந்தாலும் மீண்டும் அதே தொழிலுக்கே ஏஜெண்டுகள் இழுத்துக் கொண்டு போய்விடுகிறார்களாம்.
######################
இது வரை வெளியான என் புத்தகங்களில் சினிமா வியாபாரம் ஒரு நான்- பிக்‌ஷன். மற்றவையெல்லாம் சிறுகதைகளும், குறுநாவலும் தான். இதிலிருந்து எந்த லிஸ்டிலும் சேராத ஒரு புத்தகம் கொத்து பரோட்டா. நான் - பிக்‌ஷனும் இல்லாமல், பிக்‌ஷனுமில்லாமல் ஒரு விதமான கலந்தடித்த புத்தகம். இந்தப் புத்தகம் பல வித்யாசமான வாசகர்களை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அதுவும் ப்ளாக் என்ற ஒன்றை பற்றி ஏதுவுமே தெரியாத வாசகர்கள்.  அதில் பிரபல இயக்குனர்கள் முதல் ஜஸ்ட் லைக்தட் பெயரைப் பார்த்து வாங்கியவர்கள் வரை. அப்படி சமீபத்தில் பெங்களூரிலிருந்து ஒருவர் என்னை அழைத்திருந்தார்.  என்னுடய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கிச் சென்றதாகவும். ஒரு புத்தகத்தை படித்து முடித்துவிட்டதாக சொல்லிவிட்டு, அஹா ஓஹோ என்று பாராட்டினார். நிறைய தகவல்களை அளித்துள்ளீர்கள். பல விஷயஙக்ள் எனக்கு மிகவும் இன்பர்மேட்டிவாக இருந்தது என்று மாறி, மாறி பாராட்டினார் கொத்து பரோட்டாவை. முக்கியமாய் குறும்பட லிங்குகளையும், அடல்ட் கார்னரையும் பாராட்டிக் கொண்டேயிருந்தார். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான ரசனை.
##############################
ஒரு வித்யாசமான வழக்கு ஒன்றை தொடர்ந்திருக்கிறார்கள். ரவிக்குமார், கார்த்தியாயினி தம்பதிகள். தங்களுடய மகனின் விந்தணுக்கள் மூலமாய் ஒரு பேரக் குழந்தையை பெற்றெடுக்க விந்தணுவை சேகரித்து வைத்திருக்கும் CIMAR விடம் கேட்டால் அவர்கள் தர மாட்டேன் என்றிருக்கிறார்கள். அதை எதிர்த்து இத்தம்பதிகள் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களது மகன் ரித்தீஷ் கடந்த வருடம் ஜனவரி மாதம், அவருடய விரையில் கட்டி வந்து அதனால் இறந்து விட்டார். இறப்பதற்கு முன் அவரது விந்தணுவை சேகரித்து CIMARலில் வைத்திருக்கிறார்கள். தன் மகனின் வாரிசை உருவாக்க எண்ணி வாடகைத்தாயையும் ஏற்பாடு செய்துவிட்ட தம்பதிகள் விந்தணுவை கேட்டபோது ஆஸ்பத்திரி நிர்வாகம் மறுத்திருக்கிறது. ஆஸ்பத்திரி சட்டப்படி, விந்தணுக்களை சம்பந்தப்பட்ட டோனரின் அனுமதியோடுதான் உபயோகப் படுத்த முடியும் என்றும். இதனால் பின்னாளில் பிரச்சனை வர வாய்ப்பிருக்கிறது என்று சொல்கிறார்கள். பார்ப்போம் கோர்ட் என்ன தீர்ப்பை கொடுக்கிறது என்று.
###########################
ஃப்யூஷன்
WoW!!!  என்னா ஒரு ஃப்யூஷன்.. அட்டகாசம்.

################################
ப்ளாஷ்பேக்
தனி மீயூசிக் ஆல்பங்கள் பெரிதாய் தமிழில் எடுபடவில்லை என்றாலும், இந்தியில் பெரிய தலைகள் எல்லாம் ஆளுக்கொரு ஆல்பத்தை வெளியிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஹரிஹரனும், லெஸ்லியும் சேர்ந்து கலோனியல் கஸின்ஸ் என்றொரு ஆல்பத்தை கொண்டு வந்தார்கள்.  கர்நாடக சங்கீதத்தையும், மேற்கத்திய இசையையும், கலந்து கட்டிய ஒரு அற்புதமான ஃப்யூஷனை அளித்து அதில் வெற்றியும் கண்டார்கள். இவர்களது அடுத்த ஆல்பம் அவ்வளவு பெரிய ஹிட் இல்லை. எனக்கு பிடித்த பாடல் அந்த ஆல்பத்திலிருந்து.
######################################
செவிக்கினிமை ???
உங்களுக்கு ஒரு டெஸ்ட் நேற்று பேஸ்புக் பார்த்தவர்களைத் தவிர மற்றவர்கள் கலந்து கொள்ளலாம். இந்தக் கந்தர்வக்குரல் யாருடயது என்று கண்டுபிடிப்பவர்களுக்கு பவர் ஸ்டாரின் ஆனந்தத் தொல்லை படத்தின் ப்ரீமியர் ஷோ டிக்கெட் இலவசமாய் வழங்கப்படும்.
Pitchai pathiram by
#####################################
செவிக்கினிமை நிஜமாவே
தனுஷின் கொலைவெறிக்கு போட்டி என்று சொல்லப்பட்டாலும், கொலைவெறி ஒரு புதிய கலாச்சாரத்தை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்திருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.  அதே விஷயத்தை நம்ம வேட்டை படக் குழுவினரும் பயன்படுத்தினார்கள். அந்த வகையில் சிம்புவின் இந்த காதல் தேசியகீதம் பாடல் இண்ட்ரஸ்டிங். பல மொழிகளில் காதல் என்கிற வார்த்தையை வைத்து பாடலாய் புனையப்பட்டிருந்தாலும், ட்யூனும், அதை படமாக்கிய விதமும் அட போட வைக்கிறது. நிச்சயம் இது கொலைவெறி அளவிற்கு ஒரு க்ரேஸாக போகாவிட்டாலும் பெரும்பான்மையான மக்களின் கவனத்தை பெரும் என்பதில் சந்தேகமில்லை. கிட்டத்தட்ட பத்து லட்சம் ஹிட்ஸுகளை பெற்றிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கேட்காதவர்களுக்காக
#####################################
புத்தாண்டன்று உயிர்மையின் பத்து புத்தகங்களின் வெளியீட்டு விழாவுக்கு போயிருந்தேன். நல்ல கூட்டம். நண்பர் வா.மு. கோமுவின் இரண்டு நாவல்களும், சுப்ரபாரதி மணியனின் நாவலும், சிறுகதையும் இன்ன பிற புத்தகங்களும் வெளியிட்டார்கள். வா.மு.கோவின் நாவலைப் பற்றி பேச, எழுத்தாளர் பாமரனை அழைத்திருந்தார்கள். அவர் வா.முவை குசும்புக்காரர் என்று சொல்லிவிட்டு அவரை விட குசும்பாய் அரங்கத்தையே கலகலக்க வைத்துவிட்டு சென்றார். அபிலாஷின் கால்கள் என்கிற நாவலை பற்றி பேச வந்த பாலாஜி சக்திவேல், எழுதிக் கொண்டு வந்ததை தடுமாறி படித்து உட்கார்ந்தார். ஆனால் இவரின் சினிமா பேசும். ஷாஜியின் இசை பற்றிய தமிழ் புத்தகத்தை பற்றி பேச ஸ்ரீனிவாசை அழைத்திருந்தார். போகும் போது இருவரும் மலையாளத்தில் பேசிக் கொண்டு போனது ஒரு மாதிரியாய் இருந்தது. வழக்கம் போல் எஸ்.ரா. நிறைய தகவல்களுடன் பேசினார். வெளியே நண்பர், பாடலாசிரியர் ஒருவர் என்னை வசைபாடினார். நான் காழ்புணர்ச்சியில் சில பட விமர்சனங்களை எழுதுவதாய். இல்லை என்று சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை. ஆமாம் அப்படித்தான் எழுதுகிறேன் என்றதும்,  எப்படி அவர் கண்டு பிடித்தேன் என்று சொன்னார். அப்படியே ஷாக்காயிட்டேன். அவருடன் தான் அன்று அந்த படத்தை பார்த்தேனாம். அன்று மதியமே விமர்சனத்தை போட்டு விட்டேனாம். மற்ற விமர்சனங்களை எல்லாம் நான் அடுத்த நாளோ, அல்லது இரவிலோத்தான் போடுவேனாம்.  அதித்யா சேனல் விவேக் விளம்பர வாசகம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது.
#####################################

யுடான்ஸ் கார்னர்பதிவர்களுக்காக பதிவர்களால் நடத்தப்படும் யுடான்ஸ் திரட்டிக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு நன்றிகள் பல. இந்திய அளவிலும் அலெக்ஸா ரேட்டிங்கில் பெரும் முன்னேற்றத்தை கொடுத்துள்ளீர்கள். பதிவர்களிடையே உள்ள பல திறமைகளை வெளிக் கொணர யுடான்ஸ் போட்டிகள் பல நடத்தவிருக்கிறது. ஆதி+பரிசல் யுடான்ஸ் சவால் சிறுகதை போட்டிக்கு பிறகு இதோ இன்னொரு போட்டி. புற்று நோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு அமைப்பாய் புதியதாய் உருவானதுதான் நேசம் என்கிற இந்த அமைப்பு. முழுக்க, முழுக்க, பதிவர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஆரம்பித்த இந்த அமைப்பு, புற்று நோய் விழிப்புணர்வுக்காக, கதை, கட்டுரை, குறும்படப் போட்டி நடத்தவிருக்கிறார்கள். வெற்றி பெரும் கதை, கட்டுரைகளை குறும்படமாகவும், ஆவணப்படமாகவும் எடுக்கவிருக்கிறார்கள்.  மேலும் விபரங்களுக்கு இங்கே அழுத்தவும். அப்புறமென்ன.. ஸ்டார்ட் மீசீக்
#########################################
அடல்ட் கார்னர்
ஒரு மனோவசிய நிபுணர் மூன்று பெண்களை க்ரூப் ஹிப்னாடிச முறையில் அவர்களுடய குழந்தைகளுக்கான பெயரை தெரிவு செய்தார்கள் என்று சொல்ல ஆரம்பித்தார். முதல் பெண்ணின் கண்ணை பார்த்ததும் “ நீ ஒரு சாப்பாட்டுப் பிரியை. அதிலும் சாக்லெட் என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் தான் உன் குழந்தைக்கு கேண்டி என்று பெயர் வைத்திருக்கிறாய்” என்றார். அடுத்த பெண்ணைப் பார்த்து “ உனக்கு பணத்தாசை அதிகம். ஒவ்வொரு காசையும் எப்படி சேர்த்து வைப்பது என்று யோசித்துக் கொண்டேயிருப்பாய் அதனால் தான் உன் குழந்தைக்கு “பென்னி” என்று பெயர் வைத்திருக்கிறாய் என்றார். மூன்றாவது பெண்ணை பார்க்க ஆரம்பித்ததும் சட்டென எழுந்து “ நீங்கள் ஒன்றும் சொல்ல வேண்டாம். வாடா டிக் என்று பையனை அழைத்துச் சென்றாள்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

15 comments:

CS. Mohan Kumar said...

வாழ்த்துகள் விழாவில் சந்திப்போம்

Anonymous said...

citizen..netizen. Netisen?

Unknown said...

வாழ்த்துக்கள் தலைவரே...

iniyavan said...

விழா சிறக்க வாழ்த்துகள் தலைவரே!

Philosophy Prabhakaran said...

// புதிய பதிவர்கள், இளம் பதிவர்கள், மூத்த பதிவர்கள் அனைவரையும் அழைக்கிறோம் //

ரொம்ப உஷாரா இருக்கீங்க போல...

என்றும் இனியவன் said...

புத்தக வெளியீடு விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

008 said...

கேபிள் சார் 2011 ல 365 பதிவு. தினம் ஒரு பதிவு. வாழ்த்துக்கள்.

Ba La said...

The singer is - Sankar Narayan

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

நெல்லை கபே said...

என் வலையில்;

மாயன்:அகமும் புறமும்: சினிமாக் கனவுடன் அலைபவர்களுக்கு...! - டைரக்டர் மகேந்திரன்

Ba La said...

வானைத் தொடுமளவிற்கு காதல்.
எகிறி குதித்தால் இடிக்கும் வானம் .
இப்படி எல்லாம் படித்திருக்கிறேன் கேட்டிருக்கிறேன்

முதன் முதலாய் வானத்திலேயே எழுதிச் சொன்னதை பார்த்தேன். here

கிளம்பிடோம்ல... said...

சிம்புக்கு ஏன் இந்த கொலைவெறி?

kalil said...

"வெளியே நண்பர், பாடலாசிரியர் ஒருவர் என்னை வசைபாடினார். நான் காழ்புணர்ச்சியில் சில பட விமர்சனங்களை எழுதுவதாய். இல்லை என்று சொல்லிப் பார்த்தேன் கேட்கவில்லை. ஆமாம் அப்படித்தான் எழுதுகிறேன் என்றதும், எப்படி அவர் கண்டு பிடித்தேன் என்று சொன்னார். அப்படியே ஷாக்காயிட்டேன். அவருடன் தான் அன்று அந்த படத்தை பார்த்தேனாம். அன்று மதியமே விமர்சனத்தை போட்டு விட்டேனாம். மற்ற விமர்சனங்களை எல்லாம் நான் அடுத்த நாளோ, அல்லது இரவிலோத்தான் போடுவேனாம். அதித்யா சேனல் விவேக் விளம்பர வாசகம் தான் எனக்கு நினைவுக்கு வந்தது."///

எதிர்க்க படும் போது தான் உங்களுடைய விமர்சனம் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று தெரியும் .

ranjjan said...

function was good...


kappal raakkaiah is very good


ranjjan

egglesscooking said...

Have you seen this Cable ji?

http://www.youtube.com/watch?v=YQjCYNdzlJQ