Posts

Showing posts with the label paa

Paa – Hindi Film Review

Image
அபிஷேக், அமிதாப், வித்யாபாலன், இளையராஜா, பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் பால்கி என்ற் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அபிஷேக்கும், வித்யாபாலனும் படிக்கிற காலத்தில் காதலிக்க ஆரம்பிக்க, ஒரு சுபயோக சுபதினத்தில் இருவருக்கும் கசமுசா ஆகிவிட அதில் அவர் கர்பமாகி விடுகிறார். அபிஷேக் தன் எதிர்கால பொலிட்டிகல் வாழ்க்கையை நினைத்து கலைக்க சொல்ல, அவரை விட்டு பிரிந்து அந்த குழந்தையை பெற்றெடுத்து வளர்க்க ஆரம்பிக்கிறார்.  அப்படி பிறந்த குழந்தைதான் ஆரோ என்கிற அமிதாப். உலகில் மிக் அரிதான ஒரு பிரஜோரியா என்று துரித மூப்படையும் வியாதியுடம் பிறக்க, அதையும் சமாளித்து தனியாய் வாழும் விதயா, ஆரோவிற்கு அவனின் தந்தை யார் என்று சொல்லாமலே வளர்க்க, அபிசேக்குக்கும் இப்படி ஒரு குழந்தை தனக்கு இருப்பது தெரியாமலேயே, அரசியலில் எம்.பியாகி பரபரப்பாக இருக்க, ஒரு பள்ளியின் பொன்விழாவுக்கு வந்து கலந்து கொண்டு பரிசு தரும்போது ஆரோவை பார்க்க, அபிஷேக்குக்கு த்ன் மகன் தான் என்று புரிந்து கொண்டாரா? ஆரோவுக்கு என்ன ஆயிற்று? அவன் தந்தையுடன் சேர்ந்தானா? வித்யாபாலனுடன் அபிஷேக் சேர்ந்தாரா ? என்று கதை போகிறது. படத்தில் நம் மனதை ஒட...