Posts

Showing posts with the label enthiran film review

எந்திரன்

Image
சில ஹாலிவுட்  பெரிய பட்ஜெட் படங்களை பார்க்கும் போது தமிழில் இம்மாதிரி படங்கள் வராதா என்று ஏங்க வைக்கும், அந்த  ஏக்கத்தை போக்க வந்திருக்கும் படம் தான் எந்திரன். தமிழ் கூறும் நல்லூலகம் எல்லாவிடத்திலேயும் ரேடியோ, டிவி, மக்கள் என்று பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள படம் படத்தின் கதை என்ன என்பதை உலகறியும். இருந்தாலும் ஒரு சின்ன அறிமுகம் வசிகரன் என்கிற விஞ்ஞானி மனிதனைப் போலவே ஒரு ரோபோட்டை உருவாக்குகிறார். அது ரோபோவாக இருக்கும் வரை பிரச்சனையில்லை.. ஆனால் அதற்கு ஆர்டிபீசியல் இண்டெலிஜெண்டின் மூலம் மனித உணர்வுகளை கொடுத்து சிந்திக்க ஆரம்பித்ததும் வரக் கூடிய ப்ரச்சனைதான் கதை. கடைசியில் நீதி சொல்லி முடிக்கிறார்கள். படம் முழுவதும் ரஜினி, ரஜினி, ரஜினி.. என்று ஒரே ரஜினி மயம்தான். வழக்கமாய் இம்மாதிரியான பெரிய பட்ஜெட் படங்களில் நிறைய கேரக்டர்கள வலம் வரும். இதில் பார்த்தால் மொத்தமே மொத்தம் நான்கு  கேரக்டர்களில் படத்தின் திரைக்கதை ஓடுகிறது. ரஜினி, ஐஸ், ரோபோ ரஜினி, வில்லன். இவ்வளவுதான். வசீகரன் ரஜினியிடம் தெரிகிற முதிர்வு, சிட்டி ரோபோவை பார்க்கும் போது தெரியவில்லை..  அவ்வளவு சு...