Posts

Showing posts with the label பதிவுலகம்

பதிவாயிரம் -1000

பாண்ட் டவுன்லோட் இல்லாமல் தமிழில் இணையதளம் ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி இணையத்தை தேடிய போது அகப்பட்டதுதான் வலைப்பூ உலகம். அப்படி முதல் முதலாய் படித்தது அந்நாளைய இணைய உலக பிரபலமான லக்கிலுக்கின் பதிவுதான். அவர் சைக்கிள் கற்றுக் கொண்டதை பற்றி எழுதிய ஒரு கட்டுரையை படித்துவிட்டு அவரின் மின்னஞசலுக்கு எழுதினேன். அப்போது தோன்றிய விஷயம்தான் வலைப்பூ ஆரம்பிப்பது என்று. ஆனால் அதற்குள் தமிழில் நாடகம்.காம் என்கிற பெயரில் இணையதளத்தை ஆரம்பித்தேன். அப்போது எனக்கு டிசைனிங்கில் உதவியவர் இன்றைய பிரபல பதிவர் ஹாலிவுட் பாலா. அப்போது வெறும் பாலாதான். அவர் பாதி டிசைனிங்கிலிருந்த போது எஸ்கேப்பாகிவிட,(அப்போது காணாமல் போனவரை கண்டுபிடித்து கொடுத்ததும் இந்த இணையம்தான்)  ஒரு மாதிரி தட்டுத் தடுமாறி நானே டிசைனிங்கை முடித்து ஒரு ஆறு மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். அது ஏன் என்பது தனிக் கதை.

புத்தகக் கொண்டாட்டம்

Image
ஆம் கொண்டாட்டம் தான். டிசம்பர் வந்து விட்டால் எப்படி சங்கீத சீசன் ஆரம்பித்துவிடுமோ அது போல புத்தக கண்காட்சியையொட்டி புதிய, பழைய, சமகால எழுத்தாளர்களின் புத்தகங்களும் வெளியாக ஆரம்பித்துவிடும். அவ்வகையில் வலைப்பதிவர்களின் அடுத்த கட்ட வளர்ச்சியாக அவர்களின் எழுத்து புத்தக வடிவில்  அதிகம் வெளியாவதும் இம்மாதத்தில் தான். அவ்வகையில் இம்மாதம் நம் சக பதிவர்களின் நூல் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. சுரேகா மிக இனிமையாக பழக்கக்கூடிய நண்பர். பல விஷயங்கள் அறிந்த சுய புத்திக்காரர். சந்தித்த மறு நிமிட மனதில் பச்சக்கென ஒட்டிக் கொள்ளும் புரிந்துணர்வு கொண்டவர். சுவாரஸ்யமான எழுத்துக்கு சொந்தக்காரர். இவரின் முதல் நூலான “நீங்கதான் சாவி” என்கிற தன்னம்பிக்கை நூலை நாகரத்னா பதிப்பக உரிமையாளரும், பதிவருமாகிய குகன் வெளியிடுகிறார். அனைவரும் வந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறேன். இடம்: டிஸ்கவரி புக் பேலஸ் நேரம் : 4.30 மணி, தேதி:25.12.10 நர்சிம் இவரை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பிரபல பதிவர், ஏற்கனவே அய்யனார் கம்மா எனும் சிறுகதை தொகுதி வெளியிட்டவர். தமிழின் பால் ஈடுபாடு கொண்டவர். நல்ல...

பின்னூட்டம் வாங்கி பிரபல பதிவராவது எப்படி?

பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதறவங்க, பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை.  ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து. பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பத...

சுந்தர், ரோசா, மற்றும் சில அனானிகளூம்

என்ன பிரச்சனை என்று தெரியாமல் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன், அதுவும் நமக்கு தெரிந்தவர் என்றது எவ்வளவு பதை பதைக்கும், அந்த பதைபதைப்போடு நானும் சுகுணாவும் ஓடினோம். புருனோவிற்கும் போன் செய்ய, அவருக்கு முன்பே சிவா சொல்லிவிட்டதால் அங்கே வார்டுக்குதான் போய் கொண்டிருப்பதாகவும், உடனே வாங்க என்றார். அங்கே சுந்தர் இருந்த நிலையை கண்டதும் கொஞ்சம் ஆடித்தான் போனேன். சட்டை, பேண்ட் எல்லாம் ரத்தம், ஒரு அரை கண் திறப்பு, ஒரு பக்கம் ஸ்லைன் ஏற்ற ஸ்டாண்ட் இல்லாததால் சுந்தரின் நண்பர் ஒருவர் தன் கையை ஸ்டாண்டாய் வைத்து  நிற்க, புருனோவிடம் தனியே அழைத்து என்னவென கேட்ட போது, ஓண்ணுமில்லை ஹி இஸ் ஓகே. என்றதும் தான் நிம்மதி அடைந்தேன். முடிந்தால் இவரை வெளியே கூட்டி போங்கள் என்ற ஒருவரை காட்டினார் அவரை சுகுணா வெளியே கூட்டி வர, தலையில் அடித்து கொண்டார், அழுதார், என்னோட கில்டி கான்சியஸ் என்னை கொன்றுவிடும் என்றார். நான் தான் அடித்தேன் என்றார். எனக்கு புரிந்தது அதுதான் ரோசா என்று. மேலும் அவரை அங்கே இருந்தாலும் நன்றாக இருக்காது என்று அவரை ஜி.எச்சுக்கு வெளியே கூட்டி போய் நிற்க வைத்து வி...

பதிவுகளை விகடன் படிக்கிறது..?

Image
குறுகிய காலத்தில் 75,000 ஹிட்ஸுகளை கொடுத்து, மேலும் ஆதரிக்கும் வாசகர்களுக்கும், பதிவர்களுக்கும் நன்றிகள் பல கோடி.. விகடன் தமிழ் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறது என்பதை பதிவுலகத்திலிருந்து வாரம் ஒரு பதிவை அறிமுகபடுத்துவதிலிருந்தே எல்லோருக்கும் தெரியும். பதிவர்கள் எல்லோரும் விகடன் தங்களை கவனிக்கிறது என்பதை பற்றி பெருமிதபட்டு கொண்டு மகிழ்ந்தார்கள். அதிலும் விகடன் பெயரிட்டு வெளிவரும் பதிவுகளில் உண்மையிருந்தால் அதை வாசகர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து உடனடியாய் தவறை களையவும் செய்திருக்கிறது என்பது நிதர்சன உண்மை. அப்படி வாசகர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கும் விகடன் ஏன் பெரும்பாலான வாசகர்களின் உணர்வை, எண்ணத்தை, மதித்து ஏன் விகடனை பழைய வடிவிலேயே கொடுக்க கூடாது..? நீங்கள் என்னவோ இளைஞர்களை டார்கெட் செய்து வடிவமைத்து இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கிறீர்கள். இளைஞர்களான எங்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை. உங்களுடய புதிய வடிவமைப்பால் நெடுங்கால வாசகர்களை, விகடனை தங்கள் வாழ்கையின் ஒரு அங்கமாய் நினைக்கும் வாசகர்களை நீங்கள் இழந்து விட்டீர்கள். உதாரணமாய் என்னிடம் விகடனை கையில் கொடுத்து புத்தகம் படிக...