Thottal Thodarum

May 31, 2012

துரோகம்


DRRR___Blaming_you_by_lehananமிக சீரியஸாய் பெட்டுக்கு எதிரில் இருந்த எல்.சி.டியில் “எஃப்” டிவியை சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான் சிவா. கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சட்டென அடுத்த சேனலை மாற்ற… நைட்டியில் வந்த பூஜா ஒரு செகண்ட் அவனை நிறுத்தி நிதானமாய் பார்த்துவிட்டு, ஏதும் பேசாமல் அவனருகில் படுத்தாள். ஒரு வாரமாய் அப்படித்தானிருக்கிறாள்.

May 29, 2012

மதுவிலக்கும் - காந்திய மக்கள் இயக்கமும்.

இந்த வார்த்தையை ஆட்சியில் இருக்கும் கட்சி, எதிர்கட்சி இவர்களைத் தவிர எல்லோரும் அவ்வப்போது எடுக்கும் ஆயுதம். பெரும்பாலும் அதை ஆயுதமாய் உபயோகிக்காமல் அந்த வாரத்தை கழிப்பதற்காகவும், பத்திரிக்கைகளில் தங்கள் பெயர் அடிபடவும் தான் இதை உபயோகிப்பார்கள். முக்கியமாய் டாக்டர் அய்யா இந்தப் பதத்தை அடிக்கடி உபயோகிப்பார். ஆனால் இவரது மாநாடு நடக்கும் ஏரியாக்களில் அன்றைய தினம் அருகில் இருக்கும் டாஸ்மாக்குகளில் ஸ்டாக் தீர்ந்து போகும் அளவிற்கு குடித்து கும்மாளமிட்டு விட்டுச் செல்பவர்களும் இவர்கள்தான். டாக்டரும் அவ்வப்போது கடைக்கு பூட்டு போடப் போகிறேன், போராட்டம் நடத்தப் போகிறேன் என்று வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை விட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறாரே தவிர தீயாய் வேலை செய்வார் என்று பார்த்தால் அப்படி ஏதும் நடக்க மாட்டேன் என்கிறது. 

சுமார் பதினாராயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாய் கொடுக்கும் தொழிலை எந்த ஒரு அரசாங்கமும் இழக்க விரும்பாது, அரசுக்கு நிலையான வருமானம் என்பது இத்தொழிலினால் மட்டுமே வரும் பட்சத்தில், இப்பணம் அவர்களின் இலவச, விலையில்லா அயிட்டங்களுக்கு உபயோகப்படுவதுமாய் இருக்கும் காலத்தில் எந்த அரசு மதுவிலக்கை நம்பும், செயல்படுத்தும். இன்றைய காலகட்டத்தில் மதுவிலக்கு ஒத்துவருமா என்று குடும்பத்தில் உள்ள பெரியவர்களே கேட்கும் அளவிற்கு குடிக்கும் கலாச்சாரம் ஊடுருவியிருக்கும் காலத்தில் முடியும் என்று நம்புகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான்.  

மதுவிலக்குக்காக வருகிற 2ஆம் தேதி அன்று இம்பீரியல் ஓட்டலில் மாநாடு நடத்தவிருக்கிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். வைகோ, தா.பாண்டியன் போன்ற தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.  வெறும் மதுவிலக்குப் பற்றிய கருத்துக்களோடு இல்லாமல், மதுவிலக்கு அமல் படுத்தினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டமான பதினாராயிரம் கோடி வருமானத்தை இழக்காமல் எப்படி அமல் செய்வது என்ற அறிக்கையோடு களம் இறங்குகிறார். இதுதான் இந்த மாநாட்டின் சுவாரஸ்யம்.

சினிமா கதை விவாதத்தின் போது நிறைய உதவி இயக்குனர்கள் கதையின் போக்கு சரியில்லை என்றால் உடனடியாய் அதை சரியில்லை என்று சொல்லி ரிஜெக்ட் செய்பவர்கள் தான் அதிகம். அப்படி செய்யும் போது அதற்கான மாற்றை சொல்லாத அந்த உதவி இயக்குனரை இயக்குனருக்கு பிடிக்காமல் போய்விடும். அதே நேரத்தில் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு மாற்றாகவோ, அல்லது ஈடாகவோ ஒரு விஷயத்தை சொல்பவர்களின் கருத்தை இயக்குனர் எடுத்து அதை செம்மைப்படுத்துவார். அது போல அரசுக்கு அதனுடய வருமானம் இழப்பு இல்லாமல் மதுவிலக்கை அமல் படுத்தும் திட்டத்தோடு நடக்கவிருக்கும் இந்த மதுவிலக்கு மாநாடு நிச்சயம் எல்லார் கவனத்தையும் கவரும் என்று நினைக்கிறேன். மதுவிலக்குக்கு நான் ஆதரவா? நீ ஒழுங்கானவனா? என்ற கேள்வியையெல்லாம் தாண்டி ஒரு நல்ல முயற்சிக்கு நம்மால் முடிந்த ஆதரவை கொடுப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்ற எண்ணத்தில் இம்மாநாட்டிற்கான ஆதரவை முன் வைக்கிறேன்.

மதுவிலக்கு மாநாடு
இடம் : ஹோட்டல் இம்ப்ரீயல்
நேரம் : காலை 8 மணி
தேதி : 02/06/12

கேபிள் சங்கர்


Man On A Ledge

நியூயார்க் நகரத்தின் முக்கியமான ரூஸ்வெல்ட் ஓட்டலின் உயர்ந்த மாடிகளைப் நிமிர்ந்து பார்த்தபடி ஒர் இளைஞன் அதற்குள் நுழைக்கிறான். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாகவும், ஹெப்பாகவும் இருப்பவன்.தனக்கென ஒர் அறையை எடுத்துக் கொண்டு மிக சாவதானமாய் அந்த அறையின் கதவுகளை திறந்து எட்டிப்பார்க்கிறான். அறைக்குள் அவன் தொட்ட எல்லாவற்றையும் கைரேகைகளை அழித்துவிட்டு, ஒரு சின்ன பேப்பரில் “நான் ஒரு அப்பாவி. குற்றமற்றவன்” என்று எழுதிவிட்டு, ஜன்னல் கதவை திறந்து கொண்டு முப்பதாவது மாடியின் விளிம்பிலிருந்து கீழே குதிக்க தயாராகிறான். இது தான் படத்தின் முதல் காட்சி. அரைத்தூக்கத்தில் படத்தைப் பார்க்க ஆரம்பித்த நிமிடங்களில் தூக்கம் கலைக்க வைத்த ஓப்பனிங் சீன்.

May 28, 2012

கொத்து பரோட்டா -28/05/12

பெட்ரோல்
கடந்த இரண்டு நாட்களாய் சென்னையெங்கும் டீசல் தட்டுப்பாடு இருந்தது. நேற்று பெட்ரோலும் தட்டுப்பாடு. இருக்கிற பல பங்குகளில் ரேஷன் முறையில் ஆளுக்கு இத்தனை லிட்டர் என்று போட்டுக் கொண்டிருந்தார்கள். கடந்த ஒரு மாதமாகவே ஹெச்.பி பங்குகள் அடிக்கடி கடையை சாத்திக் கொண்டிருந்துதான் இருந்தார்கள். கேட்டால் சப்ளையில்லை என்று. இதன் பின்னணியில் ஏதோ ஒரு சதியிருப்பதாகவே படுகிறது. சென்னை மாநகரில் தான் இப்படி இருக்கிறது. இதைப் பற்றி இன்றைய செய்தித்தாள்களில் பெரிதாய் ஏதும் செய்திகள் வந்ததாகவும் தெரியவில்லை. நேற்று சென்னையின் புறநகரான கூடுவாஞ்சேரியில் பெட்ரோலோ, டீசலோ மிக சாதாரணமாக கிடைக்கும் போது சென்னைக்கு மட்டும் என்ன பிரச்சனை?
@@@@@@@@@@@@@@@@@@@

May 27, 2012

இஷ்டம்

ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை நாயகனாய் வலம் வந்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் ஒரு படம் அவருடயது வெளியாகும். பின்னர் அவ்விடத்தை கொஞ்சம் ரவிச்சந்திரன் நிரப்பினார் என்று நினைக்கிறேன். ஆனால் இன்றைய டெபிசிட் விழுந்திருக்கும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் அளவிற்கு படம் நடிக்கும் நடிகர்களே இல்லாத பட்சத்தில் அவ்விடத்தை நிரப்ப வந்துள்ளார் நம் விமல். கலகலப்பு வந்து ரெண்டு வாரத்திற்குள் அடுத்த படமான இஷ்டம் வெளிவந்திருக்கிறது.

May 26, 2012

Gabbar Singh

தொடர்ந்து எத்தனை தோல்விகளைக் கொடுத்தாலும் இன்றைக்கும் அட்டகாசமான ஓப்பனிங்கை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருப்பதில் இவருக்கு இணை வேறு யாருமில்லை. சமீபத்திய தெலுங்குப் பட ரெக்கார்டுகளையெல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டதாகவும், இந்தப்படம் வைக்கப் போகும் ரெக்கார்டை மகேஷ் பாபு முறியடிப்பாரா என்றெல்லாம் இப்போதே ஆந்திராவில் செம பெட்டிங் ஓடிக் கொண்டிருக்கிறதாம். எனக்கும் இவரின் ஒவ்வொரு படத்தையும் பார்த்து பார்த்து நொந்து போனாலும் இவரின் பவர்புல்லான ஸ்கீரின் ப்ரெசென்ஸில் மயங்கி அடுத்த படத்துக்கு தயாராகிவிடுவேன். அப்படி தயாராகிப் பார்க்கப் போன படம் தான் நம்ம தெலுங்கு தல பவர் ஸ்டார் பவன் கல்யாணின் கப்பர் சிங்.

May 25, 2012

Department

ராம் கோபால் வர்மா எதை எடுத்தாலும் கண்ணை மூடிக் கொண்டு, இதற்கு முன்னால் வந்த படங்களைப் பற்றியெல்லாம் யோசிககாமல் படம் பார்ப்பவகளில் நானும் ஒருவன். அப்படித்தான் இந்த படத்திற்கும் போனேன். இப்படத்தின் காண்டர்வஸிக்கெல்லாம் மீறி ராம் கோபால் வர்மா ஆங்காங்கே தன் இம்ப்ரஷனை கொடுக்கத்தான் செய்திருக்கிறார்.

May 24, 2012

விரைவில்....

புதிய நாமகரணத்தோடு

May 21, 2012

கொத்து பரோட்டா 21/05/12

முதல்வன் பட இண்டர்வியூ போல சி.என்.என் - ஐ.பி.என் டிவி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறியிருக்கிறார் மம்தா அக்கா. கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவர்கள் தொடர்ந்து ஜெய்தேவ் கார்டூன் ப்ரச்சனையை பற்றியும், அவருடய மாநிலத்தில் பெண்கள் மீது நடக்கும் அராஜகங்களையும், போலீஸாரின் நடவடிக்கைப் பற்றியும், சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்தும் தொடர்ந்து கேள்வி கேட்க, கடுப்பாகிப் போன மம்தா பாதி நிகழ்ச்சியில் சட்டசபையில் வெளிநடப்பு நடப்பது போல வெளியேறியிருக்கிறார்.  போகிற போக்கில் அம்மாதிரியான கேள்வி கேட்டவர்கள் எல்லாம் மாவோயிஸ்ட் தீவிரவாத மாணவர்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார். நிகழ்ச்சியை நடத்திய சகாரிகா கோஷ் எவ்வளவோ அவர்கள் மாவோயிஸ்ட் அல்ல, இந்திந்த யூனிவர்சிட்டியிலிருந்து வந்திருக்கும் மாணவர்கள் என்று விளக்கம் அளித்துள்ளார். அதற்கு அப்படியே இருந்தாலும், அவர்கள் மாவோயிஸ்ட் மாணவர்கள்தான் என்று காச்சு காச்சு என்று கத்திவிட்டு போயிருக்கிறார். இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் நம்மூர் அரசியல்வாதிகள் எல்லாம், பப்ளிக் கலந்து கொள்ளும் டிவி நிகழ்ச்சிகளுக்கு போவதில்லை. அப்படி மட்டும் மம்மியோ, தாத்தாவோ போய் உட்கார்ந்தால் நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு முதல் கேள்வி மட்டுமே புட்டேஜாய் மிஞ்சும்.
@@@@@@@@@@@@@@@@@@@

May 19, 2012

சாப்பாட்டுக்கடை - ஒரு சோறு

இப்போது சென்னையில் எந்த மூலையில் திரும்பினாலும், செட்டிநாடு ரெஸ்ட்ராண்ட்,  கேரள ரெஸ்ட்டாரண்ட், ஆந்திர ரெஸ்ட்டாரண்ட் என்று மாநில வகையாய் உணவகங்கள் இருக்க, மதுரையின் மணம் கமழும் உணவகம் என்று தனியாய் ஏதுமில்லாதது ஒரு மைனஸாகவே இருந்து வந்த வேளையில் கடந்த நான்கைந்து வருடங்களாய் சக்கை போடு போட்டு வரும் இந்த உணவகத்தைப் பற்றி சொல்லாவிட்டால் நிச்சயம் நல்ல சோறு கிடைக்காது.

May 18, 2012

ராட்டினம்

தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..
தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் அறிமுகமாகும் படமென்றால் ஒன்று காதல் அல்லது வன்முறை இவை ரெண்டைத் தவிர ஏதுமில்லாமல் இருப்பது ஒரு விதத்தில் மொனாட்டனியாய் இருந்தாலும், ராட்டினம் என்கிற பெயரே என்னை இன்ஸ்பயர் செய்தது. புது நடிகர்கள், டெக்னீஷியன்கள் ரெட் ஒன் டிஜிட்டல் கேமரா என்று புத்தம் புதிய டீம். இம்மாதிரி படங்கள் தான் வாரத்திற்கு மூன்று வருகிறதே என்று நினைத்த நினைப்பில் இல்லை நாங்கள் வேறு என்று நம்மை நிமிர்ந்து உட்கார வைத்திருக்கிறார்கள். அதனால் தானோ என்னவோ படம் பர்ஸ்ட் காப்பி ரெடி ஆனதும் பார்த்த விநியோகஸ்தர்கள் அப்படியே நல்ல விலைக்கு பேசி வாங்கியிருக்கிறார்கள்.

May 17, 2012

சாப்பாட்டுக்கடை – MKC

2012-03-10 21.58.56 MKC என்பது மியூசிக்கல் கரோகே கஃபே என்பதன் சுருக்கம். சென்னையில்   செனடாப் ரோட்டில் அமைந்துள்ளது இந்த உணவகம். மிக பாஷான என்விரான்மெண்டோடு, அமைக்கப்பட்ட இந்த உணவகத்தின் ஸ்பெஷாலிட்டி கரோகே.

May 16, 2012

Transit (2012)

தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..
220px-Transit_(2011_film)_poster சமயங்களில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாத சில ஆவரேஜ் படங்கள் நம்மை கவர்ந்துவிடும். ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் ஹெச்.டியில் பார்க்க ஏதாவது படமிருக்கிறதா என்று ஹார்டிஸ்கில் தேடிக் கொண்டிருந்த போது இந்த படம் கிடைத்தது.

May 15, 2012

நான் – ஷர்மி – வைரம் -17

தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..
17 நான்
sharmi 17 ஆம் பெரிய ப்ரச்சனைதான். நானே இழுத்துவிட்டுக் கொண்டது. அவள் அப்படிச் செய்வாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவள் பெயர் நிவேதிதா. கரோலின் என்கிற வெள்ளைக்கார பெண் மூலம் அறிமுகமானவள். கரோலின் ஸ்பெயினில் ஒரு பத்திரிக்கைக்காரி. நிவேதிதாவும் ஒரு பத்திரிக்கைக்காரி என்று எனக்கு தெரியாது. கரோலின் சுவாரஸ்யமான பெண். எவ்வளவோ பெண்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவள் வித்யாசமானவளாயிருந்தாள்.

May 13, 2012

கொத்து பரோட்டா -13/05/12

மும்பையில் ஒரு டைவர்ஸ் கேஸ். தேன்நிலவின் போது காண்டம் உபயோகிக்காமல் உடலுறவு செய்யக்கூடாது என்றும் ஒரு குழந்தையை வளர்க்கக்கூடிய அளவிற்கு பணவசதி வரும் வரை கர்ப்பம் தரிக்க மாட்டேன் என்று சொன்ன மனைவியை விவாகரத்து செய்ய வேண்டி வழக்கு நடந்திருக்கிறது. மேற்கூறிய குற்றச்சாட்டுக்கள் மட்டுமில்லாது தன் குடும்பத்திற்கு ஏற்றார் போல இருக்கவில்லை. அவளின் சம்பளத்தை தன்னுடன் பகிர்ந்து கொடுக்கவில்லை இத்யாதி, இத்யாதி என்று பல விஷயங்களை சொல்லியிருக்கிறார். இது போன்ற நடத்தையெல்லாம் அவளின் மன விகாரம் என்று சொல்லி விவாகரத்து கேட்டிருக்கிறார். நீதிபதி அந்தப் பெண்ணைப் பார்த்து நீ இந்த குடும்பத்தை தேர்ந்தெடுத்திருக்கவே கூடாது என்று நொந்து போய் கூறியிருக்கிறார். பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்றும் பெண்கள் ஒரு பாரமாகவே கருதி ஏதோ திருமணமானால் சரி என்று தள்ளிவிட்டுவிடும் நிலைதானிருக்கிறது என்றும், இனி வரும் காலத்திலாவது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணங்களில் கூட இருவரும் சேர்ந்து பேசி, அவர்களுடய நிதி நிலமை, மற்றும் குடும்ப நிலமைகளை புரிந்து கொண்டு திருமண பந்தத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டிருக்கிறார். பாவம் நீதிபதி அவருக்கு பின்னாடி ஒரு சோகக் கதை இருக்கும் போலருக்கே..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

May 10, 2012

கலகலப்பு @ மசாலாகஃபே


நாளை முதல் வெள்ளித்திரையில் உங்கள் பார்வைக்காக.. கலகலப்பு.. @ மசாலா கஃபே. 
கேபிள் சங்கர்

May 8, 2012

சாப்பாட்டுக்கடை - சேலம் ஆர்.ஆர்.பிரியாணி

முன்பெல்லாம் பிரியாணி என்பது மிலிட்டரி ஓட்டலில் மட்டுமே கிடைக்கும் ஒரு விஷயமாய் இருந்தது சமீப காலங்களில் தெருவுக்கு தெரு ஒரு பிரியாணிகடைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் மேல் இருக்கும் ஓரு ஈர்ப்பையே குறைத்துவிட்டதோ என்று ஒரு புறம் நினைத்தாலும், அந்தக்கடையை தாண்டும் போது வரும் மணம் நம்மை பல சமயங்களில் உள்ளிழுத்து விடுவது தான் நிஜம். அப்படி போய் சாப்பிடும் பிரியாணி பெரும்பாலான நேரங்களில் வாசனையைத் தவிர சிறப்பாக ஏதுமில்லாமல் போகும் போது வெறுப்பாகிவிடும்.

May 7, 2012

என் ட்வீட்டிலிருந்து


என் ட்வீட்டிலிருந்து
உன் மேல் பொறாமை கொண்டவளாய் இருந்தால் உன்னை அரவணைப்பவளும் அவள் தான்.

May 5, 2012

வழக்கு எண் :18/9

vazhakku-enn-movie-preview சில ஈரானிய படங்களைப் பார்க்கும் போது இது போல தமிழில் படங்கள் வராதா என்ற ஒரு ஏக்கம் சின்னதாய் மனதில் ஓடிக் கொண்டேயிருக்கும். இதோ அதை நிவர்த்தி செய்ய வந்திருக்கும் படம்.

May 4, 2012

Dhammu

ntr dhammu wallpapers (1) வர வர தெலுங்கு பட ஹீரோக்களுக்கு ஓப்பனிங் சீன் பிடிக்கவே அங்குள்ள இயக்குனர்கள் மண்டையை பிய்த்துக் கொண்டு அலைவார்கள் போலிருக்கிறது. அப்படியிருக்கிறது இப்படத்தின் ஓப்பனிங் சீன். சிஜியில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு இரண்டு அக்குள், கால் இடுக்கிலும் கட்டி வந்தது போல் கால், கை அகட்டிக் கொண்டே குதித்து, அதே போஸில் டாப், லோ, மிடில் என்று எல்லா ஆங்கிள்களிலும் அங்கிருக்கும் விலை உயர்ந்த காரின் மேல் நின்றால் காரின் பானெட்டிலிருந்து எல்லாம் பாகமும் பிய்த்துக் கொண்டு போய் விழுகிறது. இதைவிட எப்படி ஒரு ஹீரோவுக்கு ஓப்பனிங் சீன் யோசிக்க முடியும். இப்படியாக ஆரம்பிக்கிறது தம்மு.

May 3, 2012

காமம் கொல்


couple sex
அடித்து பிடித்து எழுந்தேன்.  மணி ஆறு ஆகியிருந்தது.     எழுந்த வேகத்தில் பக்கத்தில் படுத்திருந்த கேட்டியை உலுக்கி..” ஏய்.. கேட்டி.. கேட்டி.. வேக் அப்” என்று திரும்ப, திரும்ப உலுக்க, கேட்டி மிகுந்த அயர்ச்சியுடன் எழ, உடலில் பொட்டு துணி கூட இல்லாமல் ஷாம்பெயின் மார்பகத்துடன் நின்று..

May 2, 2012

சத்யம் டிவி லைவ்.

நாளைக் காலை 9 மணி முதல் 10 மணி வரை சத்யம் டிவி நேரடி ஒளிபரப்பில் குறும்படங்கள் பற்றிய ஒரு கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்க உள்ளேன். நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம். உங்கள் தொலைபேசியின் மூலம் கேள்விகள் கேட்டு. உங்கள் பங்கேற்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். நன்றி வணக்கம். 
கேபிள் சங்கர்