மதுவிலக்கும் - காந்திய மக்கள் இயக்கமும்.

இந்த வார்த்தையை ஆட்சியில் இருக்கும் கட்சி, எதிர்கட்சி இவர்களைத் தவிர எல்லோரும் அவ்வப்போது எடுக்கும் ஆயுதம். பெரும்பாலும் அதை ஆயுதமாய் உபயோகிக்காமல் அந்த வாரத்தை கழிப்பதற்காகவும், பத்திரிக்கைகளில் தங்கள் பெயர் அடிபடவும் தான் இதை உபயோகிப்பார்கள். முக்கியமாய் டாக்டர் அய்யா இந்தப் பதத்தை அடிக்கடி உபயோகிப்பார். ஆனால் இவரது மாநாடு நடக்கும் ஏரியாக்களில் அன்றைய தினம் அருகில் இருக்கும் டாஸ்மாக்குகளில் ஸ்டாக் தீர்ந்து போகும் அளவிற்கு குடித்து கும்மாளமிட்டு விட்டுச் செல்பவர்களும் இவர்கள்தான். டாக்டரும் அவ்வப்போது கடைக்கு பூட்டு போடப் போகிறேன், போராட்டம் நடத்தப் போகிறேன் என்று வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை விட்டுக் கொண்டு மட்டுமே இருக்கிறாரே தவிர தீயாய் வேலை செய்வார் என்று பார்த்தால் அப்படி ஏதும் நடக்க மாட்டேன் என்கிறது. 

சுமார் பதினாராயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாய் கொடுக்கும் தொழிலை எந்த ஒரு அரசாங்கமும் இழக்க விரும்பாது, அரசுக்கு நிலையான வருமானம் என்பது இத்தொழிலினால் மட்டுமே வரும் பட்சத்தில், இப்பணம் அவர்களின் இலவச, விலையில்லா அயிட்டங்களுக்கு உபயோகப்படுவதுமாய் இருக்கும் காலத்தில் எந்த அரசு மதுவிலக்கை நம்பும், செயல்படுத்தும். இன்றைய காலகட்டத்தில் மதுவிலக்கு ஒத்துவருமா என்று குடும்பத்தில் உள்ள பெரியவர்களே கேட்கும் அளவிற்கு குடிக்கும் கலாச்சாரம் ஊடுருவியிருக்கும் காலத்தில் முடியும் என்று நம்புகிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் காந்திய மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தான்.  

மதுவிலக்குக்காக வருகிற 2ஆம் தேதி அன்று இம்பீரியல் ஓட்டலில் மாநாடு நடத்தவிருக்கிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். வைகோ, தா.பாண்டியன் போன்ற தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.  வெறும் மதுவிலக்குப் பற்றிய கருத்துக்களோடு இல்லாமல், மதுவிலக்கு அமல் படுத்தினால் அரசுக்கு ஏற்படும் நஷ்டமான பதினாராயிரம் கோடி வருமானத்தை இழக்காமல் எப்படி அமல் செய்வது என்ற அறிக்கையோடு களம் இறங்குகிறார். இதுதான் இந்த மாநாட்டின் சுவாரஸ்யம்.

சினிமா கதை விவாதத்தின் போது நிறைய உதவி இயக்குனர்கள் கதையின் போக்கு சரியில்லை என்றால் உடனடியாய் அதை சரியில்லை என்று சொல்லி ரிஜெக்ட் செய்பவர்கள் தான் அதிகம். அப்படி செய்யும் போது அதற்கான மாற்றை சொல்லாத அந்த உதவி இயக்குனரை இயக்குனருக்கு பிடிக்காமல் போய்விடும். அதே நேரத்தில் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, அதற்கு மாற்றாகவோ, அல்லது ஈடாகவோ ஒரு விஷயத்தை சொல்பவர்களின் கருத்தை இயக்குனர் எடுத்து அதை செம்மைப்படுத்துவார். அது போல அரசுக்கு அதனுடய வருமானம் இழப்பு இல்லாமல் மதுவிலக்கை அமல் படுத்தும் திட்டத்தோடு நடக்கவிருக்கும் இந்த மதுவிலக்கு மாநாடு நிச்சயம் எல்லார் கவனத்தையும் கவரும் என்று நினைக்கிறேன். மதுவிலக்குக்கு நான் ஆதரவா? நீ ஒழுங்கானவனா? என்ற கேள்வியையெல்லாம் தாண்டி ஒரு நல்ல முயற்சிக்கு நம்மால் முடிந்த ஆதரவை கொடுப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை என்ற எண்ணத்தில் இம்மாநாட்டிற்கான ஆதரவை முன் வைக்கிறேன்.

மதுவிலக்கு மாநாடு
இடம் : ஹோட்டல் இம்ப்ரீயல்
நேரம் : காலை 8 மணி
தேதி : 02/06/12

கேபிள் சங்கர்


Comments

Anonymous said…
இதுக்கு சில்டு பியரின் ஆதரவும் உண்டு என்பதை வருத்தத்தோடு வரலாற்றில் பதிவு செய்ய விரும்புகிறேன்...
ha..haa.haa..
கண்ணதாசன் வழி நான் :-))
அரசுக்கு வருமானம் வர மாற்றுவழின்னு என்ன சொல்வார்கள் என ஒரு யூகத்தில் நான் சொல்வது இவையே,

# மணல் வியாபாரத்தை அரசு முறைப்படுத்தினால் கூடுதல் வருவாய்.

#கிரானைட் இன்ன பிற கனிம உரிமங்களையும் முறைப்படுத்த வேண்டும்,

#பத்திரப்பதிவு, முத்திரை தாள் கட்டண மோசடியை தடுக்க வேண்டும்.

# விற்பனை வரி,சேவை வரியை முறையாக வசூலிக்க வேண்டும்.

#ஆக்ரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டு லாபம் தரும் வகையில் பயன்ப்படுத்த வேண்டும்.

# வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வரி சலுகைகளை நீக்க வேண்டும்(இதை தா.பாண்டியன் சொல்வார்)

# மின் விரயம், திருட்டினை தடுத்தால் பணம் மிச்சம் ஆகும்.

# இலவச திட்டங்களை நிறுத்த வேண்டும் (வைகோ சொல்வார்)

இதை எல்லாம் எந்த கட்சி முதல்வராக இருந்தாலும் செய்ய முடியாது ,மாட்டாங்க எனவே கூட்டம் போட்டார்கள் என்பது மட்டும் வரலாற்றில் பதிவாகும் :-))
இது மாதிரியான தகவல்கள் பதிவிலும் . .

சினிமாவை நுழைத்து சுவாரஸ்யமாய்

சொன்னதுக்கு நன்றி . . .


கூட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்
Unknown said…
நல்ல நோக்கம்! எதிர்காலத்திலாவது தமிழருவிமணியன் போன்றோர் தமிழக முதல்வராக வரட்டும்!!
SIV said…
This comment has been removed by the author.
rajamelaiyur said…
பூரண மதுவிலக்கு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே படுகின்றது .. குறைக்கலாம் அறவே ஒழிக்க வாய்ப்பில்லை ..ஆனாலும் ஒரு நல்ல விஷயத்திற்கு ஆதரவு வழகுவதில் சந்தொஷபடுகிறேன்
குகன் said…
Thanks Ji... :)

Program time is Morning 9 AM. Please change.
vikram said…
திடீரென்று இல்லாவிட்டாலும் படிப்படியாக குறைத்து, மதுவிலக்கை அமல் படுத்தலாம். மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்!!
arumayaana pathivu sir
come to my blog www.suncnn.blogspot.com
நல்ல விசயம்...
வரவேற்ப்போம்.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.