Thottal Thodarum

May 17, 2012

சாப்பாட்டுக்கடை – MKC

2012-03-10 21.58.56 MKC என்பது மியூசிக்கல் கரோகே கஃபே என்பதன் சுருக்கம். சென்னையில்   செனடாப் ரோட்டில் அமைந்துள்ளது இந்த உணவகம். மிக பாஷான என்விரான்மெண்டோடு, அமைக்கப்பட்ட இந்த உணவகத்தின் ஸ்பெஷாலிட்டி கரோகே.


2012-03-10 21.21.31
இதை உணவகம் என்று சொல்வதைவிட ஒரு ஹைஃபை காபி ஷாப் போன்ற இளைஞர்களின் ஹப் என்றால் சரியாக இருக்கும். பெரும்பாலும், காபி, மில்க்‌ஷேக்ஸ், பர்கர், சாண்ட்விச், ப்ரெஞ்ச் ப்ரை என்று பெரும்பாலும் ஸ்மால் பைட்ஸாகவே இருக்கிறது. கொஞ்சம் ஹெவி என்றால் பரோட்டா த்ருகிறார்கள். வழக்கமாய் நாம் சாப்பிடும் மைதா பரோட்டா அல்ல, வட இந்திய முறையில் கொடுக்கப்படும் பரோட்டா, ஸ்டப்டு பரோட்டா ஆகியவைகள். படு ஸாப்டாக இருக்கிறது.என்ன தொட்டுக் கொள்ளத்தான் குருமா ஏதும் தர மாட்டேன் என்கிறார்கள். தனியா வாங்கிக் கொள்ள தயார் என்றாலும் இல்லை என்கிறார்கள். வெறும் ஊறுகயும், கெட்டித்தயிரும் தான் சைட் டிஷ். இம்முறையில் சாப்பிட்டு பழகியவர்களுக்கு அருமையான பரோட்டா.2012-03-10 21.21.44 கொஞ்சம் ஹெவியான அயிட்டம் என்றால் ஒரு காம்போ உணவு தருகிறார்கள். புதினா ஜூஸ்,  கப் வெஜிட்டபிள் ரைஸ்,  மசாலா பாப்பட், ஊறுகாய், ஒரு கட்டி ரோல், குருமா, பரோட்டா என்று 90 ரூபாய் சொச்சம் என்று நினைக்கிறேன். குருமா செம டேஸ்ட். பட்.. நோ செகண்ட் அவுட்டிங்.ப்ரெஞ்ச் ப்ரை, சாண்ட்விச்சுகள் நன்றாகவேயிருக்கிறது. பட் பர்கர் அவ்வளவு சுகமில்லை.2012-03-10 21.23.11 இந்த உணவகத்தின் முக்கிய விஷயமான கரோகேவை சொல்ல மறந்துவிட்டேன். ஒரு சிறிய கண்ணாடி அறைக்குள் ஒரு எல்.சி.டி டிவியில் கரோக்கே ட்ராக்குகளை ஒளிபரப்பிக் கொள்ளலாம். அந்த ட்ராக்குகளோடு பாடலாம், ஆடலாம். பெரும்பாலும் ஹிந்தி பாடல்கள்தான் இருக்கிறது. ஒரு ஆளுக்கு முன்னூறு ரூபாய் ஒரு மணி நேரத்திற்கு என்பது அதிகம். பெரும்பாலம் காதல் ஜோடிகள், நண்பர்கள் குழுவாய் ரூமிற்குள் பாடி கும்மாளம் அடிக்கிறார்கள். கண்ணாடி அறை என்பதால் வெளியில் சத்தமில்லாமல் அவர்கள் அடிக்கும் கும்மாளத்தை பார்க்கும் போது நமக்கும் உற்சாக தொற்றிக் கொள்ளூம். சமீபத்தில் நம்ம வாசகர் ஒருவர் தன் காதலியிடம் தங்கள் வீட்டில் அவர்களது காதலுக்கு ஒப்புதல் அளித்து திருமண தேதியை பார்க்க சொல்லிவிட்டார்கள் என்ற சந்தோஷ தகவலை சொல்ல ஏற்ற இடம் சொல்லுங்க என்று கேட்டார். இதற்கு முன் அவர் ப்ரோபோஸ் செய்வதற்கும், வீட்டிற்கு தெரியப்படுத்துவதற்கும் நல்ல இடங்களை சொன்னவன் என்ற வகையில் இந்த இடத்தை சொன்னேன். Really They Enjoyed  என்றார்கள். வாழ்க வளமுடன்.கேபிள் சங்கர்
2012-03-10 21.12.02

Post a Comment

5 comments:

arul said...

nalla arimugam sankar anna

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

கல....கல....கல...கல.....
கலக்கல் .
நீங்கள் ஹோட்டல் ஆரம்பித்தால்
அது எப்படி இருக்கும் !!!!!!!!!!
என் எண்ண வைத்த பதிவு .

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

கல....கல....கல...கல.....
கலக்கல் .
நீங்கள் ஹோட்டல் ஆரம்பித்தால்
அது எப்படி இருக்கும் !!!!!!!!!!
என் எண்ண வைத்த பதிவு .

Nat Sriram said...

ஜுனியர்கள் துறுதுறுன்னு சூப்பர்..

bantlan with love said...

hii.. Nice Post

Thanks for sharing