Posts

Showing posts with the label விஸ்வரூபம்

தமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013

ஜனவரி  ஸ்டியோ க்ரீனின் வெளியீட்டில், லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் வருடக் கடைசியில் வெளிவந்து, ஹிட்டடித்த கும்கியோடு சென்ற வருடம் நிறைவுற்றது. ஆனால் அதே நிறுவனத்திடமிருந்து வெளியான படம் அலெக்ஸ் பாண்டியன். இவர்களின் விநியோக ஸ்டாடர்ஜி நன்றாக இருக்கும் படம் வெளிவருவதற்கு பத்து நாட்கள் முன்னமே ப்ரோமோவில் ஆரம்பித்து தியேட்டருக்கு செல்லும் வரை ஒரு முறையையும், படம் வீழ்ந்தாலும் ஜெயித்தாலும் ஒரே விதமான விளம்பரம் ஹைஃபை கொடுக்கும் முறையையும் பாலோ செய்வார்கள். இது சன் டிவியின் டெக்னிக். எல்லா படத்தையும் ரிலீசாகும் முதல் நாள் இரவே சூப்பர் ஹிட் விளம்பரப்படுத்தும் முறை. ஆனால் அதே போன்ற விளம்பரங்கள் எல்லாம் இருந்தும் அலெக்ஸ் பாண்டியன் பெரும் வீழ்ச்சியடைந்தது. அதே பொங்கலுக்கு வெளியான சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, புத்தகம், சமர் ஆகிய படங்களில் சந்தானம், ராமநாராயணன் மட்டும் நிஜமாகவே ரெண்டாவது, மூணாவது லட்டு எல்லாம் தின்றார்கள். கிட்டத்தட்ட முப்பது கோடிக்கு மேல் வசூல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நான்கிலிருந்து ஐந்து கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் க.ல.தி.ஆசையா?. ச...

விஸ்வரூப தரிசனம்

Image
விஸ்வரூபம் திரைபடத்திற்கு தடை என்று அறிந்ததுமே அஹா.. ஏற்கனவே புக் பண்ண டிக்கெட் போச்சே.. என்ற வருத்தத்தை விட, படம் பார்க்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம்தான் அதிகமாய் இருந்தது. சரி என்னடா செய்யலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போது,  வழக்கப்படி மாநிலம் விட்டு மாநிலம் படம் பார்க்க வேண்டியதுதான் என்ற முடிவோடு, மணிஜியை தொடர்பு கொள்ள நினைத்து போனை எடுக்க, அவர் அழைத்தார். “என்ன தலைவரே.. இப்படி பண்ணிட்டானுங்க?.” என்றதும் நான் ஆந்திரா போகும் ஐடியாவை சொன்னதும் சற்றும் யோசிக்காமல் “எனக்கு தெலுங்கு தெரியாது இருந்தாலும் போய் பார்த்துடுவோம்” என்றவர், “இரு பெங்களூர்ல பிரபு கிருஷ்ணா டிக்கெட் புக் பண்ணித்தரேன்னு சொல்லியிருந்தாரு. அங்க கிடைச்சுதுன்னா தமிழ்லேயே பாக்கலாமே” என்றதும் எனக்கும் ஒர் நப்பாசை சரி என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் ஃபேஸ்புக்கில் பிரபு கிருஷ்ணாவிடம் தொடர்பு கொண்டு , போன் நம்பர் வாங்கி, 25ஆம் தேதி ஆறு மணிஷோவுக்கு டிக்கெட் புக் பண்ணியதை கன்பார்ம் செய்ய, நான், மணிஜி, கே.ஆர்.பி, பபாஷா சங்கர் ஆகியோர் காலை எட்டு மணிக்கு மணிஜி வீட்டில் ஆசெம்பிள் ஆவதாய் முடிவெடுத்தோம். ராத்திரி ...

கொத்து பரோட்டா -28/01/13

சென்னையின் மிக மோசமான கலாச்சாரம் சுவர் கண்ட இடமெல்லாம் போஸ்டர் ஒட்டுவது. அது எந்த இடமாக இருந்தாலும் சரி. போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதற்காக சுவர் முழுவதும் இயற்கை காட்சிகள், நிறைந்த படங்களை வரைந்தால் அதன் மேலும் ஒட்டுகிறார்கள். அனுமதியில்லாத இடங்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று சட்டமிருந்தாலும், அது எப்போது மீறப்படுகிறது என்றால் ஆளூம் கட்சிக்காரர்களே அங்கே போஸ்டர் ஒட்டும் போதுதான். மாநகராட்சியும் அவ்வப்போது அறிக்கை விடுவதோடு சரி. சமீபத்தில் என் வெளிநாட்டு நண்பர் ஒருவர் சென்னை வந்த போது மெட்ரோ ரயில் வேலைக்காக மறைப்பாக வைத்திருக்கும் இரும்பு ஷீட்களில், மெட்ரோ தூண்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டியிருப்பதைப் பார்த்து உங்க அரசாங்கம் இதை கண்டிக்காதா? என்று கேட்டார். கண்டிக்கும் ஆனா கேட்க மாட்டாங்க.. என்றதும் எங்க ஊரில் எல்லாம் அப்படி மீறி போஸ்டர் ஒட்டினால் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உடனடியாய் மிகப் பெரிய ஃபைன் வசூலிக்கப்படும். இங்கேயும் அதை இம்ப்ளிமெண்ட் செய்தால் அரசுக்கு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு, ஊரும் சுத்தமாயிருக்கும் இல்லையா? என்றால் இருக்கும் தான் செய...

விஸ்வரூபம்

Image
சினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் போகிற தியேட்டர்களில் எல்லாம் சாரி சாரியாய் கார்கள். All Roads Leads to Viswaroopam  என்று தான் சொல்ல வேண்டும். சினிமா பார்ப்பதற்காக இத்தனை மெனக்கெடலா? என்று கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் சினிமாவை மூச்சாய் நேசிக்கும் ஒருவரின் படத்தை பார்க்க ஒத்த சிந்தனையுள்ள ரசிகனுக்கு இந்த மெனக்கெடல் ஒன்றும் பெரிதல்ல. இதற்கு முன் மகதீரா பார்ப்பதற்காக ஆந்திராவுக்கும், முங்காரு மலே பார்ப்பதற்காக கர்நாடகாவுக்கும் பயணப்பட்டவன் நான். அப்படி பயணப்பட்டு பார்க்கும் படம் சிறப்பான ஒர் அனுபவமாய் இருந்தால் எத்தனை சந்தோஷமாய் இருக்கும். அப்பேர்ப்பட்ட சந்தோஷத்தை விஸ்வரூபம் கொடுத்தது. இப்பட்த்திற்கான செய்த பயணம் ஒர் அனுபவம். அதை தனியே எழுத வேண்டும்.

கொத்து பரோட்டா -7/01/13

Image
சனி இரவு சுமார் 11.30 இருக்கும் லஷ்மண் சுருதியை தாண்டும் போது அத்துனை ட்ராபிக் சத்தத்திலும் ஒரு பெண்ணின் “வீல்” அலறல். என்னவென்று பார்த்த போது ஒரு ஆட்டோ சுத்தமாய் நசுங்கியிருக்க, அதன் பக்கத்தில் ஒர் நசுங்கிய புல்லட்டோடு கால் உடைந்த வலி பொறுத்தபடி அமர்ந்திருந்த ஒருவர், தலையில் நல்ல அடியுடன், காதோரத்தில் ரத்தம் வழிந்த ஒரு ஐம்பது வயதுக்காரரின் உடல், அவரை மடியில் போட்டுக் கொண்டு, தலையில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி இருந்த ஆட்டோட்ரைவர் வாய் கிழிந்து ரத்தமும் எச்சிலுமாய் வழிந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்க நின்றவர்கள் பல பேர் “போயிருச்சா.. போயிருச்சா” என்று கேட்க, அய்யோ யாராச்சும் காப்பாத்துங்களேன் என்று நம்பிக்கையோடு மேலும் வீல் என்று அலறினால் பெண்மணி. அவளை மினி ஜெராக்ஸாய் உரித்தார்ப் போல், ஒன்றும் புரியாமல் மலங்க, மலங்க விழித்தபடி நிற்கும் பதிமூன்று வயதிருக்கும் பெண் குழந்தை. விபத்து நடந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். போலீஸும் வரவில்லை, ஆம்புலன்ஸும் வரவில்லை. நானும் என் நண்பரும் உடனே 108க்கு போன் செய்துவிட்டு, போலீசுக்கும் சொன்னார்கள்.  போலீஸ் வந்தார்கள். கூட்டம...

விஸ்வரூப செய்தியும் அதன் பின்னணியும்.

விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் ஒளிபரப்ப அனுமதித்தால், அந்தப் படத்தை ரிலீசாகும் அன்றே கேபிளில் 1.  இலவசமாக ஒளிபரப்புவோம் என கேபிள் டிவி உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கேபிள் உரிமையாளர்கள் சங்க 2. மாநில தலைவர் காயல் ஆர்.எஸ்.இளவரசு வெளியிட்டுள்ள அறிக்கை: சில தயாரிப்பாளர்கள் எதிர்மறை விளம்பரங்கள் மூலம் தங்ளுடைய திரைப்படங்களுக்கு பார்வையாளர்களை கவர முயற்சிக்கிறார்கள். அதில் கமலஹாசனின் ‘விஸ்வரூபம்' திரைப்படமும் ஒன்றாகி உள்ளது. 

கொத்து பரோட்டா - 03/12/12

Image
சென்னை மாநகராட்சிக்கு 1900 கோடியை தமிழக முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித் தலைவி, அம்மா அவர்கள் ஒரே ஆண்டில் ஒதுக்கியிருப்பதாகவும், இதே சென்ற ஆட்சியில் 1500 கோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கியதாய் மேயர் அவர்கள் பெருமையாய் அறிக்கை விட்டிருக்கிறார். சென்னையில் உள்ள பல தெருக்களில் குப்பை மலையாய் தேங்கிக் கிடக்கிறது. மழைக்கு முன் போட்ட சாலைகள் அனைத்தும் ஒரே மழையில் மீண்டும் பள்ளதாக்குகளாய் மாறி போய் விட்டது. ஐந்து வருஷத்துக்கு 1500 கோடி செலவு செய்த சென்ற அரசில் இவ்வளவு மோசமில்லை. ஆனால் ஒரே ஆண்டில்1900 கோடி செலவுக்கு  கொடுத்தும் நாறுவது ஏன்? என்று யாராவது அறிக்கை விட்டால் நல்லாருக்கும். @@@@@@@@@@@@@@@@@@@