Thottal Thodarum

Apr 18, 2013

தமிழ் சினிமா ரிப்போர்ட்- காலாண்டு ரிப்போர்ட் -2013

ஜனவரி 
ஸ்டியோ க்ரீனின் வெளியீட்டில், லிங்குசாமியின் தயாரிப்பில், பிரபு சாலமனின் இயக்கத்தில் வருடக் கடைசியில் வெளிவந்து, ஹிட்டடித்த கும்கியோடு சென்ற வருடம் நிறைவுற்றது. ஆனால் அதே நிறுவனத்திடமிருந்து வெளியான படம் அலெக்ஸ் பாண்டியன். இவர்களின் விநியோக ஸ்டாடர்ஜி நன்றாக இருக்கும் படம் வெளிவருவதற்கு பத்து நாட்கள் முன்னமே ப்ரோமோவில் ஆரம்பித்து தியேட்டருக்கு செல்லும் வரை ஒரு முறையையும், படம் வீழ்ந்தாலும் ஜெயித்தாலும் ஒரே விதமான விளம்பரம் ஹைஃபை கொடுக்கும் முறையையும் பாலோ செய்வார்கள். இது சன் டிவியின் டெக்னிக். எல்லா படத்தையும் ரிலீசாகும் முதல் நாள் இரவே சூப்பர் ஹிட் விளம்பரப்படுத்தும் முறை. ஆனால் அதே போன்ற விளம்பரங்கள் எல்லாம் இருந்தும் அலெக்ஸ் பாண்டியன் பெரும் வீழ்ச்சியடைந்தது. அதே பொங்கலுக்கு வெளியான சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, புத்தகம், சமர் ஆகிய படங்களில் சந்தானம், ராமநாராயணன் மட்டும் நிஜமாகவே ரெண்டாவது, மூணாவது லட்டு எல்லாம் தின்றார்கள். கிட்டத்தட்ட முப்பது கோடிக்கு மேல் வசூல் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். நான்கிலிருந்து ஐந்து கோடிக்குள் தயாரிக்கப்பட்ட படம் க.ல.தி.ஆசையா?. சமர் விஷால், திரிஷா கெமிஸ்ட்ரி அது இது என்று சொல்லி விளம்பரப்படுத்தியும், ஒர்க்கவுட் ஆகவில்லை. டிவி நடிகர், தொகுப்பாளர் விஜய் ஆதிராஜ் இயக்கத்தில் வெளிவந்த புத்தகம் வந்த சுவடு தெரியாமல் போனது.  விஸ்வரூபம் வெளிவருவதாய் இருந்த அதற்கு தடை அது இது என்று உச்சப் பட்ச கலாட்டக்களின் நடுவே சத்தமேயில்லாமல் விவேக் நடித்து வெளியான பத்தாயிரம் கோடி படமும் வீழ்ந்தது.
சூப்பர் ஹிட் : கண்ணா லட்டு தின்ன ஆசையா?

பிப்ரவரி
மணிரத்னத்தின் கடல், விக்ரம், ஜீவாவின் நடிப்பில் வந்த டேவிட், சர்சைக்களிடையே வெளியான விஸ்வரூபம், வேந்தர் மூவிஸ் வனயுத்தம், விமலின் சில்லுனு ஒர் சந்திப்பு, ஹரிதாஸ், அமீரின் ஆதி பகவன் மற்றும் பல படங்கள் வெளிவந்த மாதம். மணிரத்னத்தின் கடல் பெரிய அளவில் உள்வாங்கி, ஜெமினி, மணிசார், கும்கியின் மூலமாய் லாபம் சம்பாதித்த திருப்பதி ப்ரதர்ஸ் உட்பட பல விநியோகஸ்தர்களின் டவுசரை அவிழ்த்த படமாய் ஆனது. தொடர் தோல்வியில் இருக்கும் விக்ரம், ஜீவா ஆகியோர் டேவிட் படத்தை தமிழில் வெளியிடவே அனுமதித்திருக்க கூடாது. அவர்களது கேரியரின் மேலும் ஒர் டெண்டை ஏற்படுத்தியது டேவிட். வேந்தர் மூவீஸின் வனயுத்தம் பல சர்சைகளை எல்லாம் தாண்டி வெளிவந்தாலும் குறிப்பிட்ட அளவு சலசலப்பைக் கூட ஏற்படுத்தாத அளவில் சென்சார் விளையடியிருந்ததால் கவன ஈர்ப்பு கூட இல்லாமல் போய் விட்டது. விமல் தனியாள் படத்தை தோளில் தூக்கிச் சுமந்த படங்கள் எடுபடாமல் போகும் ட்ரெண்ட் சில்லுனு ஒர் சந்திப்பிலும் தொடர்ந்தது. டாக்டர் ராம்தாஸின் தயாரிப்பில் வெளிவந்த ஹரிதாஸ் திரைப்படம் விமர்சகர்களாலும், ரசிகர்களாலும் பாராட்டுப் பெற்ற படம். ஆனாலும் வசூல் ரீதியாய் வெற்றிப் படமாய் அமையவில்லை. காரணம் படத்தின் பட்ஜெட். இம்மாதிரியான படங்களை இரண்டு கோடி ரூபாய் தயாரிப்பில் எடுக்கப்பட்டிருதாலும் இவ்வளவு பாராட்டுக்களுக்கும் அங்கீகாரத்திற்கும் இப்போது வசூல் செய்ததே லாபகரமானதாய் அமைந்திருக்கும் ஏழு கோடி போட்டு, லாபம் சம்பாதிக்கும் அளவிற்கு கண்ணா லட்டு தின்ன ஆசையா போல கருத்தாழமிக்க படமாய் இல்லாததால் வெகுஜன ரசிகர்களின் ஆதரவு கிடைகக்வில்லை. ஏகப்பட்ட பிரச்சனைகளோடு வெளியான் விஸ்வரூபம் உலகமெங்கும் தமிழ் தெலுங்கு ஹிந்தி என ரவுண்டு கட்டி சுமார் 250 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருப்பதாய் சொல்கிறது விநியோகஸ்தர்கள் உலகம். அமீரின் ஆதிபகவன் 14 கோடியில் தயாரிக்க ஆரம்பிகக்ப்பட்டு சுமார் 30 கோடிக்குள் இரண்டு வருடங்களாய் தயாரிப்பில் இருந்த படம். அமீரின் கேரியரில் மிகப் பெரிய தோல்விப் படமாய் அமைந்தது.
சூப்பர் ஹிட் : விஸ்வரூபம்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மார்ச்
ஒன்பதுல குரு, பரதேசி, வத்திக்குச்சி, மறந்தேன் மன்னித்தேன், கண் பேசும் வார்த்தைகள், அழகன் அழகி, சென்னையில் ஒர் நாள், கேடி பில்லா கில்லாடி ரங்கா மேலும் பல சிறு முதலீட்டுப் படங்களும் வெளிவந்த மாதம். ஒன்பதுல குரு படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் லாபக்ரமான படமாய் அமைந்தது. வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் ரசிகர்களுக்கும் அப்படி சொல்ல முடியவில்லை. பவர் ஸ்டார் இருந்தால் படம் ஓடிவிடும் என்கிற மித்தை இப்படம் உடைத்துவிட்டது. ப்டத்தைப் பற்றிய விமர்சனங்கள் மோசமானதாய் இருந்தாலும் நல்ல ஓப்பனிங் கிடைத்த படம். பாலாவின் பரதேசி வழக்கம் போல விமர்சகர்களிடையே மாபெரும் பாராட்டையும், வாதங்களையும் எழுப்பி விட்டது. அதே வழக்கம் போல வசூல் ரீதியாய் லாபமில்லாத படமாய் அமைந்தது. வழக்கமாய் பாலாவின் தயாரிப்பாளர்கள் லாபம் சம்பாதித்ததாய் இதுவரை சரித்திரத்தில் இல்லை. முதல் முறையாய் பாலா என்கிற தயாரிப்பாளர் இப்படத்தின் மூலம் லாபம் சம்பாதித்தார். அதை வாங்கி வெளியிட்ட வகையில் ஜே.எஸ்.கேவுக்கும் லாபம் தான். அவரிடமிருந்து வாங்கியவர்களின் விநியோகதர்கள் தியேட்டர்காரர்கள் பாடுதான் வழக்கம் திண்டாட்டம். சிட்டி, செங்கல்பட்டு ஏரியாவைத் தவிர போட்ட காசு வரவில்லை என்று தான் ரிப்போர்ட். சென்னையில் ஒர் நாள் நல்ல படம் என்ற பாராட்டையும் ஓரளவுக்கு வசூலையும் இணைந்து பெற்ற படமாய் அமைந்தது. ஏ.ஆர்.முருகதாஸின் தயாரிப்பில் வந்த வத்திகுச்சி மக்களிடம் வரவேற்பில்லாமல் போனது.  மீண்டும் வெகுஜன மக்களின் ஆதரவோடு, ஒர் மொக்கை காமெடி படம் ஹிட்டடித்தது என்றால் அது கே.பி.கி.ரங்கா தான். முதல் வார வசூலே எட்டு கோடியை தாண்டி இன்று மூன்றாவது வாரத்தில் பயணித்து சிவகார்த்தியேனின் மார்கெட்டை ஏற்றிவிட்டிருக்கிறது. முதல் வாரம் இருந்த வசூல் அப்படியே தடாலென்று வீழ்ந்து சுமார் 14சியை தொட்டிருக்கும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள். 
ஹிட் :கேடி பில்லா கில்லாடி ரங்கா
ஆவரேஜ் : சென்னையில் ஒர் நாள். 

 கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

Mohammed Arafath @ AAA said...

மீண்டும் வெகுஜன மக்களின் ஆதரவோடு, ஒர் மொக்கை காமெடி படம் ஹிட்டடித்தது என்றால் அது கே.பி.கி.ரங்கா தான்.
apa ithuku munnadi vantha MOKKAI comedy padam ethu? "KALAKALAPU "?

hahahaha

Arun Kumar said...

Boss enna boss KBKR mokka padam nu sollitega..... nenja nakitagaga boss. romba taticalla nakitaga boss... ellarum paka vendia padam.. KBKR...

Unknown said...

Sema mokka padam KBKR. 5 nimisham kuda break ilama pesikitte irukanga. Climax ada da ada ada da. Sami thangamudiyala.

அமர பாரதி said...

தொடர்ச்சியாக தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுத்தினாலும் அடுத்த படத்துக்கு டைரக்டருக்கு அதிக சம்பளம் கொடுக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் மட்டுமே இருக்கும். கொஞ்சம் புகழ் ஏறினால் அவர்கள் இறைவனுக்குச் சமம் இங்கே. அவர்கள் சொல்வதுதான் சொல், எடுப்பது தான் படம். மார்க்கெட் அனலிசிஸ், டார்கெட் ஆடியன்ஸ், ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மென்ட் என்று எதையும் கணக்கிடாமல், நியூமராலஜி படி பெயரை மாற்றி வைத்துக் கொண்டு அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பி பணத்தைக் கொட்டுவதா?

Anonymous said...

பயனுள்ள பதிவு.. நன்றி