Thottal Thodarum

Apr 22, 2013

கொத்து பரோட்டா -23/04/13

இயக்குனர், நடிகர் பார்த்திபன் அழைத்திருந்தார். ஃபேஸ்புக்கில் ஆரம்பித்து தற்கால சினிமாவை வரை மிகச் சுவாரஸ்யமாய் பேசினார். பேச்சின் நடுவே அவருக்கு போன் வர, பேசி முடித்துவிட்டு, எங்கே விட்டேன் என்று நினைவுகளை தட்டிக் கொண்டிருந்த போது எங்கே விட்டேனோ அங்கே சரியாய் ஆரம்பித்தார். செம அப்சர்வேஷன். அவரின் கிறுக்கல்கள் கவிதைகளை ஆடியோ சிடியாய் வெளியிட்டிருக்கிறார். விரைவில் திரைப்படம் இயக்கவிருக்கிறார். சந்தடி சாக்கில் அவரிடம் ஒர் கதை சொன்னேன். நன்றாக இருப்பதாய் சொன்னார். மீண்டும் சந்தித்து பேசுவோம் என்றிருக்கிறார். காத்திருக்கிறேன். மனுஷனுக்கு எங்கேயிருந்துதான் விதவிதமான பொருட்கள் கிடைக்கிறதோ.. அவர் வீட்டில் இருந்த கடிகாரம் அட்டகாசம். சில பேரின் குரலில் இருக்கும் வசீகரம் அவர்கள் எது பேசினாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அதுவே சுவாரஸ்யமான விஷயங்களுடனான பார்திபனின் குரலில் என்றால் கேட்கவா வேண்டும். தனிமையான கார் பயணத்திலோ, அல்லது எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் போதோ மெல்லியதாய் ஒர் இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ராஜேஷ் வைத்யாவின் உணர்வுகளை நெகிழச் செய்யும் வீணையிசை மேலும் ஒர் ப்ளஸ்.
@@@@@@@@@@@@@@@@@@@


புத்தகக் கண்காட்சி
சித்திரை திருவிழா என புதிய புத்தக கண்காட்சியை இந்த அரசு துவக்கியிருக்கிறது. பெரும் வரவேற்பு இல்லையென  எல்லோரும் புலம்பினாலும், தொட்ர்ந்து நடத்தப்படும் போது நிச்சயம் வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன். இதே நேரத்தில் பெரியார் திடலில் ஒர் புத்தக கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. நான் எழுதிய புத்தகங்கள், மற்றும் நாகரத்னா பதிப்பகத்தின் புத்தகங்கள் மெரினா பீச்சில் உள்ள சித்திரை திருவிழா கண்காட்சியில் சுபத்ரா புக்ஸ் - ஸ்டால் நெ.87. பெரியார் திடல் கண்காட்சியில் Vizhigal Pathippagam- no.7, Subathra books - no. 56,Nathan Pathippagam- no.60
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இயக்குனர், ஒளிப்பதிவாளர் விஜய் மில்டனின் புதிய பட டிசைனைப் பார்த்ததும் அவருக்கு வாழ்த்து சொல்ல அழைத்தேன். “ஃபீரியா இருந்தா ஷூட்டிங் ஸ்பாட் வாங்க.. நானே உங்களை கூப்பிடணும்னு நினைச்சேன்.” என்றார். கோயம்பேடு மார்கெட்டில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. வாங்க.. வாங்க என்று அழைத்தவர் தன்னிடமிருந்த ஐ போனில் ஒர் வீடியோ பைலைப் போட்டு பார்த்துட்டு சொல்லுங்க.. என்று அவரது படத்தின் ட்ரைலரை பார்க்க சொன்னார். அசத்தும் விஷுவலுடன் விரைவில் பொங்கி வர இருக்கிறது அவரது கோலி சோடா.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
அட்டகத்திக்கு பிறகு கானா பாலாவின் பாடல்களுக்கு மவுசு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து ஹிட்டடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் சேட்டை படத்தில் வரும் பிரேம்ஜி அமரன் பாடும் “நீ தானே” என்கிற் பாடல் படத்தில் பார்ப்பதற்கு விளங்கவில்லை என்றாலும் தனியாய் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. அதே போல உதயத்தில் “ஓரக்கண்ணாலே” பாடலும். பார்பதைவிட கேட்பதற்கு இனிமை.
@@@@@@@@@@@@@@@@@@@@@
 தங்கத்தின் விலை குறைந்தாலும் குறைந்தது எல்லாக் கடைகளிலும் ஹவுஸ்புல் போர்டு மாட்ட வேண்டிய சூழ்நிலை. இப்படி விலை குறைந்ததற்காக எல்லோரும் அடித்து பிடித்து தங்கம் வாங்கினால் மீண்டும் அதிக அளவில் இம்போர்ட் செய்து டிமாண்ட் அதிகரித்து விலை அதிகப்படுத்தத்தான் நாம் ஏற்பாடு செய்கிறோம் என்று தோன்றுகிறது. 
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தெலுங்கில் /தமிழ் என ரெண்டு மொழிகளிலும் ஹிட்டடித்த பாடல். தமிழில் கமல் ஒர் கெஸ்ட் ரோல் செய்திருப்பார். மனிதரில் இத்தனை நிறங்களா? என்று நினைக்கிறேன். ஏற்கனவே சில்கான எஸ்.பி.பியின் குரல் இதில் மேலும் வழுக்கிக் கொண்டு போகும். அவ்வளவு சூப்பர் பாடல். வெகு நாட்கள் இந்த பாடலை ராஜாதான் இசையமைத்திருந்தார் என்று நினைத்திருந்தேன். பின்னாளில்தான் தெரிந்தது ஷியாம் இசையமைத்தது என்று. அருமையான கம்போசிஷன்.

@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
 நிதர்சனமான தொடர்புகள் முறிந்தாலும் நினைவுகள் முறிவதில்லை.
  
மன்னிப்பு என்பதை விட மாற்றிக் கொள்வது உறவுகளை பலப்படுத்தும்.

முகத்துக்கு முன்னால் புகழ்கிறவனை நம்புவதைவிட பின்னால் 
திட்டுகிறவனை நம்பலாம்.

 உன்னை நம்புவது என் முடிவு. அந்த முடிவை எடுத்தற்காக சந்தோஷப்பட வைக்க வேண்டியது உன் பொறுப்பு

 நான் செய்த தவறுகளை வைத்து என்னை நீ கணிப்பாயானால் என் எதிர்காலத்தோடு உடன் வர முடியாது

 it was a nice eve with actor director Parthiban sir

நல்ல குவாலிட்டி லிஸ்ப்டிக்கினால் முத்தத்தின் தரம் கூட வாய்ப்பிருக்கிறது.:)

 Yuvan Rocks in Thillu mullu hiphop, and kai pesi songs. thanks badri sir for the music preview:)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
அடல்ட் கார்னர்
 man and wife in bed reading a book mans hands go to tease wifes pussy wife asks ''u wont sex'' man replies ''no just to wet my finger to turn the page''

Post a Comment

8 comments:

புதுகை.அப்துல்லா said...

எந்தப் பாட்டுன்னு சொல்லவேயில்லை!?

rajamelaiyur said...

//
முகத்துக்கு முன்னால் புகழ்கிறவனை நம்புவதைவிட பின்னால்
திட்டுகிறவனை நம்பலாம்.
//

100% உண்மை சார்

rajamelaiyur said...

இன்று


பதிவர்களுக்காக :அழகிய , எளிய RECENT POST WIDGE

Unknown said...

கொத்து குறைவு தான்

r.v.saravanan said...

ஆம் சங்கர் சார் மனிதரில் இத்தனை நிறங்களா படத்தின் பெயர் எனக்கு பிடித்த பாடல் இது இந்த பாடலுக்காக படம் பார்த்தேன் இந்த படத்தின் இயக்குனர் ஆர்.சி.சக்தி கமல் ஜோடியாக சத்ய பிரியா நடித்திருப்பார்

சந்தடி சாக்கில் அவரிடம் ஒர் கதை சொன்னேன். நன்றாக இருப்பதாய் சொன்னார். மீண்டும் சந்தித்து பேசுவோம் என்றிருக்கிறார். காத்திருக்கிறேன்.

வாழ்த்துக்கள்

Srinivasan C said...

//தனிமையான கார் பயணத்திலோ, அல்லது எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் போதோ மெல்லியதாய் ஒர் இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ராஜேஷ் வைத்யாவின் உணர்வுகளை நெகிழச் செய்யும் வீணையிசை மேலும் ஒர் ப்ளஸ்.//

தகவல் போதவில்லை. எங்கே கிடைக்கும்?

Srinivasan C said...

//தனிமையான கார் பயணத்திலோ, அல்லது எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கும் போதோ மெல்லியதாய் ஒர் இசையை ஒலிக்கவிட்டுக் கொண்டு வேலை செய்பவர்களுக்கு ராஜேஷ் வைத்யாவின் உணர்வுகளை நெகிழச் செய்யும் வீணையிசை மேலும் ஒர் ப்ளஸ்.//

எங்கே கிடைக்கும்?

ஆண்மை குறையேல்.... said...

தல...அது எப்படி..உங்கள கூபிடுரவங்கள...work பண்ற பட directer ...இப்டி மட்டும் பாராட்டி பேசுறீங்க...அது சரி... நீங்களும் இந்த பண உலகத்துல தானே இருக்கீங்க...இதே பார்த்திபன் வித்தகன் முன்னாடி உங்க கிட்ட பேசிருந்தா சினிமா ரிப்போர்ட் ல ஹிட் னு போட்டுருப்பீங்க...
ஹ்ம்ம்...இப்போ கூட நான் ஏன் இத சொல்றேன்னா ...

கேட்டா கிடைக்கும் மட்டும் இல்ல...சொன்னா திருந்துவீங்கனு தான்...