கொத்து பரோட்டா -29/04/13
ஃபோரம் மால்
வருகிற ஒன்றாம் தேதி முதல் விஜயா ஃபோரம் மால் வடபழனியில் திறக்கப்பட உள்ளது என்று அறிவித்திருக்கிறார்கள். மீண்டும் ஒர் மாபெரும் ட்ராபிக் ப்ரச்சனையை வடபழனி சந்திக்க உள்ளது என்றே தோன்றுகிறது. போனிக்ஸ் மால் திறந்ததில் இருந்து வேளச்சேரியில் நடந்து கொண்டிருக்கும் ட்ராபிக் ப்ரச்சனை பற்றி அறிந்திருப்பீர்கள். ஏற்கனவே எதிர்புறத்தில் உள்ள கமலா தியேட்டர் படம் விடும் போதும் ஆரம்பிக்கும் போது ட்ராபிக் பின்னியெடுக்கும், இப்பொது அதற்கு நேர் எதிரே இந்த மால். அதிலும் பத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகள் அமையப் பெற்றிருக்கிறது. அனுமதிப்பதை வடபழனி வழியாகவும், வெளியேறுவதை நூறு அடி ரோடு பக்கமாய் விட்டால் நிச்சயம் பிரச்சனை இருக்காது என்று தோன்றுகிறது. மக்களின் போக்குவரத்துப் பிரச்சனைகளைப் பற்றி கொஞ்சமும் யோசிக்காமல், இவர்கள் பாட்டிற்கு அனுமதி அளித்துவிட்டு, பின்னால் என்ன செய்வது என்று முழி பிதுங்குவதற்கு பதிலாய் முன்னமே கொஞ்சம் யோசித்து அனுமதி அளிக்கலாம். இவ்வளவு யோசனையிலும் ஒர் கிளுகிளூப்பு இருக்கத்தான் செய்கிறது. ஒன்று மொக்கை கமலா தியேட்டருக்கு ஒர் போட்டி. இரண்டாவது நம்ம ஏரியா பக்கத்திலேயே ஒர் ஐமேஸ் தியேட்டர். டிக்கெட் விலையையும், பார்க்கிங் சார்ஜையும் நினைச்சாத்தான் வயத்த கலக்குது.
@@@@@@@@@@@@@@@@@@@@
தமிழ் கலாச்சாரம்
கமல் திவ்யதர்ஷினிக்கு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் முத்தம் கொடுத்தது தான் சமீபத்திய இணைய சர்ச்சை. தமிழ் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டதாம். திவ்யதர்ஷினி கேட்கிறார். கமல் கொடுக்கிறார். அதுவும் கன்னத்தில். இதுல என்ன கலாச்சாரம் கெட்டு விட்டது என்றே புரியவில்லை. தமிழுக்கென்று ஏதேனும் கலாச்சாரம் என்ற எழவு ஒன்று இருந்தால் யாராவது சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்
@@@@@@@@@@@@@@@@
பந்த்
இன்று ஏசி உணவகங்களின் மேல் போடப்பட்ட வரிக்காகவும், சில்லறை தட்டுப்பாட்டினால் அவதிப்படும் ஓட்டல்காரகளுக்கு உதவவும், மற்றும் மேலும் ஒரு ப்ரச்சனைக்காகவும் சென்னையில் மட்டுமில்லாது, இந்தியாவெங்கும் எல்லா உணவகங்களும் பந்த் நடத்தவிருக்கிறது. காலை 6 முதல் மாலை 6 வரை வெளியே சுற்றும் ஆட்களுக்கு இன்றைய பொழுதுக்கு ஏதேனும் பார்சல் கட்டி எடுத்துக் கொண்டு போவது நலம். இல்லையேல் உங்களுக்கு இது நாள் வரை கை கொடுக்காத அம்மா உணவகம் கை கொடுக்கும். அம்மா உணவகம் இன்றைய விற்பனையை எதிர்பார்த்து அதிக அளவில் உணவுகளை தயாரித்து வைக்க வேண்டும். இல்லையேல் கஷ்டம் தான். இன்னொரு விஷயம் அம்மா உணவகம் சில ஏரியாக்களில் ஆரம்பித்த சூட்டோடு நடத்தப்படாமல் இருப்பதாய் தகவல். சைதையில் இன்று மதியம் ஒரு உணவகம் மூடப்பட்டிருந்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
நாடக விமர்சனம்
வருடங்களுக்கு பிறகு நாடகத்திற்கு போயிருந்தேன். பாரதி மணி சாரின் நடிப்பில் நம்ம தலைவர் சுஜாதாவின் “கடவுள் வந்திருந்தார்” நாடகத்தை இரண்டு நாள் நிகழ்த்தியிருந்தார்கள். பதிவுலக நண்பர்களான பத்மஜா நாராயணன், தினேஷ் ஆகியோரும் நடித்திருப்பதால் கூடுதல் ஆர்வத்துடன் நாடகத்திற்கு சென்றேன். ஏற்கனவே படித்து, எப்போதோ ஒரு முறை என் அப்பாவுடன் பூர்ணம் விஸ்வநாதன் நடித்து பார்த்த நாடகம் தான். பாரதி மணி சாருக்கு எழுபது ப்ள்ஸ் வயசாம். மனிதர் மேடையெங்கும் துள்ளி விளையாடுகிறார். ஈஸிசேரில் வைத்து ஆடும் காட்சிகளில் எல்லாம் அவரது எனர்ஜி லெவலைக் கண்டு ஆச்சர்யமாய் இருக்கிறது. பத்மஜாவிற்கு மடிசார் செம பாந்தமாய் இருக்கிறது. நடிக்க பெரிய ஸ்கோப் இல்லாவிட்டாலும், மேடை ப்ரெசென்ஸில் சரியாய் பொருந்தியிருந்தார். தினேஷுக்கு இன்னும் மேடை கான்ஸியஸ் இருக்கிறது. போகப் போக சரியாகிவிடும். “உண்மையை சொன்னேன் பைத்தியம்ங்கிறாங்க. பொய் சொன்னேன் கடவுள்ங்கிறாங்க”.இன்னும் பத்து வருஷம் கழித்து இந்த நாடகத்தைப் போட்டாலும், நாடகத்தில் வரும் வசனங்கள் பொருந்தும் போல. அவ்வளவு சர்காஸ்டிக்கான வசனங்கள். ஹீரோயினாக நடித்தவரின் பூர்வீகம் ஆந்திரா போல செம வாடை. நிறைய புதுமுக நடிகர்கள். அதில் சுந்தராக நடித்தவரின் பாடிலேங்குவேஜ் கவனிக்கத்தக்கதாய் இருந்தது. வேற்று கிரக்கத்திலேர்ந்து வரும் ஆளுக்கு இன்னும் கொஞ்சம் யோசித்து கிரியேட்டிவாய் ஏதாவது செய்திருக்கலாம். என்ன செய்வது செலவாகும் என்பதால் விட்டிருக்கலாசபா நாடகம் என்றாலே பிராமண பாஷை என்றானது ஒரு காலத்தில் ஒர்க்கவுட் ஆகியிருக்கலாம். ஆனால் இன்றைய காலத்திற்கு ஒத்துவருமா? என்று யோசிக்க வேண்டும். அப்படி மாற்றியமைக்கும் போது இன்னும் பெரிய ஆடியன்ஸை சென்றடைய வசதியாய் இருக்கும் என்பது என் எண்ணம். இந்நாடகத்தின் தயாரிப்பாளர் அகமதை பாராட்டி ஆக வேண்டும். ஏனென்றால் நாடகம் போடுவது என்பது இன்றைய காலத்தில் லாபகரமான விஷயமே இல்லை. நாடகம் போட என் அப்பா பட்ட நஷ்டங்கள் நிறைய. பத்து வருடங்களூக்கு முன்னே அப்படியென்றால் இன்றைய நிலையை யோசித்துப் பாருங்கள். இந்நிலையில் தொடர்ந்து நாடகம் போடப் போவதாய் முடிவெடுத்து இறங்கியிருப்பது பாராட்ட பட வேண்டிய விஷயம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டெரர் ட்ரைலர்
சில மாதங்களுக்கு முன் ப்ரசாத் லேப்பில் மலேசிய தமிழ் படம் ஒன்றை பார்கக் கூப்பிட்டிருந்தார்கள். உள்ளே சென்ற போது எங்களை அழைத்த நபர் இருந்தார் போல தெரியவில்லை. நாங்கள் தேடுவதை உணர்ந்த அங்கே அமர்ந்திருந்த குழுவினர் அதை உணர்ந்து “சார்.. இங்கே ஒரு ட்ரைலர் ஸ்கிரீன் பண்ணப் போறோம் விருப்பமிருந்தா பாருங்க” என்றார்கள். வேறொருவரின் நிகழ்ச்சிக்கு வந்துவிட்டோம் என்று “பரவாயில்லை” என சொல்லிவிட்டு வெளியே வந்தோம். உடன் வந்த கே.ஆர்.பி அங்கே இருந்தவரை எங்கயோ பார்த்தா மாதிரியிருக்கு என்று சொல்லிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து எங்களை அழைத்த குழுவினரும் வந்துவிட, நாங்கள் உள்ளே நுழைந்தோம். முன்னாள் உட்கார்ந்திருந்த குழுவினரும் அங்கேயே உட்கார்ந்திருந்தனர். என்னடா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே லைட்டை அமர்த்திவிட்டு படம் போட ஆரம்பித்தார்கள். அது ஒரு ட்ரைலர். மொத்த மூன்று ட்ரைலர். ஒவ்வொரு ட்ரைலரையும் மும்மூன்று தடவை ஒளிபரப்பி அவர்கள் என்னவோ ரசித்துவிட்டுத்தான் சென்றார்கள். ஆனால் உடன் இருந்து பார்த்த நாங்கள் தான் டெரராகிப் போய் இருந்தோம். கே.ஆர்.பி சொன்ன அந்த இயக்குனர் ராஜகுமாரன். ட்ரைலர் திருமதி தமிழ். ட்ரைலரிலேயே என்னை அலுக்க, அலுக்க அடித்து துவைத்தபின் எந்த தைரியத்தில் நான் படம் பார்த்து விமர்சனம் எழுதுவது. அம்பூட்டு தைரியம் எனக்கில்லை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
குறும்படம்
மாயச்சிறகு. இது தமிழ் குறும்படமா? இல்லை தங்கிலிஷ் குறும்படமா? என்றெல்லாம் யோசிக்காமல் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் தமிழில் போல்டான அட்டெம்ட் என்றே சொல்ல வேண்டும். பர்வர்ட்டாக கூட தோன்றலாம். மிகவும் ராவாக எடுக்கப்பட்டிருக்கும் இக்குறும்படத்தில் டெக்னிக்கலாய் நிறைய குறைகள் இருக்கிறது. எடிட்டிங், ஆடியோ, சிங் என்று லிஸ்ட் நீளம். பட் கண்டெண்ட் அதை சரி செய்து விடுகிறது. வாழ்த்துகள் கோபகுமார்

@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
என் ட்வீட்டிலிருந்து
இன்று வெளியான மூன்று தமிழ்படங்களை விட அயர்ன் மேனுக்கு செம ஓப்பனிங்காம்.
வர வர பேஸ்புக், டிவிட்டரில் மற்றும் மாபெரும் வெற்றிப்படமாய் வலம் வரும் படங்கள் அதிகமாகிவிட்டது.:)
காதலர்களாய் இருக்கும் போது முதலிடத்திலும், தம்பதியராய் இருக்கும் போது இரண்டாமிடத்திலும், அன்பும் நெருக்கமும் தள்ளப்படுகிறது.
பெண் தனது கஷ்டங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறாள் என்றாலும் அவள் புலம்புகிறாள் என்று அர்த்தமில்லை. நம்புகிறாள் என்று அர்த்தம்.
prakash release his film gowravam online for 5$ http://tharangamedia.net/prmovies/
நீ என்னை துன்புறுத்தியத்தை போல நானும் செய்ய வேண்டுமென்று நினைத்தாலும் வாய்ப்பு கிடைத்தும் முயல மாட்டேனென்கிறேன். # காதல்
@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
நியூட் காலனியில் வசித்து வந்த ஒருவனின் தாய் அவனுக்கு எழுதிய லெட்டரில் உன் பாட்டி உன்னை பார்க்க ஆசைப்படுகிறாள் எனவே உடனடியாய் உன்னுடய போட்டோவை அவளுக்கு அனுப்பி வை. என்று எழுதினாள். இதை பார்த்த அவன் எப்படி தான் ஒரு நிர்வாணக் காலனியில் இருப்பதாய் பாட்டியிடம் சொல்வது என்று யோசித்து தன் முழுப்படத்தை எடுத்து அதில் மேல் பாகத்தை மட்டும் கட் செய்து அனுப்புவதற்கு தயாரானான். தவறுதலாய் அவனுடய் கீழ் பாகத்தை அனுப்பிவிட்டான். அதை பார்த்த அவனது பாட்டி படத்தைப் பார்த்துவிட்டு “பேராண்டு உன் ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொள். இந்த ஹேர்ஸ்டைலில் உன் மூக்கு ரொம்ப நீளமாய் இருக்கு” என்றெழுதினாள்.
Comments
it is like complaining about shakeela movies and placing all shakeela bath room scene in their articles/blogs and claiming tamil culture got spoiled by shakeela.
//
1000% true