கொத்து பரோட்டா-08/04/13
கேட்டால் கிடைக்கும் குழுமத்திலிருந்த ஒர் நண்பர் எனக்கு போன் செய்து அவருடய ஏரியாவில் ஒர் பிரச்சனை என்றும், அதற்காக போராட வர வேண்டும் என்று சொன்னார். அவரின் பிரச்சனை கார்பரேஷன் மேட்டர். நான் அவரிடம் என் வேலையைப் பற்றி சொல்லிவிட்டு, இதை நீங்களே பார்த்துக் கொள்ள முடியுமென்று எப்படி செய்ய வேண்டுமெனவும் சொன்னேன். அவர் திட்ட ஆரம்பித்துவிட்டார். சும்மா குழு என்று ஆரம்பித்து ஒரு பிரச்சனைன்னா வர மாட்டேன் என்கிறீர்கள் என்றார். அவருக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை. அவர் கோபமெல்லாம் அடங்கியவுடன் இதற்கு முன் இம்மாதிரியான ப்ரச்சனைகள் வரும் போது என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். சற்றே யோசித்து என்ன பண்றதுன்னு புரியாம கேட்காம விட்டிருவேன். என்றார். ஆனா இப்ப மட்டும் ஏன் கேட்கணும்னு நினைக்கிறீங்க? என்று கேட்டேன். இப்போது யோசிக்காமல் அதான் குழுவில் போடும் செய்திகளை எல்லாம் படிக்கிறேன் இல்ல.. கேட்டாத்தான் கிடைக்கும்னு சொல்றீங்க.. அப்படி கேட்டு கிடைச்சவங்க அனுபவங்கள் இருக்கு. அதுக்கும் மேல ஏதாவது சந்தேகம்னா உடனே அதுக்கு என்ன செய்யணுங்கிற் ஆலோசனை கொடுக்கிறாங்க.. அந்த தைரியத்துலதான் கேட்டேன் என்றார். இத... இதத்தான் எதிர்பார்த்தேன். இது வரை எதுக்கு வம்புன்னு யோசிச்சிட்டு இருந்த நீங்க இப்போ கேட்டா கிடைக்கும்ங்கிற நம்பிக்கை வந்திருக்கு இல்லை. இந்த நம்பிக்கைய ஏற்படுத்துவதுதான் எங்கள் குழுவின் நோக்கம். நீங்க போங்க.. கார்பரேஷன் ஆபீசுக்கு போய் கேளுங்க. நிச்சயம் செய்வாங்க.. நாம கேட்கிறதில்லை.. அவங்க செய்யுறதில்லை. கேட்டால் கிடைக்கும் என்றேன். அவருக்கு கிடைத்துவிட்டது.
சமீபத்தில் தயாரிப்பாளர் துவார் சந்திரசேகருடன் ஒரு லொக்கேஷன் பார்ப்பதற்காக ஸ்ரீபெரும்பதூர் வரை சென்றிருந்தேன். மிக சுவாரஸ்யமான டவுன் டு எர்த் மனிதர். டோல் வரும் போது எனக்கு ஏதோ போன் வர, சீரியசாய் போன் பேசிக் கொண்டிருந்த போது டோலைத் தாண்டியதும், என்னிடம் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்து இந்தாங்க சாப்பிடுங்க என்றார். ஏது சார்? என்று கேட்ட போது நீங்க பாக்கலையா? நல்லவேளை இல்லாட்டி சண்டைப் போட்டிருப்பீங்களேன்னு யோசிச்சிட்டிருந்தேன். ஐஞ்சு ரூபாய் சேஞ்ச் இல்லைன்னு எல்லாருக்கும் இதைத்தான் கொடுக்குறான். என்றார். என்ன அநியாயம். சேஞ்ச் இல்லை என்ற காரணத்தைக் காட்டி, சாக்லெட் கொடுத்து நாலணா, ஐம்பது பைசா, என ஆரம்பித்து இன்று ஒரு ரூபாயைக் கூட காணாமல் அடித்துவிட்டார்கள். இதோ அடுத்தது ஐந்து ரூபாய்க்கு பதிலாய் பண்ட மாற்று முறை. வரும் போது சொல்லுங்க சார். நான் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்துட்டு வர்றேன் என்றேன். அவன் நேரம் நாங்கள் அந்த வழியாய் வரவில்லை. ஆனாலும் இதை நிச்சயமாய் கண்டிக்க வேண்டும். ஐந்து ரூபாய் பிஸ்கெட்டின் அடக்கவிலை மூன்று ரூபாய்க்குள் தான் இருக்கும் இரண்டு ரூபாய் லாபம். சில்லறைக்கு பதிலாய் பிஸ்கட் பாக்கெட்டுகளை ஸ்டாக் செய்ய விழைபவர்கள் ஏன் சில்லறையை பேங்கில் போய் வாங்கி வந்து ஸ்டாக் வைக்கக்கூடாது? கேட்டால் கிடைக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நடிகர் திலகம் சிவாஜியின் கர்ணனனை டிஜிட்டல் ரிஸ்டோரேஷன் செய்து ரீ ரிலீஸ் செய்து பெரும் வெற்றி பெற்றவுடன், அடுத்தடுத்து, பாசமலர், வசந்தமாளிகை என்று ஆரம்பித்தார்கள். இரண்டுமே அவர்கள் எதிர்பார்த்த அளவு போகவில்லை. முக்கியமாய் வசந்தமாளிகைக்கு அவர் ரிஸ்டோர் செய்த பிரிண்ட் படு கொடுமை என்றார்கள். அதே போல இப்போது ஹிந்தியில் சஷ்மே பதூர் என்கிற படத்தை டிஜிட்டல் ரிஸ்டோரேஷன் செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதில் செய்தி என்னவென்றால் இதே படத்தை இப்போது சித்தார்த், நடித்து டேவிட் தவான் இயக்கத்தில் ரீமேக்கியதை அதே நாளில் வெளியிட்டதுதான். ஒரே நாளில் ஒரிஜினலும், ரீமேக்கும் வெளியாகியிருந்தாலும், ரீமேக்கிற்குத்தான் மக்களின் வரவேற்பு இருக்கிறது. அதற்கு காரணம் ஒரிஜினல் லிமிட்டெட் ஸ்கிரீனிங்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உன்னை புரிந்து கொள்ள முயற்சிப்பதை விட அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நட்பு
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு பாராட்டுக்க்ள். # கேன்சர் மருந்து விவகாரம்.
அவளின் காதலுக்கு முன் நீ சந்தோஷமாயிருந்தாய் என்றால் அவளின் காதல் இல்லாமலும் சந்தோஷமாய் இருக்கலாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@
கடந்த ஒரு மாதமாய் இந்த பாடல் இணைய உலகில் கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. நேரம் என்கிற படத்தின் பாடல் இது. “பிஸ்தா சோ கிரியா” என்கிற பாடல் வரிகளுக்கு நீங்கள் அர்த்தம் கிடைக்காது. முழுக்க, முழுக்க, அர்த்தமேயில்லாத இந்தப் பாடல் நம்மூர் வழக்கமான குத்துதான் என்றாலும் பாடல் முழுக்க ஒர் இளைமைத் துள்ளல் உண்டு. இப்பாடலுக்கு பின் ஒர் சுவாரஸ்யமான கதையுண்டு. ஏனென்றால் இந்தப் பாடலை எழுதியவர் பிரபல மலையாள நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் என்று போட்டிருப்பார்கள். அதற்கு காரணம் அவர் கின்னாரம் என்கிற படத்தில் ஏதோ வாய்க்கு வந்ததை வார்த்தைகளை வைத்து சொல்ல அது ஹிட்டானது. அதை அடிப்படையாய் வைத்துத்தான் இந்த பாடலை ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் மற்றும் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட இருக்கிறார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
அடல்ட் கார்னர்
Comments
:)
துவாருக்கு பக்கத்து ஊரு தாங்க நமக்கும் . நானும் மிக சுவாரஸ்யமான டவுன் டு எர்த் மனிதன் தான் . ஹா ...ஹா .
// ஐஞ்சு ரூபாய் சேஞ்ச் இல்லைன்னு எல்லாருக்கும் இதைத்தான் கொடுக்குறான். என்றார். என்ன அநியாயம்//
நானும் புலம்பியிருக்கிறேன் இப்புடி http://jeevansubbu.blogspot.in/2013/04/blog-post_4.html