Thottal Thodarum

Apr 28, 2013

யாருடா மகேஷ்?

ட்ரைலர் வெளியீடான அன்றைக்கு பார்த்த மாத்திரத்தில் பற்றிக் கொண்ட படம். தமிழில் ஒரு அடல்ட் காமெடி வரப் போகிறது என்ற நினைப்பே ஆச்சர்யத்தையும், ஆர்வத்தையும் கொடுத்தது. படம் ஏ சர்டிபிகேட் வாங்கியதும் சரி. விட்டு விளையாடியிருக்காங்க போல என்ற நினைப்பை ஏற்படுத்திய படம். அவ்வளவு எதிர்ப்பார்ப்பையும் படம் பூர்த்தி செய்ததா?



தமிழ் சினிமாவின் வழக்கம் போல பொருப்பில்லாத, இலக்கில்லாத காலேஜ் படிக்கும் இளைஞன் சிவா. சிவாவை போன்ற இளைஞர்களை காதலிப்பதையே வழக்கமாய் கொண்டிருக்கும் ஹீரோயின்களில் ஒருத்தியான சிந்தியா. காதல் முற்றி ஒரு நாள் வீட்டில் ஆள் இல்லாத நேரம் பார்த்து சிந்தியா சிவாவை டிபனுக்கு கூப்பிட, அவன் அவளை சாப்பாடாகவெ சாப்பிட்டுவிட்டதால் கர்பமாகிவிடுகிறாள். முடிவு திருமணம். சிந்தியா வேலைக்கு போய் சம்பாதிக்க, சிவா வீட்டில் குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில் அந்தக்குழந்தை அவனுக்கு பிறந்தது இல்லை மகேஷ் என்கிறவனுக்கு பிறந்தது என்று சிந்தியா போனில் பேசுவதை கேட்கிறான். அதிலிருந்து யாரிந்த மகேஷ் என்று தேடி கண்டுபிடிப்பது தான் கதை.
முதல் காட்சியில் திரை முழுவதும் இருட்டாய் இருக்க ஒரு ஆண் “ஏய் கொஞ்சம் காட்டேன்” என்று கெஞ்ச, பெண் குரல் “மாட்டேன்” என்று சொல்வதாய் ஆரம்பித்து , பின்பு அது பரிட்சை ஹாலில் பேப்பரை காட்ட சொன்ன விஷயம் என்று தெரியப்படுத்துவதில் ஆரம்பித்து, டபுள், சிங்கிள் மீனிங்கில் ஆங்காங்கே நண்டு ஜெகன் தூவி விட்டுக் கொண்டேயிருக்க, துண்டு துண்டாய் காமெடி காட்சிகள் படத்தை ஓட்ட நிரப்புகிறது.
சிவாவாக சந்தீப். தமிழில் இவருக்கு முதல் படம். ஏற்கனவே ஷோர் இன் த சிட்டி, மற்றும் நான்கு தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். கேஷுவலாய் இருக்கிறார். நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லாவிட்டாலும், ஸ்க்ரீன் ப்ரெசென்ஸ் ஓகே. சிந்தியாவாக டிம்பிள் ஒரு ஆங்கிளில் நன்றாக இருந்தால் இன்னொரு ஆங்கிளில் மோசமாய் இருக்கிறார். நண்டு ஜெகன் ஆங்காங்கே யூத், சூத், ஆளு.. ..லு.., டக், ப்ரா, ட்யூடை நியூட் என்று உட்டாலக்கடி அடித்து சிரிக்க வைக்கிறார். ஹீரோ போட்ட பாலில் அவருக்கு பூயூஸ் போனதால் குழந்தை பிறக்காமல் இருக்க, ஒரு கட்டத்தில் அவரின் மனைவி கர்பமாகிவிட, சிவாவின் ப்ரச்சனை தெரிந்ததால் அவரிடம் தன் சந்தோஷத்தை சொல்லும் போது “மச்சான் நான் அப்பாவாகப் போறேன். அதுக்கு நான் தான் அப்பான்னு கன்பார்ம் பண்ணிட்டேன்” என்று சொல்லுமிடமும், மகேஷை தேடியலையும் போது ரவுடி சிறுவன் லுல்லாவில் உதை விட, வாயிலிருந்து டூமா கோலி வெளியேறி அதிலிருந்து முட்டை உடைந்து பறவைகள் பறக்கும் காட்சியும் செம காமெடி.
ராணாவின் ஒளிப்பதிவு பாடல் காட்சிகளில் பளிச்சிடுகிறது. கோபிசந்தரின் இசையில் ஓடுவோம். பாடலும், ஏமாத்திட்டா பாடலும் மனதில் நிற்கிறது.  ஏமாத்திட்டா பாடலின் பின்னணியில் செண்டை மேளத்தை வைத்து போட்டிருக்கும் பீஜிஎம் அட்டகாசம்.

கதைக்காக பெரிதாய் மெனக்கெடவில்லை என்றாலும், அட்லீஸ்ட் இம்மாதிரியான படங்களுக்கு திரைக்கதைக்கு யோசித்திருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் துண்டு துண்டாக இருப்பதால் முதல் பாதி முழுவதும் ஏதோ டிவி சிரியலில் காமெடி சீன் பார்த்த இம்பாக்ட். இரண்டாவது பாதியில் மகேஷை தேடியலைவதில் ஒவ்வொரு மகேஷிடமும் படும் பாடுகளில் அரவாணி போல் இருக்கும் ஒரு பெண்ணிடம் மாட்டி அவஸ்தைப் படும் காட்சியைத் தவிர நத்திங் இம்ப்ரசிவ். அதிலும் இவ்வளவு ப்ரச்சனைக்கும் காரணம் ட்ரீட்மெண்ட் என்பது உட்சபட்ச காமெடி. மதன்குமார் இன்னும் கொஞ்சம் பெட்டராய் யோசித்திருக்கலாம். ட்ரைலரைப் பார்த்து ரொம்ப எதிர்பாக்க கூடாது என்பதற்கு இந்தப்படம் ஒர் உதாரணம்.
 கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

Dino LA said...

யாருடா டைரக்டரு?

Anonymous said...

வரவர கதை தேவையில்லை.. காமெடி என்ற பெயரில் எதையாவது சொல்லி, மக்களை சிந்திக்கவே விடாமல் சிரிக்க வைத்து காசு பார்த்தால் போதும், என்று எண்ணும் தமிழ் சினிமா இயக்குநர்களின் போக்கு வருந்தத்தக்கது...