Thottal Thodarum

Oct 17, 2020

நான் ஷர்மி வைரம் - விமர்சனம் -1

 நான் ..ஷர்மி ..வைரம்.. ஆண் விபச்சாரம், கிரைம் என்று ஒரு விறுவிறுப்பான திரில்லர். காமத்தயிரை கடைந்து கொடுத்திருக்கிறார் என்றும் சொல்வோம்

😉 இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா.. மகத்தான வெற்றி பெற வாழ்த்துகிறேன் ..
நன்றி மணிஜி


நான் ஷர்மி வைரம் கிண்டில் வர்ஷன் வாங்க லிங்க் https://amzn.to/2qxcgiF

நான் ஷர்மி வைரம் புத்தகம் அமேசானில் வாங்க https://amzn.to/2P3SSUi


Oct 14, 2020

சாப்பாட்டுக்கடை - அன்னப்பறவை

இக்கடையைப் பற்றி நண்பர்கள் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். சுய்யம் சாப்டேன். பாயசம் சாப்டேன் என்று. அப்படி என்னதான் கொடுக்கிறார்கள் ஒரு நாள் மாலை வேளையில் அன்னப்பறவைக்கு விசிட் விட்டோம். கடையின் அமைப்பேன் கிராமத்துக் கடை போல இருக்க, வரிசைக் கட்டி வைத்திருந்த அயிட்டங்களைப் பார்க்க இன்னும் ஆர்வம் அதிகமானது. முக்கியமாய் மாலையில் அவர்கள் போடு சுக்கு மல்லிக் காப்பி படு பிரசித்தம். போட சொன்ன பிறகு தான் சுக்கு மல்லிப் போட்டு கொதிக்க வைத்துக் கொடுப்பார்கள். நாட்டு சக்கரை மட்டுமே பயன்படுத்துகிறார்கள். 

சுடச்சுட வாழைப்பூ வடையை சுவைக்காமல் வராதீர்கள். கிரிஸ்பி என்றால் அத்தனை க்ரிஸ்பியாய் அதே நேரத்தில் கடுக்கு முடுக்கு என்று கிரிஸ்பியாகவும் இல்லாமல்,  கூடவே தொட்டுக் கொள்ள தினமும், புதினா, மல்லி, பீட்ரூட் என வித்யாசமான சட்னியுடன் கொடுக்கிறார்கள். கூடவே பயறு வெல்லம் போட்ட சுய்யம், உளுத்தம் சுய்யம் என தினமொரு விதமான சுய்யம். வேர்கடலை சுண்டல், உருளை போண்டா என ஆயில் ஒட்டாத டேஸ்டில் அசத்துகிறார்கள். ரெண்டு வடை, ஒரு சுக்கு மல்லி காப்பி சாப்பிட்டால் சுக்கு மல்லியின் காரம் ஏறி சும்மா ஜிவ்வெனெ இருக்கும். கொரானா காரத்தில் நல்ல சூடான இதமான சுக்கு மல்லி காப்பி நல்லது. பயத்தம் உருண்டை, வேர்கடலை உருண்டை, பயறு சுண்டல், பருப்பு பாயசம், தேங்காய் பாயசம் என எல்லா அயிட்டங்களும் வெல்லம் அல்லது நாட்டுச்சக்கரை பயன்படுத்தியே தயாரிக்கிறார்கள். சில நாட்களில் ஒக்காரை எனும் ஒரு அயிட்டம் பழைய கால ஆட்களிடம் கேட்டால் சொல்வார்கள். ஒரு நாள் சாப்பிட்டு பாருங்கள். தரமான நெய்யுடன் சேர்ந்து செய்யப்பட்ட ஒக்காரை அருமையாய் இருக்கும்.



மதியம் கொள்ளு ரசம், போன்ற பாரம்பரிய அயிட்டங்களுடனான சாப்பாடு வெறும் எழுபது ரூபாய்க்கு அன்லிமிட்டெட்.  நான் சாப்பாடு இன்னும் சுவைக்காததால் நண்பர்களின் ரெகமெண்டேஷனை வைத்து சொல்கிறேன் செமையாக இருக்கிறதாம்.

மாலையில் டிபன் வகைகள் தோசை, பீட்ரூட் சப்பாத்தி, இட்லி, அதற்கு என வித்யாசமான குருமாக்கள். சட்னி என வரிசைக்கட்டுகிறார்கள்.  இந்த கொரானா காலத்தில் நிறைய சினிமா தொழிலாளர்கள் உணவகங்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்று முன்பே சொல்லியிருந்தேன். அது போல இக்கடை ஒரு ப்ரொடக்‌ஷன் மேனேஜரின் குடும்பம் ஆரம்பித்திருக்கிறது. அவரின் மனைவியும் அம்மாவும் நம் கண் முன்னே சமைத்து பரிமாறுகிறார்கள்.  நல்ல சுவையான, தரமான, ஆரோக்கியமான உணவு வேண்டுகிறவர்களும், வித்யாசமான பாரம்பரிய உணவுகளை சுவைக்க விரும்புகிறவர்களும் தவறாமல் சாப்பிட வேண்டிய கடை. 

அன்னப்பறவை
காமராஜர் சாலை.
விருகம்பாக்கம்
மேக்கப் யூனியன் அருகில்.


Sep 28, 2020

Forbidden Love - anthology stories from zee5


நான்கு காமத்துடனான காதல் கதைகள். நான்கு பிரபல இயக்குனர்கள். பிரியதர்ஷன் நாயர், பிரதீப் சர்கார், அரிந்தம்ராய் சவுத்ரி, மகேஷ் மஞ்ச்ரேக்கர்.  நான்கு கதைகளில் காதல், காமம், துரோகம், உறவுகிடையே ஆன முரண் என அனைத்தையும் பேசுகிறது. 

அனாமிகா

பிரயதர்ஷனின் இயக்கத்தில் பாண்டிச்சேரியின் பின்னணியில் நடக்கும் கதை. அனுபமா குமாரின் மிக இயல்பான நடிப்பில் கொஞ்சம் க்ளைமேக்ஸ் முன்பே தெரிந்தாலும், சுவாரஸ்யம் குறையாததற்கு காரணம் அனுபமா குமார். அவரின் கண்களில் தெரியும் வெறுப்பு, காதல், சந்தோஷம், எல்லாமே சூப்பர். 

ரூல்ஸ் ஆப் கேம்ஸ்

பிரியாவுக்கும், கவுரவ் குப்தாவுக்கும் திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. பெரிதாய் பிரச்சனையில்லை என்றாலும், திருமண வாழ்க்கையில் பெரும் சுவாரஸ்யமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. தன் வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லாத நாட்களை ஸ்பைஸ் அப் செய்ய விழையும் பல விஷயங்கள் சமூகத்தில் பல பெண்கள் செய்வதே என்பதை உணர்ந்தவர்கள் மிகச் சிலரே.  அதையெல்லாம் மீறி ரோல் ப்ளே ஆட்டம் ஒன்றை ஆடுகிறாள். அது எங்கே கொண்டு போய் விடுகிறது என்பதுதான் கதை. அஹானா குமாரின் நடிப்பு சிறப்பு.அரிந்தம் ராய் சவுத்ரிக்கு முதல் ஓடிடி படம். க்ளைமேக்ஸில் தன் இருப்பை காட்டியிருக்கிறார்.

டைகனைஸிஸ் ஆப் லவ்

ஹர்ஷ் குமார் பிரபல சர்ஜன். அவனின் பர்சனல் வாழ்க்கையில் ஒர் கரும்புள்ளி இருக்கிறது. அதை மீறி டாக்டர் சுதா அவளின் ஆஸ்பிட்டலில் சர்ஜனாய் சேர்க்கிறாள். அவனின் அபார திறமை அவளை இம்ப்ரஸ் செய்கிறது. அவளது வயதான கணவன் வைபவுக்கு பிரச்சனையாகிறது. அவருக்கு உதவ வருகிறான் ஏசிபி ஆதித்யா. ஹர்ஷ்க்கும் சுதாவுக்குமிடையே நெருக்கம் உண்டாக என்னவாகிறது என்பதுதான் கதை. மகேஷ் மஞ்ச்ரேக்கரின் வழக்கம் போல டார்க் வகை கதை. மிக சுலபமாய் கையாண்டுள்ளார். ரைமா சென்னின் நடிப்பு பெரிதாய் சோபிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

அரேஞ்ச்ட் மேரேஜ்

ஹோமோ செக்ஸுவல் காதலர்கள். சமூகத்தின் அழுத்தம் தாங்காமல், திருமண பந்தத்தில் கியாவுடன் இணைகிறான். மெல்ல அவளுக்கு தெரிய வருகிறது தன் கணவனின் செக்ஸுவல் பிரச்சனை குறித்து. அதுவும் தன் தம்பி முறை இருக்கிறவனுடன் எனும் போது அதிர்ச்சி மேலோங்குகிறது. ஹோமோ செக்ஸுவாலிட்டி ஒரு வியாதி என்றும் நம்பும் சைக்காட்ரிஸ்டிடம் கூட்டி செல்கிறாள். பின்பு என்னவானது என்பது தான் கதை. கியாவின் மேல் செக்ஸுவல் ஆர்வம் வரவில்லை என்பதற்காக அவளை வளர்ந்த ஆண்டி ப்ராத்தல் வீட்டிற்குள் அழைத்துப் போய் அனுபவ பாடம் படிக்க வைக்கும் இடங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரீம் ஆனாலும், அந்த ஆண்டியின் கேரக்டரை வடிவமைக்க வைக்கப்பட்ட காட்சிகள் .செம்ம. ப்ரதீப் சர்காரின் இயக்கம். கொல்கத்தாவின் தெருக்கள். ஏரியல் ஷாட்கள் எல்லாமே என்கேஜிங்

கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒர் அந்தாலஜி.

Sep 26, 2020

Crack Down - Hindi Web Series Review

 

shootout at lokanwala படத்தின் இயக்குனர் அபூர்வ லக்கியாவின் முதல் வெப் சீரீஸ். பேமிலி மேனின் வெற்றிக்கு பிறகு ஏகப்பட்ட சுவாரஸ்ய ரா உளவுத்துறை சம்பந்தமான கதைகள் இந்தியில் சிறப்பாகவே வர ஆரம்பித்திருக்கிறது. இந்த க்ராக்டவுனும் அதில் ஒன்று என்று சேர்க்கலாம். சிக்ஸ்பேக்கில் இறுக்கமான முகத்துடன் சமயங்களில் ரா தலைமைக்கே போன் போடு, அவனை பிடி என்று உத்தரவு கொடுக்கும் அளவுக்கான டாமினெண்ட்  சாகுப் சலீம், கொஞ்சம் ராஸ் பட அலியா பட் கேரக்டரின் சாயலில் வரும் ஷிரியா பில்கனோகர்,  

ராவுக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அரசியல். சட்டப்படி நடவடிக்கையை மீறி செயல் படும் ராவுக்கும் டைரக்டர் ஆப் ஆப்பரேஷனுக்குமிடையே நடக்கும் உள் புகைச்சல்கள். பாகிஸ்தானிய தீவிரவாதிகள். முஸ்லிம் ஏரியாக்களில் ஊடுருவும் பெண் தீவீரவாதிகள். கொலை செய்வதற்கு முன் நமாஸ் செய்துவிட்டு போகும் தீவிரவாதிகள் என எல்லா தீவிரவாதக் கதைகளுக்குண்டான அத்தன விஷயங்களும் இதில் இருக்கிறது. 

சிந்தன் காந்தியும், சுரேஷ் நாயரும் இணைந்து எழுதியிருக்கும் இந்த சீரீஸுக்கு இவர்கள் தந்த டீடெயிலிங் எத்தனை முக்கியமோ, அதே அளவுக்கு இதை படமாக்கியதில் இயக்குனர் அபூர்வ லக்கியாவுக்கும் பங்கிருக்கிறது. சமீபகாலமாய் நிறைய இந்தி சீரீஸ்களில் மலையாள எழுத்தாளர்களின் பங்கு அதிகமாய் இருப்பதையும் பார்க்க முடிகிறது. 

முதல் எபிசோடிலிருந்தே நம்மை எங்கேஜிங்காக வைத்திருக்கிற மேக்கிங். சுவரஸ்யமான கேரக்டர்கள், எபிசோடுக்கு எபிசோட் வரும் ட்விஸ்டுகள் என எல்லாம் இருந்தாலும் பல விஜயகாந்த் கால லாஜிக் மீறல்களை பற்றி யோசிக்காமல் பார்த்தீர்களானால். நிச்சயம் நல்ல ஆக்‌ஷன் திரில்லர்.க்லைமேக்ஸை இன்னும் கொஞ்சம் அழுத்தமாய் வைத்திருக்கலாம்.  vootல் வெளியாகியிருக்கிறது. 


shootout at Lokhandwala is the first web series of the film's director Apurva Lakia. After the success of Family Man, interesting Raw intelligence-related stories are starting to come out well in Hindi. Let's add this crackdown as one of them. Dominant Zakub Saleem, who in a six-pack with a tight face at times calls the RAW leadership and orders him to catch up, Shriya Bilkanogar, who comes in the shades of Alia Bhatt character in Raaz,

Politics inside and outside Raw. Internal squabbles between Raw and the Director of Operations over illegal action. Pakistani extremists. Female extremists infiltrating Muslim areas. It has all the hallmarks of extremist stories, including the extremists who perform namaz before killing.

Co-written by Sindhan Gandhi and Suresh Nair, director Apurva Lakia is credited with filming the series as much as the detailing they gave to the series. I can also see that the role of Malayalam writers has been increasing in a lot of Hindi series in recent times.

The making that keeps us engaging from the very first episode. Interesting characters, everything from twists to episodes to episodes though if you haven't thought about the many Vijaykanth term logic violations. A good action thriller. Climax can be a little more stressful. has been released in voot.


Sep 22, 2020

Alive - Netflix Movie



கேமிங், இண்டர்நெட், ஆன்லைன், டெக்னாலஜியில் ஆழ்ந்து மூழ்கிய டீன் இளைஞன் ஒரு தூங்கி எழுந்திருக்கும் போது, வீட்டில் அப்பா, அம்மா, தங்கை என யாருமில்லை. கடைக்கு போய் வருவதாய் சிட் எழுதி வைத்து போயிருக்கிறார்கள். வீட்டின் வெளியே ஒரே ஆரவாரம். என்னவென்று பார்த்தால் மக்கள் ஜோம்பிகளாய் மாறி ஒருவரை ஒருவர் கடித்து சுவைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளியே போன குடும்பத்துக்கு என்ன ஆனது? இவன் எப்படி இருபது நாட்களுக்கு மேலாக சர்வைவ் ஆகிறான்?. எது அவனை சர்வைவ் செய்ய வைத்தது? தப்பினானா இல்லையா என்பதுதான் கதை. 

தனியறையில் மாட்டிக் கொண்ட இளைஞன். அவனது தவிப்பு. குழப்பம். டெக்னாலஜியின் பயன் மூலமாய் அறிய முற்படுவது, எதிரே ஏதோ நம்பிக்கை. நம்பிக்கையின்மை, தனியே ஒரு பெண். அவளுடனான நட்பின் மூலமாய் ஏற்படும் வாழ்க்கையின் வெளிச்சம். தப்பித்தல். என எல்லா டெம்ப்ளேட்களுடனான ஜோம்பி படம். பட் ஒன்னரை மணி நேரம் போனது தெரியவில்லை. காரணம் கிட்டத்தட்ட கோவிட் நாட்களில் தனிமையில் மாட்டிக் கொண்டவர்களோடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டால் சுவாரஸ்யம் குறையவில்லை. டைம் பாஸ் கொரியன் படம். 

Sep 21, 2020

எம்மி அவார்டை வாங்கிய ஆப்பிள் சீரீஸ்



சென்ற வருடம் நவம்பர் மாதம் ஆரம்பித்த ஓடிடி தளம் ஆப்பிள் +. ஆப்பிளின் ப்ளாட்பார்ம்களிலும், செட்டாப் பாக்ஸ் மூலமாய் மாதம் 5$க்கு மிகத் தரமான படங்களையும், சீரீஸ்களையும் வழங்கி வருகிறது. மார்னிங் ஷோ, டிபண்டிங் ஜேக்கப், மனோஜ் நைட் ஷியாமளனின் சர்வர்ண்ட் என வரிசைக் கட்டி சிரீஸ்கள் இருக்க, கோவிட் பாண்டமிக் நேரத்தில் டாம் ஹாங்ஸின் இயக்கம் மற்றும் நடிப்பில் வந்த “க்ரே ஹவுண்ட்’ எனும் திரைப்படத்தை சுமார் 100 மில்லியன் கொடுத்து நேரிடை வெளியீடு வேறு செய்து பெரும் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. 

இவர்களின் தயாரிப்பான மார்னிங் ஷோ எனும் சீரீஸில் நடித்த கோரி எலிசன் என்கிற கேரக்டரில் நடித்த பில்லி கோட்ரப்புக்கு சிறந்த துணை நடிகருக்கான எம்மி விருதை பெற்று இருக்கிறது. ஆரம்பித்து ஒன்பது மாதங்களில் 16 நாமினேஷன்களை பெற்று ஒரு விருதையும் பெற்று இருக்கிறது ஆப்பிள் +டிவி

Sep 20, 2020

Dolly Kitty Aur Woh Chamakte Sitare - Hindi Film Review

 Lipstick under my burka  பட இயக்குனர் அலங்கிரிட்டாவின் அடுத்த படம். இந்தப்படமும் முந்தையை படம் போலவே போல்ட். டோலியும் கிட்டியும் ஒன்று விட்ட சகோதரிகள். டோலிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள். அதில் ஒரு குழந்தை பெண் தன்மையுடன் இருக்கிறான். டோலிக்கும், அவளது கணவனுக்குமிடையே செக்ஸ் என்கிற சம்பவம் ஒன்று நடந்து இரண்டு வருடத்துக்கு மேலாகிறது. காரணம் அவளின் ப்ரோசன் யோனியும், மனநிலையும். கிட்டி பிகாரிலிருந்து வரும் டோலியின் சகோதரி. டோலியின் கணவனின் அப்யூஸ் நடவடிக்கை காரணமாய் தனியாய் ஹாஸ்டல் பிடித்து வாழ ஆரம்பிக்கிறாள். அவளின் வாழ்க்கை, அவளின் வேலை ரொமான்ஸ் ஆப் செக்ஸ் டாக் வேலை, அதன் பின்னான காதல், அதனால் ஏற்படும் மன உளைச்சல் என இரண்டு பெண்களின் சமகால வாழ்க்கையை சொல்லியிருக்கிற படம் தான் இந்த டோலிகிட்டி அவுர் ஓ சமக்த்டே சித்தாரே.

கொங்கனா சென் அத்தனை இயல்பான நடிப்பு. ஆரம்பக் காட்சியில் டோலியிடம் கிட்ட அவளின் கணவன் தன்னை தவறாக தொடுகிறான் என்று சொல்ல்லும் போது காட்டும் ரியாக்‌ஷனிலேயே நான் கொங்கனா செண்டா என்று கொடி ஏற்ற ஆரம்பித்துவிடுகிறார். அவருக்கும் கணவருக்குமிடையே இருக்கும் நெருக்கம், ப்ரோசன் எமோஷன் காரணமாய் நடக்காமல் இருக்கும் செக்ஸுவல் உறவு. டெலிவரி பாயுடனான நெருக்கம், அதனால் ஏற்படும் குழப்பம். சிறுவயதிலேயே தன்னுடய சுய விருப்பத்துகாக தங்களை விட்டு வெளியேறிய அம்மாவிடம் காட்டும் வெறுப்பு. அவளுக்கும் டோலிக்குமிடையே நடக்கும் கேள்வி பதில் காட்சிகள் எல்லாம் க்ளாஸ். அதே நேரத்தில் தன் யோனி ப்ரோசன் இல்லை என்று டெலிவரிபாயுடனான உடல் உறவில் புரிந்து அடுத்த நாள் கணவனிடம் மாத்திரை மருந்துகளை எல்லாம் தூக்கி போட்டுவிட்டு இனிமே நான் ப்ரோசன் இல்லை என்று சொன்னதற்கு கணவன் அவளது அலுவலக உயரதிகாரியுடன் செக்ஸ் வைத்து புரிந்து கொண்டாயா? என்று கேட்குமிடத்தில் அவர் காட்டும் ரியாக்‌ஷன் செம்ம.  

கிட்டியின் ஆரம்ப குழப்பங்கள். ஹாஸ்டலில் உள்ள தோழி நோய்டா மாதிரியான சிட்டி வாழ்க்கையை எப்படி கையாளுவது என்று வெளிப்படுத்த அதனால் இன்ப்ளூயன்ஸ் ஆனாலும், தன் கன்னித்தன்மையை இழக்காமல் பாதுக்காக்க விழைவது. செக்ஸ் டாக் கால் செண்டர் வேலையில் பழக விழையும் நாட்களில் ஏற்படும் மனக்குழப்பம். தன்னுடய அக்கா புருஷனே தன்னிடம் ஆப் மூலம் செக்ஸ் டாக் பேசுவதை உணர்ந்து வருந்துமிடம். செக்ஸ் டாக்கில் வந்த ப்ரதீப் மூலமாய் முதல்  செக்ஸுவல் அனுபவம் ஏற்பட்டு தன் கன்னித்தன்மையை இழக்குமிடம். ஆது தனக்கு ப்ளஷராய் இல்லை என்று அக்காவிடம் வருத்தப்பட்டு பேசுமிடமாகட்டும்.பூமியின் நடிப்பு இயல்பு. 

இயக்குனர் அலங்கிரிட்டாவின் முந்தையை படம் போலவே பெண்கள் மேலான அடக்குமுறை. சமுதாய ஒழுங்கு. அவளின் கருத்து சுதந்திரம். மாரல் போலிசிங் என பல விஷயங்களை பேசுகிறது. ஆனால் இக்கதையில் நடக்கும் சம்பவங்களில் சிறு குழப்பம் இருக்கிறது. பெண் தன் வாழ்க்கையின் வசதிக்காக, மேன்மைக்காக, உடலை விற்பதிலிருந்து, காதல் வயப்படுவது வரை எல்லாவற்றையும் தன் சுயநலத்துக்காகவே செய்கிறாள். உதாரணமாய் கிட்டியின் மீதான டோலியின் கணவரின் அப்ரோச் அவரின் செக்ஸுவல் வறட்சியின் காரணமாய் என்று அவளுக்கு ஆரம்பத்தில் தெரியாமல் இருக்கலாம், ஆனால் டோலிக்கும் அவருக்கு செக்ஸ்வல் உறவு நடந்து இரண்டு வருடங்களுக்கு மேல் என்று தெரிய வந்ததும், திடீரென போன் செக்ஸில் பேசும் அக்கா புருஷனிடம் நீ உன் பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுறே? என்று விக்டிம் ப்ளேமிங் செய்வது எந்த விதத்தில் நியாயம்? என்று புரியவில்லை. அதே நேரத்தில் அவள் காதலித்தவனால் ஏமாற்றப்பட்டு அவளின் செக்ஸுவல் அர்ஜுக்காகவும், அவளின் தோழியின் பாய் ப்ரெண்டுடன் உறவு கொள்வதாகட்டும், கலாச்சாரகாவலர்களால் அடித்துடைக்கப்பட்ட நிறுவனத்தின் நிற்பதாகட்டும் நல்ல காட்சிகள். ஆனால் அதே நேரத்தில் கொங்கனாவின் செயல்களை நியாயப்படுத்த எந்த அழுத்தமான காரணமும் இல்லை. தன்னை உணர நல்ல புரிந்துணர்வும் எமோஷனல் கணெக்டும் உள்ள இளைஞன் மூலமாய் தன் இத்தனை நாள் செக்சுவல் உணர்வை, சந்தோஷத்தை அவள் உணர்ந்ததாய் வைத்துக் கொண்டாலும், ஒரு முறை தன் தங்கையை தொட்டான், செக்ஸ் ஆப்பில் சாட் செய்தான்  என்பதை தான் வேறு ஒரு பையனிடம் படுத்ததை விட பெரிய குற்றமாய் தன்னை விக்டிமாய் காட்டிக் கொண்டு குடும்ப உறவை அறுப்பது நியாயமாகும்?. 

அவரவர் வாழ்க்கை அவரவருக்கு என்பதை எல்லாம் நல்லது கெட்டதுகளோடும் சொல்லாமல் கொஞ்சம் பெண்ணிய ஜல்லி அடித்திருப்பது தான் இழுவையாக இருக்கிறது. 

Sep 19, 2020

டைம் என்ன பாஸும் சிட்காம்களும்.


Situation Comedy எனப்படும் Sitcom என்கிற வகைமையில் இந்திய அளவில் நிறைய ஹிட் சீரீஸ்கள் வந்திருக்கிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ஜோ ஹே ஜிந்தகி” “ஹம் பாஞ்ச்” ”தேக் பாய் தேக்போன்றவை தூர்தர்ஷனின் பொற்காலத்தில் வெளியான சிட்காம்கள்.

 சிட்காம்களின் சுவாரஸ்யமே அதில் வரும் கேரக்டர்கள்தான். அக்கேரக்டரிகளின் ஆர்க் தான் பார்க்கும் நமக்கு கிச்சு கிச்சு மூட்டவோ, வாய் விட்டு சிரிக்கவோ வைக்கும். அப்படி வைக்காவிட்டாலும் பின்னணியில் சிரிப்பொலியைப் போட்டு நம்முள் இருக்கும் நகைச்சுவை உணர்வை தூண்டிவிட்டாவது சிரிக்க வைத்துவிடுவார்கள்

சிட்காம்களில் நகைச்சுவை பெரும்பாலும்  அப்சர்டாகத்தான் இருக்கும். காரணம் நிஜவாழ்க்கையின் அபத்தங்களிலிருந்து தப்பிக்க நினைக்கும் மனிதர்களுக்கானது சிட்காம்கள். ஆங்கிலத்தில் சிட்காம்களின் வரிசை பெரிது. குறிப்பாய்சிம்சன்ஸ்” “பிக் பேங்க் தியரி” ‘ப்ரெண்ட்ஸ்எல்லாம் கல்ட் ஹிட் லிஸ்டில் அடுத்த தலைமுறை வரை வரக்கூடிய சாத்தியங்கள் உள்ளவை. அப்படியான ஒர்  சிட்காம் தமிழில் வரவேயில்லையா என்று நீங்கள் கேட்டீர்களானால் அது எனக்கு தெரிந்து நாகாவின் இயக்கத்தில் வெளியானரமணி V/S ரமணியை மட்டுமே சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். 

ஏனென்றால் முதலில் நல்ல சிட்காமுக்கு ஏற்கனவே சொன்னது போல சுவாரஸ்யமான கேரக்டர் ஆர்க் வேண்டும். அவர்களின் கேரக்டர்களின் முரணும், அதனை அடிப்படையாய் வைத்து எழுதப்படும் வசனங்களும், அதற்கான அவர்களின் நடிப்பும்தான் ரசிக்க வைக்கும். அந்த வகையில் இன்றைக்கும் ரமணிகளாய் நடித்த தேவதர்ஷிணி, ராம்ஜி ஆகியோரை யாராலும் மறக்க முடியாது. தேவதர்ஷணியின்  அட்டகாசமும், அடிபடியும் அப்பாவி ராம்ஜியின் கேரக்டர்களை யோசித்துப் பாருங்கள். அக்கதை முழுவதும் இக்கேரக்டர்களின் தன்மையை வைத்தே எழுதப்பட்டிருக்கும். அப்போதுதான் நான் சொன்ன அப்சர்ட்களை, எமோஷன்களை வைத்து சிட்ஷுவேஷன் காமெடி செய்ய முடியும். லாஜிக் இல்லா மேஜிக். தமிழில் முதலில் முயன்று தயாரித்தது கவிதாலயா நிறுவனம் தான்.

இப்போது அதே நிறுவனம் தயாரித்து அமேசான் ஒரிஜினலாக இல்லாமல் ரெவென்யூ ஷேரிங்கில் வெளியாகியிருக்கும் சீரீஸ்டைம் என்ன பாஸ்”. இது ஒரு சிட்காம். உருவாக்கி, இயக்கியிருப்பவர் சூப்பர் சுப்பு. இவர் இதற்கு முன்பு சுட்டகதை எனும் திரைப்படத்தை இயக்கியவர்.

சரி டைம் என்ன பாஸுக்கு வருவோம். பரத், ப்ரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், கருணாகரன், அலெக்ஸ் என செம்ம நடிகர்கள் பட்டாளம். எப்போதும் கூட்டமாய் இருக்கும் குடும்பத்திலிருந்து விலகி, தனியே வசிக்க ஆசைப்படும் பாலாவின் வீட்டினுள் கடவுளோ, அல்லது அப்படி உணரப்படுகிற காலமோ ஒர் விளையாட்டை விளையாடுகிறது. பல்வேறு கால நிலைகளில் உள்ள மனிதர்களை டைம் ட்ராவல் மூலமாய் பாலாவின் வீட்டினுள் இறக்குகிறது. 

சோழர் காலத்திலிருந்து வந்த கிள்ளி, எழுபதுகளிலிருந்து வரும் பிஎச்டி டாக்டர் பாரதி, 1895யிலிருந்து வரும் ஹன்னா க்ளாக், 2085லிருந்து வரும் பகி என்பவன் என  எல்லோரும் ஒரே வீட்டில் வந்தடைகிறார்கள். இவர்களுக்கு இடையிடையே தொல்லை கொடுக்கும் வாட்மேன் அலெக்ஸ் வேறு. ஐயம் ஏ வாட்ச் மேன் வாட்ச் பண்ணிட்டேயிருப்பேன் என்று பஞ்ச் டையலாக் சொல்லிக் கொண்டேயிருப்பவர். இவர்கள் வந்து அடிக்கும் கொட்டம் தான் கதை.

சுவாரஸ்யத்துக்கு பஞ்சமேயில்லாத கதைக் களன். டாய்லெட் ப்ளஷ் மூலமாய் டைம் ட்ராவல். இன்னொரு ஆள் மேஜர் சுந்தராஜன் போல பேசுகிறவர் பாதி டைம் ட்ராவலின் போது ப்ளஷ் பை உடைந்து கம்மோடிலிருந்து வெறும் அசரீரியாய் யார் பாத்ரூமுக்குள் போனாலும் “யெஸ் கம்மின் உள்ள வாங்க’ என்று அழைப்பது. ஹிப்பாப் ஆதி தான் 2085 முதல்வர். லெஜெண்ட். இளையராஜா, ரஹ்மான், ஹாரிஸ் கலாய்த்தல், அலெக்ஸ் மூலமாய் சூர்யாவை ஐயம் எ வாட்ச்மேன் என 24 படத்தின் பஞ்சை கலாய்ப்பது என ஆரம்பித்து பூமியில் உள்ள அத்தனை விஷயங்களையும் போகிற போக்கில் வசனங்களால் கலாய்த்தெடுக்கிறார்கள். ரூர் ஜஹான் எனும் ஹோட்டல் ஓனர். தலைவர் செத்துட்டாரா இல்லையா? என்று போஸ்டர் ஒட்டும் குழப்பத்தில் சாகப் போற தலைவரை வைத்து ஓட்டும் அரசியல் கிண்டல் என கிண்டல் கேலிகளோடு தான் பயணிக்கிறது இந்த “டைம் என்ன பாஸ்?”.

வெறும் வசனங்களாலும் ஆங்காங்கே கிச்சு கிச்சு மூட்டுவது மட்டுமே போதும் என்று நினைத்தீர்களானால் நிச்சயம் இது உங்களுக்கு திருப்தியான சிட்காம் தான். ஆனால் ஒர் சிறந்த சிட்காமுக்கு உதாரணமாய் நான் சொன்ன கேரக்டர் ஆர்க் தான் நாம் அதனுடன் இணைந்து பயணிக்க முடியும். அது இதில் மிஸ்ஸானதுதான் பெரிய லெட் டவுன் என்றே சொல்ல வேண்டும்.

குறிப்பாய் பல கால நிலைகளிலிருந்து வந்தவர்கள் ரெண்டொரு எபிசோடில் சம கால ஆட்களாய் மாறிப் போனது. அவர்களின் தனித்துவமான கேரக்டரை வைத்து ஃபன் செய்து அதகளப்படுத்தியிருக்கலாம். கால நிலை குழப்பம், கலாச்சார குழப்பம். என பல விஷயங்களை வைத்து அப்சர்டான பல விஷயங்களை தொகுத்திருக்கலாம். குறிப்பாய் நடித்தவர்களில் ஒரளவுக்கு ஓகே என சொல்லாம் என்றால் கருணாகரன் தான் ஆங்காங்கே நச் பஞ்ச் அவர் கால விஷயங்களோடு தொடர்பு படுத்தி ஜோக் அடிக்கிறார். மற்றவர்கள் எல்லாம் வந்த காலத்தை மறந்து நிகழ் காலத்தில் உலாவ ஆரம்பித்து கேரக்டர்களின் சுவாரஸ்யத்தை இழந்ததால் சிட்காமும் சுவாரஸ்யம் இழந்து போய்விடுகிறது. சரி அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் படு சுவாரஸ்யமாய் இருக்கிறதா என்று பார்த்தா படு வறட்சி. ஒரே ஒரு எபிசோடில் தன்னை பார்க்க வரும் முறைப்பெண்ணை கலாய்த்து அனுப்ப ப்ளான் செய்து அதில் சொதப்பலாகும் காட்சி தான் நல்ல சிங்குடன் இருந்தது. மற்ற எபிசோடுகளில் சுவாரஸ்யம்  போனதற்கு காரணம் ரைட்டிங். வசனங்களில் இருக்கும் சர்காசம் எடுபடாமல் போனதற்கு காரணம் சிட்காமுக்கே உண்டான சிட்சுவேஷனில் காமெடில் இல்லாமல் போனதுதான்.

கான்செப்டை உருவாக்கி இயக்கியிருக்கும் சுப்புவின் அப்ஸ்ட்ராக்ட் காமெடியை நான் சுட்ட கதையிலேயே பார்த்திருக்கிறேன். ரசித்திருக்கிறேன். இது அவரது இன்னொரு முயற்சி. ரைட்டர்ஸ் டீமின் ஒத்துழைப்பும், நடிகர்களின் ஒத்துழைப்பும் இருந்திருந்தால் ஒரு வேளை பிழைகள் இல்லாமல் வந்திருக்குமோ என்கிற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. பட்.. குட் ட்ரை.

எப்போதும் வெட்டு குத்து, கொலை, கற்பழிப்பு, கஞ்சா, க்ரைம் என்றே பார்த்து ஒரு மாதிரியான மனநிலையில் இருப்பவர்கள் ஒரு முறை ட்ரை பண்ணுங்க. லாஜிக் எல்லாம் பார்க்காமல்.


Sep 16, 2020

Flesh - Web Series Review

முதல் எபிசோடிலிருந்து கடைசி எட்டாவது எபிசோட் வரை பெரிய குறையொன்றுமில்லாத வெப் சீரீஸ். என்ன ஆங்காங்கே லாஜிக் மீறல்களும், பெனிச ஆக்‌ஷன்களும் கொஞ்சம் ப்ரேசிலியன் படமான ட்ரேடின் சாயலும் இருந்தாலும், நல்ல கிரிப்பிங் கதை, நடிப்பு எல்லாமே. சுவரா பாஸ்கர் கொஞ்சம் குண்டடித்திருக்கிறார். பட் நல்ல பர்பாமென்ஸ். வழக்கப்படி கெட்ட வார்த்தை, கொஞ்சம் வயலன்ஸ் என்று உறுத்தாமல் இருக்கிறது.


நீங்க ஜியோ நம்பர் வைத்திருந்தால், ஜியோ சினிமாவில் ஈராஸ் நவ் ஓடிடி இலவசம். அதில் வந்திருக்கிறது இந்த #flesh @erosnow

Sep 14, 2020

Atkan Chatkan - Film Review

 ஒர் ஏழை சிறுவன். அவனது அபார கவனிப்பாரற்ற இசை திறமை. க்ளைமேக்ஸில் என்ன ஆவான்? சொல்லுங்க.

1.அப்பா, அம்மா பெரிய வித்வான். ரைட்
2. அப்பா அம்மா பிரச்சனையில் இருவரும் பிரிவு. அப்பா குடிகாரர். ரைட்
3. பையனின் திறமையை பத்திருபது சீனுக்கு பிறகு அடையாளம் கண்டு கொள்ளும் கல்லூரி அல்லது பள்ளி தாளாளர். ரைட்
4. பையன் நாலு பையன் பொண்ணுடன் சேர்ந்து தகரம், குச்சி, போன்றவற்றை வைத்து இசைக்குழு நடத்துவது. ரோட் சைட் குழந்தைகள் நிச்சயம் அவர்களை வைத்து சம்பாரிக்கும் வில்லன்கள். பள்ளியில் பணக்கார மீசிக் படிக்கும் இளைஞர்கள் அவர்களால் இந்த சிறுவர்களுக்கு பிரச்சனை. க்ளைமேக்ஸில் ஓடி தப்பித்து வந்து பாடி அல்லது வாசித்து ஜெயிப்பது. ரைட்டு ரைட்டு ரைட்டு.

எல்லா ரெடி. எடுப்பா ஒரு ஃபீல் குட் மிசிக்கல் படத்தை என்று எடுத்துவிட்டார்கள். ட்ரம்ஸ் சிவமணி தான் இசை. அவரது ட்ரம்ஸ் தான் ஆதாரம். படம் நெடுக ஒரே குழப்பம். பாடல் பாடுகிறவர்களை செலக்ட் செய்வார்களா? அல்லது ட்ரம்ஸ் தான் மூலமா? எது நல்ல இசையை தீர்மானிக்கிறது? ஏனென்றால் சிவமணி என்றால் ட்ரம்ஸ் தான். பாட்டாய் நல்ல ரிதத்தோடு நன்றாகவே இருக்கிறது. ஆனால் எந்த திறமைக்கு அவர்கள் அங்கரிக்கபடுகிறார்கள் என்பதில் ஆரம்பித்து ஏகப்பட்ட குழப்பங்கள். டோலக் வாசிக்கும் அப்பா அம்மாவின் பிரச்சனை என்னவென்று யோசித்திர்கள் என்றால் அப்பா டோலக் வாசிக்கும் போது நடுவில் உட்கார்ந்து வாசிக்க, அவர் பின்னால் பாடும் பெண் உட்கார்ந்திருக்கிறார். மெல்ல அவரின் குரல் முன்னணிக்கு வந்து அவர் நடுவில் உட்கார டோலக் பின்னால் போகிறது. நிஜத்தில் டோலக்கை நடு நாயகமாய் வைத்து கச்சேரி செய்து நான் பார்த்ததில்லை. இப்படி இசையைப் பற்றிய புரிதல் பெரிதும் இல்லாமலேயே லிடியன், சிவமணி ஆகியோரை வைத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். ரஹ்மான் வழங்கும் என்று சிவமணியின் பழக்கத்திற்காக போட்டு, ஜீ5 க்கு விற்றிருக்கிறார்கள் போல, சிவமணி, லிடியனைத் தவிர சொல்லிக் கொள்ள வேறேதும் இல்லை.

பெர்முடா - நாவல் விமர்சனம் -1

 பெர்முடா. விமர்சனம்#1

மூண்று புள்ளிகள். ஒவ்வொன்றிலும் ஒரு முதிர் ஆண், ஒரு இளம் பெண். புள்ளிகளை முக்கோணமாக இணைக்கும் சரடு காமம். அதில் குதித்து திளைக்கிறார்கள். உபயோகப்படுகிறார்கள். உபயோகிக்கிறார்கள். நீந்தி கரை சேர்கிறார்கள். சிலர் தெளிகிறார்கள். சிலர் காணாமல் போகிறார்.

எல்லாமும் சுவாரஸ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கேபிளாருக்கு கதை சொல்ல வருகிறது. அதையும் பர பர என சொல்ல வருகிறது. மசாலா தூவி தூவி திகட்டாமல் சொல்லத்தெரிகிறது. படித்து முடிக்கும்போது அதுவரை படம் பார்த்துக்கொண்டிருந்த உணர்வு வருகிறது. உண்மையைச் சொன்னால் மூண்று நாவல்களுக்கான களங்கள் இதில் உண்டு. வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Mohan Balu
Thx sir

பெர்முடா https://amzn.to/36tb8gg

பெர்முடா புத்தகமாய் அமேசானில் வாங்க https://amzn.to/2QACABx

Sep 11, 2020

சாப்பாட்டுக்கடை -தேவி அக்கா குழம்புக்கடை

ஹைதராபாத்தில் நிறைய குழம்பு கறிஸ் கடைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் சென்னையில் ஏனோ நிறைய குழம்பு கடைகள் இருந்து பார்த்ததில்லை. அவ்வப்போது சில சைவ உணவு சிறுகடைகள் குழம்பு ,கூட்டு, பொரியல், ரசம் என தனித் தனியே இருபது ரூபாய்க்கு விற்பனை செய்ததை பார்த்திருக்கிறேன். ஆனால் அதையே முழு நேரக்கடையாய் பார்த்ததில்லை. சில ஆண்டுகளாய் அம்மாதிரியான குழம்புக்கடைகள் நிறைய முளைக்க ஆரம்பித்தது. முக்கியமாய் நான் வெஜ் குழம்பு கறிக்கடைகள். ஒவ்வொரு ஏரியாவிலும் ஒவ்வொன்று முளைக்க ஆரம்பிக்க, ஆரம்பத்தில் வீட்டிலிருந்து சமைக்க ஆரம்பித்து மெல்ல வியாபாரம் பெருக, பெருக, ஆட்களை வைத்து சமைக்க ஆரம்பித்து சுவை கெட்டுப் போய் மூடிய கடைகள் ஏராளம். ஆனால் இன்றளவில் நிறைய குழம்புக்கடைகள் அவரவர்களின் ஸ்பெஷல் கைவண்ணத்திற்கு ஏற்ப அட்டகாசமான வியாபாரம் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். அப்படியான ஒரு கடை தான் விருகம்பாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள இந்த தேவி அக்கா குழம்புக்கடை. என் நியாபகம் சரி என்றால் இந்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பித்தார்கள் என்று நினைக்கிறேன். கொஞ்சம் கொஞ்சமாய் மக்களின் வாய் மொழி காரணமாய் மெல்ல இந்தக்கடையில் சுவைக்காக குழம்பு வாங்க ஆரம்பித்தார்கள். 

நான் முதல் முதலாய் சிக்கன் தொக்கும், ஒரு சப்பாத்தியும் வாங்கித்தான் என் கணக்கை ஆரம்பித்தேன். தாம்பாளமாய் சப்பாத்தி ஒன்று 15 ரூபாய் கூடவே நம்மூர் சிக்கன் தொக்கு நான்கு ஐந்துபீஸ்களோடு அளவான காரம் மணத்தோடு 70 ரூபாய். வாங்கி சாப்பிட்ட மாத்திரத்தில் மிகவும் பிடித்துப் போக, பல நேரங்களில் மட்டன் தொக்கு, சிக்கன் தொக்கு ஒரு சப்பாத்தி என மதிய உணவு அவர்களிடம் என்றானது. கொஞ்சம் கூட காரலோ, வயிற்று பிரச்சனையோ வந்ததேயில்லை. கூடவே 25 ரூபாய்க்கு ஒரு ஆள் சாப்பிடும் அளவிற்கான சாதம் கொடுக்க ஆரம்பிக்க, மட்டன் குழம்பும், மீன் குழம்பும் சிறப்பை கூட்டின. எல்லாம் நன்றாய் போய்க் கொண்டிருக்க, கொரானா வந்து மொத்த வியாபாங்களையும் புரட்டிப் போட்டிருக்க, தக்கன பிழைக்கும் என்பதற்கு ஏற்ப இவர்களது கடை குவாரண்டைன் விதிகளீன் படி பார்சல் மட்டுமே அனுமதி என்றானது இவர்களுக்குமிகவும் வசதியாய் போனது. ஏகப்பட்ட பேச்சிலர்கள், இருக்கும் ஏரியா சாலிகிராமம். குறிப்பாய் உதவி இயக்குனர்கள். 100 ரூபாய்க்கு குழம்பு, சப்பாத்தி, சாதம் சாப்பிட முடியும் அதுவும் நல்ல தரத்தோடு எனும் போது ஏன் விற்காது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாய் அருமையாய் சுவையை மெயிண்டையின் செய்து வருகிறார்கள். 

மீன் குழம்பு, மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, சாம்பார், வத்தக்குழம்பு, காரக்குழம்பு என எல்லாவற்றிலும் நல்ல தரம் சுவை. சாலிக்கிராமம் பக்கத்தில் இருந்தா ஒரு முறை ட்ரை செய்து பார்க்கவும்

தேவி அக்கா குழம்புக்கடை\
அபுசாலி தெரு
சாலிகிராமம்
விஜய்காந்த் வீடு தாண்டி
9345876277

24 சலனங்களின் எண். விமர்சனம் -2

 விமர்சனம் #2

வணக்கம், சலணங்களின் எண் 24 , ஒரு சினிமா தொழிலின் பின்பக்கம் இப்படியா , காமிரா மேன் , அசோசியேட் டைரக்டர், கோ டைரக்டர், மாஸ்டர், ஹீரோ , ஹீரோயின், அல்லக்கைகள், தயாரிப்பாளர் இவர்களின் ஒருங்கிணைப்பு எந்தளவிற்கு ஒரு படத்தை உயிரோட்டத்துடன் வைக்கும் என்பதை பல இடங்களில் வெளிப்படுத்திய விதம் அருமை ,தயாரிப்பாளரின் சபலம் ஒரு பெண்ணை எந்தளவிற்கு பாதிக்கும் என்பதை எழுத்தில் காட்சியாக்கி விட்டீர்கள், முதல் பட தயாரிப்பாளர் மணி ,நட்பினால் வரும் கேடு (அவரை கொலை செய்யாமலிருந்திருக்கலாம்) அதன்பின் அந்த குடும்ப உறுப்பினர்கள் அவரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று எடுத்த முயற்சிகளை எழுத்தாளுமையில் பார்த்தேன் . ஒரு சுய தொழில் புரிபவனாக சொல்கிறேன் , ஒரு சினிமா தொழிலின் நெளிவு சுழிவுகளுடன் , ஆரம்பம் முதல் , டிஜிட்டல் மார்கெட்டிங் , ரைட்ஸ் &ரிலீஸ் வரை விளக்கமாக வரைந்த ஒர் ஓவியம் , டீடெய்ல்டு ப்ராஜெக்ட் ரிப்போர்ட் . வாழ்த்துக்கள். நன்றி. ஹீரோ ,நித்யா , காதல் , டைரக்டர் மன உளைச்சல்...... இன்னும் நிறைய எழுதலாம் இவ்விடம் போதாது
நன்றி

24 சலனங்களின் எண் நாவல் கிண்டில் வர்ஷன் வாங்க https://amzn.to/2MwgkIb

24 சலனங்களின் எண் அமேசானில் வாங்க https://amzn.to/2VQg8H3

Sep 10, 2020

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?

”நம்பர்” ஆட்டம் – ஓடிடி வெளியீட்டு படங்களின் வெற்றி தோல்வி?  

அமேசானில் நேரிடையாய் வெளியாகி நல்ல படம் என்று பெயர் எடுத்தபடங்கள் என்று பார்த்தால், சகுந்தலாதேவி, சீ யூ சூன் மட்டுமே. அமேசான் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என அமிதாப்பின் குலாபோசித்தாபோ, வித்யாபாலனின் சகுந்தலா தேவி, ஜோதிகாவின் பொ... பென்குவின், கன்னட லா, ப்ரெஞ்சு பிரியாணி, மலையாளம் சுஜாதையும்.. , சி யூ சூன். ஆகியவை எட்டு படங்களில் ரெண்டு ஹிட் என்பது வழக்கமாய் இந்தியாவில் தயாராகும் படங்களின் வெற்றி சதவிகித  அடிப்படையில் பார்த்தால் நல்ல ஆவரேஜ் தான்.

இந்தியாவில் வெளியாகிற அத்தனை படங்களும் ஹிட் அடித்துக் கொண்டிருந்தது போலவும்,  இப்போது அமேசான் போன்ற ஓடீடீ தளங்களில் வெளிவந்ததினால் தான் தோல்வி என்று சீன் போடக் காரணம். நம்பர் விளையாட்டு இவர்களால் ஆட முடிவதில்லை. இத்தனை கோடி கலெக்‌ஷன், அத்தனை கோடி கூட்டம், என் பொய் நம்பர் சொல்ல முடிவதில்லை. ரசிக மனப்பான்மை கோஷங்கள் இல்லை. அமேசானும் எத்தனை பேர் பார்த்தார்கள் என்கிற கணக்கை வெளிப்படையாய் கொடுப்பதில்லை. கொண்டாட்டத்தை துவேஷத்தை வைத்து வியாபாரம் செய்ய முடியாத இண்டஸ்ட்ரி ட்ராக்கர்களுக்கு வியாபாரம் போய்விட்டதால் அதையே நெகட்டிவ் பப்ளிச்சிட்டியாய் மாற்றுகிறார்கள். 

உண்மையில் சொல்லப் போனால் இந்த படங்கள் தியேட்டரில் வெளியாகி இருந்தாலும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கும். ஓடீடீயில் வெளியான கண்டெண்டுகளுக்கு 100வது நாள் போஸ்டர் எல்லாம் எத்தனை அபத்தம் என்று தெரிந்தே தான் செய்கிறார்கள். இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் நம்பர்கள் இவர்களின் வாழ்வாதாரம். அதில் மாற்றம் வரும் போது அதை ஏற்றுக் கொள்ள முடியாதவர்களின் புலம்பல் தான் ஓடீடீ ரிலீஸ் எல்லாம் மொக்கை என்பது. அமேசானைப் பொறுத்தவரை, இத்தனை படங்கள் மூலமாய் கிடைத்திருக்கும் புதிய வாடிக்கையாளர்கள். தக்க வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், இப்படங்களுக்கு கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கைதான் லாபம். அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கொடுக்கும் கண்டெண்டுகள் அந்ததந்த மாத வாடிக்கையாளர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தினால் போதுமானது. அதில் வெற்றி பெரும் படங்கள் அவர்களின் பார்வையாளர்களுக்கு திருப்தியைத் தரும். உதாரணமாய் ஹாட்ஸ்டாரில் தில் பேசாரா படத்தை இலவசமாய் அனைவரும் பார்க்க வெளியிட்டார்கள். சுமார் என்பது கோடி பேர் பார்த்ததாய் டேட்டா பேஸ் கொடுக்க, அதை ஒரு கொண்டாட்டமாய், இத்தனை பேர் பார்த்தார்கள் என்று கொண்டாடினார்கள். சினிமாவிற்கு இந்த கொண்டாட்டங்கள் நம்பர்கள் தேவையாய் இருக்கிறதோ இல்லையோ வியாபாரிகளுக்கு தேவையாய் இருக்கிறது.

ஹாட்ஸ்டாரில் வெளியான படங்களில் தில் பேச்சார, லூட் கேஸ், குதா ஹபீஸ், சடக் 2, ஆகியவைகளில் தில்பேச்சாரா, லூட் கேஸை தவிர பெரிய ஹிட்டோ, விமர்சன ரீதியான வரவேற்போ இல்லை. இங்கேயும் அவர்களது ரிலீஸ் லிஸ்டில் இரண்டு ஹிட் இருக்கிறது.

நெட்ப்ளிக்ஸ் கடந்த சில மாதங்களாகவே பெரிய பட்ஜெட் படங்களாய் வாங்கி வெளியிடாமல் அவர்களின் ஏ செண்டர் ஆடியன்ஸ் மார்கெட்டுக்கு ஏற்பான படங்களை தயாரித்தோ, அல்லது தயாரிக்கப்பட்ட படங்களையோ வாங்கி வெளியிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். அந்த வகையில், ராத் அகேலி ஹே, கிருஷ்னா அண்ட் ஹிஸ் லீலா, சமன்பஹர், குஞ்சன் சக்சேனா, க்ளாஸ் ஆப் 84 ஆகியவை வெற்றிப் படங்களே, எட்டுக்கும் மேற்ப்பட்ட படங்களை இந்திய மொழியில் வெளியிட்ட நெட்ப்ளிக்ஸின் வெற்றி கணக்க்கு இது. சீரீஸ்களின் வெற்றி இதில் கணக்கில் வராது. உண்மையில் பார்த்தால் சின்னகல்லு பெத்த லாபம்.

ஜீ டிவியின் அங்கமான ஜீ5யில் கூட தமிழ் தெலுக்கு, ஹிந்தி, மராத்தி, பெங்காலி என அடித்து துவம்சம் செய்கிறார்கள். இவர்களின் வெளியீட்டில் யாரா என்கிற ஒரு ஆவரேஜ் பட்ஜெட் படம் கவனம் பெற்றது. லூசர் எனும் ஒரு வெப்சீரீஸ் கவனம் பெற்றிருக்கிறது. சுராலீ எனும் பாகிஸ்தானிய சீரீஸ் வெற்றி, சின்னச் சின்ன படங்களை சகாய விலைக்கு வாங்கி அதை ஓ.டி.டி, டிவி, டப்பிங் என எல்லா வியாபாரத்திலும் கல்லா கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்ட டேனி, காக்டெயில் போன்ற படங்களின் தோல்வி தியேட்டரில் வெளியாகியிருந்தாலும் அதே நிலைதான். லாக்கப் ஒன்று தான் தமிழில் வெளியாகி அபவ் ஆவரேஜ் கவனம் பெற்ற படமாய் அவர்களுக்கு அமைந்தது.

ஆஹா என்று ஒரு ஓ.டி.டி ப்ளாட்பார்ம் தற்போது தெலுங்கு படங்கள், கண்டெண்டுகளுகாகவே நடத்தப்பட்டு வருகிறது. இந்த லாக்டவுன் ப்ரீயடில் மிகப் பெரிய அளவில் தெலுங்கு ஆடியன்ஸை கவர்ந்த ஒர் ஓடிடி என்றால் அது அஹாவைதான் சொல்ல வேண்டும். கடந்த மாதங்களில் மட்டும் ட்ரான்ஸ், போரன்ஸிக் போன்ற மலையாளப் படங்களை டப்பிங்கில் வெளியிட்டு பெரும் வெற்றி பெற்ற அதே வேளையில், சின்னப்படங்களான கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலா, பானுமதி ராமகிருஷ்ணா, போன்ற படங்களின் வெற்றி இன்னும் பல மாதங்களுக்கு தாங்கும்.

ஏன் உலகளவில் ஆப்பிள் டிவி டாம் ஹாங்ஸின் “க்ரே ஹவுண்ட்” எனும் படத்தை நேரிடை ஓ.டி.டி ரிலீஸ் செய்தது. சுமார் என்பது மில்லியனுக்கு விலைக்கு வாங்கியதாய் தகவல். ஆரம்பித்து சில மாதங்களே ஆன இந்த ப்ளாட்பார்மிற்கு பெரும் வரவேற்பை பெற்று தந்திருக்கிறது இந்த படம். அடுத்ததாய் வில் ஸ்மித் நடிக்கும் படத்தை விலைக்கு வாங்கியிருக்கிறது அப்பிள் டிவி.

உண்மையில் சொல்ல போனால் தெலுங்கில் வெளியான வி, இந்த க்ரே ஹவுண்ட் போன்ற படங்கள் பெரிய திரையில் பார்க்கும் போது நிச்சயம் அதற்குண்டான உற்சாகத்தை பெரும் திரை தான் தரும் என்பதில் ஐயமேயில்லை. ஆனால் அந்த உற்சாகத்தை மீறி முடிவாய் படம் கொடுக்கும் நிறைவே அதன் வெற்றி தோல்விக்கு அடிகோலும், அப்படியான வி தியேட்டரில் வெளியாகியிருந்தாலும் தோல்விதான். அதே நேரத்தில் நிச்சயம் பெரிய திரையில் பார்த்தால் இன்னொரு மடங்கு லாபம் சம்பாரிக்ககூடிய படம் தான் க்ரேஹவுண்ட். ஏனென்றால் அது போர் படம். குறிப்பாய் கடற்படையிடையே நடக்கும் போர் பற்றிய படம். அதை பெரிய திரையில் பார்த்தால் நிச்சயம் ஒர் மிக அற்புதமான அனுபவத்தை தந்திருக்கும் என்பதை மறுப்பதற்கு இல்லை. நாளை ஒரு வேளை மாஸ்டர் போன்ற படங்கள் இதில் வெளியானால் நிச்சயம் தியேட்டர் கொண்டாட்டம் என்பதை இழந்துதான் பார்க்க வேண்டியிருக்கும்

இவர்கள் எல்லோருக்கும் லாபம் வருமா? இத்தனை கோடி போட்டு படம் வாங்குகிறார்களே? எப்படி வெற்றி தோல்வியை கணக்கிடுவது? நல்ல விமர்சனம் வருவதை வைத்தா? அல்லது இத்தனை கோடி ரூபாய்க்கு விலைக்கு போன நம்பரை வைத்தா? இதே லாப நஷ்ட கணக்கை இந்த இண்டஸ்ட்ரி ட்ராக்கர்கள் வெப் சீரீஸுக்கு பார்ப்பதில்லை. ஏனென்றால் அது அந்தந்த நிறுவனங்கள் அவர்களின் பணம் போட்டு அவர்களே தயாரித்துக் கொள்கிறார்கள். இல்லையேல் முதல் காப்பி அடிப்படையில் தயாரிக்கபடுகிறது உதாரணமாய் பாதாள் லோக் எனும் சீரீஸின் பட்ஜெட் என்னவாக இருக்கும்? அதன் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா முதல் காப்பி அடிப்படையில் அமேசானுக்காக தயாரித்து கொடுத்த வெப் சீரீஸ். அதில் அவருக்கு எத்தனை லாபம் வந்தது என்று யாராவது கவலைப் பட்டு பார்த்திருக்கிறீர்களா? மாட்டார்கள். ஏனென்றால் அதில் இம்மாதிரியான போலி பேக் ட்ராக்டர்களுக்கு வியாபாரம்.

சோஷியல் மீடியாவுக்கு முன்பு என்றாவது இந்த படத்தின் பத்தாவது ஆண்டு, இவருக்கு பிறந்தநாள், அதற்காக ஸ்பெஷல் டிபி, பிரபலத்தைப் பொறுத்து அதற்கு வீடியோ, ஆடியோ செய்திகள் என களேபரப்படுகிறது. இத்தனைக்கும் பின்னால் ஒரு வியாபாரம் இருக்கிறது. இதனால் ஆதாயம் அடைகிறவர்கள் இருக்கிறார்கள். அத்தனை பேரும் உண்மையில் சொல்லப் போனால் கிட்டத்தட்ட துறை சார்ந்த ஒட்டுண்ணிகள் என்று தான் சொல்ல வேண்டும். இப்படியாக போடப்படும் விளம்பரங்கள் அனைத்துமே இவர்களுக்கான வியாபாரம். அதை தான் அனைவரும் விரும்புகிறார்கள். மீடியாவில் தங்களைப் பற்றிய பேச்சும் இம்மாதிரியான ஒரு நாள் பரபரப்பு அவர்களது ஆட்டத்தை நிர்ணையிப்பதாய் நினைக்க வைக்கிறார்கள் இந்த ட்ராக்கர்கள்

தியேட்டர்கள் திறந்திருந்த போது அந்தந்த பட தயாரிப்பாளர்களிடமிருந்து விளம்பரம் பணம்  வாங்கிக் கொண்டு முதல் நாளே நூறு கோடி பத்து கோடி என கலெக்‌ஷன் ரிப்போர்ட் எழுதுகிற இவர்களின் ஆண்டு ரிப்போர்ட்டில் அந்த படங்கள் இருக்கவே இருக்காது. தியேட்டர்கள் நடைபெற்ற போதும் அய்யோ நல்ல படங்கள் ஓடுவதில்லை. நல்ல படங்களுக்கு ஆட்கள் வருவதில்லை. பெரிய படங்கள் தொடந்து தோல்வி, வெற்றி என இவர்களின் வாழ்க்கையே நம்பர்களை வைத்துத்தான் என்றிருந்தது கொரானாவால் மாறியது. நம்பர் இல்லாமல் இவர்களுக்கு வியாபாரம்  இல்லை. உண்மையில் சினிமா ரசிகனுக்கு அவர்களுடய நம்பர் தேவையேயில்லை. அவனுக்கு தேவையானது எல்லாம் அவன் செலவு செய்யும் பணத்திற்கு கிடைக்கும் அனுபவம். அந்த பணம் நம்பராய் தெரிய வரும் போது அவன் அதிலிருந்து விலகிவிடுவான்.  எனவே நம்பர் நல்லது.

Cable Sankar