Thottal Thodarum

Aug 31, 2010

எ.வ.த.இ.மா.படம் -Peepli (Live)

Peepli02_330x123 எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படம்னு ஏங்க வைகிற படம் பீப்லி. வெகு சிம்பிளான மேக்கிங். ஆனால் மனதில் அறையும் கதை. மிகவும் கசப்பான விஷயத்தை சிரிப்பு என்கிற மருந்தோடு முழுங்க கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு இயல்பாக ஒரு கதையை சொல்ல முடியுமா? மேக்கப்பில்லாத அழுக்கு முகங்களை வைத்து நம்மை வசீகரீக்க முடியுமா? கொஞ்சம் கூட கமர்ஷியல் இல்லாத ஒரு படத்தை அமீர்கான் தயாரிக்க முன்வந்ததை போல தமிழில் எந்த நிதிகளுக்காகவாவது தைரியம் இருக்கிறதா?. படத்தில் தான் கமர்ஷியல் விஷயம் இல்லையே தவிர படத்தை பொறுத்த வரை கமர்ஷியல் ஹிட் தான். ஏனென்றால் பிவிஆர், சத்யம், ஐநாக்ஸில் தொடர்ந்து வீக்கெண்டில் ஹவுஸ்புல்.
peepli விவசாயிகள் தற்கொலைதான் படத்தின் அடிநாதம், விவசாயம் நொடித்துப் போய், வறுமையிலும், பேங்க் லோன்கள் கட்ட முடியாமல் கடனிலும் நிலத்தை இழப்பது மானக்கேடு என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை பற்றிய படம்.  நத்தாவும் அவனுடய அண்ணன் புடியாவும் பேங்க் லோன் கட்ட முடியாமல் அவர்களது நிலத்தை பேங்கிடம் இழக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் பணம் புரட்ட முடிய்வில்லை. எனவே லோக்கல் அரசியல் வாதியிடம் போய் ஏதாவது உதவி கேட்கலாம் என்று போன போது அங்கிருக்கும் ஒருவர் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அரசு அளிப்பதாய் சொல்ல, அதை நம்பி தங்களூள் ஒருவர் உயிர் துறக்க முடிவெடுக்கின்றனர். முடிவில் இளையவனான நத்தா உயிர் விட முடிவு செய்ய, இதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அங்குள்ள லோக்கல் பேப்பர் நிருபருக்கு தெரிய வர அவர் செய்தி தொலைக்காட்சிக்கு சொல்கிறார். சேனலுக்கு போன பின் தான் அமர்களமே.. எல்லா தொலைக்காட்சி சேனல்காரர்களும் நத்தாவின் வீட்டை ஆக்கிரமித்து, அவன் தற்கொலை செய்து கொள்வானா? இல்லையா? என்று ஆளாளுக்கு அவனுடய ஒவ்வொரு மூவ்மெண்டையும் கவர் செய்ய ஆரம்பிக்கிறது. இன்னொரு பக்கம் லோக்கல் அரசியல் வாதிகள் இதை வைத்து அரசியல் செய்ய நினைத்து, அவனுக்கு தேவையான பணத்தை கொடுக்காமல் ஒரு பெரிய கலர் டிவி செட்டை கொடுத்துவிட்டு போகிறார்கள். அரசோ.. ஒரு பெரிய ஆழ் துளை கிணற்று பைப்பை கொடுத்துவிட்டு பிட்டிங் சார்ஜ் கூட கொடுக்காமல் போகிறார்கள்.

முதலமைச்சருக்கோ நத்தா சாகாமல் இருந்தால்தான் வெகு விரைவில் வரும் எலக்‌ஷனில் வெற்றி பெற முடியும். ந்த்தாவின் வீடு ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் போல மாறி, ரங்கராட்டினம், ஐஸ்க்ரீம் வண்டிகள், பாப்கார்ன் என்று மேளா நிலமைக்கு வந்துவிட, ஒரு நாள் நத்தா காணாமல் போய்விடுகிறான். நத்தா செத்தானா இல்லையா? என்பதுதான் கதை.
 peepli1 முதல் காட்சியில் நத்தா தலைதெறிக்க ஓடி வருவதை போன்ற ஒரு கற்பனை காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. அதற்கு அப்படியே நேர்மாரான ஒரு ஓட்டை டெம்போவில் அவன் பயணித்துக் கொண்டிருக்கும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது படம். லோக்கல் அரசியல்வாதி செத்தால் பணம் என்று சொல்ல வீட்டிற்கு வரும் வழியில் ஒரு நான்கைந்து சாவு செய்திகள் தொடர்ந்து வருவது. என்னடா இது இப்படி தொடர்து சாவு செய்தி வருகிறதே என்று புலம்புவதும். நான் சாகிறேன்.. இல்லை நான் சாகிறேன் என்று ஆளாளுக்கு மாறி மாறி பேசிக் கொண்டு, தம்பி நத்தா நான்குமுறை சொன்னதும் ஏதோ பெரிதாய் விட்டுக் கொடுக்கிறார் போல அண்ணன் சரி நீயே செத்துக்கோ என்பது. வீட்டில் ஆட்கள் படுக்கவே இடமில்லாத போது அதற்கு நடுவில் டிவி பெட்டியும் பைப்பும் ஒரு பெரிய இடைஞ்சல் என்பதை நடு வீட்டில் டிவியையும், பைப்பையும் வைத்துவிட்டு, தூக்கத்திலிருக்கும் குழந்தைகளை இடம் அட்ஜெஸ்ட் செய்து படுக்க வைக்குமிடம். டிவி சேனல்களுக்கு வெறும் பரபரப்பும் டி.ஆர்.பி மட்டுமே முக்கியம் என்பதை விளக்கும் பல காட்சிகள். டி.ஆர்.பி என்பது மேனிபுலேட் செய்யப்பட்ட ஒரு விஷயம் என்பதும். டிவி சேனல் காரர்கள் செய்தி என்று நத்தா “ஆய்” போவதை கூட பாலோ செய்வதும், பின்பு அவன் அங்கிருந்து காணாமல் போனதும் அவன் பெய்த ஆய்யை கூட விடாமல் ஏதோ ஒரு பெரிய விஷயம்  என்று கவரேஜ் செய்வது. டிவி சேனல் இண்ட்ர்வியூக்கு வரும் மத்திய அமைச்சர் பேட்டிக்கு முன் காம்பேரரிடம் ஏன் அன்றைக்கு பார்டிக்கு வரவில்லை என்று கேட்பதும், விவசாயிகள் பிரச்சனைக்கு ஒரெ தீர்வு தொழிற்மயமாக்குவதுதான் என்பது போன்று  படம் முழுக்க சர்ரியலிஸ சர்காஸ அட்டகாசம். மும்பையோ, டெல்லியோ, எந்த ஒரு பெரிய மாநகரத்டிலும் முகம் தெரியாத, பெயர் இழந்த பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 
peepli3 நத்தாவாக வரும் நாடக நடிகரான ஓம்கார், அவருடய அண்ணன், நத்தாவின் மனைவி ஷாலினி. படுக்கையிலேயே இருந்து கொண்டு கத்தி போன்ற நாக்கால் ஆளும் நத்தாவின் அம்மா, அந்த லோக்கல் பத்திரிக்கையாளன், சேனல் பெண், எதிர் சேனல் ஆள், அரசியல்வதிகள்  என்று ஒவ்வொரு கேரக்டரும் நடிக்கவிலலை வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு சில இடங்களில் ஓவர் டோஸாகவும், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளாய் இருந்தாலும் இப்படிப்பட்ட  விஷயங்களை வலிக்காமல் ஊசி போட்டால்தான் ஏறும் என்று புரிந்து, அறிந்து கொடுத்திருக்கும் இயக்குனர் அனுஷாரிஸ்வியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இம்மாதிரி படஙக்ளை ஊக்குவித்து, வைட் ரிலீஸ் செய்ய தியேட்ட்ர்கள் கிடைக்க, தயாரிக்க அமீர்கான் போன்றோர் இல்லையென்றால் வெளிவந்தேயிருக்காது. அல்லது தெரியவந்திருக்காது. நன்றி அமீர்கான்.
PEEPLI (LIVE) – A MUST SEE MOVIE IN THEATRE
கேபிள் சங்கர்

Aug 30, 2010

கொத்து பரோட்டா-30/08/10

ஒரு வழியாய் விஜய் டிவி மூன்று மாதத்திற்கு முன் எடுத்த நீயா? நானா நிகழ்ச்சியை ஒளிபரப்பிவிட்டார்களாம். நான் ஒரு தயாரிப்பாளருடன் பேசிக் கொண்டிருந்ததினால் பார்க்கவில்லை. நிகழ்ச்சியை பார்த்து தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும், எஸ்.எம்.எஸிலும் பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி..நன்றி..நன்றி.. வீடியோ லிங்க்
http://tamilbase.com/index.php?option=com_content&view=article&id=14048:neeya-naana-29-08-10-&catid=119:neeya-naana&Itemid=127
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
வெள்ளி இரவு சுமார் ஒரு மணிக்கு நந்தனம் சிக்னலிலிருந்து தி.நகர் பக்கமாய் டிராபிக் போலீஸால் திருப்பி விடப்பட்டேன். ஏன் என்று கேட்டபோது ட்ராபிக் ஜாம் என்றார்கள். மேலும் கேள்விகள் கேட்டதற்கு பதில் சொல்லவில்லை.. சீக்கிரமா வீட்டிற்கு போற வழிய பாருங்க சார் என்றார் அவர். நமது 24 மணி நேர செய்தி சேனல்களில் மத்யானம் போட்ட செய்திகளையே போட்டுக் கொண்டிருக்க, காலையில் செய்திதாளில் பார்த்த போது அவர்கள் போட்டிருந்த விஷயம் பார்த்து கோபம் கோபமாய் வந்தது. ஒரு ட்ரைவர் சின்னமலை அருகே உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிடப் போனாராம். அங்கே இருந்த சிலருடன் வாக்குவாதமாகி டிரைவர் தாக்கப்பட்டிருக்கிறார்.  அடிபட்ட டிரைவர் பணிமனைக்கு சென்று தன்னை அடித்துவிட்டதாக மற்ற டிரைவர்களிடம் சொல்ல, உடனே அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எல்லா டிரைவர்களிடமும் செய்தி பரவி பஸ்களை ஆங்காகே நிறுத்த, சைதாப்பேட்டையிலிருந்து கிண்டி வரை கடும் ட்ராபிக் ஜாம் இரவு பத்து மணியிலிருந்து. என்ன கொடுமை இது. டிரைவர் அங்கு என்ன பேசினாரோ, என்ன தகரறோ? எதுவாக இருந்தாலும் இவர்களது பர்சனல் ப்ரச்சனைகளுக்கு போலீஸை நாடாமல் இவர்கள் இஷ்டத்திற்கு நடு ரோட்டில் பஸ்ஸை நிறுத்தி ட்ராபிக்கை குலைத்தால் என்ன நியாயம். எத்தனை பேர் விமான நிலையத்துக்கோ, மருத்துவமனைக்கோ, முக்கிய விஷயங்களுக்காகவோ கிளம்பிக் கொண்டிருப்பார்கள். இந்த அயோக்கியத்தனத்தை தூண்டி விட்ட டிரைவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் போல் ஒவ்வொருவரும் தங்களை அடித்துவிட்டார்கள் , என்று நடுரோட்டில் ஆர்பாட்டம் செய்ய ஆரம்பித்தால் விளங்கினார்போலத்தான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
பாகிஸ்தான் வீரர்கள் பணம், பெண், சாப்பாடு இவைகளுக்குத்தான் முக்யத்துவம் கொடுக்கிறார்கள் என்று மசார் மஜித் எனும் ஸ்பாட் புக்கி சொல்லியிருக்கிறார். இவர் இங்கிலாந்து பாகிஸ்தான் மேட்சுகளில் பிக்ஸிங் செய்த்தாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார். மிகச் சிலரே ஆட்ட்த்தின் மீதான காதலுடன் விளையாடுவதாகவும், ஒவ்வொரு மேட்சின் போது ட்ரிங்க்ஸ் இடைவேளையில் வீரர்கள் பெவிலியனுக்கு வரும் போது கையில் வாஸலின் தடவி அவர்களிடம் கை குலுக்குவதை போல குலுக்கி அவர்கள் மாற்றி விடுவேன். அவர்கள் வேஸ்லின் தடவி பந்து வீசும் போது பந்து திடீரென ஸ்விங் ஆகும். அதே போல் பாலை கீறி பந்து போடுவது போன்ற பல விஷயஙகளை சொல்லியிருக்கிறார். http://timesofindia.indiatimes.com/sports/cricket/top-stories/Pak-cricketers-just-want-money-women-food-Bookie/articleshow/6455784.cms
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சினிமா வியாபாரம் &லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும்
சென்ற வாரம் ஒரு போன்கால் ஒரு தயாரிப்பாளர், வெள்ளித்திரை இயக்குனர் விஜியை வைத்து படம் தயாரிப்பதாகவும், தினத்தந்தியில் வந்த சினிமாவியாபாரம் புத்தகம் விமர்சனத்தை படித்துவிட்டு புத்தகம் வாங்கியதாகவும் சொன்னார். புத்தகத்தை படித்துவிட்டு சுமார் அரை மணிநேரம் பேசினார். பாராட்டினார். நிச்சயம் அடுத்த மாதத்தில் சந்திப்போம் என்று சொன்னார். அவர் சொன்ன விஷயஙக்ளில் முக்கியமானது ரெண்டு விஷயம். ஒன்று இப்புத்தகம் ஒவ்வொரு தயாரிப்பாளர் இயக்குனரும் படிக்க வேண்டிய புத்த்கம் என்பது. இன்னொரு விஷயம் தினத்தந்தியில் போட்டிருந்த விமர்சனம் பற்றி. கிழக்கு ஹரன்பிரசன்னா சொன்ன விஷயம் ஒன்று நியாபகத்துக்கு வந்தது. தினத்தந்தி விமர்சனத்துக்கு பிறகு நானூறுக்கும் மேற்பட்ட கால்கள் வந்ததாய் சொன்னது. ஒரு புத்தகத்தை சரியாக கொண்டு போய் சேர்ப்பதில் கிழக்குக்கு நிகர் கிழக்குத்தான். இதை நான் சொம்படிப்பதாகவே சொன்னாலும். சுயபுராணமாக இருந்தாலும்.. சொல்லத் தோன்றியது. சொல்லாமல் இருக்க முடியவில்லை. சினிமா வியாபாரம் முதல் ப்ரிண்ட் விற்று முடிந்து இரண்டாவதாக  ரீ ப்ரிண்ட் செய்யப்பட்டிருக்கிறது. என்பது சந்தோஷ விஷயம். 

லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் வேலூர் புத்தக கண்காட்சியில் கிடைக்கிறது. நாகரத்னா பதிப்பகம் இப்புத்தக கண்காட்சியில் ஒரு ஸ்டாலை எடுத்திருக்கிறார்கள் ஸ்டால் நெ.51 வேலூர் ரெட் போர்ட் கோட்டை மைதானத்தில் கண்காட்சி. அனுமதி இலவசமாம்.  
##################################################################
புதிதாய் ஒரு படத்தின் இணை இயக்குனராய் வேலை பார்பதால் ஒரு பத்து நாளாய் டிஸ்கஷன் அது இது என்று பிஸி.. நிறைய படங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது. அதில் முக்கியமானது பீப்லி வைவ்வும், நேஷனல் அவார்ட் வாங்கிய அந்தார்ட்வாண்ட் என்கிற இரண்டு ஹிந்தி படங்கள் தான். எல்லா தியேட்டர்களிலும் ஒரு ஷோ, அரை ஷோ என்று போட்டிருப்பதால் சரியான டைமில் பார்க்க முடியவில்லை. இந்த வாரம் பார்க்கணும்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
இந்த வார ஆச்சர்யம்
anupam mukarjee Fakeiplplayer.com என்கிற பெயரில் எழுதிவந்தது யார் என்று ஏகப்பட்ட ஸ்பெகுலேஷனில் இருந்தவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் அவர் பெயர் அனுபம் முகர்ஜி. விப்ரோவின் முன்னாள் எம்ப்ளாயர். கேம் சேஞ்சர் என்கிற புத்தகம் எழுதிக் கொண்டிருக்கிறவர். அவர் என்ன சொல்கிறார் என்றால் நான் அதில் விளையாட்டு வீரர்களை பற்றி எழுதிய விஷயங்கள் எல்லாமே கற்பனை என்றும், த ஹோக்ஸ் என்ற ஆங்கிலபடத்தில் வருவது போல தானும் செய்ய நினைத்து எழுதியதாகவும், தன்னுடய தளத்திலேயே இதை எழுதுவது யாராக இருக்கக்கூடும் என்று சர்வே போல் எடுத்த்தாகவும் கூறியிருக்கிறார். இதை எழுதியதில் எந்த்விதமான உள்நோக்கமும் இல்லை என்றும் வெறும் ஜாலிக்காக எழுதினேன் என்றும் சொல்லியிருக்கிறார். http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2010/08/29&PageLabel=15&EntityId=Ar01502&ViewMode=HTML&GZ=T
&&&&&&&&&&&&&&&&&&;&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
சினிகூத்து.
கெளதம் மேனனின் “நடுநிசி நாய்கள்” படம் முழுவதுமே இரவில் எடுக்கப்பட்டதாம். இதன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா. இப்படம் சூப்பர் 16எம்.எம்மில் எடுக்கப்பட்டிருப்பதாகவும், முக்கியமாய் ஒரு மல்டி பர்பஸ் வண்டியில்தான் கதை நகர்வதால் அதனுள் வைத்து ஷூட் செய்வதற்கு வசதியாய் சின்ன கேமராவாகவும், கொஞ்சம் ராவாக புள்ளிகளூடனான ஒரு பீல் தேவையாக இருப்பதால் அந்த பிலிமை தேர்ந்தெடுத்ததாக சொல்லியிருக்கிறார். இந்த ஷங்கரின் 3 இடியட்ஸ் கேமராமேன்.
&&&&&&&&&&&&&&&&&&&&&ampp;&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார விளம்பரம்
உலகின் சிறந்த விளம்பரங்களில் ஒன்றாகவும், காஸ்ட்லியான விளம்பரங்களில் ஒன்றாகவும் பெயர் பெற்றது.
&&&&&&&&&&&&&&&amp
இந்த வார குறும்படம்
ஒன்னரை நிமிடத்தில் ஒரு க்யூட்டான குறும்படம்.. இண்ட்ரஸ்டிங்
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
ஒரு விஷயத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் யாருமே வாழ்க்கையை சரியாக புரிந்து கொண்டவரில்லை. அதனால் புரிந்து கொள்ள் முயற்சிப்பவர்களுக்கு கொஞ்சம் பாராட்டுகளை தருவோம்.
&&&&&&&&&&&&&&&&a ஜோக்
ஒரு ஜோடி பாரீஸ் நகருக்கு சென்றார்கள். ஊரூக்குள் போனதும் கணவன் : நாம் உடனே ஈபிள் டவரை பார்க்க போகலாம் எனக்கூற… மனைவி : இல்லை ஓட்டல் ரூமுக்கு போவோம். என்றாள். ஏன் என்று கணவன் கேட்க மனவி : ஈபிள் டவர் என்னைக்குமே அங்கேயே தான் “நிக்கும்” இங்க அப்படியில்லையே என்றாள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&am&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
ஏஜோக்
ஒரு டாக்டரும் பெண்ணும் மேட்டர் செய்துவிட அதனால் அவள் கர்பமாகிவிடுகிறாள். ஒன்பது மாதம் கழித்து அவளுக்கு குழந்தை பிறக்கும் நேரத்தில் ஒரு பாதர் வயிற்று கட்டி ஆபரேஷனுக்காக வர, டாக்டர் ஒரு ஐடியா சொல்கிறார். பிறக்கும் குழந்தையை டாக்டர் வயிற்றிலிருந்து பிறந்ததாக சொல்லி அவரை ஏமாற்றி தலையில் கட்டிவிடலாம் என்று முடிவு செய்து ஆபரேஷன் முடிந்ததும், பாதரிடம் “பாதர் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் நிஜம் நான் தான் ஆபரேஷன் செய்து எடுத்தேன். இதோ உங்கள் குழந்தை” என்று கொடுக்க, நம்பி குழந்தையை வளர்க்க அரம்பித்த் பாதர் சில வருடங்கள கழித்து அந்த பையனிடம் “நான் உன் தந்தையில்லை” என்று சொல்ல பையன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று அதிர்ச்சியடைந்தான். “ஆம்.. நான் தந்தையில்லை.. தாய்.. உன் தந்தை பிஷப்தான்” என்றார்.

பெண்கள் ஆசைப்படும் ஆணின் பேண்டினுள் இருக்கும் ஒரு ஆறு இஞ்ச் விஷயம் எது?
அவன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் ஆயிரம் ரூபாய் நோட்டு. கெட்ட பசங்க.. தப்புதப்பா யோசிக்காதீங்க..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
கேபிள் சங்கர்

Aug 29, 2010

உங்கள் பக்கம்

1)என் விரலிடுக்கில்
வழிந்தோடும் மழைத்துளி

மகரந்தங்களை வெறுக்கும்
புதுவகைப் பூக்கள்

இன்னும் தொடர்கின்றது
அடர்வனத்தின் ஆழத்தில்
கறைபடாத மணம்வீசும் 
மலருக்கான தேடல்

தொலைத்த ஆசைகள்
மழலை உடைத்த பொம்மைகளாய்

என் தவமோ

சபிக்கப்பட்ட காதலை
வரமாய்த் தந்த தேவதைகளைத் தேடி...


2)சும்மாத் தான் இருக்கிறேன்
கவிதை எழுதும் வேலையாவது
கொடேன்!

என்று கேட்டேன்

கொஞ்சம் முத்தமிட்டுப்போ 
என்றாய்

வேலைகேட்டால்
சம்பளம் தருகிறாயே!

3)சுற்றும் பூமி
உன் கால்களுக்குக் கீழ் 
என்றேன்

தலைதான் சுற்றுகிறது
என்று நீ
கண் சுழற்றியபோது

நிஜமாகவே 
சுற்றத் தொடங்கியது பூமி

4)ஆடை அணியாமை
பூக்களுக்கு அழகு என்றேன்

என்னை இழுத்து 
போர்த்திக் கொண்டாய்

5)கொஞ்சும் குழந்தையாய்
உன் தெத்துப்பல்

நாவினால்
தடவித் தரட்டுமா?


டிஸ்கி; இந்த கவிதைகளை எழுதியவர் பதிவர் திரு. விந்தை மனிதன் அவர்கள். மேலும் அவர் படைப்புகளை படிக்க...http://vinthaimanithan.blogspot.com/
உங்கள் படைப்புகள் இந்த பக்கத்தில் வர என்னுடய மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பவும்.. பரிசீலினைக்கு பிறகு பதிப்பிக்கப்படும்..

Aug 28, 2010

மாஸ்கோவின் காவேரி

அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும்  சமந்தா, ஸ்மார்ட்டான பையன், ஆங்காங்கே பிக்சர்க்யூ ஷாட்டுகள், ஒவர்லாப்பில் வசனங்கள், ஒரே ஜம்ப் கட் ஷாட்டுகள்,  ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன் வேறு நடித்திருக்க, ஒரு நல்ல தயாரிப்பாளர் என்று கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும்  படமாக்கிவிட முடிகிறது.. கீழிருக்கும் படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் பாக்யவான்கள். இதற்கு மேல் ஒன்னும் சொல்லி பிரயோஜனமில்லை..
mascovinkaveri-may14-2008MoscovinKaveriMain5  Moscovin-Kaveri-stills-01  yasodha-06 yasodha-10 இருக்கிற டைட் ஷெட்யூலில் கஷ்டப்பட்டு நைட் ஷோ வேறு. ட்ரைலரை பார்த்து ஏமாந்து போன சோனகிரிகளில் நானும் ஒருவன். தமனின் கோரே.. கொக்கோரே பாட்டையும் கட் செய்துவிட்டார்கள். ஆ ஒருத்தருக்கு நன்றி சொல்லணும். அது இயக்குனர் ரவிவர்மனுக்கு.. மொத்தமா 100 நிமிஷத்துல படத்தை முடிச்சு அனுப்பினதுக்கு. பி கிரேட் படங்களில் கூட ஏதாவது கதைன்னு ஒன்னு வச்சிருப்பாங்க..
மாஸ்கோவின் காவேரி – வேணாம் இருக்கிற கடுப்புல எதாவது சொல்லிருவேன்.

Aug 27, 2010

எண்டர் கவிதைகள்-10

mountain_man__meet_microtek__1_by_pseudome எதிர் வீட்டு வண்டி


குறுக்கே நிறுத்தப்படாமல் இருக்க வேண்டும்


காலை அவசரத்துக்கு


ஒரு உதையில் கிளம்ப வேண்டும்


மேம்பாலத்தில் முன் செல்லும் வண்டியின்


பிரேக் சரியாக பிடிக்க வேண்டும்


அழுந்த பிடிக்கும் போது


க்ளட்ச் வயர் கட்டாகாமல் இருக்க வேண்டும்


சாயங்காலம் திரும்ப வருகையில்


மூச்சடைக்கும் ட்ராபிக் இல்லாமல் இருக்க வேண்டும்


பின்னால் வரும் தண்ணீர் லாரி


என் மேல் இடிக்காமல் நிறுத்த வேண்டும்


வீடு வந்து சேர்வதற்குள்


உயிரோடு இருக்க வேண்டும்


என ஆயிரம் வேண்டும்கள்


இவ்வனைத்தும் நடந்தால்


அடுத்த நாளும் அஃதே நடக்க வேண்டும்.


டிஸ்கி: எண்டர் கவிதைகள் எழுதி ரொம்ப நாளாகிவிட்டது என்று கடிதமெழுதியும், தொலைபேசியிலும் விரும்பிகேட்ட, சூலமங்களம் சுசீலா, காட்பாடி ரங்கராஜன், குத்ரேமுக் முத்துசாமி மற்றும் பலரின் விருப்பத்தின்படியால்..
கேபிள் சங்கர்

Aug 26, 2010

Neelathamara(2009)

Malayalam Movie Neelathamara Wallpapers- _5_ சமீபகாலமாய் மலையாள படங்கள் பார்ப்பது குறைவாகிவிட்டது. அதையும் மீறி சில நண்பர்கள் ரெகமண்டேஷனில் சில படங்கள் பார்ப்பதுண்டு அப்படி வந்த சிபாரிசில் நான் பார்த்த படம் தான் நீலத்தாமரை. எம்.டி.வாசுதேவன் நாயர் கதையில், லால்ஜோஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய படம் என்று சொன்னார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னால் இதே பெயரில் வெளிவந்த படத்தைத்தான் ரீமேக்கியிருக்கிறார்கள் என்பது உபரி செய்தி.

வழக்கமாய் மலையாளத்தில் அவ்வளவாக காதல் கதைகள் பார்த்ததில்லை. இது ஒரு காதல் கதை. வயதான முத்தச்சி ஒருத்தி தனியாய் உடல் நலம் குன்றியிருக்க, அவரை பார்க்க, அவரது டாக்குமெண்டரி எடுக்கும் பேத்தியும், மருமகளும் வருகிறார்கள். பேத்தி அவ்வூர் கோயிலில் இருக்கும் ஒரு அதிசயமான காசு வைத்து தொடர்ந்து கடவுளிடம் வேண்டினால் மட்டுமே பூக்கும் நீலநிற தாமரை பூவை பற்றி டாக்குமெண்டரி எடுக்கிறாள். முன்பு அந்த முத்தச்சியின் வீட்டில் வேலை பார்த்த குஞ்சுமோல்  அவரை பார்க்க வருகிறாள். வந்த இடத்தில் மருமகளும், குஞ்சுமோலும் தங்க நேரிட, இரவு இருவரும் தனிமையில் இருக்கும் போது மருமகள், குஞ்சுமோலிடம் உனக்காக என் கணவர் சாவதற்கு ரெண்டு நாள் முன் ஒரு லெட்டர் எழுதி வைத்திருந்ததாகவும், அதை போஸ்ட் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் அந்த கடிதம் தன்னிடமிருக்கிறது உன்னிடம் கொடுக்கட்டுமா என்று கேட்கிறாள். குஞ்சுமோல் வேண்டாம் என்று சொல்ல,  ஒரு ப்ளாஷ்பேக் ஆரம்பிக்கிறது.
Neelathamara photos இருபது வருடங்களுக்கு முன்னால் முத்தச்சியின் வீட்டில் வேலைக்கு வந்து சேருகிறாள் வண்ணாத்தியான குஞ்சுமோல். நல்ல அழகும் இளமையும் ததும்பும் வயதில் வேலைக்கு வரும் அவள் முத்தச்சியின் மகனான ஹரிதாஸின் அழகில் மயங்குகிறாள். அஃதே ஹரிதாஸும். பின்பு ஒரு சுபயோக சுபதினத்தில் அவனிடம் தன்னை இழக்கிறாள். பின்பு அவன் தன்னைத்தான் திருமணம் செய்து கொள்வான் என்று நினைத்திருந்த நேரத்தில் அவன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வர, தன் நிலையை கண்டு என்ன செய்வது என்று தெரியாமல் அழுகிறாள். ஒரு கட்டத்தில் வேலைக்கார பெண் குஞ்சுமோலுக்கும்  தன் கணவனுக்குமிடையே இருக்கும் உறவை தெரிந்து கொண்ட மனைவி, கணவனை திட்ட, கொஞ்சம்கூட மனவருத்தமோ, குற்ற உணர்ச்சியோ இல்லாமல் இருக்க, வேறு வழியில்லாமல் அவள் வேலைக்கார பெண்ணை வீட்டை விட்டு போகச் சொல்கிறாள். அவளுடய முறை மாப்பிள்ளை அவளை வந்து கூட்டிப் போய் திருமணம் செய்து கொண்டு விட மீண்டும் இருபது வருடங்களுக்கு பிறகு முத்தச்சி உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால் வந்து பார்க்க வருகிறாள். ப்ளாஷ் பேக் முடிந்து படமும் முடிந்துவிடுகிறது.
 Neelthamara Photos கதையாய் பெரிதாய் ஏதும் என்னை இம்ப்ரஸ் செய்யவில்லை என்றாலும். ஒளிப்பதிவும், வித்யாசாகரின் இசையும் அப்பப்பா.. ஆனந்தமயம். அதிலும் அந்த பச்சை பசேலென்ற கேரள கிராமமும், குளம், ஒத்தையடி பாதை, அப்போது வரும் பின்னணியிசை என்று மனதை நெகிழ வைத்திருக்கிறார்கள் இருவரும் இவர்கள் இல்லையென்றால் படமே இல்லை என்று சொல்லலாம். அவ்வளவு அழகு.

குஞ்சுமோலாக வருவது அர்சனா கவி. தற்போதைய வசந்த பாலன் படத்து கதாநாயகி அவரது ரியாக்‌ஷன்கள் கண் மொழி வீச்சும் அபாரம், ஹரிதாஸ் கூப்பிடும் போது முகத்தில் தெரியும் ஆர்வமும், வெட்கமும் அவ்வளவு நிஜம். ஹ்ரிதாஸின் மனைவியாக வரும் சம்விருதாவின் ஓங்கி வளர்ந்த பாங்கும், முகத்து கருப்பு மருவும் பெரிய கண்களும் ம்ஹும்..

வீட்டினுள் இருக்கும் மாடிப் படியில் இருக்கும் மூன்றாவது படி உடைந்திருகிறது என்பதற்காக ராத்திரியில் முக்கியமாய் மூன்றாவது படியில் கால் வைக்காமல் போகுமிடம். பின்பு அதே மாடிக்கு ஹரிதாஸின் மனைவி போகும் போது அவளிடம் மூன்றாவது படியில் கால் வைக்காதீர்கள் என்று துக்கம் மேலிட சொல்லும் காட்சி. பக்கத்து வீட்டு முதிர்கன்னியிடம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள பேசும் காட்சியில் குஞ்சு மோலின் முகத்தில் தெரியும் வெட்கம். ஹரிதாஸுக்கும் குஞ்சுமோலுக்குமிடையே செக்ஸ் நடந்த பிறகு ஹரிதாஸின் பால் செளஜன்யமாய் மாறும் குஞ்சுமோலின் உடல் மொழி என்று கூர்ந்து ரசிக்க நிறைய இடங்கள் இருக்கிறது.

அதே போல் படத்தில் சின்ன, சின்னதாய் வரும் பக்கத்துவீட்டு முதிர்கன்னி, அந்த மரத்தடி கிழவர், பக்கத்துவீட்டு காட்டப்படாத பாகவதர், மற்றும் அவரது குரல். குஞ்சு மோலின் மனநிலையை அவரது குரலின் மூலமாய் வெளிப்படுத்தும் உத்தி. பின்பு அவளை விட்டு ஹரிதாஸ் கல்யாணம் செய்த பின்பும், அவளுக்கு மட்டும் கேட்கும் பாகவதர் குரல்  என்று குறியீடுகளாய் பல கேரக்டர்கள் மூலம் இயக்குனர் நம் மனதை ஆக்கிரமிக்கவே செய்கிறார்.  பரபரப்பான சினிமா பார்த்து பழகியவர்களுக்கு ஆரம்பத்தில் செல்ப் எடுக்க கொஞ்சம் லேட்டானாலும், ரொம்பவும் போரடிக்கிறபோது சாவகாசமாய் பார்க்க ஏதுவான படம். நீலத்தாமரா
நீலத்தாமரா – கொஞ்சம் கவிதை
கேபிள் சங்கர்

Aug 25, 2010

சாப்பாட்டுக்கடை

vadakari ”ஜாம்பஜார் ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு” என்கிற பாடலில் சைதாப்பேட்டை வடகறி என்று எழுதும் அளவிற்கு பிரபலம் வடகறி எனும் ஒரு சைட் டிஷ். சின்ன வயதில் நான் என் மாமனும் ஓட்டலுக்குப் போய் வடகறி என்பது ஒரு மெயின் டிஷ் என்று நினைத்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு வடகறி கேட்க, சர்வ் செய்பவன் எங்களை ஏற இறங்க பார்த்தவனை “அது சரி.. அதுக்கு சைட் டிஷ் என்ன தருவீங்கன்னு” கேட்டு விழிக்க வைத்தவர்கள் நாங்கள்.

அப்படிபட்ட வடகறி என்கிற பிரபல அயிட்டத்துக்கு பேர் போன கடை தான் சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் இருக்கும் மாரி ஓட்டல். ஒரு காலத்தில் சின்ன டீக்கடை ஓட்டு வீடாய் இருந்த ஹோட்டல் இப்போது கட்டிடமாய் மாறியிருக்கிறது.

இவர்களின் ஸ்பெஷாலிட்டி வடகறி, காலையிலிருந்து இரவு வரை வடகறி மட்டும் சின்ன டம்ளர்களிலும், தூக்கு சட்டியிலும், ப்ளாஸ்டிக்கவர்களிலும், இப்போது ஹோட்டல் காரர்களே  ப்ளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்து  தர, போய் கொண்டேயிருக்கும், அவ்வளவு சுவை. இது இட்லி, தோசை, பரோட்டா, செட் தோசை என்று எல்லா விதமான அயிட்டங்களுக்கும் சேரும்.

வடகறி என்கிற அயிட்டம் மீந்து போன வடை வகைகளை வைத்து செய்யப்பட்ட ஒரு சைட் டிஷ் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவர்கள் தினமும் இதற்காகவே வடை மாவு வகைகளை செய்து  தயார் செய்கிறார்கள். முக்கியமாய் இவர்கள் தயாரிக்கும் சுவை. சூடான தோசையின் மேல் வடகறியை போட்டு, ஊற வைத்து,  சைடில் இருக்கும் நல்ல ரோஸ்டான தோசையை  வடகறியோடு சாப்பிட்டு பாருங்கள். ம்ம்ம்ம் அட்டகாசமான சுவை.  கடைசியாய்  வடகறியில் ஊறியிருக்கும்  தோசையை சாப்பிட்டுப் பாருங்கள். ம்.. அது அதை விட அட்டகாசமாய் இருக்கும். 
Photo0075 இதை தவிர, மாலை நேரங்களில் இப்போது சோளா பட்டூரா, அடை, ப்ரைட் ரைஸ் போன்ற் அயிட்டங்களும்  நன்றாக இருக்கும் முக்கியமாய் குருமா.. அது வழக்கமாய் எல்லா ஓட்டல்களீல் இருப்பது போல காரமாகவோ, நீர் போல இல்லாமல் நல்ல கெட்டியாய் வித்யாசமான சுவையோடு, இருக்கும்  காலையில் நான்கு  இட்லி சாப்பிட நினைத்து ஹோட்டலுக்கு போகிறவர்கள். வடகறியோடு சாப்பிட்டால் இன்னும் ரெண்டு உள்ளே இறங்காமல் இருக்காது.

வடைகறி செய்முறை
தேவையானவை:
கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன்
தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்
மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து மீண்டும் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.
இறக்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.
வடைகறியை இட்லி தோசைக்கு side dish ஆக உபயோகித்தால் மேலும் அதிகமாக இரண்டு உள்ளே இறங்கும்.
ச்மையல் குறிப்பு:  Kanchana Radhakrishnan
கேபிள் சங்கர்

Aug 24, 2010

இனிது.. இனிது

Inidhu Inidhu  Movie Stills (39) தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ஹேப்பி டேஸ் என்ற படத்தின் ரீமேக், ப்ரகாஷ்ராஜின் தயாரிப்பு என்ற மரியாதை எல்லாம் சேர்ந்து படத்தின் மேல் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த படம். நான் ஏற்கனவே தெலுங்கு படத்தை ஷாட் பை ஷாட் அறுபது தடவைக்கு மேல் பார்த்து மனப்பாடம் செய்துவிட்டபடியால் எந்த காட்சியை பார்த்தாலும் ஒரிஜினல் படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை

சிததார்த், மது, சங்கர், சங்கீதா, அப்பு என்கிற அபர்ணா, அந்த எம்.எல்.ஏ பையன், அரவிந்த் எனும் டைசன், சீனயர் ஷ்ர்ப்ஸ் எனும் ஷ்ரவந்தி என்று நான்கு ஜோடிகளை சுற்றி சுற்றி வரும் கதை. இவர்களின் நான்கு வருட கல்லூரி வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கிறார்கள். தனியாக இவர்களுக்குள் காதல் என்று ஆரம்பித்து ஓட்டாமல், மிக இயல்பாய் நட்பினூடே அலைபாயும் காதலை, அதன் பின் வரும் ஈகோவை மிக அழகாய் சொல்லியிருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம். எப்போதும் சீரியஸாய் தன் படிப்பு, தன் வாழ்க்கை என்று செல்ப் செண்டர்டாய் அலையும் சங்கர், சும்மா ஜாலிக்காக சுற்றும் சங்கிதா. சீனியர் ஷ்ராப்ஸ், கிராமத்திலிருந்து வந்து படிக்கும் இளைஞன். குண்டு சீனியர் மாணவன். எதையும் பாஸிட்டிவ்வாகவே எடுத்துக் கொள்ளும் டைசன் எனும் அரவிந்த். என்று படம் முழுவதும் வாழும் கேரக்டர்கள். இம்மாதிரியான கேரக்டர்களை நிச்சயம் நம் கல்லூரி வாழ்க்கையில் பார்க்காமல் தவிர்த்து வ்ந்திருக்க முடியாது.

காட்சிக்கு காட்சி இளமை பின்னி பெடலெடுக்கிறது. வைக்கும் ஷாட்டிலாகட்டும், எடிட்டிங்கிலாகட்டும், மாணவர்களின் உடைகளில் ஆகட்டும், எல்லாவற்றிலும் இளமை, இளமை..இளமை.. அவ்வளவு இளமை.
inidhu_inidhu_movie_stills_photos_15 நடிகர்களில் இங்கிலீஷ் ப்ரொபசராக வரும் அஞ்சலா ஜாவேரியை, ஷ்ராப்ஸாக தெலுங்கில் நடித்த சோனியாவை தவிர எல்லாரும் புதுமுகங்களே. அருமையான தேர்வு. முக்கியமாய், டைசன், விக்கி எனும் எம்.எல்.ஏ பையன், சங்கர், சங்கீதா கேரக்டர்கள், மதுவை துரத்தி, துரத்தி காதலிக்கும் சீனியர் பையன். என்று ஒவ்வொரு கேரக்டரும் பொறுக்கி, பொறுக்கி தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

தமிழ் படத்துக்காக நிறைய இடங்களில் மாற்றியமைத்திருக்கிறார்கள். ஒரு சில மாற்றங்கள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. முக்கியமாய் அந்த சீனியர் குண்டு மாணவன் சம்பந்தபட்ட காட்சிகள் தெலுங்கில் கொஞ்சம் பேண்டஸியாக இருக்கும். அதே போல் விக்கி வேறு ஒரு பெண்ணுடன் சுற்றுவதை சகிக்காமல் டைசனிடம் ஒரு கெமிக்கலை வாங்கி நாற்றமடிக்க செய்வதற்கு பதிலாய், இதில் விக்கிக்கு கோலாவில் ஒரு திரவத்தை ஊற்றிக் கொடுத்து செய்திருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது.

படத்தின் இயக்குனர் குகன ஒரு ஒளிப்பதிவாளர் என்கிற படியால் ஒவ்வொரு ப்ரேமும் கண்களில் ஒத்திக் கொள்ளலாம். அவ்வளவு அழகு. முக்கியமாய் அந்த கேரளா எபிசோடும், தேசியக் கொடி காட்சியும் மனம் கொள்ளை போகிறது.
InidhuInidhu நடித்த புதுமுகங்களில் சித்து, அரவிந்த், மது, விக்கி எல்லோரும் ஸ்கோர் செய்கிறார்கள். தெலுங்கு தமன்னாவை விட இந்த பெண் கொஞ்சம் குறைவுதான் என்றாலும், சில கோணங்களில் மிகவும் சின்ன பெண்ணாகவும், பல கோணங்களில் நல்ல அழகாக இருக்கிறார். காலேஜ் கேம்பஸே மிகவும் ரிச்சாக இருப்பதால் ஒரு ஹைஃபை விஷுவல் இம்பாக்ட் இருப்பதால் கொஞ்சம் அந்நியத்தன்மை இருக்கவே செய்கிறது.

இசை மிக்கி.ஜே.மேயர். தெலுங்கில் இவரது பாடல்கள் சூப்பர்ஹிட். அதனால் அதே பாடல்களை இதில் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். அந்த வகையில் பாடல்கள் மனதை தொடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நா.முத்துக்குமார், வைரமுத்து என்று பெரிய ஜாம்பவான்கள் எழுதியிருந்தும் ஏனோ மனதில் நிற்க மாட்டேன் என்கிறது பாடல்கள்.
 
தெலுங்கில் படம் பார்த்தவர்களுக்கு ஏனோ இந்த படம் ஒரு அன்னியமாய் தோன்றுவதை மறுக்க முடியாது. ஆனால் தமிழில் பார்ப்பவர்களுக்கு நிச்சயம் படம் பிடிக்கும். அதுவும் காலேஜ் மாணவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். தெலுங்கில் சென்னையில் ஐம்பது நாளுக்கு மேல் சத்யமில் ஓடிய படம் வேறு.
என் தனிப்பட்ட கருத்தில் தெலுங்கில் இயக்குனர் தன் நிஜ வாழ்வில் நடந்த பல சம்பவங்களை மெல்ல கொஞ்சம் கொஞ்சமாய் தொகுத்து, மிக மெல்லமாய் அன்போல்ட் செய்யும் முறையில் படம் பார்த்து பழக்கப்பட்டுவிட்டதால். சில இடங்களில் ஜம்ப் ஆகி போகும் தமிழ் திரைக்கதையில் ஏதோ ஒரு நேட்டிவிட்டு குறைவது போல் இருப்பது என் பிரமையாக இருக்கலாம். ஆனால் இப்படம் நிச்சயம் ஒரு கறுப்பு குதிரை..
இனிது இனிது- இனிமை.
கேபிள் சங்கர்

Aug 23, 2010

கொத்து பரோட்டா-23/8/10

DSC00797 DSC00798
சினிமா வியாபாரம் புத்தக வெளியீட்டிற்கு கடும் மழையையும் பொருட்படுத்தாது வந்திருந்து சிறப்பித்த விழா நாயகர்கள் திரு. நா.முத்துக்குமார், திரு.பிரமிட் நடராஜன், ஒளிப்பதிவாளர் திரு. மதி அவர்களுக்கும், வந்து கலந்து கொண்டு வாழ்ததிய நல்லுங்களாகிய நண்பர்களுக்கும், விழாவை சிறப்பாக அமைத்த கிழக்கு பதிப்பக நிறுவனத்திற்கும் நன்றிகள் பல. புத்தகம் அபீஷியலாய் நேற்றுதான் வெளியானாலும், வெளியான வெகு சில நாட்களில் எல்லா கடைகளிலும் விற்று தீர்ந்து, அடுத்த ரீபிரிண்டுக்காக அர்டர் கொடுக்கும் அளவுக்கு ஆதரவு கொடுத்திருக்கும் வாசக நண்பர்களுக்கும் என் நன்றியோ.. நன்றி..
DSC00804 DSC00801
DSC00807 DSC00812
வீடியோ பார்க்க :http://thoughtsintamil.blogspot.com/2010/08/blog-post_22.html
மேலும் படங்கள் பார்க்க : http://kaveriganesh.blogspot.com/2010/08/blog-post.html
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு வேண்டுமென்று பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்து, உயர்வும் செய்துவிட்டார்கள். பதினைந்தாயிரம் ரூபாயிலிருந்து, ஐம்பதாயிரம் ரூபாய் என்று ஏற்றியும், அது போதாது என்று போராட்டம் செய்திருக்கிறார்கள். இவர்கள் எம்.பியாக செலவழிக்கும் பணத்திற்கு நான்கு மடங்கு பெரிதாய் ஊழல் செய்யாமலே சம்பாதிக்கிறார்கள். இதில் இந்த சம்பளம் எல்லாம் ஜுஜுபி அவர்களுக்கு. நமக்கான பிரதிநிதிகளுக்கு சம்பளம் கொடுப்பதும், அவர்கள் உயர்வு கேட்பதும் நியாயம் தான் என்றால். அவர்களுக்கான சம்பளம் கொடுப்பது நமது காசில் தான் ஸோ. நாம் அவர்களின் முதலாளிகள். ஐந்து வருடங்கள் வரை காத்திராமல் ஒழுங்காய் வேலை செய்யாத எம்.பிக்கள் எல்லாரையம் வேலையைவிட்டு தூக்கும் உரிமையை அரச நமக்கு கொடுக்குமா?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
பதிவுலகத்தில் சமீப காலமாய் ஒரு ஜுரம் ஓடக் கொண்டிருக்கறது. அது என்னவென்றால்.. எந்திரனை தவிர்ப்போம், புறக்கணிப்போம். எந்திரனால் ஏழைகளுக்கென்ன லாபம்? தோழர், அது இது என்று ஏதேதோ.. புரட்சிகரமான கருத்துக்கள் என்று நினைத்துக் கொண்டு ஆளாளுக்கு எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு ஒன்றும் மட்டும் புரியவில்லை. இப்படி புறக்கணிப்போம் என்று எழுதிவிட்டால் மட்டும் புறக்கணித்துவிடுவார்களா? இல்லை இப்படி எழுதும் இவர்கள் தான் முதல் வாரத்தில் படம் பார்க்காமல் இருந்துவிடப் போகிறார்கள். சினிமா, தொலைக்காட்சியோ அது ஒரு தொழில் அதில் யாரையும் கட்டாயப்படுத்தி உள்ளே சென்றுதான் ஆக வேண்டும் என்று உள்ளே அனுப்புவதில்லை. யாருக்கு எது விருப்பமோ.. அதை அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப.. இவர்கள் பதிவெழுவதை போல..  யார் சொல்லியும் யாரும் கேட்டு விடப் போவதில்லை. So let them decide what to do? why we should impose?
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
செவிககினிமை
சமீபத்தில் அய்யனார் படத்து பாடல்களை கேட்டுக் கொண்டிருந்தேன். அதில் வரும் ஆத்தாடி ஆத்தாடி நல்ல மெலடி. தமன் நிஜமாகவே நனறாக கல் உடைத்திருக்கிறார்( நன்றி: ஜெட்லி). பாடலின் ஆரம்பத்தில் வரும் வயலின் நன்றாக இருககிறது. Have a ear..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார தத்துவம்
எப்போதும் ஒரு வி்ஷயத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளூங்கள். தடைகள் உங்கள் வளர்ச்சியை த்டுப்பதில்லை. எது உங்கள் வளர்ச்சியை தடுக்கிறது என்றால் நீங்கள் தடை என்று நினைக்கும் அந்த நினைப்புததான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார குறும்படம்
இந்த குறும்படம் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியது. மிக அழகான ஒரு சிறுகதை இந்த துறு குறும்படம். நகைச்சுவையாகவும், அதே நேரத்தில் மிக அழகான சின்ன சின்ன ஷாட்களால் மிக இயல்பாக கதை சொன்ன விதம் அருமை.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார விளம்பரம்
இந்த விளம்பரம் சொல்லும் விஷயங்கள் ஆயிரம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
உங்களுக்கு தெரியுமா?
கண்ணைத் திறந்து கொண்டு யாராலும் தும்ம முடியாது.sneeze$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
லேட்டரல் திங்கிங்
சிந்திப்பது நல்ல விஷயம் அதிலும் அவுட் ஆப் த பாக்ஸ் சிந்திப்பது நமக்கு இன்னும் நல்லது. அப்படிப்பட்ட கேள்விகளை இங்கே அறிமுகப்படுத்துவதில் சந்தோஷமே.. (என்னா சிந்தனைப்பா?)

கேள்வி : ஒரு கூடையில் ஆறு முட்டைகள் இருக்கிறது. ஆறு பேர்கள் ஆளுக்கொரு முட்டையை எடுத்து சென்றுவிடுகின்றனர். அப்படியிருக்க ஒரு முட்டை மட்டும் எப்படி கூடையில் இருக்கும்?

விடை : பின்னூட்டத்தில் சொல்லுங்க..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஏஜோக்
ரூபிக் க்யூபிற்கும், லுல்லாவுக்குமிருக்கும் சம்பந்தம் என்ன?
அதிக நேரம் விளையாட, விளையாட, ரெண்டுமே டென்ஷன் ஆகும்.

ஒரு ஆணின் ஈகோவை தாக்கும் முக்கியமான இரண்டு வார்ததை?
உள்ள இருக்கா?

டிஸ்னி வேர்ல்டுக்கும் வயாக்ராவுக்கு இருக்கும் பொதுவான விசயம்?
ரெண்டுத்துக்குமே ரெண்டு நிமஷ ரைடுக்காக ரெண்டு மணி நேரம் வெய்ட் பண்ணனும்.

ஆடம் ஈவிடம் முதல் முதலில் செக்ஸ் வைத்திருக்க முயலும் போது என்ன சொல்லியிருப்பான்?
ஈவ் கொஞ்சம் தள்ளியே நில்லு இது எவ்வள்வு தூரம் வளரும்னு எனக்கு தெரியாது.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
கேபிள் சங்கர்

Aug 22, 2010

புத்தக வெளியீட்டு படங்கள்

புத்தக வெளியீட்டு படங்கள் உங்கள் பார்வைக்கு காவேரி கணேஷின் கேமராவிலிருந்து.

http://kaveriganesh.blogspot.com/2010/08/blog-post.html

Aug 21, 2010

நான் மகான் அல்ல

ஆயிரம் பாலோயர்களுக்கு நன்றி..நன்றி.. நன்றியோ.. நன்றி.. எல்லாரும் நம்ம புத்தக வெளியீட்டுக்கு வந்துருங்கோ...கேபிள் சங்கர்
Naan-Mahaan-Alla-wallpaper வெண்ணிலா கபடிக்குழு வெற்றிக்கு பிறகு இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் வந்திருக்கும் இரண்டாவது படம். அப்பாவை கொன்றவனை பழிவாங்கும் வழக்கமான கதை தான். அதை முடிந்த வரையில் இண்ட்ரஸ்டாக சொல்லியிருப்பதில் தான் இயக்குனரின் கைவண்ணம் தெரிகிறது.

வாழ்க்கையை பற்றி பெரிதாய் எதுவும் கவலைப்படாத கால்டாக்ஸி ட்ரைவரின் பையனான கார்த்திக்கு ஒரு கல்யாணத்தில் காஜல் அகர்வாலை பார்த்த மாத்திரத்திலேயே காதல் வந்துவிட, முதல் பாதி முழுவதும், காதலும், கொண்டாட்டமுமாய் போகிறது. ஒரு இரட்டை கொலை சம்பத்தில் ஈடுபட்ட ஆட்களை கார்த்தியின் அப்பா பார்த்ததினால் அவரை டெம்போ ஏற்றி கொலை செய்ய முயற்சிக்க ஆரம்பிக்கும் போது கதையின் டெம்போ ஏறுகிறது. பின்பு அவரை கொன்றவுடன், என்ன கார்த்தி அவரை பழிவாங்க போகிறார் என்று சாதாரணமாக சொன்னாலும் திரையில் பார்க்க ஒரு விஷுவல் பரபரப்பை கொடுத்திருப்பதை திரையில காணுங்கள்.
naan கண்களில் பல்பும், உதட்டில் சுழித்த சிரிப்புமாய் படம் பூராவும் சந்தோஷத்தை தவிர எதையும் சந்திக்காத இளைஞனை கண் முன் நிறுத்துகிறார் கார்த்தி. கல்யாண வீட்டில் பார்த்த மாத்திரட்திலேயே காஜலை காதலிக்க லவ் பெயிலியர் மேட்டரை ஆரம்பித்து வைப்பது. மொட்டை மாடியில் காதலை பற்றி விக்ரமன்பட ஸ்டைலில் தொடர்ந்து ஃபீல் செய்து வசனம் பேசுவது, செல் நம்பரை காஜல் வாங்கியிருகிறார் என்றதும், அவரிடமிருந்து போன் வருவதற்குள் பேசி வழிவது. அபிராமி மால் காட்சிகள். காஜலின் அப்பாவிடம் போய் நேரடியாய் பெண் கேட்பது என்று ஒரு துறு துறு இளைஞனாக வலைய வரும் கார்த்தி. அப்பாவின் விபத்துக்கு பிறகு தலைகிழாக மாறி வெறி கொண்டு அலையும் ஆவேச மகனாக தெரிகிறார்.

காஜல் அகர்வாலுக்கு பெரிதாய் வேலையில்லை காதல் காட்சிகளுக்கும், பாடலுக்கு மட்டுமே பயன் படுத்தியிருக்கிறார்கள். ஸோ.. விசூவலி க்யூட். சமீபகாலமாய் பசங்க படத்திலிருந்து கலக்கி வருபவர் தயாரிபாளர் ஜெயப்பிரகாஷ். ஒரு அன்பான அப்பாவாக உலவியிருக்கிறார். கொலை செய்யும் ட்ரக் அடிக்ட் காலேஜ் மாணவர்கள் நடிகர்கள் தேர்வு அபாரம். முக்கியமாய் அந்த பெரிய கண்களுடய பையனும், அவனுக்கு துணையாய் வரும் அந்த பரட்டைத்தலை பையனும். அவர்களுடய வெறியும், பாடிலேங்குவேஜும் அட்டகாசம். முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சியின் ச்ண்டையில் அவர்கள் காட்டும் வெறியும், பழிவாங்கும் உணர்ச்சியும் சில்லிட வைக்கிறது.
 naan-mahaan-alla-movie-review யுவனின் பாடல்கள் ஆல் ரெடி ஹிட்.  வா..வா நிலவை பிடிச்சி தரவா, ஒரு மாலை நேரம், இறகைப் போலே.. ஆகிய பாடல்களில் யுவனின் பையா.. பீல் கண்டின்யூ ஆகிறது. பின்னணியிசையிலும் யுவனின் கைங்கர்யம் மேலோங்கியே இருக்கிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸ் காட்சி. பாஸ்கர் சக்தியின் நகைச்சுவை இழையோடும் வசனங்கள் முதல் பாதிக்கு மிகப் பெரிய பலம். ஆங்காங்கே பளிச்சிடும் ஒன்லைனர்களும், மிக இயல்பான மிகைப்படுத்தாத வசனங்க்ளூம் ப்ளஸ் பாயிண்ட்.

படத்தின் பலத்திற்கு மிக முக்கியமான பலம் ஒளிப்பதிவாளர் மதி. முதல் பாதியில் தெரியும் இளைம துள்ளலுக்கு ஏற்றார் போல கலர்புல்லான லொக்கேஷன்கள், மேக்கிங் என்றிருந்தவர். அப்படியே க்ளைமாக்ஸின் டோனுக்கு ஏற்றார் போல ஒருவயலண்ட் மூடுக்கு கொண்டு வந்து நம்மை அதனுள் இருக்க வைத்துவிடுகிறார் மதி. கோடம்பாக்கம் ப்ரிட்ஜ் கொலைக்காட்சியும், க்ளைமாக்ஸ் சண்டை காட்சியும் அதகளம். க்ளைமாக்சின் சண்டை காட்சியை வடிவமைத்த அனல் அரசுவுக்கு பாராட்டுக்கள்.

முதல் பட வெற்றிக்கு பிறகு ஒரு கமர்ஷியல் கதையை தைரியமாய் எடுத்துக் கொண்டதற்கு சுசீந்திரனை பாராட்ட வேண்டும். அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குவது என்ற சாதாரண எல்லா மொழி படங்களிலும் அடித்து துவைக்கப்பட்ட ஒரு லைனை ப்ரெஷ்ஷாக கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தில் மைனஸ் என்று சொன்னால் ஒரு சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது. அந்த கலக்‌ஷன் மேனேஜரிடம் பேசும் மேட்டர், கலெக்‌ஷனுக்காக போகும் இடத்தில் நடக்கும் காட்சிகள், அப்பா இறந்ததும் சாவு பாட்டு, என்பது போன்ற சில டெம்ப்ளேட் காட்சிகள் வழக்கம் போல இருக்கத்தான் செய்கிறது. 

முதல் பாதி காதல் காட்சிகளில் வரும் காதல் காட்சிகள் நகைச்சுவை மிளிர செம லைவ்.. அண்ட் இண்ட்ரஸ்டிங்.. முவுவதும் வழக்கமாய் வரும் காட்சிகளின் ரிவர்ஸாக திரைக்கதை அமைத்தது நன்றாக இருக்கிறது.  காதலை தடாலென உடைத்து பர்மிஷன் கேட்பது, மிகப் பெரிய ரவுடியை வைத்து தன் பெண்ணை காதலிக்க கூடாது என்று மிரட்ட நினைத்து காஜலின் அப்பா, கார்த்தியை அழைக்க, கடைசியில் அவர்க்ள் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி, பின்னால் அந்த நட்பே தன் தந்தையின் கொலையை கண்டுபிடிக்க உதவி பெற வழிவகுப்பதும், அந்த காலேஜ் மாணவர்க் கேங்க், அந்த ஸ்கெட்ச் போடும் மாமா, அந்த தாதா, அவனுடய அல்லக்கைகள், என்று தேர்ந்தெடுத்த நடிகர்கள், திசை மாறாத விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத திரைக்கதை.  ஜாலியாய் போய்க் கொண்டிருக்கும் ஒரு படத்தை சட்டென வேறொரு மூடுக்கு மாற்றி அதில் ஆடியன்ஸை பயணிக்க வைத்ததில் ஜெயித்துமிருக்கிறார். ஒரு சில காம்ப்ரமைஸுகளுடன்.
நான் மகான் அல்ல – Live And Commercial Flick
கேபிள் சங்கர்

Aug 20, 2010

”காமன்”வெல்த் கேம்ஸும்… எஸ்கார்ட்டுகளும்..

ஆயிரம் பாலோயர்களுக்கு நன்றி.நன்றி..நன்றி.. கேபிள் சங்கர்
நேற்றிரவு ஹெட்லைன்ஸ் டுடேவை பார்த்ததும் கொஞ்சம் கிளுகிளூப்பாகவும் அதிர்ச்சியாகவும்  இருந்தது. இரண்டு பெண்கள் கையில் பணத்தை வாங்கியவுடன் சடுதியில் மேல் பனியனை கழட்டி விட்டு சிரித்தது கொஞ்சம் பக்கெனத்தான் இருந்தது.

மேட்டர் இதுதான். வழக்கமாய் எல்லா ஊர்களிலும் ஒரு திருவிழா, அல்லது ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்தால் நாலு ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஆட்கள் வருவது சகஜம். அப்படி வருகையில் உள்ளூர் கடைக்காரர்கள், ஹோட்டல்காரர்கள், எல்லோரும் எக்ஸ்ட்ராவாக ஆள்பலம், தயாரிப்பு பலத்தை உருவாக்கிக் கொண்டு  திடீரென உருவாகும் டிமாண்டுக்கு ஏற்றார் போல கஸ்டமர்களுக்கு சப்ளை செய்வார்கள். அந்த ஒரு சில நாட்களில் வியாபாரம் நல்ல சக்கை போடு போடும். அது போலத்தான். உலக கோப்பை, கிரிக்கெட், கால்பந்தாட்டம் என்று நடக்கும் உலகப் போட்டிகள் அனைத்துக்கும் வெளிநாடுகளிலிருந்து வரும் டூரிஸ்டுகளை நம்பி உணவு, தங்குமிடம் என்று மட்டுமல்ல..சதை வியாபாரமும் கொடி கட்டி பறக்கும்.

இப்போது அதே தான் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருமிருந்து எஸ்கார்டுகள் எனப்படும் விபச்சார பெண்கள் பிஸினெஸ் மேன்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டுக் காரர்கள் என்று வரும் ஆட்களுக்காக வரவழைக்கப் படுகின்றனர். பெரும்பாலும் இவ்வாறு வரவழைக்கப்படும் பெண்கள் மூன்று மாதம் டூரிஸ்ட் விசாவில் தான் வருகிறார்கள். அப்படி வந்து போகும் செலவு, மற்றும் தங்கும் இத்யாதி செலவுகள் எல்லாம் போக ஒரு பெரிய அமெளண்ட்டை பார்க்கிறார்கள்.

ஹெட்லைன் டுடேவில் இம்மாதிரியான எஸ்கார்ட் சர்வீஸ் நடத்தும் அயிஷா என்ற பெண்ணை ரகசிய கேமரா மூலம் கஸ்டமர் போல பேசி படமெடுத்து வெளீயிட்டிருக்கிறார்கள். அயிஷா என்கிற அந்த அப்மார்க்கெட் பெண், மிக கூலாக ஒரு இரவுக்கும் 100 $லிருந்து 5000$ வரைக்கும் கூட பெண்கள் கிடைப்பார்கள் என்கிறார். முக்கியமாய் டெல்லியில் மட்டுமே சுமார் 450க்கும் மேற்பட்ட எஸ்கார்ட் சர்வீஸ் நடத்தும் ப்ரோக்கர்கள் தொழில் செய்கிறார்கள் என்கிறது ஹெட்லைன்ஸ்.

வெளிநாட்டு பெண்கள் என்றால் ரஷ்யா, உஸ்பெஸ்கிஸ்தான், ஈரான், ஸ்பெயின், சுவிச்சர்லேந்து என்று உலகின் பல நாடுகளிலிருந்து பெண்கள் டெல்லிக்கு இறக்கப்படுகிறார்கள் டூரிஸ்ட் விசாவில். இருப்பதிலேயே ரொம்பவும் காஸ்ட்லியான பெண்கள் ஸ்பெயின் தானாம். அவர்களுக்கு 17 நாட்களுக்கு சுமார் 7-8 லட்சம் வரை ப்ரோக்கர் மூலமாய் கொடுக்க வேண்டுமாம். அதற்கு அடுத்த நிலை சுவிஸ் பெண்களுக்குத்தானாம். கடைசியாக குறைந்த பட்சம் ஒன்னறை லட்சம் ரூபாய் வரை கொடுத்து கூட்டி வருகிறார்களாம். டெல்லியில் இருக்கும் எல்லா ஸ்டார் ஓட்டல்களும் இப்போதே நிரம்பி வழிகிறதாம்.

இந்திய பெண்களுக்கும் ஏகப்பட்ட டிமாண்ட் உருவாகியிருப்பதால் பஞ்சாப் ஹரியானா, பெங்களூர், சென்னை, மும்பை என்று பகுதிவாரியாக பொறுக்கியெடுத்து ஆட்களை எஸ்கார்ட்ஸ் சர்வீஸ்கள் செய்யும் ஆட்கள் இறக்குகிறார்கள். இந்த எஸ்கார்ட் சர்வீஸ் என்று நடத்தும் ஆட்கள் வெளிப்படையாகவே இண்டெர்நெட்டில் ஒரு தனி வலைதளமே உருவாக்கி, அதில் ஒரு நம்பரையும் போட்டு வைத்திருக்கிறார்கள். கூகிளில் காமன் வெல்த் கேம்ஸ் எஸ்கார்ட்ஸ் என்று தேடினால் வரிசையாய் சைட்டுகளின் அணிவகுப்பு ஆரம்பிக்கிறது.

வெளிநாடுகளில் இம்மாதிரியான எஸ்கார்ட் சர்வீசுகள் சகஜம். ஆனால் இந்தியாவின் தலைநகரில் இதற்கு அனுமதியில்லாவிட்டாலும், வெகு பரபரப்பான நடந்து கொண்டுதானிருக்கிறது. ஹெட்லைன்ஸ் டுடேவின் வீடியோ க்ளீப்பிங்கை வைத்து நிச்சயம் ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பத்தான் போகிறது மற்ற அரசியல் கோஷ்டிகள். ஆனால் இது பற்றி டெல்லி போலீஸுக்கு பெரிய அவேர்னெஸ் இருப்பதாய் தெரியவில்லை என்கிறது ஹெச்.டி சேனல்.  சிறு தொழில் போல நடுத்தர வாழ்க்கை வாழ்வதற்காக போராடும் விபச்சாரம் செய்யும் பெண்களீடமிருந்து எஸ்கார்டடாக வரும் பெண்களூக்கும் இவர்களுக்கும் என்ன வித்யாசம் என்று பார்த்தால் முதல் பார்ட்டி லோக்கல், இவர்கள் ஹைகிளாஸ் அவ்வளவு தான் . இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது டெல்லி போலீஸூக்கு ஏதும் பெரிதாய் தெரியவில்லை. தகவல் கிடைத்தால் நிச்சயம் ஆக்‌ஷன் எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.எது எப்படியோ.. ஏற்கனவே காமன் வெல்த் கேம்ஸின் பின்னால் நடக்கும் ஊழல் ப்ரச்சனை கொழுந்து விட்டெரிந்து எரிந்து கொண்டிருக்கையில் இப்பிரச்சனை நிச்சயம் மேலும் பல அதிர்ச்சிகளையும், குழப்பங்களையும் கொண்டு வரத்தான் போகிறது .
கேபிள் சங்கர்

Aug 19, 2010

Grown ups (2010)

guposter

சிறு வயதிலிருந்து ஒன்றாய் பாஸ்கெட் பால் விளையாடிய ஐந்து நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் இருந்தாலும் இவர்களை ஒன்றுபடுத்தி வழிநடத்தி வெற்றி பெற வைத்த கோச்சின் மேல் பெரிய மரியாதை உண்டு. 30 வருடங்களுக்கு பிறகு கோச் இறந்துவிட, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையாய் பிரிந்திருந்தாலும் கோச்சின் இறுதி சடங்குக்காக ஒன்று சேர, ப்ளான் செய்கிறார்கள். அவர்கள் ஒரு லேக் ஹவுஸை வாடகைக்கு எடுத்து தங்க முடிவெடுக்கிறார்கள்.
gu5 ஆடம் சாண்ட்லருக்கு, பாஷன் டிசைனிங் மனைவி சல்மா ஹயக். அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு க்யூட் மகள். இன்னொரு கருப்பின நண்பனுக்கு கலப்பின மனைவி, மனைவி சம்பாதித்துக் கொண்டிருக்க, வீட்டோடு கணவனாய் குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருப்பவன்,மனைவி மூன்றாவது கர்ப்பம். அவனுடய தாயும் அவனுடனேயே இருந்து அவனை கரித்து கொண்டிருக்கிறாள். மூன்றாவமன் தான் ஒரு பெரிய பிஸினெஸ் செய்வதாய் சொல்லி தன் மனைவி குழந்தைகளுடன் வந்து சேர்கிறான். நான்காமவன் ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகி தன்னை விட 30 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஐந்தாமவன் திருமணமே செய்து கொள்ளாமல் ஸ்த்ரிலோலனாய் அலைபவன்.
gu3 இவர்கள் எல்லோரும் பூயூனரலுக்கு வந்து முடித்துவிட்டு லேக் ஹவுஸில் செட்டிலாகிறார்கள். இதன் பிறகு என்ன தான் இவர்கள் வளர்ந்திருந்தாலும், வயதுக்கேற்ற மன வளர்ச்சியும், முதிர்ச்சியும் எவ்வாறு இவர்களின் வாழ்க்கையை நடத்துகிறது என்பதை  இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் புரிந்து கொள்கிறார்களா?, இவர்களிடம் சிறு வயதில் தோற்ற குழு மீண்டும் போட்டிக்கு அழைக்க, அதில் அவர்கள் வெற்றிப் பெறுகிறார்களா? இல்லையா? என்பதுதான் கதை.
gu6 வழக்கமான டெம்ப்ளேட் ஃபீல் குட் படம் மாதிரி தான் என்றாலும், சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார்கள். என் கனவு தேவதை சல்மாஹய்கை பார்ப்பதற்காகவே படம் பார்க்கலாம். இந்த வயதில் என்ன பாடி? என்ன ஸ்டைல்..? ம்ஹும்.. நமக்கில்ல.. சொக்கா..  ஆடம் சாண்ட்லர், ஹய்கின் மகன்கள் வீடியோ கேமில்லாமல், போன் இல்லாமல், படும் அவஸ்தைகள் இக்கால குழந்தைகளின் மனபான்மையை அவர்களின் சோம்பேறித்தனத்தை, அப்பட்டமாய் காட்டுகிறது. அதிலும் உள் ரூமில் உள்ள ஆளை கூப்பிடுவதற்கு ‘டெக்ஸ்ட்” செய்வது, விடியோகேமை பார்த்து ஆடியபடியே பேசுவது என்பது போன்ற காட்சிகள் நிதர்சனம். அதே சிறுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் லேக் வீட்டின் சுற்றுச் சூழலுக்கு போய் சகஜமாகி மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து வெளியே போய் விளையாட ஆரம்பித்து, இவர்களுக்குள்ளான கம்யூனிகேஷனுக்கு கப் போன் செய்து நூலில் தொடர்ப்பு ஏற்படுத்தி விளையாடுவதும், பின்பு அதையே பெரியவர்களும் தொடர்வது கவிதை.
gu7 ராப் ஷிண்ட்லரின் ஏழடி வாளிப்பு பெண், ஷிண்ட்லரின் இன்னொரு ஜெராக்சான பெண், வீட்டிற்கு வந்ததும், தன் பேச்சுலர் நண்பனை சந்தேகப்படுவது, 30 வயது மிகுந்த மனைவியிடம் காதல் வயப்பட்டு கொஞ்சுவதும், அம்பு காலில் குத்தி பட்ட காலிலே படும் என்பது போல மீண்டும் மீண்டும் தெரிந்தே அதில் எட்டி உதைத்து அடிப்பட்டுக் கொள்வது, அவரது பெண்கள் கார் ரிப்பேர் செய்யும் போது மற்றவர்கள் ரெண்டு பேர் பார்த்தால் மற்ற ரெண்டுபேர் சைடு வாக்கில் திரும்பிக் கொண்டு, லெப்ட் ரைட் சொல்லி சைட் அடிக்கம் காட்சி, நாலு வயதாகியும், தாயிடம் வந்து தாய்பால் அருந்தும் சிறுவன்,  என்று பட நெடுக நகைச்சுவை தூவிக் கொண்டே செல்கிறார்கள். பல சமயங்களில் அமெரிக்க சிட்காம் போல தொடர்ந்து பேசிக் கொண்டே  காமெடி செய்வது,  செண்டிமெண்ட், குடும்ப உறவுகள் வ்லுப்படுத்துதல் போன்ற அல்லேலுயா பிரசங்கங்கள் வந்தாலும், இயல்பான நகைச்சுவையால்.. படம் தப்புகிறது.

GROWN UPS – STILL HAVE TO….

கேபிள் சங்கர்

Aug 18, 2010

புத்தக வெளியீடும்… பதிவர் சந்திப்பும்..

cinema invitation சினிமா வியாபாரம் புத்தகத்தின் அபீஷியல் வெளியீடு வருகிற சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற இருக்கிற படியால், பதிவர்கள் வாசகர்கள், நண்பர்கள், அனைவரும் வந்திருந்து சிறப்பித்துக் கொடுக்குமாறு அழைக்கிறேன். நாம் எல்லோரும் சந்தித்து வெகு நாட்கள் ஆகிவிட்டபடியால் இவ்விழாவை நம் பதிவர் சந்திப்பாகவும் நடத்திக் கொள்ளலாமே.. என்றும் உங்கள் ஆதரவை நாடும் …

கேபிள் சங்கர்

Aug 17, 2010

காதல் சொல்ல வந்தேன்.

kaadhal-solla-vandhen-desktop-wallpapers038 ஒரு பையன் ஒரு பெண்ணிடம் காதலைச் சொல்ல முயற்சிப்பதே கதை. இதில் முதல் இயர் படிக்கும் மாணவனான ஹீரோவுக்கு, பைனல் இயர் படிக்கும் ஹிரோயின் மேல் காதல். மற்றபடி இம்மாதிரியான காதல் கதைகளில் பெரிசாக என்ன திரும்ப திரும்ப சொல்லிவிட  முடியும் என்று கேட்பவர்களுக்கு கொஞ்சம் முடிஞ்சா முடியும்னு சொல்லியிருக்காங்க..

பாலாஜி ஒரு தச்சரின் மகன். பார்த்த மாத்திரத்திலேயே சஞ்சனாவை காதலிக்க ஆரம்பிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் ப்ரெண்ட் ஆகிறார் பாலாஜி. அதுவும் எப்படி? சஞ்சனாவை காதலிக்க ஆசைப்படும் சீனியர் மாணவர்களுக்கு ஹெல்ப் செய்வதை போல தொடர்ந்து சஞ்சனாவுடன் பயணிக்கிறார். எப்படி பாலாஜி தன் காதலை சஞ்சனாவிடம் சொல்கிறார் அதை சஞ்சனா ஏற்றுக் கொண்டாரா..? என்பதுதான் கதை.
kaadhal-solla-vandhen-desktop-wallpapers040 படம் முழுக்க முடிந்த வரை நகைச்சுவையோடு சொல்லியிருக்கிறார்கள். ஹீரோயினை இம்பரஸ் செய்வதற்காக சீனியர் மாணவரிடம்  அரசு பேருந்து நீ ஏறியவுடன் அரசி பேருந்து என்றெல்லாம் கவிதை எழுதி கொடுப்பது. நாயை கொஞ்சினாள் என்பதற்காக அந்த நாய்க்குட்டியை வீட்டிற்கு கொண்டு வந்து இலையில் சோறு போட்டு ஊட்டுவதும், அவள் தன்னை விட ரெண்டு வயது பெரியவள் என்றதும், நாயை கல்லை எடுத்து அடித்து துரத்துவதும், காதலை பற்றி ஏதோ சொல்லும் போது விஜய் ஒரு விக்ரமன் படத்தில் சொல்வது போல காதல் ஒரு முறை தான் வரும் என்பதை போல சீரியஸாய் பேசுவது என்று.. முதல் பாதி முழுக்க ஒரே கலகலப்பாய் தான் போகிறது.

சஞ்சனாவிடம் காதலை சொன்ன பிறகுதான் என்ன செய்வது என்று படத்தின் கேரக்டர்கள் குழம்புவதை போல திரைக்கதையும் போகும் வழி தெரியாமல் அலைகிறது. கொட்டாவி வர வைக்கிறது. தயாரிப்பாளருக்கு என்ன ப்ரச்சனையோ.. எதோ ஒரு வீட்டு பின் கட்டை எல்லாம் ரெண்டு வசனம் சொல்லி சீனை ஒப்பேத்த பின்பக்கமாய் நடந்து வந்து நின்று பேசிவிட்டு போவதெல்லாம் ரொம்பவே ஓவர்.. பாஸு இப்பல்லாம் சீரியலிலேயே இந்த மாதிரி எடுக்கிறதில்லை.
kaadhal-solla-vandhen-desktop-wallpapers049 கனாகானும் காலங்கள் பையன் பாலாஜி தான் ஹீரோ.. மிக இயல்பாக செய்திருக்கிறார். பெரிதாய் நடிக்க வாய்ப்பில்லை என்றாலும் உறுத்தாமல் இருக்கிறார். சஞ்சனா சில சூடியில் அர்புதமாய் இருக்கிறார். கொஞ்சம் வயதானவராக தெரிந்தாலும் கதை படி பாலாஜியை விட பெரிய பெண் என்பதால் சரியாக இருக்கிறது.படத்தின் மிக முக்கிய ப்ளஸ் பாயிண்ட் யுவனின் இசையும், பின்னணி இசையும் தான். ஸ்வீட். ஒளிப்பதிவு ஒன்றும் பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போல இல்லை.
kaadhal-solla-vandhen-desktop-wallpapers061 கதை திரைக்கதை வசனமெழுதி இயக்கியவர் பூபதி பாண்டியன். முதல் பாதி முழுவதும் கலகலப்பாக கொண்டு போகும் முயற்சியில் வெற்றிப் பெற்றிருக்கிறார்.  ரெண்டாவது பாதியில் தான் சம்பவங்கள் இல்லாமல் தொய்ந்து போய் விழுகிறது ஆங்காங்கே.. ஹீரோயின் தன் மேல் உள்ளது காதல் இல்லை என்று நிறுபிப்பதற்காக ஹீரோவை அழைத்துக் கொண்டு லாட்ஜுக்கு போவதெல்லாம் ஓவர். அதற்கு பாலாஜி சொல்லும் பதில் எல்லாம் தனுஷை ஞாபகப்படுத்தும் காட்சிகள். பட் ஒட்டல சார்.. மொத்ததில் இன்னும் கொஞ்சம் கிரிஸ்பாக நாடகத்தன்மை குறைத்து கவனித்திருந்தால் இன்னும் பெட்டராக இருந்திருக்குமோ..? அதே போல க்ளைமாக்ஸ் போன வார பாணா காத்தாடியைநினைவு படுத்துவதாகவும், மற்றும் சில காட்சிகள் சமீபத்திய வி.தா.வருவாயா? வை ஞாபகப்படுத்துவதையும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
காதல் சொல்ல வந்தேன்- டைம் பாஸ்..
கேபிள் சங்கர்

Aug 16, 2010

கொத்து பரோட்டா-16/08/10

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எக்ஸ்பிரஸ் அவின்யூவில பதினைஞ்சு ரூபாய் பார்க்கிங் வாங்க ஆரம்பிச்சிட்டதினாலே இனிமே மத்த மால்லையும் அதிகப்படுத்திருவாங்கன்னு சொன்னேனில்லையா? அது போல இப்போ.. சனி ஞாயிறுல ஐநாக்ஸுல ஹவருக்கு பதினைந்து ரூபாயாம்.. இனிமே பாருங்க.. தியேட்டர்ல டிக்கெட் 120 ரூபாய். பார்க்கிங் டிக்கெட் விலை 60 ரூபா ஆகப்போவுது பாருங்க.. அது கூட கலைஞரோட இந்த ஆட்சி வரைக்கும் அடுத்த அட்சியில அவரு வந்தவுடனே ஏற்றப் போறதுல மல்டிப்ளெக்ஸ் டிக்கெட் விலையும் ஒண்ணு. ஏன்னா.. பேரப்புள்ளைங்க.. ரெண்டு மூணு இடம் வாங்கி போட்டு மல்டிப்ளெக்ஸ் கட்டுறதா கேள்வி..
***********************************************************************************
சென்ற வாரம்  நான், அப்துல்லா, கார்க்கி, வெண்பூ எல்லாம் ரம்சான் ஹைதராபாத் ஸ்பெஷலான ஹலீம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். டெக்கான் ஹெரால்ட் வருடா வருடம் ஹைதையில் எங்கு நல்ல குவாலிட்டி ஹலீம் தருகிறார்கள் என்று சாப்பிட்டு நல்ல ஓட்டல்களை ரெபர் கூடச் செய்தார்கள் நான் அங்கு போயிருக்கும் போது. அப்போது அப்துல்லா சொன்னார். சென்னையில் ஈகா தியேட்டர் அருகில் இருக்கு ஒரு ஹோட்டலில் ஹலீம் கிடைக்குதாம், ஹைதராபாத்தில கூட அவ்வ்ளவு டேஸ்டா இருக்காதாம் என்றதும் சனிகிழமை ப்ளான் போட்டு, அப்படியே இன்ஸெப்ஷன் பி.வி.ஆர்.ல ப்ரோக்ராம் போட்டு சாயங்காலம் போய் பரபரக்க போய் உக்காந்தோம் ஹலீம் சொன்னதும் ஒரு பெரிய பவுலில் கொண்டு வந்து வச்சாங்க. நான் ஏற்கனவே ஹைதராபாத்தில் ஹலீம் சாப்டிருக்கிறதினால அதன் ருசி நன்றாக தெரியும். ஆவலோடு ஒரு ஸ்பூனை எடுத்து வைக்க, ஹலீம்.. சுத்தமான நெய், மசாலா அயிட்டங்கள், நன்கு வேக வைக்கப்பட்ட மட்டன், கிட்டத்தட்ட கூழாய் இருக்கும் மட்டன் மற்றும் இத்யாதி, இத்யாதிகள் சேர்த்து செய்யப்படுகிற, நேன்பிருந்துவிட்டு வரும் மக்களுக்கு அன்று இழந்த ப்ரோட்டீன்கள், அடுத்த நாளுக்குமான ப்ரோட்டீன்களை தரும் ஹலீம் எனும் இந்த அயிட்டம் டால் மக்கானி போல இருந்தது. கேட்டால் இது லக்னோ ஹலீமாம்.. அடக் கொடுமையே.. லக்னோவில டால் மக்கானிக்கு பேரு ஹலீமா.? அப்புறம் படம் பார்த்த பி.வி.ஆரில் நல்ல பல சேட்டுப் பெண்களை பார்த்து மனதாற்றிக் கொண்டது.. வேறு விஷயம்.
************************************************************************************
அண்ணன் உ.த போல தொடர்ந்து பிட்டு படம் பார்க்கும் மன தைரியம் இல்லாததால் இலக்கணப்பிழை மட்டும் ஒரு மணி நேரம் பார்த்தேன். படம் பிட்டுபடமாய் இருந்தாலும், ஆங்காங்கே இயக்குனர் இளையராஜாவின் பழைய பாடல்களையே புத்திசாலித்தனமாய் பின்னணியிசையாய் உபயோகித்திருக்கும் முறையும், முடிந்த வரை ”டெம்ப்ட்”டாக படமெடுத்திருப்பதையும், பெரியதாய் ஆர்டிஸ்ட் இல்லாமல், நல்ல அழகிய பெண்ணை கதாநாயகியாக்கி, முக்கல் முனகலை தவிர பெரிய பிட் படத்தில் இல்லையென்றாலும் கருத்தில் பிட்டோ பிட்டு.. ஒரே அட்வைஸ் மழை.. என்ன படம் முழுக்க வந்த ஷாட்டுகளே திரும்ப திரும்ப வருகிறது. ஒரு முக்கிய விஷயம் இப்படத்தின் பட்ஜெட் வெறும் 15 லட்சம் ரூபாய்தானாம்.
************************************************************************************
செவிக்கினிமை
காதல் சொல்ல வந்தேன் படத்தில் யுவனின் பின்னணியிசையும் மூன்று பாடலக்ளும் நன்றாக இருக்கிறது. ஒரு வானவில்லின் பக்கத்திலே பாடலில் உத்தித்தின் குழந்தை குரலும், அன்புள்ள சந்தியா, ஆகிய பாடல்களில் டுயூனும், அதில் வரும் முத்துக்குமாரின் வரிகளும் இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. வானவில்லின் பக்கதிலே வாழ்ந்து பார்க்கிறேனே நானே.. என்ற வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது. பட் பாடலகளை எங்கோ கேட்ட பீல் வருவதை தவிர்க்க முடியவில்லை.
************************************************************************************
இந்த வார தத்துவம்
உலகிலேயே இனிமையான இசை எது தெரியுமா? நம் இதயத்தின் துடிப்புத்தான் ஏனென்றால் அது மட்டும்தான் உலகமே தனித்துவிட்டாலும் நமக்கு உறுதியான நம்பிக்கையை தருகிறது.

உன்னுடய எல்லா கனவுகளும் நிஜமாக முடியாது. ஆனால் அவைகள் உன்னுடய எதிர்காலத்தின் வெற்றிக்கு படிகளாய் அமையும்.
**********************************************************************************
இந்த வார கிளுகிளூப்பூ
லண்டனில் ஒரு பெண் ஒன்பது வருடங்களில் 5000 பேருடன் உறவு வைத்திருக்கிறாளாம். முதல் முறையிலிருந்து பார்க், ஹோட்டல், பப், நண்பரின் வீடு என்று கிடைத்த இடத்தில் எல்லாம் உறவு கொண்டிருக்கிறாளாம். ஒவ்வொரு உறவையும் தன்னுடய டைரியில் வேறு எழுதிவைத்திருக்கிறாளாம். சரியான மஜா மல்லிகாவா இருப்பா போலருக்கே.. மஜா மல்லிகா யாருன்னு கேட்குறவங்களுக்கு.. அடப் போங்கப்பா இது கூட தெரியலைன்னா.. என்ன ப்ளாக் எழுதி, இண்டெர்நெட் பாக்குறீங்களோ??
********************************************************************************** 
இந்த வார குறும்படம்
வெளிநாட்டு குறும்படம். ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக இழுவையாக இருந்தாலும், முடிவு மனதை கனக்க செய்யும்.
***********************************************************************************
இந்த வார விளம்பரம்
மிக அருமையான விளம்பரம்.. பல விஷயங்களை நமக்கு சொல்லிக் கொடுக்கும் விளம்பரம்.
************************************************************************************
இந்த வார கோரிக்கை
ஆட்டோகிராப் படம் என்றதும் எல்லாருக்குமே சிநேகா பாடும் “ஒவ்வொரு பூக்களுமே.. “பாடல் ஞாபகத்துக்கு வரும். அப்படி வரும் போது நிச்சயம் அந்த பாட்டின் பின்னணியில் வாத்தியங்கள் வாசிக்கும் டீமாய் பார்வை குறைபாடுடைய கோமகனின் இசைக்குழு இசைத்து நடித்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.  அந்த கோமகனின் இசைக்குழுவுக்கு சொந்தமாக இசை கருவிகளை  வாங்குவதற்காக வருகிற செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை: 6.30 மணிக்கு, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. டிக்கெட்டுகளை வாங்கி அவர்களது குழுவை ஊக்குவிக்க விரும்புவர்கள்.. என் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
************************************************************************************
ஜோக்
வழக்கமாய் இரவு டியூட்டு முடித்து காலையில் போகும் இன்ஸ்பெக்டர் அன்று சீக்கிரமே வீட்டிற்கு போனார். மனைவியை எழுப்ப வேண்டாம் என்று உடைகளை கலைந்துவிட்டு, மெல்ல படுக்கையில் படுக்க போனவரை, மனைவி தூக்க கலக்கத்தில் டியர் எனக்கு தலைவலிக்குது 24ஹவர் மெடிக்கல் ஷாப்புல மாத்திரை வாங்கிட்டு வர்றீங்களா? என்று கெஞ்ச, சரி என்று மீண்டும் உடைகளை மாட்டிக் கொண்டு கடைக்கு போனார்.. கடைக்காரன் என்ன சார்.. நீஙக் இன்ஸ்பெக்டர் தானே? ஏன் கப்பல் கேப்டன் ட்ரஸ்சை போட்டிட்டு வந்திருக்கீங்கன்னு கேட்டான்.
************************************************************************************
ஏ ஜோக்
மூன்று மகள்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்த ஒரு பெண் அவர்களது முதலிரவை தன் வீட்டிலேயே வைத்து கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால். மூவரும் தங்கள் வீட்டிலேயே சரி என்று சொல்ல… நடு ராத்திரியில் ஒவ்வொரு பெண்ணின் ரூம் பக்கமாய் நின்று கேட்டாள் அந்த தாய். முதல் பெண்ணின் அறையிலிருந்து ஒரே அலறலாக வந்த்து, அடுத்த பெண்ணின் ரூமிலிருந்து ஒரே சிரிப்பு சத்தமாக இருந்தது, மூன்றாவது பெண்ணின் அறையிலிருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. அடுத்த நாள் காலையில் முதலாமவளிடம் ஏன் அப்படி கத்தினாய்? என்றதும் ‘நீதானேம்மா சொல்லியிருக்க.. எதாவது  வலிச்சு கஷ்டமாயிருந்திச்சுன்னா கத்தணும்னு” என்றாள். இரண்டாமவள் “நீ தானேமா சொல்லியிருக்க, கிச்சு கிச்சு மூட்டுற மாதிரியிருந்த சிரிக்கணும்னு” என்றாள் மூன்றாம்வளை பார்த்து கேட்டதும் “வாய் மூழுதும் இருக்கும் போது எப்படி சத்தம் போடுறது? என்று கேட்டாள். 
**********************************************************************************
கேபிள் சங்கர்

Aug 14, 2010

வம்சம்.

vamsam_tamil_movie_wallpapers வழக்கம் போல இரண்டு ஊர்காரன் பகை. மறவனுங்க எல்லாரும் வீரனுங்க. அந்த தலைகட்டு, இந்த தலைகட்டு என்று பில்டப். தலைக்கட்டு பஞ்சாயத்து என்று சாதாரண லைன் தான். ஆனால் அதை கொடுத்திருக்கும் விதத்தில் தான் பாண்டிராஜ் நிற்கிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரும், கான்ஸ்டபிளும் பேசிக் கொள்கிறார்கள். திருவிழாவுக்கு பாதுகாப்பு பலமாக போட வேண்டும் என்று.. ஏன் அவ்வளவு முக்கியம் என்று கேட்க, கொஞ்சம், கொஞ்சமாய் களம் விரிக்கப்படுகிறது. திருவிழாவும், அதை வைத்து அங்கு வருடா வருடம் நடக்கும் கொலைகளையும், அப்படி கொலை செய்வதற்கான காரணம். அப்படி செத்தவர்களுக்கு கிடைக்கும் மரியாதை என்று களம் மெல்ல அன்போல்ட் செய்யப்பட்ட பிறகு.. திருவிழாவுக்கு போகிறது காட்சி.. ஒவ்வொரு தலைக்கட்டுக்கும் மரியாதை செய்யப்பட, அங்கே கடைசியாய் தன் தலைமுறைக்கே ஒத்தையாய் இருக்கும் அருள்நிதி வர, க்ராஸ் செய்யும் போது வில்லன் ஜெயப்ரகாஷ்.. “டேய்.. இந்த திருவிழாவுக்குள்ளே.. கருவறுத்திரணூம்”என்று சொன்னதும். சும்மா பக்கென பத்திக்குது.
vamsam-tamil-movie எங்கப்பன் சாவுறதுக்குள்ள உன் கையை எடுத்துட்டு வர சொன்னாரு.. என்று அருள்நிதியின் கையை வெட்ட சாவகாசமாய் வந்து நிற்க.. அவன் அம்மா.. ஓடு மாமாகிட்ட ஓடு என்றதும் சும்மா பதற, பதற, ஓடுவதில் இன்னும் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார வைக்க, இடைவேளை வரை வம்சம் அம்சம்தான்.
அருள்நிதிக்கு இது முதல் படம். நேற்று தியேட்டரில் லட்டெல்லாம் கொடுத்து வரவேற்றார்கள். முகத்தில் பெரியதாய் எமோஷன் தெரியாவிட்டாலும். காதல் காட்சிகளை விட சண்டைக் காட்சிகளில் செம வேகம். பிக்கப் ஆயிருவாரு போல.. ஓங்கு தாங்காக வளர்ந்திருந்தாலும், முகத்தில் ஒரு இன்னொசென்ஸ் இருப்பது இந்த கேரக்டருக்கு நன்றாக அமைந்திருக்கிறது. முக்கியமாய் காதல் காட்சிகளில். “அசினை” அருளும், சுனைனாவும், மாற்றி மாற்றி தூதுவிட்டுக் கொள்ளும் இடங்கள் இளமை.

சுனைனா.. நிச்சயமாய் இவர் இது வரை நடித்த படஙளில் இவர் நான் நடித்தேன் என்று பெருமைப்பட்டு கொள்ளலாம். அறிமுக காட்சியிலிருந்து, கதைக்கு திருப்பமான முக்கிய காட்சிவரை, இவரது கேரக்டரைஷேஷன் அருமையானது. ஜெயப்ப்ராகாஷின் மீது சாணி கரைத்து ஊற்றிவிட்டு, இவர் பேசும் சீன்.. அட்டகாசம்.
vamsam-tamil-movie14 சீனிக்கண்ணுவாக ஜெயப்பிரகாஷ்.. மனிதர் பாடிலேங்குவேஜிலும், டயலாக் டெலிவரியிலுமே பாதி பில்டப்பை கொடுத்துவிட,கேரக்டரும் அதற்கு மேலும் துணையிருக்க. மனிதர் பின்னி பெடலெடுத்திருக்கிறார். மற்ற காட்சிகளில் எல்லாம் அவர் நடித்திருந்ததை விட எனக்கு பிடித்த காட்சி, கொலை செய்ய ஆளை அனுப்பிவிட்டு, அது முடிந்ததும், சாராயத்தை ஒரே மடக்கில் போதையில் குடித்துவிட்டு, “என்னை இப்படி சாராயமும், பன்னிக்கறியும் சாப்பிட வச்சிட்டியே” என்று போதையில் உச்சத்தில் பேசும் காட்சி. சூப்பர். சின்ன காட்சிதான்..
vamsam-tamil-movie22 படம் நெடுக..பல சின்ன, பெரிய கேரக்டர்கள். கஞ்சா கருப்பு, சுனைனாவின் தங்கை, அந்த கால் நரம்பு அறுக்கப்படும் ஆள், கிஷோர்குமார், அருள்நிதியின் மாமா, என்று பல கேரக்டர்கள் மனதில் நிற்க வைத்திருக்கிறார் இயக்குனர்.
மகேஷ் முத்துசாமியின் ஒளீப்பதிவில் ஆரம்ப திருவிழா காட்சிகளீலும், சண்டைக் காட்சிகளிலும்,சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார். அதிலும் ஆரம்ப திருவிழா காட்சிகளில், இயக்குனர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என்று அனைவருமே தங்கள் திறமையை காட்டியிருக்கிறார்கள். தாஜ்நூரின் இசையில் பாடல்கள் பெரிதாய்  மனதை கவரவில்லை. ஆனால் பின்னணியிசையில் சரியான ரிசல்டை கொடுத்திருக்கிறார்.
vamsam-tamil-movie19 பசங்க பாண்டியராஜ் படம் என்ற எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொள்ளவும், அருள்நிதியை முன் வைத்து எடுக்க வேண்டிய தால் செய்ய வேண்டிய காம்ப்ரமைஸையும் சரியான அளவில் கலந்து கொடுத்திருக்கிறார்.  கத்தாழை கத்தி, கிராமத்து சாங்கியம், சாராயம் பன்னிக்கறி மேட்டர், தலைக்கட்டு கந்தாயங்கள், இடிவிழுந்தால் பேசப்படும் மூடநம்பிக்கைகள், என்று பட நெடுக நிறைய தகவல்களை அப்படியே தூவிக் கொண்டு சென்றிருக்கிறார்.  பொட்டானிக்கல் பெயர்களை வைத்து அமைக்கப்பட்ட காதல் காட்சி இளமையோ இளமை. இயக்குனருக்கு செல் போன் மீது என்ன காதலோ..? பசஙக போலவே படம் முழுக்க ஆளாளுக்கு செல் போன் ரிங்டோன், சிக்னல்களை வைத்து ஒரு குதூகல கொண்டாட்டமே நடத்தியிருக்கிறார். நேட்டிவிட்டியும், கிராமத்து சடங்குகளுமாய் ஓடும்,  இடைவேளை வரை பரபரவென போகும் திரைக்கதையில் அதன் பின் கொஞ்சம்  சூடு குறைந்தே போய்விடுகிறது.

அதன் பிறகு அருள்நிதிக்கான காட்சிகளை வைக்க முயன்றிருப்பதால் சூடு குறையவே செய்கிறது. சுனைனாவின் கேரக்டரை அவ்வளவு தூக்கி நிறுத்திவிட்டு திடீரென அவர் சீனிக்கண்ணுவை அருள் நிதி எதிர்பதற்காக அவரே ஆள் வைத்து வெட்டிவிட்டு, அருள் தான் வெட்டினார் என்றவரை ஏற்றிவிட்டுவிட்டு அம்போ என்று விட்டுவிட்டார். அதே போல் க்ளைமாக்ஸ் திருவிழா காட்சியும், ஒவ்வொரு நாளும் அருள் அவர்களிடம் மாட்டாமல் இருப்பது. ட்ராய் படத்தை ஞாபகப்படுத்துவது  போல காத்திருந்து ஒத்தைக்கு ஒத்தை சண்டை போட்டு ஜெயிப்பது எல்லாம்.. கமர்சியல் சினிமா.. படம் பூராவும் தேவர், மறவர் வீரர் என்று உசுப்பேத்திக் கொண்டே இம்மாதிரி சண்டை போடுவது  பின்பு தவறு.. என்று சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. எனிவே அடுத்த ஹிட்டை கொடுத்த பாண்டிராஜுக்கு பாராட்டுக்கள்.
வம்சம்- வளரும்.
கேபிள் சங்கர்