Posts

Showing posts with the label tamil film review

Raatchasan -One Shot Review

Image

Vanamagan - Silent Review -

Image

Uru - Silent Review

Image

Eithavan - Silent Review

Image

Kaatru Veliyidai - Silent Review

Image

Motta Siva Ketta Siva - Silent Review -

Image

Yaman - Silent Review - Tamil Film Review

Image

கொத்து பரோட்டா- 2/03/15

Image
Bench Talkies No.1 ஆங்கிலத்தில், இந்தியில், ஏன் மலையாளத்தில் கூட குறும்படங்களின் தொகுப்பாய் திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் குறும்படம் இயக்கியவர்களை இயக்குனர்களாய் கொண்டாடும் தமிழகத்தில் இன்று வரை குறும்படங்களை தொகுப்பாய் அமைத்து படம் வெளியானதில்லை. ஏற்கனவே பாலசந்தர் அவர்கள் ஒரே படத்தில் இரண்டு கதையை கொடுத்திருந்தார். சமீபத்தில் எஸ்.ஏ.சி ஒரே படத்தில் ரெண்டு கதைகளை வைத்து படம் எடுத்திருந்தார். குறும்படங்கள் இயக்கி, தயாரித்து, அதன் மூலமாய் உடனடியாய் திரைப்படம் இயக்க வாய்ப்புக்காகத்தான் பல பேர் குறும்படம் எடுக்கிறார்கள். ஆனால் குறும்படத்திற்கென்று தனி மார்கெட், அதன் மூலம் வருமானம் என்று ஒர் வழியுள்ளதை இன்னும் நிறைய பேர் கண்டறிய முயலவே இல்லை. இன்றளவில் ஏவிஎம்மிலோ, ஆர்.கே.வியிலோ குறும்படம் எடுத்துவிட்டு, யூ டியூப்பில் போடுவதை தவிர்த்து பத்து பைசா காசு பார்க்க முடியாமல் தொடர்ந்து கோடம்பாக்க கனவுடன் வளைய வருகிறவர்களுக்கு அதை பணமாக்க, குறும்படங்களை காசு கொடுத்து பார்க்கை வைக்க முயலுங்கள் என்று அடிக்கடி நான் பங்கேற்கும் மேடைகளில் சொல்லிக் கொண்டேயிருப்பேன்.  அதை கார்த்தி தன் வெற்றியின...

ஆதலால் காதல் செய்வீர்

Image
  வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல, என்று ஒரு க்ளாஸ், மாஸ் படமாய் எடுத்து ஹிட்டடித்த இயக்குனர் சுசீந்திரன் ஆஃப்பீட்டாய் அழகர் சாமி குதிரையை எடுத்து நேஷனல் அவார்டையும் தட்டியவர். அதே ஸ்பீடில் ராஜபாட்டையும் எடுக்க, ஏனோ என்ன கம்பெல்ஷனோ.. பெரிய வீழ்ச்சி. இதோ அவரது புதிய படம் ஆதலால் காதல் செய்வீர். 

சிங்கம்-2

Image
ஏகப்பட்ட எதிர்பார்பு. அதை விட ஏகப்பட்ட விளம்பரமென்று அமர்களத்தோடு வெளியாகியிருக்கிற படம். போன பார்ட்டில் வேலையை ரிசைன் பண்ணிவிட்டதாய் உட்டாலக்கடி செய்து, ஸ்பெஷல் டூட்டியில் ரகசியமாய் ஜாயின் செய்து என்.சி.சி ஆபீஸாராய் வலம் வரும்  இடத்திலிருந்து கதை ஆரம்பிக்கிறது.  என்.சி.சி அதிகாரியாய் இருந்து கொண்டே தூத்துக்குடியில் நடக்கும் கள்ளக்கடத்தலை கண்காணித்து வருகிறார். ஒரு சுபயோக சுபதினத்தில் ஒரு முக்கியமான நிலையை சமாளிக்க, மீண்டும் போலீசாய் வந்து எல்லாரையும் மூன்றடி எகிறி பாய்ந்தடித்து எப்படி வெற்றி கொள்கிறார் எனபது தான் கதை.

தில்லு முல்லு

Image
ஹிந்தியில் கோல்மாலாய் வந்து பெரும் வெற்றி பெற்ற படம். பின்பு அதே படத்தை தமிழில் ரஜினி, பாலசந்தர் காம்பினேஷனில் வெளிவந்து, தமிழ் சினிமாவின் க்ளாஸிக்காய் இருந்து வரும் படம் தில்லு முல்லு. அந்த படத்தை மீண்டும் ரீமேக்கி வெளிவந்திருக்கும் படம். இத்திரைப்படத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன். நேற்றைக்கு பத்திரிக்கையாளர்களுக்கான பிரத்யோக காட்சி திரையிட்டார்கள். மொத்த தியேட்டரும் குலுங்கி, குலுங்கி சிரித்ததை பார்த்த போது மகிழ்ச்சியாய் இருந்தது. ரசிகர்களுக்கும் அதே மகிழ்ச்சியும் சந்தோஷமும்  தொடரும் என்ற நம்பிக்கையோடு..  கேபிள் சங்கர்

நாகராஜசோழன் MA MLA

Image
சத்யராஜ் நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படம். அதுவும் அவரது நடிப்பில் 200 வது படம். இயக்குனர் மணிவண்ணனின் இயக்கத்தில் வெளிவரும் 50வது படம். இவர்கள் இருவரது மாஸ்டர் பீஸான அமைதிப்படையின் இரண்டாவது பாகம் என்றால் கேட்க வேண்டுமா? மக்களின் எதிர்பார்ப்பைப் போல விநியோகஸ்தர்களின் எதிர்பார்ப்பும் எகிறித்தான் இருந்தது. இல்லாவிட்டால் தயாரிப்பாளராய் இருக்கும், டாக்டர் ராமதாஸ் விநியோகஸ்தராய் அவதாரம் எடுத்திருப்பாரா? சரி.. இப்படி பல பாயிண்டுகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் திருப்தியை கொடுத்ததா? என்றால் பெரிய இல்லை என்றே சொல்ல வேண்டும்.

நான் ராஜாவாகப் போகிறேன்.

Image
ஹிமாச்சல் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் ஜீவா தன்னைப் போலவே இன்னொருவர்  ராஜா என்ற பெயரில் சென்னையில் இருப்பதாய் ராணுவத்தில் வேலை செய்யும் சிம்மா மூலம் தெரிய வருகிறது. நம்மைப் போலவே ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பிறகு சும்மா இருக்க முடியுமா? தன்னைப் போல் இருக்கும் ஒருவனை தேட முயன்று அவரது தோழியை கண்டுபிடித்து, சென்னை வருகிறார். ஜீவாவை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது. ஏன்? எதற்கு? என்ன காரணம்? யார் அந்த ராஜா? என்பது போன்ற கேள்விகளுக்கு விடை சொல்லியிருக்கிறார்கள்.

உதயம் NH4

Image
 இந்தியாவின் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை NH4. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களை இணைக்கும் சாலை தான் கதைக்கு களன். இயக்குனர் வெற்றிமாறனின் தயாரிப்பு, கதை திரைக்கதையில், அவரது உதவியாளர் மணிமாறன் இயக்கி வந்திருக்கும் இந்த படம் ஒர் ரோடு மூவி டைப். பெரும்பாலான ரோட் மூவிக்கள் சுவாரஸ்யமான திரைக்கதையில்லாமல் சொதப்பிவிடுவது உண்டு. அதில் இது எந்த வகை? 

அழகன் அழகி

Image
  1995ஆம் ஆண்டு வெளிநாட்டு படத்துக்கான ஆஸ்கர் நாமினேஷன் பெற்ற படம் Star Maker. “சினிமா பாரடைசோ” திரைப்பட இயக்குனர் குசுப்பே டோர்னடோரே இயக்கிய படம். 1954 இத்தாலிய கிராமங்களில் டிவிகூட அவ்வளவாக நுழையாத காலம், ஜோமொரிலி என்னும் ஓருவன் ஓரு பழைய லாரி போன்ற வாகனத்தில் ஊர் ஊராக சுற்றி தான் ரோமில் இருக்கும், கொலப்பியா பிக்சர்ஸின் ஆள் என்றும், சினிமாவில் நடிக்க ஆட்களை தேர்வு செய்வதற்காக வந்திருப்பதாகவும், உங்களில் யார் வேண்டுமானாலும், திரைப்படங்களில் நடிக்க முடியும், அதற்கான ஸ்கிரின் டெஸ்ட் எடுப்பதற்கு ஆயிரம் லியர் வரை வாங்கி கொண்டு, அவன் திருடி கொண்டுவந்த கேமராவும், எக்ஸ்பயரி ஆகிய பிலிம் ரோலை வைத்து, எல்லா கிராமங்களுக்கும் போய், டேரா போட்டு, பணத்தை வசூலிக்கிறான். இந்த படம்பிடிக்கும் எல்லாருடைய காட்சிகளையும் போட்டு பார்த்துவிட்டு அவர்க்ளில் ஒருவரை கொலம்பியா பிக்சர்ஸ் தேர்தெடுக்கும் என்று நம்பிகையை சொல்லி ஏமாற்றுகிறான். . மேலும் படிக்க 

வத்திக்குச்சி

Image
எங்கேயும் எப்போதும் படத்திற்கு அடுத்து ஃபாக்ஸ் ஸ்டாரும், முருகதாஸ் புரடக்‌ஷனும் இணைந்து தயாரித்து அளித்துள்ள படம். முதல் படத்தைப் போலவே இப்படத்தின் மூலமாக தன்னுடய உதவியாளரான கின்ஸ்லியையும், தன் தம்பியை கதாநாயகனாய் அறிமுகப்படுத்தியிருக்கிறார் முருகதாஸ். ஆனால் முதல் படம் கொடுத்த நற்பெயரை தக்க வைத்துக் கொண்டாரா என்று கேட்டீர்களானால் இல்லை என்று வருத்தத்துடன் சொல்ல வேண்டியதாய் இருக்கிறது.

ஒன்பதுல குரு

Image
Comedy is a Serious business என்பார்கள். காமெடி படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம், மற்றவர்களை கிண்டல் செய்தும், படங்களை பரோடி செய்தாலும் சிரிக்க வைப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இவர்கள் கற்றுக் கொள்ள நம்மை பகடை காயாக்கியிருக்கிறார்கள். avvvv.. வலிக்குது.தேவையில்லாமல் இந்த படத்தை விமர்சிக்கிறேன் என்று உங்களை இம்சிக்க விரும்பாததால்... ஒன்பதுல குரு வந்தால்  பொண்டாட்டிய விட்டு ஓடிருவாங்களாங்கலாம்.. அதுவே படமா வந்தா நாம தியேட்டரை விட்டு ஓடிரணும்.  முடியல.. கேபிள் சங்கர் டிஸ்கி: முடிந்தவரை எல்லோருக்கும் இதை ஷேர் செய்து மக்களை காப்பாற்ற வேண்டுகிறேன்.

அமீரின் ஆதி - பகவன்

Image
தமிழ் இணைய உலகில் முதலாய் 65 லட்சம் ஹிட்ஸுகளுக்கு மேல் வாரி வழங்கி ஆதரவு தந்து கொண்டிருக்கும் வாசகர்கள், வலையுலக நண்பர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள். - கேபிள் சங்கர் மெளனம் பேசியதேவில் அட என்று ஆச்சர்யப்படுத்தியவர், அமீரின் ராம் என்று தைரியமாய் பெயர் போட்டுக் கொண்டு வித்யாசமான படத்தை அளித்தவர், தமிழ் திரையுலகமே தலைமேல் வைத்து கொண்டாடிய பருத்தி வீரனுக்கு பிறகு சுமார் ஆறு வருட இடைவெளியில்  வெளிவந்திருக்கும் படம் அமீரின் ஆதி - பகவன். நல்ல வேளை பருத்திவீரனை மறந்த நாட்களுக்கு பிறகு வெளி வந்திருக்கிறது. 

ஹரிதாஸ்

Image
65 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி தொடர்ந்து ஆதரவு தந்து கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், பதிவுலக நண்பர்களுக்கு  என் கோடிக்கணக்கான நன்றிகள் - கேபிள் சங்கர் ஆட்டிசம் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு. இக்குறைபாடுள்ள குழந்தைகளின் பிரச்சனையை முளையிலேயே உணர்ந்து அதற்காக ஸ்பெஷல் பயிற்சிகள் கொடுத்தால் அக்குழந்தையும் சமுதாயத்தில் சிறந்து விளங்கக்கூடியவனாய் வலம வர முடியும். உலகில் தலை சிறந்த இடத்தை பிடித்தவர்கள் பல பேர் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து வெளி வந்தவர்கள் தான். எதற்காக ஆட்டிசத்தைப் பற்றி எழுதுகிறேன் என்றால் இப்படம் ஆட்சத்தினால் பாதிக்கப்பட்ட மகனுக்கும், அவனின் வாழ்க்கையை தன் வாழ்க்கையாய் கொண்ட தகப்பனுக்குமிடையே நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் தான் படத்தின் கதை.என்னடா இது ஆட்டிசம், அப்பா, மகன் உறவு என்று செண்டிமெண்டை கொட்டி,  பிரச்சாரமாய் இருக்குமோ என்று பயப்படாதீர்கள். ஒர் சுவாரஸ்ய திரைக்தையமைத்து மிக அழகாய் கொடுத்திருக்கிறார்கள். ரொம்ப நாளாகி விட்டது தமிழில் இப்படி ஒரு சென்சிபிள் படம் பார்த்து.

டேவிட்

Image
 நாளைய இயக்குனரின் ஒரிஜினலான விஜய் அமிர்தராஜ் சோனி பிக்ஸில் நடத்திய குறும்பட நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர் இப்படத்தின் இயக்குனர் பிஜோய் நம்பியார். அந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவருக்கு ஹாலிவுட் படத்தில் வேலை செய்ய வாய்ப்பு அளிக்கப்படும் என்ற விஷயம் அறிவிப்போடு நின்றுவிட, வெற்றி பெற்ற இவர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராய் சேர்ந்து பணி புரிந்து விட்டு, சைத்தான் என்கிற ஒரு படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகை கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்தவர். இவரின் அடுத்த படம் எனும் போது எதிர்பார்ப்பு இருக்கவே செய்தது. கூடவே விக்ரமின் ஹிந்தி அறிமுகம் வேறு. ஆனால் ஒரு விஷயம். முன்னமே சொல்லி விடுகிறேன். இது செமி தமிழ் படம். பாதி படத்துக்கு மேல் டப்பிங் தான். நிச்சயம் இப்படம் தமிழ் சமூகத்திற்கு கொஞ்சம் கூட ஒத்துவராத கதைக்களன் எனவே தயவு செய்து தமிழில் பார்க்காமல் இந்தியில் பார்த்தீர்களானால் நல்ல அனுபவம் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் .