Posts

Showing posts with the label விமர்சனம்.

நிகழாமல் போன அற்புதம் சூப்பர் டீலக்ஸ்

Image
தமிழ் சினிமாவை தற்போதைய வகைப்படி ரெண்டாக பிரிக்கலாம். சோஷியல் மீடியாவுக்கு முன்/ சோஷியல் மீடியாவுக்கு பின் என. ஆரண்ய காண்டம் திரைப்படம் இண்டர்நெட் 1 ஜிபி 300 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. அதனால் இத்தனை விந்தோதுதல்கள் இல்லாமல், உனக்கு தெரியலைன்னா உன் பொண்டாட்டி பத்தினி இல்லை என்று சபிக்காமல்,  சரியான வகையில் எடுத்துக் கொள்ளப்பட்டு கொண்டாடப்பட்ட படம் தான். அது தான் ஓடவேயில்லையே அப்புறம் என்ன கொண்டாடப்பட்டது என்று சொல்கிறீர்கள் என்றால் கொண்டாட்டம் என்பது அதன் வியாபாரத்தை வைத்து அல்ல என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். லெளகீகத்தை வைத்து பேசினால் நிச்சயம் தயாரிப்பாளரின் டார்க் கதையைப் பற்றியும் பேச வேண்டும். அது படைப்பிற்கு தேவையில்லாத ஒன்று. சினிமாவாக எனக்கு மிகவும் பிடித்த படம் ஆரண்ய காண்டம். தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் தமிழில் வெளிவந்த வித்யாசமான கதை சொல்லல் கொண்ட படம்.  குவாண்டின் படங்களில் வரும் நீண்ட ஷாட்கள். ஷார்பான ப்ளாக் ஹூயூமர். சம்பந்தமேயில்லாத பேச்சு. பின்னணி பாடல்கள் வித்யாசமான மேக்கிங் என அத்தனை விஷயங்களிலும் இன்ஸ்பயர் செய்த படம்...

ராமின் பேரன்பு

கற்றது தமிழ் , தங்க மீன்கள் , தரமணி என ராம் எடுத்த மூன்று படங்களிலும் நான் முரண்பட்டேயிருக்கிறேன் . ஆனால் என்றைக்கும் ராமின் படங்கள் பிடிக்காமல் போனதில்லை . படங்களின் மேல் விமர்சனங்கள் வைத்திருந்தேனேயன்றி , குற்றம் சாட்டியதில்லை . ராமின் படங்கள் விமர்சனங்களை மீறி என்னை அலைக்கழிக்காமலும் இருந்ததில்லை . ஆனந்தியை மறக்க முடியுமா? , பறவையே எங்கு இருக்கிறாயையோ ? ‘ நிஜமாத்தான் சொல்லுறியா ?” என்கிற அப்பாவி ஆனந்தியின் கேவலையோ மறக்கத்தான் முடியுமா ?. இன்றளவில் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு பயணப்பாடலை காணவேயில்லை. ராமின் ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம் தான் . அப்படியொரு அனுபவத்தை காண ராம் அழைத்த போது எந்தவிதமான முன்முடிவும் இல்லாமல் தான் அமர்ந்தேன் .  படம் ஆரம்பித்த முதல் ப்ரேமிலேயே நான் படத்துள் மூழ்கிப் போனேன் . “ நீங்க வாழுற வாழ்க்கை எத்தனை ஆசீர்வதிக்கப்பட்டதுன்னு என்னோட கதையக் கேட்டா புரியும் ” என்கிற வசனம் ஒலித்த போது பெரிதாய் பாதிக்கவில்லை . படம் முடிந்து வெளியே வரும் போது புரிந்தது . ஆம் .. நான் ஆசீர்வதிக்கப்பட்ட ...

பொண்டாட்டி - ஒர் அலசல் (நீ எவண்டா பொண்டாட்டிகளை அலச)

Image
அராத்துவின் புதிய நாவல் வரப்போகிறது என்பதை பல விதமான மார்கெட்டிங் டெக்னிக்கை பயன்படுத்தி இந்த புத்தக திருவிழாவுக்கு வெளியிட்டார்கள். ஆன்லைன் ப்ரீ புக்கிங். டிஸ்கவுண்ட் புக்கிங். கிண்டில் என எல்லா இடத்தில் நல்ல விற்பனை என்றும் கேள்விப்பட்டேன். நான் இதை எழுதுவது   பொண்டாட்டியின் விற்பனையைப் பற்றி கூற அல்ல.   பொண்டாட்டி நாவலைக் குறித்து பேச. பொண்டாட்டி ஒரு செக்ஸ் நாவலா? என்றால் ஆமாம். பொண்டாட்டி ஒரு ஆணாதிக்க நாவலா? என்.. ஆமாம். பொண்டாட்டி எப்போதும் புதிராகவே இருக்கும் பெண்களைப் பற்றி, அவர்களின் பர்வர்ஷன் பற்றி, தடுமாற்றங்களைப் பற்றி, ஆசாபாசங்களைப் பற்றிய மனோதத்துவமான பதிவா? ஆமாம். யாரு யாருக்கு உறவுன்னு நானாறு பக்கத்தையும் மாத்தி, மாத்தி புரட்டியே தாவூ தீர்ந்து போச்சு. வடசென்னை கேரக்டர் மேப்பை விட மோசம். இது மயிரு நாவல். ஃபேக் நாவலில்லை ஃபோர்ன் நாவல். அபீஷியலான மஞ்சள் பத்திரிக்கைத்தர நாவலா? புத்தகம் படித்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் வழக்கொழிந்து விட்டநிலையில் அதற்காக நானூறு பக்க புத்தகம் தேவையா?  இது இலக்கியமா? இல்லை. அராத்துவின் பர்வர்ஷன். அவர் பார்த்த, ஒழுத்த ...